Posts

Showing posts from 2026

அநிச்சயக்கரை - சிறுகதைத் தொகுப்பு - கதை(3) - லோகேஷ் ரகுராமன்

Image
  மணிகர்ணிகா கட்டப் படித்துறை - காசி இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருபது சிறுகதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு என் மனதைத் தொட்டு என்னவோ செய்தன. முதலில் அவற்றை மட்டும் என் பார்வையில் பதிவிடுகிறேன். முதல் கதை - உலர்தல். கதையில் கையில் காசில்லாத ஒருவன் தன் தந்தையின் ஆசைப்படி அவரது சடலத்தை எப்படி எரியூட்டுகிறான் என்று கூறுகிறது. அவன் சடலத்தை ஏற்றி வந்த மீன் பாடி வண்டிக்கே தேவையான அளவு பணம் கொடுக்க முடியாத நிலையில் சண்டையிடுகிறான். மீன் பாடி வண்டியோட்டி அவன் தந்தையின் சடலத்தை மணிகர்ணிகா கட்டத்தின் படியில் கொண்டு போட்டு விடுகிறான். அன்று இரவு முழுவதும் சரியான மழை. படியில் கிடத்தப்பட்ட சடலம் இரவு முழுவதும் மழையில் நனைந்தவாறு இருக்கிறது. அவனும் சடலத்தின் கால்மாட்டில் இரவு முழுவதும் நினைத்தவாறே இருக்கிறான். ஒரு அகோரி சடலத்தை இலவசமாக எரித்துத்தர ஒப்புக் கொள்கிறார். ஆனால் மழையும் விடவில்லை. முந்தைய நாள் தகன மேடையில் எரியும் பிணமே முற்றிலுமாக எரியவில்லை. அவனுக்கோ தன் தந்தையின் பிணத்தை எரித்து முடிக்க வேண்டும் என்று அகோரியை நச்சரிக்கிறான். ஈரமாக இருந்தாலும் தன்னுடைய தந்தையின் உடல் எளிதில் எ...

கடல் கனித்தது - கதை(11) - லோகேஷ் ரகுராமன்

Image
       ‌                    வில்லுண்டித் தீர்த்தம் இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய கதை என்று சொல்லலாம். தன் தந்தையைப் பராமரிக்கும் மகள். அவளது தாயை எவ்வளவு அலட்சியமாகத் தன் தந்தை நடத்தினார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அம்மாவின் மாதவிலக்கு நாட்களில் குடிக்கக் தண்ணீர் கேட்டால் கண்டும் காணாதது போல இருந்து விடுவார். சரி அவர்தான்  எடுத்துத் தரவில்லை. வேறு யாரையாவது அழைத்துக் கூடத் தரச் சொல்ல மாட்டார். மறந்த போனது போல இருந்து விடும் ஆண்களின் ஆணவம். அம்மாவின் அப்பாவும் அம்மாவும் இவரிடம் தங்கள் மகள் படும் பாட்டை மனதுக்குள் வைத்துக் கொண்டு மறுகுவார்கள். தன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பன். ஆனால் மனைவிக்கு நல்ல கணவனாக இல்லை என்பதைச் சொல்ல வரும் மகள் தன் கணவன் அவளைக் கொடுமைப் படுத்தினால் எவ்வளவு எவ்வளவு மனவேதனை அடைவார் என்கிறார்.‌ நல்ல வேளை அப்பா மாதிரி ஒரு கணவன் தனக்கு வாய்க்கவில்லை என்கிறாள். சாம்பாரில், ரசத்தில் உப்பு அதிகம் போட்டிருக்கிறாய். வாயில் வைக்க முடியவில்லை கரிக்கிறது என்று பிரச்சினை செய்கிறார் அந்த முதியவர். நாளா...

