உலராதிருக்கும் வரை - கதை (4) சுழி
ஒரு தந்தையின் மனப் போராட்டம் கதையில் சொல்லப்படுகிறது. அந்தப் போராட்டம் எப்படி இயற்கையின் விளையாட்டோ அதேபோல் அது முற்றுப் பெறுவதும் இயற்கையின் விளையாட்டாகவே அமைகிறது. இதோ கீழே கதையின் இணைப்புக் கண்ணி https://vallinam.com.my/version2/?p=9445 # இனி கதை என் பார்வையில். கதையில் கதாநாயகனுக்கு மகன் அதுவும் தன்னுடைய 2.0 பதிப்பாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் பிறந்து என்னவோ பெண் குழந்தை. அதுவும் தன் குணாதிசயங்களைத் கொள்ளாமல் எல்லாச் செயல்பாடுகளிலும் தன் மனைவியைக் கொண்டிருப்பதில் கொஞ்சம் வருத்தம். மகளின் நடை உடை பாவனை மற்றும் செயல்கள் எல்லாம் அவளது தாயைப் போலவே இருப்பதை அவள் பெருமையாகக் கருதுகிறாள். அவன் மனைவி வழியில் மரபணுவிலேயே பெண்கள்தான் dominant. அதைக் கிண்டலாக 'கோழிப்பண்ணை'க் குடும்பம் என்றழைக்கும் சகலைகள் வாயிலாக வெளிப்படுத்துகிறார் லோகேஷ் ரகுராமன். அதே மாதிரி பெண்ணின் செயல்பாடுகளில் சக்கரம் வைத்த பெட்டியை சிரமப்பட்டு தன் தாயைப் போலவே தூக்கிக் கொண்டு நடப்பது போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். பெண்ணிற்கோ தான் தாயை நடை, உடை பாவனையில் கொண்...