ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (4)
ஜீயஸின் (ZEUS) குழந்தைப் பருவம் முழுவதும் தலைமறைவு வாழ்க்கையாகவே கழிந்தது. இளமைப் பருவத்தை அடைந்ததும், தனது தந்தையையான குரோனஸைத் (CRONUS) தோற்கடித்து அரசபதவியிலிருந்து தூக்கியெறிவதற்குரிய வழிகள் குறித்து கியா (GAIA) வுடன் கலந்தாலோசிக்கத் தொடங்கினார். தனியொருவனாகக் குரோனசை வெல்வது கடினம் ஆகவே ஜீயஸுக்கு உதவிடக் கூட்டாளிகள் தேவை என்று கியா ஆலோசனை சொன்னாள். கியாவின் ஆலோசனைப்படி தனக்குப் பக்க பலமாகச் செயல்பட ஜீயஸ் தனக்கு முன்னர் பிறந்து குரோனஸால் விழுங்கப்பட்ட ஐந்து உடன்பிறப்புகளையும் வெளிக் கொண்டு வந்து விட முடிவு செய்தார்.
அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மது பரிமாறுதலுக்கென்று தனியான பணியாளர்கள் இருந்தனர். அரசருக்கு மதுக் கோப்பையை ஏந்திப் பரிமாறும் பணியாள் (CUP BEARER) பணியில் ஜீயஸ் சேர்ந்தார். வாந்தியையும் மயக்கத்தையும் தூண்டும் ஒரு மருந்தைக் குரோனஸ் அருந்தும் மதுவோடு கலந்த பானத்தை ஜீயஸின் முதல் மனைவியான மெட்டிட் (MEDIT) தயாரித்தார். ஜீயஸ் அதனை குரோனஸ் அருந்தக் கொடுத்தார், அதனை அருந்திய குரோனஸ் ஜீயஸின் ஐந்து சகோதரர்களையும் , குழந்தை என்று அவர் தவறாகக் கருதிய கல்லையும் வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். குரோனஸின் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட ஜீயஸின் உடன்பிறப்புகள் உண்மையாகவே ஜீயஸுக்கு நன்றியுள்ளவர்களாக இருந்தனர். தவிரவும் அவருக்கு சிம்மாசனத்தை கைப்பற்ற உதவ முடிவு செய்தனர். இது டைட்டனோமச்சி (TITANOMACHY) எனப்படும் பத்து ஆண்டு காலப் போருக்கு அடிகோலியது.
டைட்டனோமாச்சிப் போர் முதல் தலைமுறையான குரோனஸ் மற்றும் பிற டைட்டன்களை எதிர்த்த அடுத்த தலைமுறையை ஒலிம்பியன் கடவுளாக மாற்றியது. போரில் ஓசியனஸ் நடுநிலை வகித்தார், அதே நேரத்தில் டைட்டனான ப்ரோமிதியஸ் (PROMETHEUS) மற்றும் அவரது உடன்பிறப்பு எபிமீதியஸ் (EPIMETHEUS) ஆகியோர் ஜீயஸுக்கு ஆதரவாகப் போரிட்டனர். இதற்கு நேர்மாறாக, அட்லஸ் (ATLAS) மட்டும் டைட்டன்களை ஜீயஸிற்கு எதிராகப் போரில் வழிநடத்த உதவினார்.
சைக்ளோப்கள் (CYCLOPS) மற்றும் ஹெகடான்சியர்கள் (HECATONCHEIRES) டார்டாரஸில் உள்ள சிறையிலிருந்து விடுவித்தால் ஜீயஸிற்குக் கூடுதல் பலம் கிட்டும் என்று கியா அறிவுறுத்தினார். அதன்படியே சைக்ளோப்கள் மற்றும் ஹெகடான்சியர்களை விடுவித்து அதிக கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டார். சைக்ளோப்கள், ஜீயஸுக்கு நன்றிக் கடனாக இடியைத் (THUNDERBOLT) அளித்தனர். இவை சைக்ளோப்களின் கொடிய மற்றும் மிகவும் பிரபலமான ஆயுதங்கள். ஜீயஸ் இடியை மிகவும் அழிவுகரமான விளைவுகளுக்கு பயன்படுத்தினார். ஹெகடோக்ரோனியர்கள் போரில் ஜீயஸுடன் சேர்ந்து டைட்டன்கள் மீது பிரம்மாண்டமான பாறைகளை வீசினார்கள்.
இறுதியில் டைட்டனோமச்சி (TITANOMACHY) போர் ஒலிம்பியர்களின் வெற்றியில் முடிவடைந்தது. தெமிஸ்(THEMIS) மற்றும் ப்ரொமதியஸ் (PROMETHEUS) தவிர அனைத்து டைட்டான்களும் (TITANS) டார்டாரஸில் (TARTARUS) பாதாள நரகத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஹெகடான்சியர்களுக்கு சிறைக் காவலர்களாக பணியாற்றும் வேலை வழங்கப்பட்டது.
