டி என் ஏ (DNA) - பகுதி (1)
பொதுவாகவே குடும்ப மறு இணைவு (family reunions) நிகழ்வுகளில் நமக்கு மிகவும் பரிச்சியமான முகமுடையவர்கள் நம்முடன் எப்படித் தொடர்புடையவர்கள் என்பதற்கு மட்டுமில்லாமல் தொன்மையான விவகாரங்களான மனிதரல்லாத சிம்பன்சிகளுக்கும் நமக்குமான நெருங்கிய தொடர்பு, நியாண்டர்தால்களுடன் (Neanderthals) ஹோமோசேப்பியன்கள் (Homo Sapiens) இணைந்த நிகழ்வு, ஆப்பிரிகாவிலிருந்து மனித இனம் இடம்பெயர்ந்து நகர்ந்த வழியில் புதிய வாழியல் சூழல்களுக்கு ஏற்றபடி எப்படித் தங்களைத் தகவமைத்துக் கொண்டது போன்ற நமது பாரம்பரியம் குறித்த கதைகளை தன் வசம் வைத்துள்ளது மட்டுமல்லாமல் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற காலம் குறித்த குறிப்புகளையும் கூடத் தன்வசம் டி.என்.ஏ (DNA) வைத்திருக்கிறது.
சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளிப்பட்டதுதான் நவீன மனிதர்கள் என்றும், சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்களின் உலகளாவிய பரவல் தொடங்கியது என்றும் மானுடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எப்படி அவர்களால் இதுபோல தேதி குறிப்பிட்டுச் சொல்ல இயலுகிறது? கதிரியக்க வயதுக் கணிப்பு (Radio Carbon dating) மற்றும் (Potassium – Argon dating) பொட்டாசியம்-ஆர்கான் வயதுக் கணிப்பு போன்ற முறைகள் மூலம் நேரடியாக தேதியிட இயலக் கூடிய படிமங்கள் (Fossils) மற்றும் கலைப்பொருட்களைப் (Artifacts) பயன்படுத்தியே மனித இனம் உருவான காலத்துக்கு முந்தைய வரலாறின் நேர வரையறைகள் பாரம்பரியமாக ஆராய்ச்சியாளர்களால் கட்டப்படுகிறது. இதற்கு பண்டைக்கால எச்சங்கள் சில தனித்தன்மை கொண்ட தனிமங்களைக் கொண்டிருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக மரத்துண்டு அல்லது கரியில் காணப்படும் கதிரியக்க கார்பன் – 12 அல்லது எகிப்திய மம்மிகள் போல நல்ல முறையில் பதப்படுத்தி பேணுகை செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம். பல தருணங்களில் கிடக்கும் தொன்ம எச்சங்கள் அது போன்ற நிலைகளில் கிடைப்பதுமில்லை இருப்பதுமில்லை. மேலும், சொல்லப் போனால் உண்மையில் மனித பரிணாம வளர்ச்சியுடன் தொடர்பான அனைத்து மைல்கற்களுக்கும் உரித்தான படிமங்களின் அல்லது கலைப்பொருட்களின் கண்டுபிடிப்புகள் இன்னும் முழுமையாகச் செய்யப்படவில்லை.
இன்றைய மற்றும் பண்டைய மரபணுத் தொகுதிகளில் இருந்து மேற்கொள்ளப்படும் டிஎன்ஏ பகுப்பாய்வு பரிணாம நிகழ்வுகளுக்கான நாளிடுதலில் ஒரு நிரப்பு அணுகுமுறையை (Complimentary approach) வழங்குகிறது. ஏனெனில் குறிப்பிட்ட சில மரபியல் மாற்றங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு நிலையான விகிதத்திலே ஏற்படுவதால், கடந்து போன காலத்திற்கான ஒரு மதிப்பீட்டைப் பெற ஏற்றதோர் முறையாகிறது. இந்த மாற்றங்கள் ஒரு நிறுத்து கடிகாரத்தின் வினாடி காலத்தின் “டிக்” ஒலி போன்று குறிப்பிட்ட கால இடைவெளியில் சேகரமாகி ஒரு மூலக்கூறு கடிகாரத்தை(molecular clock) உருவாக்குகிறது. ஆகவே DNA வரிசைகளை ஒப்பிடுவதன் மூலம், மரபியலர்கள் வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே உள்ள அல்லது உயிரினங்களுக்கு இடையிலான தொடர்பை மறு கட்டமைப்பு செய்தது மட்டுமல்லாமல் ஆழமான கால அளவுகளில் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றையும் ஊகித்துக் கணித்துள்ளனர்.
