Posts

Showing posts from July, 2021
  இந்தியாவைப் பொறுத்தவரையில் கர்கரால் (Garga) எழுதப்பட்ட கர்கசம்ஹிதா (Garga Samhitha) சோதிட ஆய்வு நூலில் 3 × 3 மாயச்சதுரத்தைப் பற்றிய முதல் குறிப்பு காணப்படுகிறது . சூரியன் , சந்திரன் , புதன் , செவ்வாய் , சுக்கிரன் , வியாழன் , சனி , ராகு , கேது ஆகிய நவக்கிரகங்களை யும் சாந்தி செய்ய 3 × 3 மாயச்சதுரத்தைப் பயன்படுத்த கர்கசம்ஹிதா வில் கர்க மகரிஷி பரிந்துரை த்துள்ளார் . இந்த ஆய்வு நூலின் பழமையான பதிப்பு பொதுயுகம் 100 ஆம் ஆண்டைச்  சேர்ந்தது . ஆனால் கிரகங்கள் குறித்த பத்தியை அலக்ஸாண்டரின் படையெடுப்பு நிகழும் முன்னர் , அதாவது 400 CE க்கு முன்பே எழுதியிருக்க வாய்ப்பில்லை. பொதுயுகம் 900 மாவது ஆண்டு வாக்கில் சித்தயோ க்(Siddhayog)   என்ற மருத்துவப் புத்தக ம் விரிந்தா மாதவா (Vrinda Madhava) என்பவரால்   எழுதப்பட்டது. இப்புத்தகத்தில் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு எளிதாகப் பிரசவம் நிகழ  3 × 3 மாயச் சதுரத் தை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையே மாயச் சதுரங்களின் காலக் கோட்டுத் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.   நான்குக்கு நான்கு (4X4) மாயச் சதுரம் அல்லது நான்காவது வரிசை மாயச் சதுரம் (Fourth order magic