Posts

Showing posts from March, 2017

புதிரான எப்சிலன் ஆரிகே (Epsilon Aurigae) விண்மீன் - வெ.சுப்ரமணியன்.

Image
விண்ணில் காணும் புதிரான பல விண்மீன்களில் எப்சிலன் ஆரிகே (Epsilon Aurigae) யும் ஒன்று. பொதுவாக நம் எதிர்பார்ப்புக்கு பொருந்தி வராத செயல்பாடு கொண்ட இது ஒரு கிரகண இருமை விண்மீன் (eclipsing binary star). இதன் பொலிவு மாற்றங்களான ஒளிர்தலும் மங்குதலும் சற்றே வினோதமானது. இதுவே பல தலைமுறைகளாக தொலைவாக உள்ள இந்த விண்மீனில் என்ன நடக்கிறது என்பது குறித்து பல்வேறு ஊகங்களுக்குக் காரணமாக இருந்தது. இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது 24.03.2017 முதல் 30.03.2017 வரையிலான ஏழு நாட்களும் புற உதவி எதுவுமின்றி வெறும் கண்களாலேயே இருள் கவியத் தொடங்கியதும் தலைக்கு மேலாக வானில்  கேப்பெல்லா(Capella) விண்மீனைக் காணமுடியும். இதுதான் ஆரிகே என்ற தேரோட்டி (Charioteer) விண்மீன் கூட்டத்தின் மிகப் பொலிவான விண்மீன். இதற்கு அருகில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கோண வடிவத்தில் சிறு பிள்ளைகள் (The Kids) என்றழைக்கப்படும் மூன்று சிறிய விண்மீன்களைக் காணலாம். இம் மூன்றில் உச்சியில் ஒளிர்வதே எப்சிலன் ஆரிகே விண்மீன். அரபி மொழியில் இந்த விண்மீன் அல்மாஸ் (Almaaz) அதாவது ஆட்டுக்கிடா (he-goat) என்று பொருள்படும் பெயரால் அழைக

வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (17)

Image
நமது கதிரவன் ஒரு நடுத்தர நிறையுள்ள விண்மீன். கதிரவனும்,கதிரவக் குடும்பமும் சுமார் 5000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாயு மற்றும் தூசுக் கூட்டத்திலிருந்து தோன்றியது. வாயு, தூசிக் கூட்டத்தில் ஹைட்ரஜனும் ஹீலியமும் இருந்திருக்குமானால், புவியில் கண்டிப்பாக கனமான தனிமங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. புவியில் இத்தகைய தனிமங்கள் கிடைப்பதால் நமது கதிரவன் முதலாம் தலைமுறை விண்மீன் ஆக இருக்க முடியாது. அது இரண்டாம் தலைமுறை விண்மீனாக அதாவது ஒரு விண்மீனின் இறப்பின் பொழுது வெடித்துப் பரவிய கனமான தனிமங்கள் செறிந்த வாயுக்கூட்டத்திலிருந்து உருவானதாக இருக்க வேண்டும். புவியில் காணப்படும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் தவிர மற்ற பிற கனமான தனிமங்கள் எல்லாமே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இறந்த ஏதோ ஒரு விண்மீனிலிருந்தே உண்டாகியிருக்க வேண்டும். அப்படி ஒரு விண்மீனின் கண்கவர் காட்சியான இறப்பு மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் நம் புவி, அதில் காணப்படும் தனிமங்கள், தாவரங்கள், மனிதர்களாகிய நாம் , பிற உயிரினங்கள் மற்றும் கதிரவக் குடும்பத்தின் மற்ற கோள்கள் இவை எதுவுமே தோன்றியிருக்காது. ஒரு பெரு நோவா வெடிப்பிற்குப் பின்னரே கத

அண்டம் புரியாத புதிரா? - பகுதி (2) - வெ.சுப்ரமணியன்.