கனகாபிஷேகம்

Image
  இங்கு நான் சொல்லப் போவது என் பிறப்புக்கும் முன்பு நடந்தது. என் தாய்வழிப் பாட்டியின்  குடும்பம் பெரிய செல்வந்தக் குடும்பம்.‌ என் பாட்டியின் அம்மாவின் கணவர் மகா கோபக்கார மனிதன்.  வீட்டின் பெண் பிள்ளைகளை கிஞ்சிற்றும் மதிப்பது கிடையாது.‌ அவருக்கு எதிராக யாருமே வாய்திறக்க முடியாது.  அந்தக் காலத்தில் செல்வந்தர்கள் மனைவியைத் தவிர வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்வதெல்லாம் பெரிய குற்றமாக ஆணாதிக்கச் சமுதாயத்தில் பார்க்கப்படவில்லை. என் னுடைய அந்தக் கொள்ளுத் தாத்தாவும் அப்படி ஒரு தொடுப்பு வைத்திருந்தாராம். ஆனால் அது கண்கூடாகத் தெரிந்தும் அவரை நேரடியாகக் கேள்வி கேட்க அனைவரும் பயந்தனர் என்பதே உண்மை. கொள்ளுப்பாட்டி ஒரு பிள்ளைப் பூச்சி. விதியை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டிய‌ நிர்பந்தம்.  சொல்லப் போனால் லோகேஷ் ரகுராமனின் " கடல் கனித்தது" கதையில் வரும் முதியவர் எவ்வளவோ தேவலை.  அப்போதெல்லாம் தொடுப்பு வைத்துக் கொள்வதை நான் சார்ந்த சமூகம் தனது அந்தஸ்தைப் பறைசாற்றும் வகையில்தான் எடுத்துக் கொண்டு இயல்பாகக் கடந்து சென்றது.  எல்லாத் தவறுகளும் நிச்சயமாக ஒரு காலகட்டத்தில் முடிவ...

கறை - கதை (9) - லோகேஷ் ரகுராமன்

Image
இந்தக் கதை 2022 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற  நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். கதையின் இணைப்புச்‌ சுட்டி கிடைக்கவில்லை. லோகேஷ் ரகுராமன் சாரிடமிருந்து பெற்று  விரைவில் இணைக்கிறேன்.  கறை என்பது  மத வெறியர்களால் மதத்தின் பெயரால் ஏற்பட்ட கறையா? அல்லது அந்த அப்பாவி இஸ்லாமிய மாணவியின் புர்காவில் ஏற்பட்ட கறையா? என் வரையில் நம் அனைவரது மீதும் படிய வைக்கப்பட்ட கறை என்றே தோன்றுகிறது. கல்லூரியில் படிக்கும் சற்று வெகுளித்தனமான பெண். அவளது மென்மையான இயல்பு எல்லாம் அழகாக சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே பள்ளியலும் கல்லூரியிலும் படிக்கும் காலத்தில் எல்லாப் பெண்களுமே செல்லமாகவும், சோம்பேறித்தனமாகவுமே இருப்பார்கள். என் மகள் கூட அப்படித்தான். வீட்டு வாசலில் ஆட்டோ வந்த பின்புதான் காலை உணவை வாயில் திணித்துக் கொண்டு ஷூவைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடுவாள். இங்கும் அதே கதைதான். குளிக்கப் போனாலும் அதிக நேரம் எடுத்துக் கொள்வது. எல்லாம் நம் வீட்டின் செல்லப் பெண்களை அப்படியே அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. புர்கா தினமும்‌ அ...

பொன்மார் - கதை (7) லோகேஷ் ரகுராமன்

Image
  முதலில் கதையின் இணைப்புக் கண்ணி.  https://lokeshraghuraman.wordpress.com/2017/09/08/ponmaar-short-story/ கதை உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். ஆனாலும் ஆணின் சுயநலத்தைக் காட்டும் கதையாகவே இதை நான் எடுத்துக் கொண்டேன்.  எல்லாரோட எழுத்திலும் எல்லாம் இருக்கும். இர்விங் வாலஸின் "SEVEN MINUTES"  ஹெரால்டு ராபின்ஸின் "A STONE FOR DANNY FISHER" இவற்றைச் சுட்டலாம். அது போலத்தான் லோகேஷ் ரகுராமனின் பொன்மாரையும் பார்க்கிறேன். இனி என் பார்வையில் பொன்மார் கதையைக் காண்போம்.  கல்கத்தா நகரின் சிவப்பு விளக்குப் பகுதி சோனாகாச்சியின் பின்புலத்தில் கதை சொல்லப் படுகிறது.  கதாநாயகன் இளைஞன். காமத்தை அனுபவிக்கத் துடிக்கும் வயது. வாழ்கையின் பல நேரங்களில் தோல்வியைச் சந்தித்த அவனுக்கு காமத்தை ருசிப்பதே வடிகால் எனத் தோன்றுகிறது.  பேருந்தில் சோனாகாச்சியின் 11000 பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான நாப்கின்னுக்கு விதிக்கப்பட்ட GST பற்றிச் சக பயணி அவனிடம் கூறுகிறார். பேருந்தில் கூட்டமாக ஏறும் பாலியல் தொழிலாளர்கள் GST க்கு எதிரான தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆண்களுக்கு ராக்கி கட்டி...

