Posts

Showing posts from October, 2019

எனக்கோர் குழல் கொடுங்கள் - கலீல் ஜிப்ரான்

Image
Give me the flute Give me the flute, and sing immortality lies in a song and even after we've perished the flute continues to lament have you taken refuge in the woods away from places like me followed streams on their courses and climbed up the rocks. Did you ever bathe in a perfume and dry yourself with a light drink the dawn as wine rarefied in goblets of ether give me the flute then and sing the best of prayer is song and even when life perishes the flute continues to lament have you spent an evening as I have done among vines where the golden candelabra clusters hang down did you sleep on the grass at night and let space be your blanket abstaining from all that will come forgetful of all that has passed give the flute then and sing in singing is Justice for the heart and even after every guilt has perished the flute continues to lament give the flute and sing forget illness and its cure people are not

மரணத்தின் அழகு - பகுதி (3) - கலீல் ஜிப்ரான்

Image
  எச்சங்கள் என்னை மூடியுள்ள வெண்நிற முரட்டுச் சவத் துணி களைந்து மல்லி, அல்லி இதழ்களால் எனக்கு ஆடை சூட்டுங்கள்.   தந்தப் பேழையிலிருந்து என்னுடலை எடுத்து அது நரந்தப் பூவணை மேல் கிடத்தப்படட்டும். என் மறைவுக்குப் புலம்பாமல் இளமையையும் மகிழ்ச்சியையும் போற்றிப் பாடுங்கள். எனக்காக அழுது கண்ணீர் சிந்தாமல் அறுவடையையும் திராட்சை ரசம் பிழிந்தெடுப்பதையும் பாடுங்கள். வேதனைப் பெருமூச்சு விடாமல் எல்லோரும் என் முகம் மீது உங்கள் விரல் கொண்டு அன்பின், மகிழ்ச்சியின் சின்னங்களை வரையுங்கள். காற்றின் அமைதியை அழிக்கும் ஆன்ம சாந்தி ஆராதனையோ, இரங்கற்பண்ணோ இன்றி என்னுடன் சேர்ந்து மானசீகமாக உங்கள் இதயம் நித்தியமான வாழ்வுக்குக்குரிய பாடல்களைப் பாடட்டும். கருப்பு உடை அணிந்து துக்கம் அனுசரிக்காமல் வண்ண ஆடை உடுத்தி என்னுடன் களிப்பெய்துங்கள். என் பிரிவை நெஞ்சத்தில் ஏக்கத்துடன் பேச வேண்டாம் கண்களை மூடிக் கொண்டாலே நான் உங்களுடன் இருப்பதை இனி எப்போதும் காண முடியும். என்னை இலைக் கொத்துக்கள் மீது கிடத்தி, உங்களது நட்பான தோள்களில் சுமந்து, மெல்ல

முடக்கு வாதமும் சைவ உணவுப் பழக்கமும்

Image
தாவர அடிப்படையிலான சைவ உணவும் உங்கள் முடக்கு வாதத்தைக் ( rheumatoid arthritis ) குணப்படுத்தும் வாய்ப்பும் ஆங்கிலத்தில் Rheumatoid arthritis, சுருக்கமாக RA என்றழைக்கப்படும் முடக்கு வாத நோய் காரணமாக ஏற்படும் வலி மற்றும் மூட்டு வீக்கத்திலிருந்து நல்ல நிவாரணம் பெற தாவர அடிப்படையிலான சைவ உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்வது சாலச் சிறந்தது என்று சமீபத்திய மதிப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.   . இப் பரந்த பூவுலகின் மக்கட் தொகையில்   நூற்றில் ஒருவரைத் தாக்கி, மிகுந்த   வலியையும் வீங்கிய மூட்டுகளையும் ஏற்படுத்தும்   முடக்கு வாத நோயின் மூலமே தன்னத்தானே எதிர்க்கும் நம்முடலின் செயல்பாடுதான். இருப்பினும் இந்த நோய்க்கான நோய் காரணவியலில் (etiology) முன்னமே தீர்மானிக்கப்பட்ட மரபியல் பண்புகளும், வாழ்க்கை முறைக் காரணிகளும் பங்கு கொள்கின்றன. வாழ்க்கை முறை என்பதில் தொற்றுகள் (infections), உணவு (diet) மற்றும் குடல் நுண்ணுயிர்ச்சூழகம் (gut microbiome) போன்ற காரணிகளும் அடங்கும். நமது உணவு எப்படி மூட்டுகளைப் பாதிக்கிறது? உணவுக்காரணிகள் உணவு மூலக்கூறுகளை அனுமதிக்கும் குடலின் தடுப்பை பலமிழக்கச் செய்வதால் பா

ஹெப்பாடிட்டீஸ் C (hepatitis C) க்குத் தடுப்பூசிமருந்து சாத்தியமா?

Image
ஹெப்பாடிட்டீஸ் A,B,C மற்றும் D ஆகியவை கல்லீரலைப் பாதிக்கும் தீநுண்கிருமி எனப்படும் வைரஸ் தொற்றுகள். ஹெப்பாடிட்டீஸ் A வகைக்கும் ஹெப்பாடிட்டீஸ் B வகைக்கும் நோய்த் தடுப்பு மருந்து (Vaccine) புழக்கத்தில் இருந்தாலும் ஹெப்பாடிட்டீஸ் C வகைக்கு நோய்த்தடுப்பு மருந்து (Vaccine) எதுவும் தற்சமயம் நம்மிடையே இல்லை. அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஹெப்பாடிட்டீஸ் C க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டபடியே உள்ளனர் என்றாலும் ஹெப்பாடிட்டீஸ் C நோய்க்கே உரித்தான குறிப்பிட்ட சில சவால்கள் ஆண்டாண்டு காலமாகத் தடுப்பு மருந்து உருவாக்குவதை கடினமாகவே வைத்துள்ளது. ஹெப்பாடிட்டீஸ் C நோய்க்கான சிகிச்சை முறைகள் நோயைக் குணப்படுத்தும் என்றாலும் பலவாரகாலமும் அதிகப் பொருட் செலவும் பிடிக்கக் கூடியது. ஹெப்பாடிட்டீஸ் C க்கான வாக்ஸின் மூலம் கல்லீரல் பாதிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல் வைரஸ் பரவுதலையும் கட்டுப்படுத்த இயலும்.   இக் கட்டுரை ஹெப்பாடிட்டீஸ் C க்கான நோய்த்தடுப்புச்சத்து மருந்து (vaccine) கண்டுபிடிப்பதில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், நோய்க்கான சிகிச்சை