Posts

Showing posts from May, 2020

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

Image
ரிஷப ராசியை பொறுத்தவரையில் முக்கியமாக நான் சொல்லப்போவது (1) கார்த்திகை உடுக் கொத்து அல்லது நாள் மீன் கொத்து (PLEIADES STAR CLUSTER) . அதன் பின்னர் (2) ரோகிணி உடு (ALDEBARAN STAR) இறுதியாக (3) நண்டு நெபுலா ( CRAB NEBULA) . முதலில் கார்த்திகை உடுக் கொத்து பற்றிச் சிறிது அறிந்து கொள்வோம். கார்த்திகை நாள் மீன் அதாவது உடுவைச்  சுட்டத் தமிழில் பல்வேறு சொற்கள் பயன் படுத்தப்பட்டது.  அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள் மற்றும் நாவிதன்  என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டது. அதுவே கார்த்திகை மாத த்தைக் குறிக்க விருச்சிகம், தெறுகால், தேள் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டன. இரவு வானில் யாராலும் எளிதாக அடையாளம் காணக் கூடிய உடுத் தொகுதி ஓரியன் என்ற பெரும் வேடன் (ORION). இந்த ஓரியன் தொகுப்பில் ஓரியன் இடுப்புக் கச்சில் (ORION BELT) முன்று உடுக்கள் வரிசையாகத் தெரியும். இந்த உடுக்களை கற்பனையில் நேர்கோட்டில் தென் கிழக்கில் நீட்டிப் பார்த்துக் கொண்டு வந்தால், சிரியஸ் (SIRIUS) உடு பொலிவாகத் தெரியும். அந்த நேர்கோட்டை வடகிழக்காக நீட்டிப் பார்த்துக் கொண்டு வர ரோகிணி உடுவும

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (4)

Image
ஜீயஸின் (ZEUS)   குழந்தைப் பருவம் முழுவதும் தலைமறைவு வாழ்க்கையாகவே கழிந்தது. இளமைப் பருவத்தை அடைந்ததும்,  தனது தந்தையையான குரோனஸைத் (CRONUS) தோற்கடித்து அரசபதவியிலிருந்து தூக்கியெறிவதற்குரிய வழிகள் குறித்து கியா (GAIA)  வுடன் கலந்தாலோசிக்கத் தொடங்கினார். தனியொருவனாகக் குரோனசை வெல்வது கடினம் ஆகவே ஜீயஸுக்கு உதவிடக் கூட்டாளிகள் தேவை என்று கியா  ஆலோசனை சொன்னாள். கியாவின் ஆலோசனைப்படி தனக்குப் பக்க பலமாகச் செயல்பட ஜீயஸ் தனக்கு முன்னர் பிறந்து குரோனஸால் விழுங்கப்பட்ட ஐந்து உடன்பிறப்புகளையும் வெளிக் கொண்டு வந்து விட முடிவு செய்தார். அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மது பரிமாறுதலுக்கென்று தனியான பணியாளர்கள் இருந்தனர். அரசருக்கு மதுக் கோப்பையை ஏந்திப் பரிமாறும் பணியாள் (CUP BEARER) பணியில் ஜீயஸ் சேர்ந்தார். வாந்தியையும் மயக்கத்தையும் தூண்டும் ஒரு மருந்தைக் குரோனஸ் அருந்தும் மதுவோடு கலந்த பானத்தை  ஜீயஸின் முதல் மனைவியான மெட்டிட் (MEDIT)   தயாரித்தார்.   ஜீயஸ் அதனை குரோனஸ் அருந்தக் கொடுத்தார்,  அதனை அருந்திய குரோனஸ் ஜீயஸின் ஐந்து சகோதரர்களையும் , குழந்தை என்று அவர் தவறாகக் கருதிய கல்லையும் வாந்தி

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (3)