செப்டம் - கதை (6) லோகேஷ் ரகுராமன்

Image
 அரோமா சிறுகதைத் தொகுப்பு நூலில் இது ஆறாவது கதை.  கதைக்கான இணைப்புக் கண்ணி கீழே உள்ளது. https://tamizhini.in/2021/12/24/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/ சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்  பூம்புகார் சென்றிருக்கிறேன். அப்போதே சரியான கவனிப்பின்றி இருந்ததைக் காண முடிந்தது.கதையில் பூம்புகாரின் இப்போதைய நிலையை லோகேஷ் ரகுராமன் கண்முன் நிறுத்துகிறார். நல்ல சுற்றுலாத் தலமாக விளங்கியிருக்க வேண்டியது இப்போது சீர்குலைந்து போட்டிருப்பதை உணர முடிகிறது.‌ நல்லதோர் வீணை நலம் கெடப் புழுதியில். சிலப்பதிகாரத்தில் வரும் ஐம் பெரும் மன்றங்களில் ஒன்று நெடுங்கல் மன்றம்.‌  சிறு வயது முதலே எலிப் பொந்து போன்ற வீட்டில் வசித்த அவனுக்கு விஸ்தாரமான இடத்தில் வசிக்க வேண்டும் என்ற‌ ஆசை.‌ நெடுங்கல் மன்றத் தூண்களுக்கு இடையில் நிறையவே இடம் விட்டு விசாலமாகக் கட்டியிருக்கலாம் என்ற இடத்தில் கதாநாயகனின் இந்த ஆதங்கம் வெளிப்படுகிறது நெடுங்கல் மன்றத்தை பட்டப் பகலில் பொது இடம் என்றும் பாராமல் வெட்கமின்றிக் காம இச்சையை தீர்த்துக் கொள்ளும் இளம் ஜோடிகளை தெரு நாய்களுக்கு ஒப்பிடுவதும...

ஒளி நிறைந்தவர்கள் கதை(5) - லோகேஷ் ரகுராமன்

Image
  பணி நிறைவு செய்த இயற்பியல் ஆசிரியரான என்னை அதிகம் ஈர்த்த கதைகளில் இதுவும் ஒன்று. வழக்கம் போல அறிவியலைக் கலந்து பரிமாறி இருக்கிறார் லோகேஷ் ரகுராமன். இதோ கதை கீழே. https://www.aroo.space/2021/11/27/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ நம் கதாநாயகன் பெங்களூரில் ஒரு IT நிறுவனத்தில் பணிபுரிகிறார். மனிதர்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன  அவன் உத்தர கர்னாடகாவில் உள்ள ஒரு மலைப் பகுதிக்கு வருகிறான். காலா நதி உற்பத்தி ஆகுமிடம் அது.‌ அந்த மலைக் காடுகளில் மலை ஏற அனுமதி கிடைப்பது கடினம். ஷைலேந்திரா கதாநாயகனுடன் பணியாற்றியவர்.  திடீரென ஒரு நாளில் வேலையை விட்டுவிட்டு மலை ஏறும் குழுக்களுக்கு வழிகாட்டியாக ஆகி விடுகிறான். அவன், "நான்கு‌ சுவர்களுக்கு அப்பாலேதான் வாழ்க்கை" என்பான்.‌ நான் ரசித்து அனுபவித்த வரி அது. அற்புதமான உண்மை. ஷைலேந்திரா நம் கதாநாயகனை 'மகா' என்றழைக்கிறார்.‌ அதனால் கதாநாயகன் பெயர் மகாதேவனாகவோ அல்லது மகாலிங்கம் ஆகவோ இருக்கலாம். பரவாயில்லை.‌ அது நமக்கு ...

