நவம் - கதை (7) - லோகேஷ் ரகுராமன்
விஷ்ணு வந்தார் நூலை வாங்கியது குறித்து முகநூலில் பதிவொன்றைச் சில நாட்களுக்கு முன் இட்டிருந்தேன். அப்பதிவில் என் முன்னாள் மாணவி அம்மு குட்டி மோன் மறுமொழி இட்டிருந்தார். அதில் அவர் "நவம்" கதை திருவண்ணாமலை பற்றிய கதை எனவும் அது குறித்த என் கட்டுரையைப் பாருங்கள் என்றுபடிக்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்திருந்தார். அவருக்கும் மற்ற வாசகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
முதலில் "நவம்" கதையை முழுமையாகப் படிக்கவும். கதைக்கான இணைப்புக் கண்ணி கீழே தந்துள்ளேன்.
https://lokeshraghuraman.wordpress.com/2020/04/16/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/
இப்போது கதையை முழுவதும் படித்து முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இனி என் பார்வையில் நவம் கதை.
கதை நடக்கும் களம் திருவண்ணாமலை. ஆனால் கதையில் திருவண்ணாமலை நகரத்தையோ அல்லது கோவிலையோ குறித்த செய்திகள் இல்லை என்பதே உண்மை. 'நவம்' என்றால் எண் ஒன்பது. கதையில் மூன்றுக்கு மூன்று மாயச் சதுரம் அதாவது ஒன்பது கட்டங்கள் மற்றும் ஒன்பது எண்ணின் சிறப்புகளை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்புக் கிடைக்கிறது.
கதையில் இரண்டே இரண்டு பாத்திரங்கள்தான். இளிச்சவாய்ச் சாமியாரும் வீட்டை விட்டு ஓடிப் போய் எங்கெங்கோ அலைந்து திருவண்ணாமலைக்கு எப்படியோ வந்து அவரிடம் சேரும் ஒரு இளைஞன் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களே கதை.
கதையில் சாமியார் எண், எழுத்து இதுபற்றிப் பேசுகிறார். நான் ஆசிரியராகப் பணிபுரிந்த போது இயற்பியலில் முதல் பாடமே அலகுகளும் பரிமாணங்களும் பாடம்தான். அப்போதெல்லாம் எண் மதிப்பு அலகு இவற்றின் முக்கியத்துவம் குறித்து நிறையவே வகுப்பில் பேசி இருக்கிறேன்.
ஒரு காலத்தில் சோதிடம், வானியல் எல்லாம் படித்த சாமியார், யந்திரம் அதில் உள்ள எண்கள் மாயச் சதுரம் குறித்துப் பேசுகிறார். 3 × 3 மாயச் சதுரம் ஒன்றில் 20 முதல் 28 எண்களைக் தொடர்ச்சியான எண்களைக் கொண்டதே குபேர யந்திரம்.
27 20 25
22 24 26
23 28 21
இதில் எப்படிக் கூட்டினாலும் கூட்டுத்தொகை 72 ஆக வரும். இதே போல மார்ச் சதுரங்களை எப்படி உருவாக்குவது என்ற வழிமுறையை என் U TUBE சானலில் கொடுத்துள்ளேன். ஆர்வமிருப்பவர்கள் அவற்றைக் காணக் கீழே இணைப்புக் கண்ணியைப் பகிர்ந்துள்ளேன்.
https://youtu.be/hY1auLSrcxM?si=VMAQy64hXMBJgyI6
மேற்கண்ட U TUBE வீடியோ பதிவில் 1 முதல் 9 வரையிலான எண்களைப் பயன்படுத்தி இருக்கிறேன். இதில் குறுக்காக,நெடுக்காக, மூலை விட்டம் என் எப்படிக் கூட்டினாலும் கூட்டுத்தொகை 15 வரும்.
இதே போல 4 × 4, 5 × 5, 6 × 6 என்று பல வீடியோ பதிவுகள் இட்டுள்ளேன். விருப்பமிருந்தால் என் U - TUBE பக்கத்தில் காணலாம்.
@subramanianv9211 என்று U - TUBE இல் தேடவும்.
இந்த மாயச் சதுரங்களை நம் தமிழ்நாட்டில் பழனி மற்றும் சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரிஸ்வரர் கோயில் தூண்களில் தமிழ் எழுத்துகளில் காணலாம்.
தமிழ்நாட்டின் பல பழங்காலக் கோவில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள 3 × 3 மாயச் சதுரம் (Magic Square) என்பது, எந்த திசையில் கிடைமட்டம், செங்குத்து, மூலைவிட்டம் கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையைத் தரும் ஒரு கணிதப் புதிராகும். இது ஆன்மீக ரீதியாக 'குபேர எந்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
நாகை மாவட்டம் திருநின்றியூர் சிவன் கோவில் மற்றும் பழனி தண்டாயுதபாணி கோவில் தூண்களில் இந்த மூன்றுக்கு மூன்று மாயச் சதுரம் காணப்படுகிறது.
திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள தூண்களிலும் இவை இடம்பெற்றுள்ளன. மாயச் சதுரத்தின் அமைப்பு கூட்டுத்தொகை = 15
8 1 6
. 3 5 7
4 9 2
கோவில்களில் காணப்படும் பாரம்பரிய அமைப்பில், எந்த வரிசையைத் தனித்தனியாகக் கூட்டினாலும் பின்னங்கள் வராமல், சரியான முழு எண்கள் வரக்கூடிய அமைப்பு இதுவாகும். இதன் சிறப்பம்சம் ஒவ்வொரு வரிசையின் கூட்டுத் தொகை 15. மறைபொருள் - 15 என்ற இந்த எண், இந்து சமயத்தில் முருகப்பெருமானின் 6 என்ற எண்ணைக் குறிப்பதாகவும் (1+5=6), கோவிலில் அதிர்வலைகளை ஈர்க்கும் ஆன்மீகக் குறியீடாகவும் கருதப்படுகிறது. மாயச் சதுரத்தில் பயன்படுத்தும் ஒன்பது எண்களைப் பொறுத்து அவை நவ கிரகங்களுக்கானவை 1 - 9 சூரியனுக்கு, 2 - 10 சந்திரனுக்கு, 3 - 11 செவ்வாய்க்கு, 4 - 12 புதனுக்கு, 5 - 13 வியாழனுக்கு 6 -14, வெள்ளிக்கு 7 - 15 சனிக்கு , 8 - 16 ராகுவிற்கு, 9 - 17 கேதுவிற்கு என்கிறார் அந்த இளிச்சவாய்ச் சாமியார்.
எட்டுத் திக்குக்கும் உரிய இந்திரன், யமன், அக்னி போன்ற எட்டு தேவர்களையும் நடுக் கட்டத்தில் நமது இஷ்ட தெய்வத்தை வைத்து வணங்க வேண்டும் என்று சொல்லும் சாமியார் அந்த இளைஞனை அவன் கதையைக் கூறும் சொல்கிறார்.
இளைஞனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆனாலும் எப்படியோ பட்டம் பெற்று விடுகிறான். ஒரு நாள் வீட்டை விட்டு கோவா விற்குப் போய் ஒரு காஸினோவின் மதுக் கூடத்தில் பார் டெண்டராக வேலை செய்கிறான். அங்கு நடக்கும் விளையாட்டுகளில் பணம் கட்டி சூதாடுவார்கள். RNG (RANDOM NUMBER GENERATION) வழியாகச் சூதாட்டத்தில் வெற்றி பெறும் எண்களை கண்டறிய முயற்சி செய்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறான். அந்த நேரத்தில் சாந்தன் என்ற லாட்டரி (Lottery) ஆசாமியுடன் தொடர்பு ஏற்படுகிறது.
பரிசு விழும் எண்களை ஆராய்ந்து அந்த எண்ணை ஒன்பது எண்ணால் வகுத்து வரும் மீதியிருக்கும் எண்ணை வைத்து RNG எண்களை உருவாக்குவதில் வெற்றி பெறுகிறான். லாட்டரி சாந்தனுக்கு அந்த எண்களைக் தந்து பணம் சம்பாதிக்கிறான். ஒரு கட்டத்தில் எண்களை உருவாக்குவதில். தோல்வி ஏற்படுகிறது. சாந்தனிடமிருந்து விலக நினைக்கிறான். ஆனால் வேற ஆளோடு அவன் வேலை செய்வதாக நினைத்து சாந்தன் அவனை ஆள் வைத்து அடிக்கிறான். எப்படியோ தப்பி திருவண்ணாமலைக்கு வந்து சேர்கிறான்.
இளிச்சவாய்ச் சாமியாரின் தகரக் கொட்டகை கிரிவலப் பாதையை அகலப்படுத்தும் போது அகற்றப்படுகிறது. குபேர லிங்கத்தின் மண்டபத்தை இருப்பிடமாகக்கிக் கொண்ட அவர் சிரித்தவாறே அரசாங்கக் கட்டத்தில் நமக்கு இடமில்லை என்று எளிதாகக் கடந்து விடுகிறார்.
நம் இளைஞன் அவரிடம் சொல்லாமல் போய் விடுகிறான். பேருந்து ஏறி சக பயணியிடம் போன் வாங்கித் தந்தையை அழைக்கிறான். அப்போதுதான் அவன் பெயர் 'நவராஜன்' என்று தெரிகிறது.
மனதுக்கு நிறைவாக இருந்த கதை. மீண்டும் அடுத்த கதை தேனாண்டாளில் சந்திப்போம்.
உங்கள் கருத்துக்களை இங்கே வலைப்பூவிலேயே பதிவிடுங்கள். நன்றி.

Comments
Post a Comment