இன்றைய கால கட்டத்தில் மூலக்கூறு கடிகாரங்கள் அதிநவீனமாகி வருகின்றன, மேம்படுத்தப்பட்ட டிஎன்ஏ வரிசைமுறை, பகுப்பாய்வு கருவிகள் மற்றும் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளப்பட்ட மரபணு மாற்றங்களின் பின்னணியில் உள்ள உயிரியல் செயல்முறைகள் ஆகியவற்றிற்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். பல்வேறு சமூகங்களின் ( இன்றைய மற்றும் பண்டைய சமூகங்களின்) அனுதினமும் பெருகிவரும் டிஎன்ஏ (DNA) தகவல் தரவுகள் மீது இந்த முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், மரபியல் ஆய்வாளர்கள் மனித பரிணாம வளர்ச்சி குறித்த மிகவும் நேர்த்தியாக்கப்பட்ட ஓர் காலக் கோட்டின் (Timeline) உருவாக்கத்திற்கு உதவுகின்றனர்.

முதலில்
டி.என்.ஏ பற்றிச் சற்று சுருக்கமாகப் பார்ப்போம். DNA என்ற டியாக்ஸிரிப்போநியூக்ளிக் அமிலம்(Deoxyribonucleic
acid) என்பது ஒரு வேதியல் மூலக்கூறு. இம் மூலக்கூறில்
தான் ஒரு உயிரினத்தின் வளர்ச்சி, வாழ்க்கை மற்றும் இனப்பெருக்கம் தொடர்புடைய ஆணைகள்
அடங்கியுள்ளன. உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவிலும்(Cell) காணப்படும் இந்த ஆணைகள் பெற்றோரிடமிருந்து
பிள்ளைகளுக்கு கடத்தப்படுகின்றன.
மற்றொரு வகை நியூக்ளிக் அமிலம் ஆர்.என்.ஏ (RNA)
என்ற ரிப்போநியூக்கிளிக் அமிலமாகும். இது டி.என்.ஏ யிலிருந்து பெறப்படும் மரபணுத்தரவுகளை
புரதங்களாக மாற்றம் செய்கிறது.
நியூக்கிளியோடைட் (nucleotide) என்ற மூலக்கூறால்
ஆக்கப்பட்டதுதான் டி.என்.ஏ (DNA). ஒவ்வொரு நியூக்கிளியோடைடிலும் ஒரு பாஸ்பேட், ஒரு
ஐந்து கார்பன் சர்க்கரைக் குழு மற்றும் ஒரு நைட்ரஜன் சேர்ந்த காரமும் இருக்கும்.
(Phosphate, 5 Carbon Sugar and a Nitrogen base) நைட்ரஜன் சேர்ந்த காரத்தில் அடினைன்
, தைமின் அல்லது யுராசில் , குவனைன் மற்றும் சைட்டோசின் Adenine (A), Thymine (T)
or Uracil (U), Guanine (G) and Cytosine (C) என்ற நான்கு வகைகள் உண்டு. இதில் டி.என்.ஏ வில் அடினைன் எப்போதும் தைமினோடும், ஆர்.என்.ஏ யில் அடினைன் யுராசிலுடனும் இணையும்.
குவனைன் எப்போதும் சைட்டோசின்னுடன் மட்டும் இணையும்.
இந்த காரச் சேர்மத்தின் வரிசையே டிஎன்ஏ யின் ஆணைகளாக
மரபுக் குறியீட்டைத் தீர்மானிக்கிறது. அதாவது எப்படி எழுத்துக்களின் வரிசை ஒரு வார்த்தையை
உருவாக்குகிறதோ அது போல இந்த நான்கு நைட்ரஜன் சேர்மான காரங்களின் வரிசை மரபணுக்களைக்
கட்டமைக்கிறது. இந்த நைட்ரஜன் சேர்மக் கார வரிசையமைப்பே மரபணுக்களின் மொழியாக அமைந்து எவ்வாறு புரதங்கள்
தயாரிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது.
நியூக்கிளியோடைடுகள் இரு நீண்ட திருகுச் சுருளான இழைகளால் இணைக்கப்பட்ட இரட்டைச் சுருள்( Double Helix) வடிவத்தில் காணப்படுகிறது. இந்த இரட்டைச் சுருளை ஒரு முறுக்கப்பட்ட ஏணியின் வடிவத்தில் கருதுவோமானால் பாஸ்பேட்டு மூலக் கூறும் சர்க்கரை மூலக்கூறும் ஏணியின் இருபக்கத்து நீண்ட கழிகளாகவும், நைட்ரஜன் சேர்மான கார மூலக்கூறுகளைப் படிக்கட்டுகளாகவும் கொள்ளலாம். ஒரு இழையின் கார அடிமானம் மற்றோர் இழையின் கார அடிமானத்துடன் இணையாகிறது. முன்னர் குறிப்பிட்டது போல் டி.என்.ஏ ஏணியில் அடினைன் தைமினுடனும் குவனைன் சைட்டொசின்னுடனும் இணையும். டி.என்.ஏ மூலக்கூறுகள் மிக நீண்டவை.
