Posts

Showing posts from June, 2026
 நடைப்பயிற்சி  முதுகுத் தண்டில் காசநோய் தாக்கியதால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடக்காமல் இருந்ததால் நடையில் தள்ளாட்டமும் தடுமாற்றமும் இருந்தது. நடைப்பயிற்சி செய்ய கோயம்பேட்டில் வசதியான பூங்காக்கள் கிடையாது. ஏசியன் கேம்ஸ் வில்லேஜ் வளாகத்தில் நடக்கலாம். ஆனால் தூரம் அதிகம்.  அங்கிருந்து நவம்பரில் நங்கநல்லூருக்கு வந்து பின்னர் நடைப்பயிற்சிக்கு நிறைய சிறிய பூங்காக்கள் இருக்கின்றன. என்ன பிரச்சினை  என்றால் செக்கு மாடு சுற்றுவது மாதிரி சுற்ற வேண்டும். நான் நாலு கிமீ நடக்க வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் 20 சுற்றுகள் வைக்க வேண்டியுள்ளது. பூங்காவில் காலை ஆறு மணிக்கு ஆஜர் ஆகி விடுவேன். அதிகம் கூட்டம் இருக்காது. என்னையும் சேர்த்து பத்து நபர்கள் இருந்தால் அதுவே பெருங்கூட்டம். இன்று நான் சென்றபோது வழக்கமாக வரும் கராத்தே மாஸ்டர் சப்தம் எழுப்பாமல் பரத நாட்டியம்  கற்றுக் கொள்ளும் பெண் போல் கைகளையும் கால்களையும் அசைத்து அபினயித்துக் கொண்டிருந்தார். பார்க்க வேடிக்கையாக இருந்தது. நானும் கடந்த மூன்று நாட்களாகப் பார்க்கிறேன், அவரிடம் பயிற்சி எடுக்க மாணவர்கள் யாரும் வருவதில்லை. ஒரு...
Image
 மனிதர்கள் (2) நல்ல மனிதர்கள் பலர் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  என் மகளின் சூட்கேஸில் ஒரு பிரச்சினை.‌ அதை சரி செய்து தர வேண்டும் என்று இங்கே சென்னைக்கு கொண்டு வந்தாள்.  இது போன்ற பழுதுபட்ட பெட்டிகளை பழுது நீக்கி சரி செய்யும்  கடைகள் அண்ணா நகரில் நிறைய உண்டு.‌ நாங்கள் கோயம்பேட்டில் இருந்தபோது அண்ணா நகருக்குஎளிதாகப் போய் வர முடிந்தது. மெட்ரோ ரயிலில் சென்று திருமங்கலம் நிலையத்தில் இறங்கினால் சூட்கேஸ் பழுது நீக்கி சரி செய்து தரும் கடைகள் பல உள்ளன. க்ஷஇங்கே நங்கநல்லூருக்கு வந்து பின்னர் அண்ணா நகர் செல்வது எளிதாக இல்லை. மேலும் சற்றே அளவில் பெரிய பெட்டியை அண்ணா நகருக்கு மெட்ரோ ரயிலில் எடுத்துச் சென்று வருவது எளிதாக இருக்காது என்பது மற்றொரு காரணம்.  ஆகவே இங்கே நங்கநல்லூரிலேயே இருக்கும் சூட்கேஸ் பழுது பார்த்துக் தரும் கடைகளை இணையத்தில் தேடியதில் நாலைந்து கடைகள் தேறின. அவற்றை ஆராய்ந்து பார்த்ததில் ST BAG REPAIRING என்ற கடைக்கு 25 வாடிக்கையாளர்கள் ஐந்து புள்ளிகளை வழங்கி இருந்தனர். எனவே அந்தக் கடையில் சூட்கேஸை பழுது பார்த்து விடலாம் என்று முடிவெடுத்தேன். என் இல்லத்தி...
Image
 மனிதர்கள் (1) என் மகன் 2018 ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலத்தில் புனே நகரில் பணியாற்றி வந்தார். அப்போது அவருடன் நானும் என் மனைவியும் ஒரு மாதம் தங்கியிருந்தோம். புனே நகரில் காண வேண்டிய பல இடங்களில் உள்ளன.‌ என் மகன் அலுவலகம் செல்வதால் அவனது விடுமுறை நாட்களில் மட்டுமே எங்களை வெளியில் அழைத்துச் செல்ல முடியும் என்ற நிலை. எங்களுக்கு ஹிந்தியோ மராத்தியோ தெரியாது.  சரி இருக்கவோ இருக்கிறது ஆங்கிலம். அதை வைத்து நாமே புனே நகரில் உள்ள முக்கிய இடங்களைக் காணலாம் என்று முடிவு செய்தோம். புனேயின் புறநகர் பகுதியான கோந்துவா குர்த் (Kondhwa Khurd) என்ற இடத்தில் மகனின் இல்லம் இருந்தது.   முதல் கட்டமாக ஒரு தாளில் புனே நகரில் பார்க்க வேண்டிய இடங்களை இணையதளத்திலிருந்து பட்டியலிட்டோம்.‌ அன்று காலை உணவு உட்கொண்ட பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஓட்டுநர் ஒருவரிடம் எனக்கு அரைகுறையாகத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்தப் பட்டியலைக் காட்டி அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டதும்  அவர் ஆங்கிலம் தெரியாது என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். அங்கிருந்த பிற ஓட்டுநர்களும் அப்படியே பதி...