Posts

Showing posts from April, 2017

டி.என்.ஏ (DNA) - பகுதி 5

Image
மூலக்கூறு கடிகாரங்கள் மனித மற்றும் பிற உயிரினகளின் பரிணாம வளர்ச்சிக் கணக்கீடுகளில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்த போதிலும் அதன் பயன்பாட்டில்  சில சிக்கல்களும் உள்ளன.  உண்மையில் பிறழ்வு மற்றும் மறு இணைவு ஆகிய இரண்டுமே நிகழக் கூடிய வீதங்கள் மனித பரிணாம வளர்ச்சியில் என்றுமே மாறாமல் இருந்திருக்கவில்லை என்பது ஒரு முக்கியமான சவாலாக விளங்குகிறது. இந்த வீதங்கள் இரண்டும் காலம், உயிரிங்களின் வகைகள் சார்ந்து   சிறிது சிறிதாக மாற்றம் அடைகின்றன. சொல்லப்போனால் மனிதக் குழுக்களுக்கிடையில் கூட சற்று மெதுவாக மாற்றமடைகிறது. இது வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறான வேகத்துடன் டிக் டிக் என்றியங்கும் கடிகாரத்தைக் கொண்டு காலத்தை அளப்பதற்கு ஒப்பானது என்றே கூறலாம். Prdm9 என்னும் மரபணுதான் டி.என்.ஏ யின் குறுக்கிணைவு ( crossover) நிகழ்வுகள் ஏற்பட வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கிறது. மனிதர்கள், சிம்பன்சிகள் மற்றும் சுண்டெலிகளில் இந்த குறிப்பிட்ட மரபணுவின் வேறுபாடுகள் (variations) மறு இணைவு சுடுபுள்ளிகளைத் (Recombination hotspots) திருத்தியமைக்கின்றன. மறு இணைவு சுடுபுள்ளிகள் என்பவை மரபணுத்தொகுப்புகளில் (Geno

டி.என்.ஏ (DNA) - பகுதி (4)

Image
ரோமானியாவில் குகை ஒன்றில் கிடைத்த ஐரோப்பாவின் ஆரம்ப கால (Early Modern Man)  நாகரீக மனிதனின் தாடை எலும்புப் படிமத்திலிருந்து நியாண்டர்தால்களும், ஐரோப்பிய ஆரம்பகால நாகரீக மனிதர்களும் 40000 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து ஒரு கலப்பினத்தை உருவாக்கியதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த தாடை எலும்பை டி.என்.ஏ சோதனை செய்த போது இதுவரை வரிசைப்படுத்தப்பட்ட நாகரீக மனித எலும்புக் கூடுகளில் அதிகபட்ச விழுக்காடு மரபணுக்களை நியாண்டர்தாலிடமிருந்து பெற்றுள்ள மரபணுத் தொகுதியைக் (GENOME) கொண்டது இதுதான் என்று தெரிய வந்துள்ளது.  அதாவது கிட்டத்தட்ட 8 முதல் 11 விழுக்காடு நியாண்டர்தால் மரபணுக்களை தன் மரபணுத் தொகுப்பில் கொண்டுள்ளதாக மரபியலாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. உடற்கூறு (ANATOMICALLY) ரீதியாக நாகரீக மனிதன் என்று கொள்ளப்படும் தொன்மையான எலும்புப் படிமங்களை கடந்த தசாப்தத்தில் டி.என்.ஏ ஆய்வுக்கு உட்படுத்திய போது கிடைத்த திடுக்கிட வைக்கும் வெளிச்சத்திற்கு வந்த உண்மை என்னவென்றால், நம் நேரடி முதாதையர்கள் நியாண்டர்தால்களுடன் பாலியல் உறவு கொண்டது மட்டுமல்லாமல் வளமான சந்ததிகளையும் உருவாக்கியுள்ளனர் என்பதே

டி.என்.ஏ(DNA) - பகுதி (3)

Image
பெரும்பாலான பிறழ்வுகள் டிஎன்ஏ தன்னைத் தானே பிரதி எடுக்கும் போது ஏற்படும் தவறுகளால் உருவாகின்றன. அதாவது அரசாங்க அலுவலகங்களில் பழைய ஆவணங்களைப் பிரதி எடுக்கும் போது பிழைகள் ஏற்படும் அல்லவா. அதேபோல் டி.என்.ஏ தங்களைப் பிரதி எடுக்கும் போதும் பிறழ்வுகள் ஏற்படும்.  பல வருடங்களுக்கு முன்னர் ஒரு  பத்திரிக்கையில் (துக்ளக் என்று நினைக்கிறேன். எழுதியவர் பெயர் ஞாபகம் இல்லை) அரசு அலுவலக செயல்பாடுகள் பற்றிய சுவாரசியமான சிறுகதை படித்தேன். அதில் ஒரு அரசு நிறுவனத்தில்  "மராமத்து" செய்தது குறித்த தகவலைப் படியெடுத்த அலுவலர் அதனைப் பிழையாக "மரமத்து" என்று படியெடுத்து விடுவார். அந்தப் பிழை மாற்றப்படாமல் தொடர்ந்து பின்னாட்களில் அப்படியே பிரதி எடுக்கப்படும். அரசின் ஆவணங்களைத் திருத்துவது கடுமையான குற்றம் என்பதால் எந்த அதிகாரியும் இது "மராமத்து" என்பதுதான் தவறாக "மரமத்து" என்று உள்ளதென அறிந்திருந்தும் மாற்றத் துணியவில்லை. ஆகவே இரு தலைமுறைகளாக "மரமத்து" என்றே அரசு ஆவணங்களில் குறிக்கப்பட்டு இருக்கும். ஒரு ஊழல் பெருச்சாளி  அதிகாரி புத்திசாலித்தனமாக அலுவலகத்தின்

