Posts

Showing posts from July, 2016

பிறந்த மண் வாசம் (1) - திரு. ரா.பத்மநாபன்

Image
பொதுவாகவே எந்த ஒரு மனிதனுக்கும் அவனது சொந்த ஊர் பற்றி ஒரு தேடலும், பெருமையும் அதன் மீது ஆழமான காதலும் இருக்கும். நானும் அதற்கு விதிவிலக்கில்லை. என்னுடைய மூதாதையர் பல தலைமுறைகளாக வாழ்ந்து மறைந்த என் சொந்த ஊரின் சிறப்புகளைத் தேடும் போது, இதுவரை அதிகம் அறியப்படாமல் குடத்துள் இட்ட விளக்காக இருந்து என் ஊருக்குப் பெருமை தேடித்தந்த பலரை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. என்னுடைய ஊர் தமிழ்நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிற்றூர்களில் ஒன்று. பிற மாவட்டங்களில் அதிகம் பிரபலமாகாத ஊர்களில் ஒன்று.இந்த கட்டுரை தொடர்களின் நோக்கம் என்னைப்போல உங்கள் ஊரிலும் சரித்திர, இலக்கிய, கலைவாணர்கள் பலர் அடையாளம் தெரியாமல் எளிய வாழ்வு வாழ்ந்திருக்கலாம். அவர்களை அனைவருக்கும் தெரியச் செய்ய நீங்களும் முயல வேண்டும் என்பதே. முகநூலில் என்னுடன் தொடர்பு கொண்ட என் ஊரைச் சேர்ந்த நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த அறிஞர்கள் பற்றிய தகவல்கள் தந்தால் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களின் பெருமையை எடுத்தியம்புவதை கடமையாகச் செய்ய விரும்புகிறேன். நான் பிறந்த மண்ணுக்கு என்னால் ஆன சிறிய கௌரவமாகவும் பாக்கியமாகவும் இப்பணியைக் கருதுகிறேன். இந்

தனுசு விண்மீன் கூட்டம் - பூராடம் மற்றும் உத்திராடம்

Image
தனுசு என்ற சஜிட்டேரியஸ் ( Sagittarius ) விண்மீன் கூட்டம். இதில் அடங்கியுள்ள விண்மீன் குழுக்கள் பூராடம் மற்றும் உத்திராடம் விண்மீன் கூட்டங்கள் அடங்கியது. இதில் பூர்வ ஆஷாட என்ற பூராடத்தில் எப்சிலான் சஜிட்டரி [Epsilon(ε) Sagittarii]  மற்றும் டெல்ட்டா சஜிட்டரி [Delta(δ) Sagittarii] ஆகிய இரண்டு விண்மீன்களும், உத்திர ஆஷாட என்ற உத்திராடத்தில் ஜீட்டா சஜிட்டரி [Zeta(ξ) Sagittarii]  மற்றும் சிக்மா சஜிட்டரி [Sigma(σ) Sagittarii] ஆகிய இரண்டு விண்மீன்களும்  அடங்கியுள்ளன. பூராடம் விண்மீன் குழு  தமிழில் உடைகுளம், முற்குளம், நீர்நாள் என்றும் உத்திராடம் விண்மீன் குழு   ஆடி, கடைக் குளம், ஆனி, விச்சுவ நாள் என்றும் அழைக்கப்படுகின்றன. சஜிடேரியஸ் தெற்கு வான் கோளத்தில் காணப்படும் பெரிய விண்மீன் கூட்டங்களில் ஒன்றாகும். இது பால் வழிக்கூட்டத்தின் மையத்தில் அமைவதால் எளிதில் கட்புலனாகும் விண்மீன் கூட்டம்.  இந்த விண்மீன் கூட்டத்தில் உள்ள பொலிவான விண்மீன்கள் அனைத்தும் தேனீர்ப் பாத்திரம் (Tea pot) வானவியல் வடிவை (Asterism) உருவாக்குகின்றன. கிபி இரண்டாம் நூறாண்டில் டாலமி (Ptolemy) யால் மு

தேசியக் கொடிகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் - (2)

Image
சென்ற  கொடிகள் பற்றிய பதிவில் திரு. யூர்கன் க்ருகியர் அவர்கள்  நேபாள் நாட்டின் கொடி பற்றிய வினா எழுப்பியிருந்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் இது பற்றிய தகவல் தேடுவது வேறு புதிய தகவல்களுக்கு என்னை அழைத்துச் செல்லுகிறது. நானும் பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வகை செய்கிறது. திரு .   திரு. யூர்கன் க்ருகியர்  அவர்களின் பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சியும் நன்றியும். பெனான் (Pennon) என்றால் நீண்ட முக்கோண வடிவமுள்ள கொடி என்றும் மற்றும் பென்நான்ட் (Pennant) என்றால் நீண்ட கொடி என்றும் பொருள்படும். இவ்வகையான கொடிகள் மூன்று பிரிவுகளாக உள்ளன. 1)முக்கோண வகை பென்நான்ட் 2) சரிந்த வகைபென்நான்ட் மற்றும் 3) மிக வேகமாகப் பறக்கும் சுவாவோ (Swallow Bird) என்ற பறவையின் முள்கரண்டி வடிவிலான வால் போன்ற அமைப்பு.  இவ்வகையான கொடியமைப்புகள் கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிபி பதினைந்தாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. பெனான்செல்ஸ் (Pennoncells), ஸ்டிரிமர்ஸ் (Streamers) அல்லது  பென்டெண்ட் (Pendent) என்பவை அடிப்படையான இந்த வடிவங்களில் காணப்படும் சிறு மாறுதல்கள் ஆகும். ஸ்டி

தேசியக் கொடிகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் - (1)

Image
விண்மீன்களும் கொடிகளும் பற்றிய தொடரை எழுத ஆரம்பித்த போது அது என்னை புயல் காற்று போல் எங்கெங்கோ கூட்டிப் போணது. அப்போது கொடிகள் அவற்றின் அமைப்பு வரலாறு இவை பற்றி எல்லாம் கொஞ்சம் அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதை பகிரும் எண்ணத்துடன் என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.  கொடிகள் பற்றிய படிப்பு வெக்ஸில்லோஜி (vexillology) என்று அழைக்கப்படுகிறது. ஒரு கொடியின் அமைப்பில் பயன் படுத்தப்படும் சில தொழில்நுட்ப வார்த்தைகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கொடுத்துள்ளேன். இதில் தவறுகள் இருப்பின் எனக்கு தெரிவித்தால் திருத்திக் கொள்ள முடியும். பொதுவாக ஒரு கொடியின் வடிவமைப்பில் உள்ள முக்கியமான பகுதிகளும் அவற்றின் பெயர்களும் கீழே தரப்பட்டுள்ளது. கொடியின் புலம்  (ஃபீல்ட் - Field) என்றால் அதன் பின்புலத்தையும், பின்புலத்தின் நிறத்தையும் குறிக்கும். இங்கு புலம் இள நீல வண்ணத்தில் சுட்டப்பட்டுள்ளது. ஒரு  செவ்வகக் கொடியை நான்கு சம பகுதியாக பிரித்தால் அதில் பொதுவாக எந்த ஒரு கால் பகுதியையும்  கேன்டன் (Canton) என்று அழைக்கலாம். ஆனால் கொடிக் கம்பத்தின் அருகில் உள்ள பகுதியின் மேல் க