சொல்லப்போனால் சரியான முறையில் கட்டப்படாவிட்டால் உயிரணுக்குள் அடக்குவது கடினம். எப்படி 10000 சரவெடிப் பட்டாசு இறுக்கமாக அதற்கான அட்டைப் பெட்டிக்குள் சுற்றி வைக்கப்பட்டுள்ளதோ அது போலவே குரோமோசோம்கள் உயிரணுவிற்குள் சுற்றி வைக்கப்பட்டுள்ளது. உயிரணுவிற்குள் சரியாகப் பொருந்த வேண்டி மிகவும் இறுக்கமாகச் சுற்றப்பட்டிருக்கும் இந்த வடிவத்தை குரோமோசோம்கள் (CHROMOSOMES) என்றழைக்கிறோம். ஒவ்வொரு குரோமோசோமும் தன்னுள் ஒரே ஒரு டி.என்.ஏ மூலக்கூறை உள்ளடக்கி இருக்கும். மனித இனத்தில் மொத்தம் 23 சோடி குரோமோசோம்கள் மரபணுவின் கருவில் காணப்படுகிறது.
தொடரும்.....நியூக்கிளியோடைடுகள் இரு நீண்ட திருகுச் சுருளான இழைகளால் இணைக்கப்பட்ட இரட்டைச் சுருள்( Double Helix) வடிவத்தில் காணப்படுகிறது. இந்த இரட்டைச் சுருளை ஒரு முறுக்கப்பட்ட ஏணியின் வடிவத்தில் கருதுவோமானால் பாஸ்பேட்டு மூலக் கூறும் சர்க்கரை மூலக்கூறும் ஏணியின் இருபக்கத்து நீண்ட கழிகளாகவும், நைட்ரஜன் சேர்மான கார மூலக்கூறுகளைப் படிக்கட்டுகளாகவும் கொள்ளலாம். ஒரு இழையின் கார அடிமானம் மற்றோர் இழையின் கார அடிமானத்துடன் இணையாகிறது. முன்னர் குறிப்பிட்டது போல் டி.என்.ஏ ஏணியில் அடினைன் தைமினுடனும் குவனைன் சைட்டொசின்னுடனும் இணையும். டி.என்.ஏ மூலக்கூறுகள் மிக நீண்டவை.
சொல்லப்போனால் சரியான முறையில் கட்டப்படாவிட்டால் உயிரணுக்குள் அடக்குவது கடினம். எப்படி 10000 சரவெடிப் பட்டாசு இறுக்கமாக அதற்கான அட்டைப் பெட்டிக்குள் சுற்றி வைக்கப்பட்டுள்ளதோ அது போலவே குரோமோசோம்கள் உயிரணுவிற்குள் சுற்றி வைக்கப்பட்டுள்ளது. உயிரணுவிற்குள் சரியாகப் பொருந்த வேண்டி மிகவும் இறுக்கமாகச் சுற்றப்பட்டிருக்கும் இந்த வடிவத்தை குரோமோசோம்கள் (CHROMOSOMES) என்றழைக்கிறோம். ஒவ்வொரு குரோமோசோமும் தன்னுள் ஒரே ஒரு டி.என்.ஏ மூலக்கூறை உள்ளடக்கி இருக்கும். மனித இனத்தில் மொத்தம் 23 சோடி குரோமோசோம்கள் மரபணுவின் கருவில் காணப்படுகிறது.
நன்று சார். இது போன்ற கட்டுரைகள் மாணவர்கள் படிக்கும் படி பரவலாக்கப் பட வேண்டும்.. அவர்கள் ஆர்வம் தூண்டப்பட வேண்டும்... (தகவமைத்து, நாளிடுதல் போன்ற சொற்களை எளிமைப் படுத்தலாம்)
ReplyDeleteநன்று சார். இது போன்ற கட்டுரைகள் மாணவர்கள் படிக்கும் படி பரவலாக்கப் பட வேண்டும்.. அவர்கள் ஆர்வம் தூண்டப்பட வேண்டும்... (தகவமைத்து, நாளிடுதல் போன்ற சொற்களை எளிமைப் படுத்தலாம்)
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDeleteDear VS wonderful article. Congratulations.
ReplyDeleteWow, quite interesting, to understand it easy,it can be simplified to reach the students of all age groups, it's my opinion, ofcourse it's not possible without technical words,but it's possible by my dear friend VS
ReplyDelete