Posts

Showing posts from February, 2017

புதியதோர் உலகம் - வெ.சுப்ரமணியன்

Image
தனித்த விண்மீன் ஒன்றைச் சுற்றி இயங்கும் புவியை ஒத்த ஏழு கோள்களைக் கொண்ட அமைப்பை முதன் முதலாக நாசாவின் (NASA) ஸ்பிட்செர் (Spitzer) விண்வெளித் தொலை நோக்கி காட்சிப்படுத்தியது. இந்தக் கோள்களில் மூன்று சர்வ நிச்சயமாக உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற மண்டலத்தில் அதாவது பாறைகள் நிறைந்த திரவ நீர் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நமது கதிரவக் குடும்பத்திற்கு அப்பால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே தனித்த விண்மீன் ஒன்றுக்கான உயிர்வாழ் சூழலைக் கொண்ட அதிகபட்ச கோள்களின் கண்டுபிடிப்பு என்ற புதிய சாதனையை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த எல்லாக் கோள்களும் உயிரினங்கள் வாழத் தக்க வளிமண்டலத்தையும் தேவையான திரவ நீரை கொண்டுள்ளது என்றாலும் அதில் மூன்று கோள்களில் வசிக்கத்தக்க மண்டலம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் நகரில் அறிவியல்பணிக்குழு இயக்கத்தின் (Science Mission Directorate) இணை நிர்வாகி திரு. தாமஸ் ஸுர்புசென் குறிப்பிடும்போது, இந்தக் கண்டுபிடிப்பு வசிக்கத்தக்க சுற்றுச் சூழல் மற்றும் உயிர் வாழ்வதற்கான உகந்த இடங்கள் குறித்த தேடலில் புதிர் ஒன்றில் கிடைக்கும்

அண்டம் புரியாத புதிரா? - பகுதி (1) – வெ.சுப்ரமணியன்.

Image
அண்டத்தின் (Universe) நிறையில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு நிறைக்குக் காரணமான பொருளை இன்றுவரை எந்த அறிவியலாளரும் நேரடியாக கூர் நோக்கி ஆய்வு செய்ததில்லை என்பது நம்ப இயலாத பேருண்மை . இருண்ட பருப்பொருள் (Dark matter) என்று பெயரிட்டு அழைக்கப்படும் இந்த வினோதமான மூலப்பொருள் ஒளியையோ அல்லது ஆற்றலையோ உமிழ்வது இல்லை. இத்தகைய தன்மையுள்ள ஒன்று அண்டத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஏன் அறிவியலாளர்கள் கருதுகின்றனர் என்பதைப் பார்ப்போம்.                                         1950 ஆண்டு வாக்கில் பிற விண்மீன் திரள்களைப் பற்றிய ஆய்வுகளில் அண்டம்வெறும் கண்களுக்கு தோற்றப்படுவதை விட இன்னும் அதிக பருப்பொருளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது. இருண்ட பருப்பொருள் கொள்கைக்கு ஆதரவு பெருகி வந்தாலும்  அது குறித்த நேரடியான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் இருண்ட பருப்பொருள் இருப்பதற்கான வலுவான சாத்தியக் கூறுகள் சமீப காலங்களில் அதிகம் அறியப்பட்டுள்ளன. அண்டத்தில் அதிகமாக அறியப்பட்டுள்ள பொருளை பாரியானிக் பருப் பொருள் (Baryonic matter) என்றழைக்கிறோம். இப்பொருள் புரோட்டான், ந

ஜெமினி என்ற மிதுனம் - வெ. சுப்ரமணியன்

Image
மேலே நீங்கள் காணும் படங்கள் அந்த நாளில் திரு. எஸ்.எஸ். வாசன் அவர்களின் ஸ்டூடியோவின் சின்னம்.1941 முதல் பல படங்களை பல மொழிகளில் தந்த அந்த நிறுவனம் 1975 ஆம் ஆண்டில் எடுத்த “ எல்லோரும் நல்லவரே” படத்திற்குப்பின்  நொடித்துப் போனது. இன்று அதன் எச்சமாக நிற்பது ஜெமினி பார்சன் காம்பிளக்ஸ் என்ற அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பிரம்மாண்டமான வணிகம் மற்றும் குடியிருப்பு வளாகக் கட்டிடம் தான். ஆனால் நமது கட்டுரை அதைப்பற்றி இல்லை. ஜெமினி அதாவது மிதுனம் என்ற விண்மீன் கூட்டம் பற்றிய கட்டுரை எழுத ஆரம்பித்தால்  “காதல் மன்னன்” என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள், ஜெமினி படத்தில் நடித்த விக்ரம் இவர்களின் நினைவு வருவதை தவிர்க்க முடியாது. இரவு வானில் பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து “ஜெமினி, ஜெமினி….. ஓ போடு” என்று உற்சாகமாக பாடி மிதுன ராசியை வரவேற்கலாம்.  ஜெமினி அல்லது தமிழில் மிதுனம் என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டத்தில் அடங்கிய முக்கியமான இரண்டு உடன்பிறந்த சகோதர விண்மீன்கள் காஸ்டர் (CASTOR) மற்றும் போலக்ஸ் (POLLUX).  இதன் காரணமாகவே மேலோகஇரட்டையர் (Heavenly twins) எ

