Posts

Showing posts from January, 2017

கதிரவன் - பகுதி (7)

Image
வானில் மாறும் வண்ணக் கோலங்களான “அரோரா போரியலீஸ்” அதாவது  “வடக்கின் சிவப்பு விடியல்”  என்று வியாழனின் சந்திரன்களைக் கண்டறிந்த கலிலீயோ கலிலீ யால் பெயர் சூட்டப்பட்டது. கதிரவத்துகள்கள் புவியின் வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களுடன் வினையாற்றுவதால் விண்ணொளிகள் ஏற்படுகின்றன. புவியின் காந்தப்புலம் ஒரு புனல் (Funnel) போல் செயல்பட்டு புவியின் வட மற்றும் தென் துருவங்களில் கதிரவத்துகள்கள் விழும்படி செய்கின்றன எனலாம். அவ்வாறு மின்னூட்டமுள்ள துகள்கள் புவி காந்தப்புலத்தில் விழும் போது அவற்றுடன் தொடர்பு கொள்ளும் வளிமண்டல வாயு மூலக்கூறுகளைப் பொருத்து சிவப்பு முதல் மஞ்சள், பச்சை முதல் நீலம் மற்றும் ஊதா நிற ஒளியை வெளியிடுகின்றன. வானில் மாறிமாறி பல நிற ஒளிகள் தோன்றுவது, வானின் குறுக்கே  அரோரா தனது அங்கி காற்றில் பின்புறம் படபடக்க  தேரில் வேகமாக செல்லும் போது பின்புலத்தில் ஒளித்திரையை அல்லது திரைச்சீலையை ஒரு நாடகத்தில் மாற்றுவதை ஒத்திருக்கிறது. நம் புவிக் கோளில் காணப்படும் உயிரினங்களின் வாழ்விற்கு ஆதாரமாக விளங்குவது கதிரவக் குடும்பத்தின் மையத்தில் உள்ள மஞ்சள் நிற கதிரவன் தான். கதிரவன் தன் அச்சில் சுழ

கதிரவன் - பகுதி (6)

Image
துருவ விண்ணொளிகள் அழைக்கப்படும் அரோரா போரியலீஸ் மற்றும் அரோரா ஆஸ்டிரலீஸ் (aurora borealis and aurora australis) என்பவை வானில் காண்போரின் கண்ணையும் கருத்தையும் வசீகரிக்கும் ஒரு திகைப்பூட்டும் பல வண்ண இயற்கை மின்னியல் அதிசய நிகழ்வாகும் (Natural electrical phenomenon) . பொதுவாக வானின் உயர் அட்சங்களிலும் குறிப்பாக ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் வட்டப் பகுதிகளிலும் கட்புலனாகும் கண்கவர் வானியல் காட்சியாகும்.  ஆர்டிக் வட்டப் பகுதியில் இது வட துருவ விண்ணொளி (aurora borealis) என்றும் அண்டார்டிக் பகுதியில் தென் துருவ விண்ணொளி (aurora australis) என்றும் அழைக்கப்படுகிறது. வட ஒளிகள் (northern lights) என்று ஆர்டிக் பகுதியிலும், தென் ஒளிகள் (southern lights) என்று அண்டார்டிக் பகுதியிலும் இக் காட்சிகள் அழைக்கப்படுகின்றன. அரோரா (Aurora) என்பது ரோமானியர்களின் வைகறை பெண் தெய்வத்தின் பெயராகும். அரோரா என்ற பெயர் பொதுவாக காலத்தால் அருணோதயம், விடியல், அதிகாலை என்றும் பொருள் கொள்ளலாம் என்றாலும் திசையில் கிழக்கையும் கீழ்த்திசை நாடுகளின் மக்களையும் குறிப்பதாகவும் கருதலாம். ஆவிட்  (Ovid) என அறியப

வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (13)

