Posts

Showing posts from February, 2020

நீரிழிவு நோயால் (Diabetes) கல்லீரல் (Liver) சேதமடையும் வாய்ப்பைக் குறைப்பதற்கு உதவும் சில வழிமுறைகள்

Image
நீரிழிவு நோயால் (Diabetes) கல்லீரல் (Liver) சேதமடையும் வாய்ப்பைக் குறைப்பதற்கு உதவும் சில வழிமுறைகள். நீரிழிவு நோயாளிகளின் கல்லீரல் பாதிப்படைவதைக் குறைக்க 1) ஆரோக்கியமான உணவுப் பழக்கம் 2) தினசரி உடற்பயிற்சி 3) உடல் நிறைக் குறைப்பு மற்றும் 4) மத்தியதரைக்கடல் பகுதி உணவுமுறை (Mediterranean diet) ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. நீரிழிவு நோயாளர்களில் (Diabetes - type 2) இரண்டாம் வகைப் பிரிவினருக்கு NAFLD என்றழைக்கப்படும் மது சாரா கொழுப்பு மிகுந்த ஈரல் நோய் (Non Alcoholic Fatty Liver Disease) காரணமாக உடல் நலத்தில் பெரும் சிக்கல்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளது. அது என்ன NAFLD? இதுவரை கேள்விப்படாத புது நோயாக இருக்கிறதே என்ற வினா நமக்குள் நிச்சயம் எழும். முதலில் கொழுப்புமிகு ஈரல்   (Fatty Liver) என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.  FLD என்று சுருக்கமாகச் சொல்லப்படும் கொழுப்புமிகு ஈரல் நோயானது  (Fatty Liver Disease)   டிரைகிளிசரைடு  கொழுப்பானது பெரும்   நுண்குமிழிகளாகக்  கல்லீரல் செல்களில்  திரள்வதாகும்.  பல்வேறு காரணங்களினால் இந்தக் கொழுப்புமிகு ஈரல் நோய் (