Image
1981 ஆண்டில் " The clash of Titans"  என்ற ஒரு ஹாலிவுட் ஆங்கிலப்படம் வெளி வந்தது. அப்புறம் 2010 இல் இது மறு உருவாக்கம் செய்யப்பட்டு அதே தலைப்பில் வெளியானது. 2012 ஆம் ஆண்டில் " The wrath of the Titans" என்று வேறொரு திரைப்படம் வெளியானது. அந்தப் படங்கள் எல்லாம் கிரேக்க தொன்மக் கடவுளர்களிடையில் நடந்த போர்கள் குறித்த புனைக்கதைகள். படத்தைப் பத்து நன்பர்களுடன் பார்த்தால் அவர்கள் ஆளாளுக்கு ஒரு கதை சொல்வார்கள். அதை விடக் கொடுமை அந்தக் கிரேக்கக் கடவுளர்களுக்கிடையிலான சிக்கலான உறவுகளைப்  புரிந்து கொள்வதுதான்.  இடியாப்பத்தின் சிக்கலை விடவும் மிகச் சிக்கலானது இந்த உறவுகள்.  இந்தப் பகுதியில் நாம் காணப்போவது  ரிஷப ராசி சார்ந்த சில கிரேக்க தொன்மக் கதைகள். அதற்கு சிறுதளவு கிரேக்கத்தொன்மக் கதைகளின் அடிப்படைக் கூறுகளை அறிந்து கொள்வது அவசியமானது. கிமு 750 முதல் 650 வரை வாழ்ந்ததாக நம்பப்படும் கிரேக்க கவிஞரான ஹெசியோட் (Hesiod) எழுதிய காவியக் கவிதையின் பெயர் தியோகனி ( Theogony ) .   "தெய்வங்களின் பிறப்பு அல்லது பரம்பரை" என்பதே   இதன் பொருள். ஹெசியோட், "இலியாட்"( I

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (2)

Image
பன்னிரெண்டு ராசி உடுத் தொகுப்பில் ஒன்றான ரிஷபம் ( Taurus ) மிகப் பழமையான பெரிய உடுத் தொகுப்பு. வானத்தில் காணப்படும் 88 உடுத் தொகுப்புகளில் ( Constellations ) 17 வது பெரிய உடுக் தொகுப்பு ரிஷப ராசி ( Taurus Constellation ) ஆகும். இது 797 சதுர பாகைகள் (Sq. Degrees) பரப்பளவு கொண்டது. இதனை வான் கோளத்தில் + 90o முதல் - 65o வரையுள்ள பகுதியில் காணலாம். சில விஷயங்களை நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். அதில் ஒன்று வலப்புற ஏற்றம் ( Right ascension - RA ) மற்றது வான்கோள நேர்வரை அல்லது சரிவு( Declination - D ). இவை இரண்டும் வான் கோளத்தில் ஒரு உடு ( Star ) அல்லது உடுத் தொகுப்பு ( Constellation ) வான் கோளத்தில் எங்கு உள்ளது என்ற அறிந்து கொள்ளப் பயன்படுபவை. நமது ரிஷபராசிக்கு வான்கோள நேர்வரை அல்லது சரிவு D + 19o அடுத்து வலப்புற ஏற்றம் RA 4.9 மணி (RA 6.0 மணியை விடக் குறைவு) என்பதால்  வட வான் கோளத்தில் NQ1 அதாவது முதல் கால் துண்டுப்பகுதியில் உள்ளது என்று நம்மால் எளிதாகச் சொல்ல முடியும். மேஷம் ( Aries ), தேர் ( Auriga ), சீட்டஸ் ( Cetus ), எரிடனஸ் ( Eridanus ), மிதுனம் ( Gemini ), வேடன் ( Orion ) மற

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (1)