நிழல் - கதை(3) - லோகேஷ் ரகுராமன்

Image
  'விஷ்ணு வந்தார்' புத்தகத்தில் இரண்டாவது கதையான 'அது நீ' கதையை  நீங்கள் படித்திருப்பீர்கள். அந்தக் கதையை லோகேஷ் ரகுராமன் மறைபொருள்‌ எதார்த்தவாத (MYSTICAL REALISM) பாணியில் வடிவமைத்திருப்பார். இந்த நிழல்கள் கதையில் மாய எதார்த்தப் (MAGICAL REALISM) பாணியைப் பயன்படுத்தியிருக்கிறார். அதென்ன மறை பொருள் எதார்த்தவாதம் , மாய எதார்த்தம்? என்ன வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுவது தவிர்க்க இயலாது. மாயாஜால அல்லது  மாய யதார்த்தவாதம் (Magical Realism) என்பது சாதாரண நிஜ வாழ்க்கையில் மாயாஜால நிகழ்வுகள் சாதாரணமாக நடப்பது போல் எழுதுவது.  மறைபொருள் யதார்த்தவாதம் (Mystical Realism) என்பது ஆன்மீகம், பிரபஞ்ச சக்தி அல்லது மத நம்பிக்கைகளை மையமாகக் கொண்டு, உலகத்தை ஒரு மாயக் கண்ணோட்டத்தில் பார்ப்பது. லோகேஷ் ரகுராமன் ஏசுவின் உயிர்த்தெழுதல் என்னும் (Resurrection ) மத நம்பிக்கையை மையமாகக் கொண்டு கதை 'அது நீ' கதையைப் புனைந்திருப்பார். இந்த நிழல் புனைவில் அது போன்ற மத நம்பிக்கையைச் சார்ந்த விஷயங்கள் எதையும் சேர்த்து எழுதவில்லை. ஆகவே இக்கதையை மேஜிக்கல் ரியலிசம் என்றே நா...

கூடடைதல் - கதை (2) லோகேஷ் ரகுராமன்

Image
  கூடடைதல் என்றால் இரை தேடி வானில் பறந்து திரியும் பறவைகள் மாலையில் தன் கூட்டை அடைதல் என்று பொருள்படும். வழக்கம் போலவே முதலில் கதையின் இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன்.‌ முழுமையாகப் படித்துவிட்டுப் பின்னர் கதையைப் பற்றிய என் பார்வையைப் படித்தல் சிறப்பாக இருக்கும். https://www.facebook.com/story.php?story_fbid=33849177108063644&id=100001943649284 உண்மையில் சிறுகதை என்ற‌  பெயருக்கு ஏற்ப மிகச் சிறிய கதையே. கதாநாயகன் பனிரெண்டு வயது முதல் இருந்து முப்பத்திரண்டு வயது வரை எந்தப் பொறுப்பும் இன்றி அரைப் பாக்கெட் சிகரெட் பிடித்தும், தூங்கியும், ஆற்றங்கரை மண்டபத்திலும் கழித்தவன். இப்போது எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் தொலைவாக இருக்கும் ஒரு ஊரில் வேலை செய்கிறான். அப்படி விட்டேத்தியாகப் பொறுப்பின்றி வாழ்ந்தவனையும் ஒருத்தி திருமணம் செய்து கொள்கிறாள். லோகேஷ் ரகுராமன் கதையில் வரும் பெண் பாத்திரங்கள் அதிகம் பேசாத உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் எதையும்  அப்படியே ஏற்றுக்கொண்டு கடந்து செல்லும் தன்மை கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தக் கதையிலும் அப்படியே.‌ கதாநாயகன் தன் வீட்டி...

