Posts

Showing posts from December, 2021

அண்ணா நகர் அனுபவங்கள்

Image
அண்ணாநகர் இரண்டாவது நிழற் சாலை சென்னையின் மிக அழகான சாலைகளில் ஒன்று . சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு இச்சாலையில் தபால் அலுவலகத்திற்கு எதிரில் இருந்த ஒரு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன்.  குடியிருப்பில் மொத்தம் ஐந்து அடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலும் மூன்று தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் எதிரெதிராக இரண்டு வீடுகள். நான் 1988 முதல் 1994 வரையில் முதல் தளத்தில் கதவு எண் 342/4 வசித்தது வந்தேன்.  இரு படுக்கை அறை அடுக்ககம். இரண்டு பத்துக்குப் பத்து படுக்கை அறைகள் அதே அளவில் ஒரு வரவேற்பறை, சிறிய ஆனால் வசதியான சமையலறை என்று காற்றும் வெளிச்சமும் எல்லா அறைகளிலும் போதிய அளவில் கிடைக்கக் கூடிய வகையில்  நேர்த்தியான கட்டமைப்பை உடையது. கட்டுமானம் மிகத் தரமானது என்று சொல்ல இயலாத போதும் அடுக்ககத்தின் வளாகத்தில் முன்புறம் பாதுகாப்பாகக் குழந்தைகள்  விளையாட நிறையத் திறந்த வெளி, சாலையை ஒட்டி இருப்பதும் கடைகள் வங்கிகள் என பல வசதிகள் இருநூறு மீட்டர் தொலைவில் சரவண பவன்  நடைப்பயிற்சிக்கு விஸ்வேஸ்வரய்யா பூங்காவும் பக்திக்கு ஐயப்பன் கோவிலும் இருந்ததால் அந்த இடம் ஒரு மிகச்சிறந்த வசிப்