நாளை (19.02.2017) நமதே - கேட்டை விண்மீன் பற்றிய பதிவு.

Image
நீங்கள் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் கொண்டவரா? இல்லை என்றால் இந்தப்பதிவு உங்களை நாளை விடியலில் அல்லது விடியலுக்கு சற்று முன் அலாரம் வைத்து எழுந்திருக்கச் செய்தால் அது என்னுடைய கட்டுரைக்கு 100/100 மதிப்பெண் நீங்கள் வழங்கியுள்ளதாகப் என்று பொருள். அப்படியானால் வரும் 19.02.2017 அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு மொட்டை மாடியிலிருந்தோ அல்லது நடைப்பயிற்சி செய்யும் மைதானத்திலிருந்தோ கிழக்கிலிருந்து தென் கிழக்காக வானத்தை வேடிக்கை பாருங்கள். “சார், why this kolaveri ?வாரம் பூரா உழைச்சிட்டு ஞாயிறு அன்றுதான் கொஞ்சம் 10 மணிவரைக்கும் தூங்குவோம். அன்னிக்கும் இப்படி எழுந்திருக்கச் சொல்லி கஷ்டப்படுத்துகிறது கொஞ்சமும் நியாயமே இல்லை” என்னும் உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது. அந்தக் காலத்தில் எங்க ஊர் கல்லிடைகுறிச்சியில் ஒருவர் லாட்டரிச் சீட்டுக்களை தெருவில் விற்றுக் கொண்டு வருவார். அவர் நாடி வரும் அதிர்ஷ்டத்தை தவறவிடாதீர்கள் என்று கூவிக்கூவி விற்பனை செய்வார். கிட்டத்தட்ட நானும் அப்படி உங்களை அழைகிறேன். தேய்பிறை நிலவுக்கு அருகே கேட்டை விண்மீன்னை (Anteres

புவியின் காந்த முனைகள் மாறுமா? - வெ. சுப்ரமணியன்.

Image
புவியின் காந்த வட முனை தென் முனையானால் என்னவாகும்? காந்த முனை மாறுதலை நோக்கிப் புவி சென்று கொண்டிருக்கிறதா? இது போன்ற வினாக்களுக்கு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சிகளின் பதிவுகள் சில நல்ல  தடயங்களைத் தருகின்றன. புவியின் மீது மிக அருமையானதோர் காந்தப் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.  இந்தப் போர்வைதான்  அண்டவெளிலிருந்து மின்னூட்டமுள்ள எலக்ட்ரான், புரோட்டான் போன்ற துகள்கள் புவியின் வளிமண்டலத்தை இடைவிடாமல் தாக்குவதிலிருந்து தடுத்துக் காக்கிறது. இந்த காந்தப் போர்வை மட்டுமில்லாவிட்டால், இந்த தீமை பயக்கும் கதிர்வீச்சுகள் மெல்ல மெல்ல வளிமண்டலத்தை பறித்து விட்டிருக்கும். இன்று இருப்பது போன்று பல்லுயிர்களும் வாழும் சூழல், ஒருகால்  அவ்வாறு நடைபெற்றிருந்தால் புவியில் இல்லாமலே போயிருக்கும்.   புவியில் உயிர்கள் வாழ்தலில் காலக்கணக்கிற்கு அடங்காத, என்றும் மாறாத் தன்மையுள்ள ஒரு அம்சமாக காந்தப்புலத்தைக் கருதி கற்பனை செய்தால் அது ஓரளவுக்குச் சரியானதே. காந்தப்புலத்தின் முனை (Magnetic Pole) மாற்றம் அடிக்கடி நிகழ்வது இல்லை. பல நூறாயிரம் ஆண்டுகளில் சில முறைகளே காந்தப்புல முனை மா