ஜீயஸ்(ZEUS) போஸிடான் (POSEIDON) ஹேடஸ் (HADES)
Picture Courtesy: By British Museum (photo by FinnBjo); sculpture in Copenhagen Port (photo by Hansjorn and Aviad Bublil up Stella maris - Montagem de: File:Bust of Zeus.jpg, File:Poseidon sculpture Copenhagen 2005.jpg and File:Hades-et-Cerberus-III.jpg, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=10737704
ஜீயஸ்(ZEUS), அவரது சகோதரர்களான போஸிடான் (POSEIDON) மற்றும் ஹேடஸுடன் (HADES) சேர்ந்து, சீட்டுக் குலுக்கல் மூலம் பிரபஞ்சத்தைப் பிரித்தார். குலுக்கலில் ஜீயஸ் வென்று வானத்தின் அரசனாகவும், மனிதர்கள் மற்றும் கடவுள்களின் ஆட்சியாளராகவும் ஆனார்; போஸிடான் கடல்களின் ஆட்சியாளரானார். ஹேட்ஸ், பாதாள உலகத்தின் மற்றும் இறந்தவர்களின் ஆட்சியாளரானார். கிரேக்க புராணங்களில் இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமானது.
ரிஷபராசி உடுக்கூட்டமும் கிரேக்கத் தொன்மங்களுடன் தொடர்புடையதுதான். இந்தத் தொன்மக் கதையுமே பல கிரேக்கத் புராணங்களைப் போலவே ஜீயஸின் (ZEUS) காதலையே சுற்றி வருகிறது. இந்த முறை ஜீயஸின் காதல் பார்வை ஃபோனீசிய அரசன் அஜெனரின் (PHOENICIAN KING AGENOR) அழகான மகளான யூரோபாவின் (EUROPA) மீது விழுந்தது. ஜீயஸ் நமது தொன்மங்களில் வரும் இந்திரன் போன்ற ஜொள்ளு குணாதிசயம் கொண்ட ஒலிம்பியக் கடவுள். இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, அந்தச் சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று சொல்வார்கள்.
தன் கண்பார்வை பட்ட பெண்ணைக் கவர்ந்திழுக்க ஜீயஸ் பெரும்பாலும் மாறுவேடத்தில் வருவார். இப்போதும் அதேபோல் மாறுவேடமிட்டே வந்தார். ஆனால் கன்னத்தில் மரு வைத்துக் கொண்டு வரும் மாறுவேடமில்லை.
எப்போதும் அவர் தங்கக் கொம்புகள் கொண்ட ஒரு அழகான காளை (BULL) போல் மாறுவேடமிட்டுக் கொண்டு வந்து ஏஜெனார் அரசரின் மாட்டு மந்தையின் மத்தியில் வந்து நின்று கொள்வான். ஒரு நாள் இளவரசி யூரோபா காளையை கண்டாள். அதன் அழகிய தோற்றம் கண்டு மயங்கினாள். ஆசையாகக் காளையை நெருங்கி வந்தவள் அதன் முதுகில் ஏறி அமர்ந்தாள். அடுத்த நொடியே காளை கடற்கரையை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடத் துவங்கியது. எதிர்பாராத விதமாகக் கடலில் குதித்து யூரோபாவை கிரீட்(CRETE) தீவுக்கு அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்தியது.
Picture Courtesy : http://www.zeuseuropa.eu/easyconsole.cfm/id/127
இப்படி இருக்கையில் ஒருமுறை காளை உருவிலிருந்த தன்னை ஜீயஸ் என்று வெளிப்படுத்திக் கொண்டு, அவள்தான் தன்னுடைய பட்டத்தரசி என்று அறிவித்தான். ஜீயஸ் மூலம் யூரோபாவுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். யுரோப்பாவை அடைந்த தனது வெற்றியை நினைவு கூரும் வகையில் ஜீயஸ் இறுதியில் காளையை இரவு வானத்தில் வைத்ததாகக் கதையில் சொல்லப்பட்டுள்ளது.
கிரேக்க புராணங்களில், பிளேயட்கள் (PLEIADES) ஏழு சகோதரிகள் அவர்களைத் தமிழில் கார்த்திகை என்பது வழக்கம். அவற்றின் பெயர்களை முன்னரே நாம் அறிவோம். மியா, எலெக்ட்ரா, அல்சியோன், டெய்கீட், ஆஸ்டரோப், செலானோ மற்றும் மெரோப். அவர்களின் பெற்றோர் டைட்டன் அட்லஸ் மற்றும் ஓசியானிட், ப்ளியோன். பிளேயட்களும் , அவர்களின் தாயாரும் ஒரு நாள் பயணம் செய்யும் போது, பெரும் வேட்டைக்காரரான ஓரியனைச்(ORION) சந்தித்தனர்.
