Posts

Showing posts from March, 2018

ஐந்து கோள்கள் கட்புலனாகும் 2018 மார்ச் மாதம்

Image
                                    க டந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பொலிவான ஐந்து கோள்களை ஒரே நேரத்தில் வானில் நம்மால் காண முடிந்தது . அதே போன்று நடக்கும் 2018 ஆண்டு மார்ச் மாதத்தில் காண முடியுமா என்றால் முடியாது என்ப தே நேர்மையான பதிலாக இருக்கும் . இருப்பினும் வட அரைக் கோளத்தில் வசிப்பவர்கள் மார்ச் 2018 இல் ஐந்து பொலிவான கோள்களையும் ஆதவன் உதிக்கும் முன்போ  (Dawn) அன்றி மறைந்த பின்னோ  (Dusk) காணக் கூடிய அரியதோர் வாய்ப்பு நடக்கும் மார்ச் மாதம் நமக்குக் கிடைக்க உள்ளது . இவ்வாய்ப்பைத்  தென் அரைக் கோளத்தில் வசிப்பவர்கள் ஏப்ரல் 2018 இல்  பெறுகின்றனர் .                                              பொலிவான கோள்கள் என்று நாம் இங்கே   குறிப்பிடுவது , எந்த ஒரு ஒளியியல் கருவியின் துணையும் இன்றி , அதாவது வானியல் தொலை நோக்கி அல்லது இரு கண் நோக்கி இவற்றின் உதவி இல்லாமல் மனிதனால் வெறும் கண்களுக்கே காலங்காலமாய் புலப்பட்ட நம் கதிரவக் குடும்பத்தில் உள்ள கோள்களில் பின்வரும் ஐந்து கோள்களே ஆகும் .  கதிரவனின் வெளிப்புற வரிசையில் எடுத்துக் கொண்டால் முதலில் புதன்  (Mercury), வெள்ளி  (Venus),