Posts

Showing posts from February, 2021

டிரை கிளிசரைடுகள் (Triglycerides)

Image
மனித உடலின் இன்றியமையாத உறுப்புகளைப் பட்டியலிட்டால் அதில் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற பல உறுப்புகள் இடம் பெறும். மனிதன் உயிர் வாழ இந்த உறுப்புகள் அனைத்துமே ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்தக் கட்டுரையில் முக்கியமான உறுப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இதயத்தின்  ஆரோக்கியத்தை டிரைகிளிசரைடுகள் (Triglycerides) என்னும் ஒரு வகையான கொழுப்புப் பொருள் (lipid) எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறித்துக் காணலாம். இதய ஆரோக்கியத்திற்கான காரணிகளில்  இரத்த அழுத்தமும் (Blood pressure) லிப்பிட் கொழுப்பும் (lipid fat) இடம் பெறுகின்றன. ஆகவே இரத்த அழுத்தத்தின் அளவும் லிப்பிட் கொழுப்புகளின் அளவுகளும் சரியான வீச்செல்லைக்குள் (range) இருத்தல் வேண்டும்.  தவிரவும் இரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவும் கண்காணிக்கப்படுதல் மிகவும் அவசியம். ஏனெனில் அதிக அளவில் இரத்தத்தில் டிரைகிளிசரைடுகள் காணப்பட்டால், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவு கண்காணிக்கப்பட்டு இயல்பான அளவுக்குள் (normal range) வைக்கப்பட வேண்டும். இதய