Image
அண்டத்தின் தொடக்க காலகட்டத்தில் இருள் பொருள் (Dark matter) எங்கிருந்தது?   இ ருண்ட பொருளின் இருப்பு (Presence of Dark matter) பற்றிய நேரடியான சான்று 1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே கிடைக்கப் பெற்றது. வாஷிங்டனில் உள்ள கார்னகி நிலையத்தின் (Carnegie Institution) வெரா ரூபின் ( Vera Rubin ) மற்றும் கெண்ட் ஃபோர்ட் ( Kent Ford ) ஆகிய இருவரும் ஆண்டிரமெடா விண்மீன் திரளின் ( Andromeda Galaxy) சுற்றியக்கத்தை (Rotational velocity) அவதானிக்கும் போது விண்மீன் திரள்களின் இயக்கம் குறித்து முன்னர் சொல்லப்பட்ட கொள்கைகள் தவறு என்ற முடிவை எட்டுவதற்கு காரணமாக அமைந்தது.  அதாவது திரளின் விளிம்பில் அமைந்த விண்மீன்களும், வாயுக்களும் கிட்டத்தட்ட திரள் மையத்தின் (Galactic centre) அருகில் அமைந்த விண்மீன்கள் மற்றும் வாயுக்களின் வேகத்திலேயே இயங்குவது விந்தையானது. காரணம், இது நிறுவப்பட்டு நடப்பில் உள்ள இயற்பியல் இயக்க விதிகளுக்கு முரணானதாக இருக்கிறது. நடப்பில் உள்ள இயக்கவியல் விதிகளின்படி திரள் மையத்தின் அருகில் அமைந்த விண்மீன்களும் , வாயுக்களும் அதிக வேகத்துடனும், விளிம்பில் அமைந்த விண்மீன்களும் , வாய

வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (16)

Image
                                                 தூசுத்துகளிலிருந்து தூசுத்துகளுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் கூறியபடி மண்ணில் பிறந்த எல்லாம் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். திரும்பத்திரும்ப பிறப்பு பின்னர் மரணம் மீண்டும் பிறப்பு மறுபடியும் மரணம் என்பது மனிதனுக்குப்பொருந்துமோ இல்லையோ கண்டிப்பாக விண்மீன்களுக்குப் பொருந்தும். விண்மீகள் அதிகமான ஹைட்ரஜனும்,சிறிதளவு ஹீலியம் கொண்ட வாயுக் கூட்டத்திலிருந்து வாழ்வைத் தொடங்கி, வயது முதிரமுதிர பல புதுப்புதுத் தனிமங்களை பெற்றெடுத்து இறுதியில் இறந்து போகின்றன. இறப்பிற்குப் பின்னர் மீண்டும் புதியதாய்ப் பிறக்கின்றன. ஒவ்வொரு விண்மீனும் அண்டத்தின் சமையற்கலனாக செயல்படுகிறது. விண்மீன்கள் அனைத்துமே வாயுக் கூட்டத்திலிருந்து, அதிலும் குறிப்பாக அதிகமான ஹைரஜன் மற்றும் குறைந்த அளவிலான ஹீலியம் வாயுக்கள் அடங்கிய கூட்டத்திலிருந்து உருவாகின்றன என்பதை நாம் அறிவோம். ஹைட்ரஜனை சமையல் செய்து பல புதிய வேதியல் தனிமங்களைத் தரும் விண்மீன்சட்டியில் சமைக்கப்படும் தனிமங்களுக்கான சமையற் குறிப்பையும் வானவியலாளர்கள் தந்துள்ளனர். இந்த சமையற்குறிப்புகளிலேயே மிக எளி

இன்றைய (06.03.2017) இரவு வானம்.

Image
  இன்று, நாளை அதாவது 06/03/2017 மற்றும் 07/03/2107 ஆகிய இரண்டு தினங்களும் நிலவு ஏழு பொலிவான விண்மீன்களுக்கு நடுவில் வானில் இருப்பதைக் காணலாம். இந்த ஏழு விண்மீன்களை ஒரு வட்டத்தில் அமைந்திருப்பதாகக் கற்பனையாகக் கருதி “ குளிர் கால வட்டம்” ( Winter Circle) என்ற பெயரிட்டழைக்கிறோம். வட அரைகோளத்தில் இருக்கும் நமக்கு பொழுது சாயும் வேளையில் தெற்கு வானில் பெரும் பகுதியை இந்த குளிர் கால வட்டம் நிரப்பி விடும். உலகின் பிற இடங்களில், அப்பகுதிகளில் குளிர் காலமாக இல்லாவிட்டாலும் கூட நிலவு இந்த விண்மீன்களுக்கு நடுவில் கோபியர் சூழ்ந்த கண்ணனைப் போல் காட்சியளிக்கும். தெற்கு அரைக்கோளத்தில், மித வெப்ப அட்சங்களில் இந்த குளிர்கால வட்டம் நாம் வட அரை கோளத்திலிருந்து காண்பதற்கு நேர் தலை கீழாக சிரியஸ் விண்மீன் (Sirius) மேலாகவும் கபெல்லா விண்மீன் (Capella) கீழாகவும் கட்புலனாகும்.  மாலை இன்னும் இருட்ட இருட்ட உலகக் கோளத்தின் வட அரைகோளத்தில் நாம் குறிப்பிடும் குளிர்கால வட்டத்தில் அமைந்த பொலிவான விண்மீன்கள் வானின் குறுக்காக வடக்கு நோக்கி மணிக்கு 15 டிகிரி கோணம் என்ற அளவில் நகரத்தொடங்கும்.  குளிர்கால வட்டம்