ஆப்பிளும் விஷமும் - கதை (1) - லோகேஷ் ரகுராமன்

Image
லோகேஷ் ரகுராமன் ஆப்பிளும் விஷமும் கதையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.‌ திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் (LIVING TOGETHER COUPLE) இருவரின் அழகான காதல் கதை.‌ கதையை முழுவதும் படித்து விட்டு பின்னர் கதையை நான் அணுகிய விதத்தை என்னுடைய பார்வையில் எழுதியிருக்கிறேன்.  கதை குறித்த என்னுடைய பார்வையை எழுதும் போது அவர்களைக் கணவன் மனைவி என்று கருதியே எழுதினேன். ஆனால் கதாசிரியர் லோகேஷ் ரகுராமன் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் இருவர் என்று தெரிவித்தார்.‌ என்னுடைய காலங்களில் அத்தகைய வாழ்க்கை முறை இல்லை என்பதால் அந்தக் கோணத்தில் சிந்திக்கவே இல்லை.‌  https://lokeshraghuraman.wordpress.com/2019/11/29/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0 %AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ ராணி அகல்யா பாய் ஹோல்கர் கோட்டை மாகாலேஷ்வர், மத்திய பிரதேசம். ஒருவர் மீது ஒருவர் நெஞ்சு நிறையக் ஆசையும் பாசமும் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் இருவரின் காதல் காவியம் என்று சொன்னால் அது மிகையாகாது. கணவனைக் காதலிக...

இடிந்த வானம் - கதை ( 9) - லோகேஷ் ரகுராமன்

Image
இது காதல் மணம் செய்து கொண்டஇளம் தம்பதிகளின் கதை.‌ மனைவி அம்பரி ஒரு கட்டிட வடிவமைப்பாளர் (ARCHITECT). கணவன் சரண் ஒரு கணினி மென்பொருள் பொறியாளர். வழக்கம் போல் கதையின் இணைப்புக் கண்ணி கீழே. கதையை முழுமையாகப் படித்த பின்னர் கதை குறித்த என் பார்வையைப் படிப்பதே சிறந்தது. https://kanali.in/idintha-vaanam/ கணவன் மனைவி இருவரும் இடையே நடக்கும் உரையாடல்களே கதையை நகர்த்திச் செல்கிறது. அவரவருக்கான வானம் என்பது மனைவி தனது புதிய கட்டட வடிவமைப்புக்கு கொடுக்கும் தலைப்பு.  வானத்தையும் அதன் நீல நிறத்தையும்  பெரிதும் நேசிக்கும் அவரது பொழுதுபோக்கு வானை விதவிதமாகப் படம் வரைவது. கணவனிடம் புதிய கட்டட வடிவமைப்புக்கு அவளுக்குக் கிடைத்த அங்கீகாரம் மற்றும் பணியாணை(work order)க்குப் பாராட்டை எதிர்பார்க்கிறார். அவரது கைகளைப் பிடித்து முத்தமிட்டும் பாராட்டுச் சொல்லும் கணவனிடம் அவர்களின் காதலித்த நாட்களை நினைவூட்டுகிறார்.   அப்போது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை.‌ அவரவர் வேலை அவர்களுக்கு என்று இருவரும் விலகிப் போய் விட்டதாக கணவன் சொல்கிறார். மேலும் மனைவி வரைந்த படங்கள் எதிலுமே மேகங்கள் இல்லாத பொட்ட...

தேனாண்டாள் - கதை (8) - லோகேஷ் ரகுராமன்

Image
இந்தக் கதை குறித்த என் பார்வையை பகிர்வது குறித்து நெடு நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். காரணம் கதையில் வரும் பொன்னன் என்ற பாத்திரம் தன் கூட்டாளி தங்கராசுவிடம் கோபத்தில் சொல்லும் போது பயன்படுத்தப்பட்ட சில வாசகங்கள்.  படிப்பறிவு இல்லாத மலை வாழ் மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் கதையில் எதார்த்தமாக வரும்  வசவுச் சொற்களை அருவருப்புடன் நோக்குவது நேர்மையான செயலாக இராது. மனதின் உள்ளே நீறுபூத்த நெருப்பாகக்  கனன்று கொண்டிருக்கும் அடங்காத கோபத்தை வெளிக்காட்டும் சொற்கள் அவை. ஆகவே இச் சொற்கள் கதை ஓட்டத்தில் வலிந்து திணிக்கப்பட்டவை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.‌   மேலும் ஒரு எழுத்தாளர் எழுதிய கதைக்கு தடை போடவும் குறை சொல்லவும் அதற்குச் சம்பந்தமில்லாத நான் யார்? நான் பகிர வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் வேறு இணைய மின்னிதழ்களில் அதனை படிக்கும் வாய்ப்பும் உரிமையும் வாசகர்களுக்கு நிச்சயமாக உண்டு. அதனால் பகிர முடிவு செய்தேன்.‌ என் முடிவை நீங்கள்  ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்போது கதையின் இணைப்புக் கண்ணியைக் கீழே தந்துள்ளேன். வழக்கம் போல் கதையை முழுவதுமாகப...