ஓரியனோ இளம் பெண்களைக் காதலித்து அவர்களைப் பின்தொடரத் தொடங்கினார். பல ஆண்டுகளாக துரத்தப்பட்ட பிறகு, அவர்கள் ஜீயஸிடம் முறையிட அவர்களின் மீது கருணை கொண்டு புறாக்களாக மாற்றினார். ரிஷபராசி உடுத் தொகுப்பில் கார்த்திகை உடுக் கொத்தாகக் காளைக்கு மறுபக்கம் வைத்தார்.
தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்ணால் நோக்க வானத்தில் கார்த்திகை உடுக் கொத்தில் ஆறு நட்சத்திரங்கள் மட்டுமே தெரியும். பண்டைய கிரேக்கர்கள் பல்வேறு கதைகளுடன் ஏழாவது நட்சத்திரம் இல்லாததை விளக்கினர். அதில் ஒரு கதையின்படி, மெரோப்பைத் தவிர அனைத்து பிளேயட்களும் இறப்பற்ற கடவுளர்களுடன் இணைந்தனர். மெரோப் மட்டும் அழியக் கூடிய சிசிபஸ்(SISYPHUS) என்ற கணவனை மணந்து கொண்டதால் னது சகோதரிகளைப் பிரிந்து விட்டார் என்று சொல்கிறது.
டிராய்(TROY) அரண்மனையின் மூதாதைப் பெண்ணாகக் கருதப்படும் பிளேயட் எலக்ட்ராவுடன் தொடர்பு படுத்தி மற்றொரு விளக்கம் சொல்லப்படுகிறது. டிராய் நகரம் அழிக்கப்பட்டபோது எலெக்ட்ரா தனது சகோதரிகளை விரக்தியில் கைவிட்டு தன்னை ஒரு வால்மீனாக மாற்றிக்கொண்டதாக கிரேக்கர்கள் நம்பினர். இந்த தொன்மக்கதைகள் கூட ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பால் உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது, அதன்படி பிளேயட்ஸ் குழுவின் ஏழாவது நட்சத்திரம் கிமு இரண்டாம் நூற்றாண்டின் முடிவில் அழிந்து போனதாக அறிவியல் பூர்வமாகத் தெரியவருகிறது.
வானமும் (URANUS) பூமியும் (GAIA) மீண்டும் இணைந்து விடாமல் கட்டுப்படுத்துவதற்காக ஒலிம்பியன் கடவுளர்களுடனான போரில் டைட்டன்களை வழிநடத்திய குற்றத்திற்காக ஜீயஸிடமிருந்து தண்டனையாக வானத்தை உயர்த்திப் பிடிக்கும் பணி அட்லஸுக்கு வழங்கப்பட்டது.
ஹெஸியோட் தனது தியோகனியில்(THEOGONY) அட்லஸை வானத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும், அவரை மேற்கு திசையில், உலகின் விளிம்பில் இருந்த அவரது மகள்களான பாடுவதற்குப் பெயர் போன ஹெஸ்பெரைட்கள் (HESPERIDES) பெண் தெய்வங்களின் நிலத்தில் இருப்பதாகவும் விவரிக்கிறார். அட்லஸால் தன் நிலையிலிருந்து ஒரு அடி கூட நகர இயலாத பரிதாபமான நிலையைக் கண்ட அவரது மகள்களான பிளையேட்கள் (PLEIADES) வருந்திக் கண்ணீர் சிந்த, அதைக் கண்டு இரக்கப்பட்ட ஜீயஸ் (ZEUS) அவர்களுக்கும் மனைவி பிளையோனுக்கும் (PLEIONE) தந்தை அட்லஸிற்கு அருகில் இடமளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
கிரேக்க புராணங்களில் மழையைக் கொண்டுவந்த வனதேவதைகள் ஹைடஸ்கள்(HYADES). அவர்கள் டைட்டன் அட்லஸிற்கும் ப்ளியோன் அல்லது ஓசியானிட் ஈத்ரா (AETHRA) விற்கும் பிறந்த மகள்கள். இவர்களுக்கு ஒரு சகோதரன் ஹியாஸ் (HYAS). இவர்கள் பிளேயட்ஸ் (PLEIADES) மற்றும் ஹெஸ்பெரைடுகளின் (HESPERIDES) சகோதரிகளாகவும் இருந்தனர்.
தொன்மத்தின் படி, அவர்களின் சகோதரர் ஹியாஸ் வேட்டையாடும் போது கொல்லப்பட்டார், சகோதரனின் மீது அதிகமான பாசம் கொண்டிருந்த ஹைடஸ்கள் துக்கத்தில் அழ ஆரம்பித்தார்கள் ஹைடஸ்களின் அழுகையே பூமியில் மழையாகப் பொழிகிறது. பின்னர் அவர்கள் அதே பெயரில் ரிஷபராசி (TAURUS CONSTELLATION) உடுக் தொகுப்பில் உடுத் கொத்தாக (STAR CLUSTER) மாற்றப்பட்டார்கள்.
சந்திப்போம்

ஜீயஸ் (ZEUS) யூரோபா (EUROPA)

Comments
Post a Comment