Image
சில விண்மீன்கள் தமது பொலிவில் மாற்றமடையும் நிகழ்வு முற்றிலும் வேறுவகையான காரணத்தால் ஏற்படுகிறது. சீரான கால இடைவெளியில் ஏற்படும் கிரகணமே (Eclipse) இதற்குக் காரணமாக அமைகிறது.பொதுவாக இரட்டை விண்மீன்களில் இரண்டு விண்மீன்களும் ஒன்றை ஒன்று சுற்றி வருவதால் கிரகணம் (eclipse) ஏற்படுகிறது. புவியிலிருந்து நோக்கும் கால் ஒருவிண்மீன் மற்றதன் முன்னர் சீரான கால இடைவெளியில் வருவது போலத் தோன்றுகிறது. இவ்விரண்டு விண்மீன்களில் ஒன்று அதிகப் பொலிவுடனும், மற்றது குறைந்த பொலிவுடனும் இருந்தால் , குறைந்த பொலிவுடைய விண்மீன் பொலிவு அதிகமுள்ள விண்மீனின் முன்பாக வரும் பொழுது விண்மீனின் பொலிவு குறைவதாகத் தோன்றுகிறது. பொலிவு குறைந்த விண்மீன் நகர்ந்ததும் மீண்டும் பொலிவு அதிகரிக்கிறது.  இத்தகைய விண்மீன்களை கிரகணமாறிகள் (Eclipsing variables) என்கிறோம். கிரகணமாறி விண்மீன்களில் குறிப்பிடத்தக்கதுபெர்சியஸ் (Perseus) விண்மீன் குழுவிலுள்ள ஆல்கால் (Algol ) ஆகும். ஆல்கால் தனது பொலிவு மதிப்பில் 2.3 முதல் 3.5 வரை, சரியாக 2 நாட்கள் 22 மணி நேரத்தில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த மாற்றம் சீரானதாக இருப்பதில்லை. அதன் பொலிவு

கதிரவன் - பகுதி (5)

Image
கதிரவன் - பகுதி (5) புவியின் அதிக அட்சங்களில் வசிப்பவர்கள் இரவில் சில நேரங்களில் பல வண்ண ஒளிகள் வானம் முழுவதும் மின்னுவதைக் காண இயலும். பழங்குடி மக்கள் இந்த மின்னும் வண்ண ஒளியில் நடனமாடும் தங்கள் முன்னோர்களின் ஆவிகளைக் காண முடியும் என்று நம்பினர். ஸ்காண்டினேவிய புராணங்களில் இவ்வொளிகள் (Aurora) வானையும் விண்ணையும் இணைக்கும் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பாலம் என்று குறிப்பிடுகிறது. வட மற்றும் தென் துருவ விண்ணொளிகள் (Aurora Borealis and Aurora Australis)  என்றழைக்கப்படும் இவ்வொளிகள் மிகவும் அழகான கண்கவர் காட்சியாகும். துருவ விண்ணொளிகள் I mage courtesy :  https://en.wikipedia.org/wiki/Aurora புவிலிருந்து சுமார் 149.669 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கதிரவன் உள்ளது.ஆனால் அதன் விளைவுகள் கதிரவனின் கட்புலனாகும் பரப்பிற்கு அப்பாலும் பரவியுள்ளது. கதிரவனின் பரப்பிலிருந்து வெளியாகும் வன் காற்றுகள் காரணமாக விண்வெளியெங்கும் கதிரவத்துகள்கள் வீசி எறியப்படுகின்றன. இவ்வாறு வீசி எறியப்படும் துகள்களின் பாதையில் புவி அமையும் போது அதன் காந்தப்புலம் இந்தத்துகள்களுடன் வினையாற்று

கதிரவன் – பகுதி (4)

Image
கதிரவன் – பகுதி (4) கடந்த பகுதி (3) இன் இறுதியில் இதுவரை கதிரவச்சுற்றுக்களை 24 சுற்றுக்களாகப் பிரித்துள்ளது என்றும், தற்போது 24 வது சுற்று நடப்பில் இருக்கிறது என்றும் பார்த்தோம். கீழ்க்கண்ட அட்டவணை ஆண்டுவாரியாக தரப்பட்டுள்ளது. இந்தத் தகவல் விக்கிபிடியாவிலிருந்து எடுக்கப்பட்டது. ஆண்டு வாரியான கதிரவச் சுற்று கதிரவச் சுற்று எண் தொடக்கம் முடிவு கால அளவு (ஆண்டுகள்) கதிரவச் சுற்று 1 1755 ஆகஸ்ட் 1766 மார்ச் 11.3 கதிரவச் சுற்று 2 1766 மார்ச் 1775 ஆகஸ்ட் 9 கதிரவச் சுற்று 3 1775 ஆகஸ்ட் 1784 ஜூன் 9.3 கதிரவச் சுற்று 4 1784 ஜூன் 1798 ஜூன் 13.7 கதிரவச் சுற்று 5 1798 ஜூன் 1810 செப்டம்பர் 12.6 கதிரவச் சுற்று 6 1810 செப்டம்பர் 1823 டிசம்பர் 12.4 கதிரவச் சுற்று 7 1823 டிசம்பர் 1833 அக்டோபர் 10.5 கதிரவச் சுற்று 8 1833 அக்டோபர் 1843 செப்டம்பர்