Posts

Showing posts from February, 2018

லீபஸ் விண்மீன் கூட்டம் (LEPUS CONSTELLATION)

Image
சென்னையில் பிப்ரவரி , மார்ச் மாதங்களில் இரவு வானில் சுமார் 8.00 முதல் 9.00  மணிக்கு ஓரியன்( Orion) விண்மீன் கூட்டம் தலைக்கு மேலாகத் தெரியும். ஓரியன் கூட்டம் எளிதில் அடையாளம் காணக் கூடிய ஒன்று. அருகருகே நேர் கோட்டில் அமைந்த மூன்று விண்மீன்கள்( Orion belt) எளிதில் கட்புலனாகும். இந்த மூன்று விண்மீன்களை ஒரு கற்பனை நேர் கோட்டால் இணைத்து தென்கிழக்காக நீட்ட சிரியஸ்( Sirius) விண்மீனைக் காண முடியும். ஓரியன் இடுப்புக் கச்சுக்கு நாற்புறமும் நான்கு விண்மீன்களைக் காணலாம். இவற்றில் வட கிழக்கில் திருவாதிரை( Betelgeuse)   யும் , தென் மேற்கில் ரீகல்( Rigel) ம் காணப்படும். ஓரியனுக்குக் கீழே தெற்கில் ரீகலுக்கும் சிரியஸிற்கும் இடையில் முயல் விண்மீன் கூட்டம் ( Hare) என்ற லீபஸ்( Lepus) மங்கலாகத் தெரியும். அதற்கும் தெற்கில் புறா( Dove) என்ற கொலம்பா( Columba) வீண்மீன் கூட்டமும் கட்புலனாகும்.   இவ்விரு விண்மீன் கூட்டங்கள் பற்றிய விரிவான தகவல்கள் பின்வரும் கட்டுரையில் தரப்பட்டுள்ளது. WWW.astroviewer.com தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் விண்மீன் கூட்டங்களின் நிலையை