Image
ரிஷப ராசி இரவு வானத்தில் மிகப்பெரிய விண்மீன் கூட்டங்களில் ஒன்றாகும். கற்காலத்து மனிதன் இந்த உடுக் கூட்டத்தை பத்தாயிரம் (10,000) ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு காளையாக (Bull) அடையாளம் கண்டிருப்பதைக் குகை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. இந்த இடத்தில் குகை ஓவியங்களைப் பற்றிச் சொல்வது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். இன்றைக்குக் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் மத்திய பிரான்சில் (central France) லாஸ்காக்ஸில் (Lascoux) பதினெட்டு வயதான மார்செல் ரவிடாட் (Marcel Ravidat) ஜாக்ஸ் மார்சல் (Jacques Marsal), ஜார்ஜஸ் அக்னெல் (Georges Agnel) மற்றும் சைமன் கோன்காஸ் (Simon Coencas) ஆகிய நான்கு பதின்ம வயது இளைஞர்கள் சேர்ந்து பழைமையானதோர் குகையை எதிர்பாராத விதமாகக் கண்டுபிடித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு எப்போதோ பெரிய பைன் மரம் ஒன்று விழுந்த இடத்தில், தரையில் ஒரு பெரிய துவாரம் உருவாகியிருந்தது. மார்செல் ரவிடாட்டின் நாய் ரோபோ (Robot) எதிர்பாராத விதமாகத் துவாரத்துக்குள் விழுந்து விட்டது. மார்செல் ரவிடாட் துவாரத்தின் உள்ளே ஆழத்தில் விழுந்து விட்ட நாயை

நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetic Nephropathy)

Image
நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetic nephropathy) நீரிழிவு சிறுநீரக் நோய் என்பது வகை1 மற்றும் வகை 2 நீரிழிவு நோய் காரணமாக ஏற்படும் சிறு நீரகம் தொடர்புள்ள தீவிரமான சிக்கலாகும். நமது உடலின் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தின் உள்ளே பல இலட்சக்கணக்கான தந்துகி இரத்தக் குழாய்கள் (Capillary blood vessels) இருக்கின்றன. இக்குழாய்கள் இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வடிகட்டி சுத்திகரிக்கின்றன. சில சமயம் இந்தச் சுத்திகரிக்கும் அமைப்பு சிறுநீரக நோய்த் தாக்குதலால் செயலிழந்து விடும். நீரிழிவு நோய் காரணமாக பத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்குக்குள் எந்த நேரத்திலும் இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வடிகட்டும் திறனை சிறுநீரகம் இழக்கக் கூடும். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு ஐந்து இந்தியரில் ஒருவர் சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தவிரவும் ஐம்பது விழுக்காடு (50%) நீரிழிவு நோயாளிகள் தங்களது வாழ்நாளில் ஏதோ ஒரு வகையில் சிறுநீரகம் பழுதாகித் துன்பம் அடைகின்றனர். நெஃப்ரோபதி (Nephropathy) என்று பொதுப் பெயரில் அழைக்கப்படும் சிறுந

பிறந்த மண் வாசம் - (9) திரு. ரமேஷ் கல்லிடை

பிரிட்டனில் இந்து மன்றம் (Hindu Forum) என்ற ஒரு அமைப்பு உள்ளது. அதன் முன்னாள் பொதுச் செயலாளர் ரமேஷ் கல்லிடை (Ramesh Kallidai) ஆவார். இந்த அமைப்பு பிரிட்டனில் வாழும் இந்துக்கள் அனைவரையும் ஒரு குடைக் கீழ் கொண்டுள்ள மிகப்பெரிய அமைப்பாகும். திரு. ரமேஷ் கல்லிடை அவர்கள்தான் இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பொறுப்பை முதன் முதலில் வகித்தவர். இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒருமைப்பாடு மற்றும் ஒத்திசைவு ஆணையராக (Commissioner of Integration and Cohesion) நியமனம் செய்யப்பட்டுப்  பணியாற்றியுள்ளார். சமூகங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கான (Communities and Local Government) அரசுச் செயலரால் (Secretary of State) மேற்கண்ட நியமனம் செய்யப்பட்டது. ஒருமைப்பாடு மற்றும் ஒத்திசைவு ஆணையம் ' எங்களது பகிரப்பட்ட எதிர்காலம்'(Our shared future) என்ற வெள்ளை அறிக்கையை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கை இங்கிலாந்தில் சமூக ஒத்திசைவுக்கான (community cohesion) ஒரு புதிய நிகழ்ச்சி நிரலை வகுத்தது. திரு. ரமேஷ் கல்லிடை அவர்கள் லண்டன் குற்றவியல் நீதி வாரியம்(London Criminal Justice Board), இன வெறுப்புக் குற்றவியல் மன்