Posts

Showing posts from October, 2016

வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (9)

Image
இ ந்தப் புதிருக்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் பெத்தே (HANS BETHE)   (HANS BETHE  1906 - 2005 )   மற்றும் பிரைட்ரிச் வைஸாக்கர் (FRIEDRICH WEIZACKER)   (FRIEDRICH VON WEIZACKER  1912 - 2007)   ஆகிய இருவரும் தனித்தனியாக 1939 இல் விடை பகன்றனர். அவர்கள் விண்மீன்கள் மற்றும் கதிரவனின் மையப் பகுதியில் ஹைட்ரஜன் எப்படி ஹீலியமாக மாறுகிறது என்பதற்கு இரு வேறு வழிமுறைகளைத் தந்தனர். சூரியனின் நிறையை விட அதிகமான நிறையும், உள் வெப்பநிலை 15 மில்லியன் கெல்வினை விட அதிகமான வெப்பநிலையிலும் உள்ள விண்மீன்களில் காணப்படும் அணுக்கரு இணைவு வினை கார்பன் - நைட்ரஜன் - ஆக்ஸிஜன் வினையாகும். சூரியன் போன்ற குறைந்த நிறையுடைய விண்மீன்களிலும், உள் வெப்பநிலை 15 மில்லியன் கெல்வினுக்குக் குறைவாகவும் உள்ள விண்மீன்களில் நடைபெறும் வினை மூன்று படிகளாக கீழே விளக்கப்பட்டுள்ளது.      Image courtesy : Nobel Prize org Animation Courtesy : https://www.emaze.com/@AZOTITCC/What-is-energy? 1940 ஆம் ஆண்டில் இயற்பியலாளர்களும் , வானவியலாளர்களும் விண்மீன்கள் ஆற்றலை எவ்வாறு வெளியிட

வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (8)

Image
பன் நெடுங்காலமாக மனிதன் விண்மீன்கள் நிலையானவையாக இருப்பதைப் பார்த்து வந்ததால், அவை தொடக்கமும் , முடியும் அற்றவை என்றே கருதினான்.வானியலாளர்கள் கூட , பல நூற்றாண்டு காலங்களாக இத்தகைய கருத்தையே கொண்டிருந்தனர்.ஆனால் எப்போது விண்மீன்கள் ஒளிப் புள்ளிகள் இல்லை என்பதும் உண்மையில் அவைகள் அனைத்தும் மிகப் பெரிய நெருப்பாய் பற்றி எரிந்தபடி ஒளிரும் வெப்பமான வாயுக் கோளங்கள் என்பதும் தெரிய வந்ததும் மேற் சொன்ன கருத்து பிழையானதென முடிவானது. ஏனெனில் விண்மீன்கள் வெப்பமான ஒளிரும் கோளங்கள் என்பது உண்மையானால் அவை எதையோ எரித்தே ஆற்றலை வெளித்தருகின்றன.அப்படி எதையோ எரித்து ஆற்றலைத் தரும் பட்சத்தில், எப்போது எரியத் தொடங்கியது?அதாவது எரியத் தொடங்கியதுதான் அதன் தொடக்கம் என்றாகிறது.அதே போல் எரி பொருள் முற்றிலுமாக எரிந்து தீர்ந்த பின்பு, எப்படி விறகு அடுப்பில் எரிந்து சாம்பல் மிஞ்சுகிறதோ அது போல விண்மீனில் என்ன மிஞ்சும்?எரி பொருள் முற்றிலுமாக எரிந்து தீர்ந்த நிலையை விண்மீன்களின் முடிவு என்று கூறலாமா? நெடு நாட்களாகவே விண்மீன் எப்படி ஒளி தருகிறது என்பதை புரிந்து கொள்ள பூமியில் அவன் அறிந்த முறைகளில் வெப்பத்தையும்,ஒ