ஆப்பிளும் விஷமும் - கதை (1) - லோகேஷ் ரகுராமன்
லோகேஷ் ரகுராமன் ஆப்பிளும் விஷமும் கதையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் (LIVING TOGETHER COUPLE) இருவரின் அழகான காதல் கதை. கதையை முழுவதும் படித்து விட்டு பின்னர் கதையை நான் அணுகிய விதத்தை என்னுடைய பார்வையில் எழுதியிருக்கிறேன். கதை குறித்த என்னுடைய பார்வையை எழுதும் போது அவர்களைக் கணவன் மனைவி என்று கருதியே எழுதினேன். ஆனால் கதாசிரியர் லோகேஷ் ரகுராமன் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் இருவர் என்று தெரிவித்தார். என்னுடைய காலங்களில் அத்தகைய வாழ்க்கை முறை இல்லை என்பதால் அந்தக் கோணத்தில் சிந்திக்கவே இல்லை. https://lokeshraghuraman.wordpress.com/2019/11/29/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0 %AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ ராணி அகல்யா பாய் ஹோல்கர் கோட்டை மாகாலேஷ்வர், மத்திய பிரதேசம். ஒருவர் மீது ஒருவர் நெஞ்சு நிறையக் ஆசையும் பாசமும் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் இருவரின் காதல் காவியம் என்று சொன்னால் அது மிகையாகாது. கணவனைக் காதலிக...