நவம் - கதை (7) - லோகேஷ் ரகுராமன்

Image
விஷ்ணு வந்தார் நூலை வாங்கியது குறித்து முகநூலில் பதிவொன்றைச் சில நாட்களுக்கு முன் இட்டிருந்தேன். அப்பதிவில் என் முன்னாள் மாணவி அம்மு குட்டி மோன் மறுமொழி இட்டிருந்தார்.‌ அதில் அவர் "நவம்" கதை திருவண்ணாமலை பற்றிய கதை எனவும் அது குறித்த என் கட்டுரையைப் பாருங்கள் என்றுபடிக்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார். அவருக்கும் மற்ற வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். முதலில் "நவம்" கதையை முழுமையாகப் படிக்கவும்.  கதைக்கான இணைப்புக் கண்ணி கீழே தந்துள்ளேன்.  https://lokeshraghuraman.wordpress.com/2020/04/16/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/ இப்போது கதையை முழுவதும் படித்து முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இனி என் பார்வையில் நவம் கதை.  கதை நடக்கும் களம் திருவண்ணாமலை. ஆனால் கதையில் திருவண்ணாமலை நகரத்தையோ அல்லது கோவிலையோ குறித்த செய்திகள் இல்லை என்பதே உண்மை. 'நவம்' என்றால் எண் ஒன்பது. கதையில் மூன்றுக்கு மூன்று மாயச் சதுரம் அதாவது ஒன்பது கட்டங்கள் மற்றும் ஒன்பது எண்ணின் சிறப்புகளை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்புக் கிடைக்கிறது. கதையில் இரண்டே இரண்டு பாத்திரங்கள்தான். இளிச்சவ...

எங்கட நினைவில் கடல் இல்லை - லோகேஷ் ரகுராமன்

Image
  நேற்று முகநூலில் எழுத்தாளர் திரு.‌லோகேஷ் ரகுராமன் அவர்களின் பக்கத்தை மேய்ந்து கொண்டிருந்தேன்.‌ அதில் "அந்தி மழை" மின்னிதழில் வெளியான கதையான     "எங்கட நினைவில் கடல் இல்லை" கதைக்கான இணைப்பைக் கொடுத்திருந்தார். கதைக்கான இணைப்புக் கண்ணி இதோ கீழே தரப்படுகிறது.‌ முதலில் கதையை முழுவதுமாகப்‌ படித்த பின்‌ என்‌ பார்வையைப் படித்தல் நலம். https://www.andhimazhai.com/literature/short-stories/engada-ninaippil-kadal-illai கதையில் பெங்களூரில் மென் பொருள் பொறியாளராக பணிபுரியும் ஒருவர் 200 கிமீ தூரம் தனது புல்லட் மோட்டார் சைக்கிளில் பயணித்து பலமனேரு குடியாத்தம் அருகே உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவியில்  குளிக்கவும்  ஓய்வெடுக்கவும் (அதாவது யாருடைய இடைஞ்சலுமின்றி மது அருந்த)  வருகிறார். அப்போது அவரைப் போல மது அருந்த ஒரு லாரி ஓட்டுனர் ஒருவரும் அங்கே வருகிறார். இருவரும் நண்பர்களாக ஆகி ஒன்றாக மது அருந்துகின்றனர்.‌ முதலில் லாரி ஓட்டுனர் தன்னைத் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இரண்டு சுற்று மது உள்ளே சென்றதும் அவரது பேச்சு மொழி வேற...