Posts

Showing posts from January, 2018

31.01.2018 சந்திர கிரகணம் - ஒரு பார்வை

Image
                                                               2018 ஆம் ஆண்டில் ஜனவரி 31 அன்று நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணம் மிகவும் சிறப்பானது . இந்த நிகழ்வின்  சிறப்பு,  அடிக்கடி நிகழாத அபூர்வமான மூன்று முக்கியமான நிகழ்வுகள் ஒருசேர நிகழ்வதே . இத்தகைய நிகழ்வை பெரிய நீல குருதி நிலவென்று (Super Blue Blood Moon) வேடிக்கையாகப் பெயரிட்டு அழைக்கலாம் . மேலும் இந் நிகழ்வு வானியல் ஆய்வாளர்களுக்கு நிலவினை வெப்பம் உணரும் கேமிரா மூலம் படமெடுக்கும் அரிய வாய்ப்பையும் நல்கியுள்ளது .                                              2018 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில்முழு நிலவு ( பௌர்ணமி ) கடந்த 2 ஆம் தேதி காட்சி தந்தது . இப்போது மீண்டும் ஜனவரி 31 ஆம் தேதி மீண்டும் முழு நிலவு காட்சியளிக்கப் போகிறது . ஒரு மாதத்தில் இருமுறை முழு நிலவு காட்சியளிப்பது சற்று அபூர்வமான நிகழ்வே . இத்தகைய நிகழ்வை ப்ளூ மூன் ( Blue moon ) என்றழைப்பர் .                                          பொதுவாக நீல நிலா(Blue Moon) தொடர்பாக இருவகையான வரையறைகள் சொல்லப்படுகிறது . அதாவது பழைய வரையறைப்படி ஒரு ஆண்டின் நான்கு பர

இருண்ட ஆற்றல் தேவையா? - பகுதி (3)

இதன் விளைவாக ஒளி மற்றும் நிறை ஆகியன எளிய நேரான பாதையிலிருந்து விலக்கப்படுவது ஈர்ப்பு விசையை ஒத்திருக்கிறது. சார்பியலின் எளிய கணித மாதிரி (mathematical model) பொருளுக்கும் வளைவுக்கும் (matter and curvature) இடையிலான தொடர்பை விவரிக்கிறது. ஆனால் அது சமன்பாடுகளில் கூடுதலாக பேரண்டவியல் மாறிலி (cosmological constant) என்ற கூடுதல் அளவுரு ஒன்றை நுழைத்து மாற்றி விடுகிறது. பேரண்டவியல் மாறிலி, அண்டவெளிக்கான ஒட்டுமொத்த விரிவு வீதத்தைத் (rate of expansion) தருகிறது. இருண்ட பொருளின் அவதானித்த பண்புகளை பொது சார்பியலில் இயல்பாகவே எழும் பேரண்டவியல் மாறிலி மிகச் சரியாக விவரிக்கிறது. எனவே இதுதான் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான மாதிரி எனலாம். பாரம்பரிய சார்பியலில் பேரண்டவியல் மாறிலியின் ‘இருத்தல்’ என்பது பேரண்ட விரிவு என்பது காலவெளியின் (space time) ஒரு பண்பு என்பதையே சுட்டுகிறது. ஆனால் நம் அண்டம் குவாண்டம் கொள்கையாலும் நிர்வகிக்கப்படுகிறது. குவாண்டம் கொள்கை பேரண்டவியல் மாறியைச் சரியான முறையில் கையாளவில்லை. இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக பேரண்ட விரிவை குவாண்டம் வெற்றிட ஆற்றல் இயக்குவிக்கிறது என்று