டி.என்.ஏ (DNA) - பகுதி (2)

Image
டி.என்.ஏ மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நீண்ட சங்கிலித் தொடரை உருவாக்கும். டி.என்.ஏயின் சங்கிலித் தொடர் அமைப்பு உயிரணுவின் உட்கருவினுள்ளே சுற்றி வைக்கப்பட்டுள்ளது. உயிரணுவிற்குள் சரியாகப் பொருந்த வேண்டி மிகவும் இறுக்கமாகச் சுற்றப்பட்டிருக்கும் டி.என்.ஏ யின் வடிவத்தை குரோமோசோம்கள் (CHROMOSOMES) என்றழைக்கிறோம்.   ஒரு குரோமாட்டிட்  (Chromatid)  கொண்ட  குரோமோசோம்  தன்னுள் ஒரே ஒரு டி.என்.ஏ மூலக்கூறை உள்ளடக்கி இருக்கும். மனித  இனத்தில் மொத்தம் 23 சோடி குரோமோசோம்கள் தலா இரண்டு குரோமாடிட்கள் கொண்டு மரபணுவின் கருவில் காணப்படுகிறது.   இவ்வாறு உருவாகும் சங்கிலித்தொடர் நிறப்புரிகளைத் (Chromosome) தருகிறது. ஒரு சிறிய மனித நிறப்புரியில் சுமார் 335 இலட்சம் டி.என்.ஏ அடிப்படை அலகுகள் (A T, C G) பல்வேறு வரிசையில் மாற்றி மாற்றி தொடுக்கப்பட்ட கொண்ட சங்கிலி போன்றிருக்கும். எல்லா நிறப்புரிகளின் தொகுப்பே ஒரு உயிரினத்தின் முழுமையான டி.என்.ஏ தொகுப்பாகும். ஒவ்வொரு உயிரினமும் அவற்றுக்கே உரித்தான எண்ணிக்கையில் நிறப்புரிகளைப் பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக மனிதர்களுக்கு (HUMANS) 46 நிறப்புரிகளும்

டி என் ஏ (DNA) - பகுதி (1)

Image
                                                  பொதுவாகவே குடும்ப மறு இணைவு (family reunions) நிகழ்வுகளில் நமக்கு மிகவும் பரிச்சியமான முகமுடையவர்கள் நம்முடன் எப்படித் தொடர்புடையவர்கள் என்பதற்கு மட்டுமில்லாமல் தொன்மையான விவகாரங்களான மனிதரல்லாத சிம்பன்சிகளுக்கும் நமக்குமான நெருங்கிய தொடர்பு, நியாண்டர்தால்களுடன் ( Neanderthals ) ஹோமோசேப்பியன்கள் ( Homo Sapiens )  இணைந்த நிகழ்வு, ஆப்பிரிகாவிலிருந்து மனித இனம் இடம்பெயர்ந்து நகர்ந்த வழியில் புதிய வாழியல் சூழல்களுக்கு ஏற்றபடி எப்படித் தங்களைத் தகவமைத்துக் கொண்டது போன்ற நமது பாரம்பரியம் குறித்த கதைகளை தன் வசம் வைத்துள்ளது மட்டுமல்லாமல்  மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற காலம் குறித்த குறிப்புகளையும் கூடத் தன்வசம் டி.என்.ஏ ( DNA ) வைத்திருக்கிறது.                                          சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து  வெளிப்பட்டதுதான் நவீன மனிதர்கள் என்றும், சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்களின் உலகளாவிய பரவல் தொடங்கியது என்றும் மானுடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்ற

கோமா கொத்து (Coma Cluster)

Image
இதுவரை அறியப்பட்ட பெரும் விண்மீன் திரள் கொத்துகளில் (galaxy cluster) ஒன்று கோமா கொத்து (Coma Cluster).  நடுத்தர மற்றும் பெரிய பொழுதுபோக்கு வகை தொலைநோக்கியால் (Amateur telescope)நோக்கும் போது கட்புலனாகும் சற்று தெளிவற்ற ( கோமாபெரினிசஸ் விண்மீன் கூட்டத்தில் (Coma Berenices constellation) காணப்படும் விண்மீன் திரள்களின் குழுவே கோமா விண்மீன் திரள் கொத்து. சிம்மத்திற்கும் (Leo ) , பூட்டஸ் (Bootes) க்கும் இடையில் அமைந்துள்ள இதனை வசந்த மற்றும் கோடை கால மாலைப் பொழுதுகளில் எளிதாகக் காணலாம். சிம்மத்தில் ரெகுலசும் (Regulus) பூட்டசில் சுவாதி என்று சொல்லப்படும் அக்குரசும் (Arcturus) அதிகமாக அறியப்பட்ட மிகவும் பொலிவான விண்மீன்கள். திறந்த விண்மீன் கொத்துக்கள், மற்றும் தொலைநோக்கி வழியே காண்பதற்கு ஏதுவான தொலைவான விண்மீன் கொத்துக்களையும்  வானத்தில் காண்பதற்குரிய பகுதி இதுதான். கோமா விண்மீன் திரள் கொத்துக்களைக் காண்பதற்கு இருண்ட வானம் அவசியம்.  இந்த விண்மீன்திரள் கொத்து, கோமாபெரினிசஸ் விண்மீன் கூட்டத்தின் வடக்கு எல்லைக்கு அருகில், அதாவது தோராயமாக ரோ-பூட்டிஸையும் (Rho – Bootes) டெல்டா-