தேசியக் கொடிகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் - (1)
விண்மீன்களும் கொடிகளும் பற்றிய தொடரை
எழுத ஆரம்பித்த போது அது என்னை புயல் காற்று போல் எங்கெங்கோ கூட்டிப் போணது. அப்போது
கொடிகள் அவற்றின் அமைப்பு வரலாறு இவை பற்றி எல்லாம் கொஞ்சம் அறிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
அதை பகிரும் எண்ணத்துடன் என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
கொடிகள் பற்றிய படிப்பு வெக்ஸில்லோஜி (vexillology) என்று அழைக்கப்படுகிறது. ஒரு கொடியின் அமைப்பில் பயன் படுத்தப்படும் சில தொழில்நுட்ப வார்த்தைகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கொடுத்துள்ளேன். இதில் தவறுகள் இருப்பின் எனக்கு தெரிவித்தால் திருத்திக் கொள்ள முடியும்.

பொதுவாக ஒரு கொடியின் வடிவமைப்பில் உள்ள
முக்கியமான பகுதிகளும் அவற்றின் பெயர்களும் கீழே தரப்பட்டுள்ளது. கொடியின் புலம்
(ஃபீல்ட் - Field) என்றால் அதன் பின்புலத்தையும்,
பின்புலத்தின் நிறத்தையும் குறிக்கும். இங்கு புலம் இள நீல வண்ணத்தில் சுட்டப்பட்டுள்ளது.
ஒரு செவ்வகக் கொடியை நான்கு சம பகுதியாக பிரித்தால் அதில்
பொதுவாக எந்த ஒரு கால் பகுதியையும் கேன்டன்
(Canton) என்று அழைக்கலாம். ஆனால் கொடிக் கம்பத்தின் அருகில் உள்ள பகுதியின் மேல் கால்
பகுதியை அழைப்பது வழக்கமாக உள்ளது.
உயர்த்தி முனை (ஹாயிஸ்ட் - Hoist) என்பது
கொடிக் கம்பத்தின் அருகாமையில் உள்ள முனை அல்லது கொடியின் நீளத்தில் கொடிக் கம்பத்தின்
அருகாமையில் உள்ள அரைப்பகுதி. கொடியின் செங்குத்து நீளம் ( Vertical Length) என்றும்
சில சமயம் குறிப்பிடப்படும்.
பறக்கும் முனை (ஃப்ளை - Fly) என்பது
கொடிக் கம்பத்திருந்து அதிகமான தொலைவில் உள்ள முனை அல்லது கொடியின் அகலத்தில் கொடிக்
கம்பத்திலிருந்து அதிகமான தொலைவில் உள்ள முனை. கொடியின் கிடைமட்ட நீளம் (Horizontal
Length) என்றும் சில சமயம் குறிப்பிடப்படும்.
கொடியின் நீளம் என்பது பறக்கும் கொடியின் கொடிக்கம்பத்திற்கு செங்குத்தான திசையில் கொடியின் நீளம் என்றும், கொடியின் அகலம் என்பது கொடி ஏற்றப்படும் போது அது உயரும் திசைக்கு செங்குத்துத் திசையில் கொடியின் நீளம் என்றும் வரையறை செய்யப் படுகிறது.
கொடியில் காணப்படும் சின்னம் அல்லது அடையாளக்குறி
(பேட்ஜ் - Badge) பொதுவாக அந்த நாட்டிற்கே
உரித்தான குல மரபுச் சின்னங்களின் தொகுப்பான அல்லது வீரத்தைப் பறைசாற்றும் சின்னங்களைத் தாங்கிய மேலங்கி (Coat of arms)யின் ஓவியம் கேடயம் வடிவத்தில் அமைந்திருக்கும்.
படத்தில் போர்சுக்கல் நாட்டின் கொடி எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தக் கொடியின் கிடைமட்ட நீளத்தின் 2/5 பங்கு பச்சை பட்டையும் மீதி 3/5 பகுதி சிவப்புப் பட்டையும் கொண்டது. இதில் கொடி நான்கு சம பகுதிகளாகப் பிரிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கொடி யின் நீளம் அகலத்தைப் போல ஒன்றரை மடங்கு ஆக இருத்தல் அவசியம். அதாவது இந்த செங்குத்து நீளத்திற்கும், கிடைமட்ட நீளத்திற்கும் உள்ள விகிதம் 2:3 ஆகும்.
மேற்காண்ட படத்தில் கொடியின் கிடைமட்ட நீளம் (L) என்று கொள்ளப்பட்டுள்ளது. சரியாக கோட் ஆப் ஆர்ம்ஸ் இரு நிறங்களின் சந்திப்பில் செங்குத்து நீளத்தின் மையத்திலும் படத்தில் காட்டப்பட்ட அளவில் அமைய வேண்டும். இதில் சிவப்பு நிறக் கேடயம் அதற்குள் அமைந்த வெள்ளை நிறக் கேடயம் ஆக இரண்டு கேடயங்கள் காணப்படுகின்றன.
ஆனால் விதிவிலக்குகளும் உண்டு. உதாரணமாக இந்தியாவிற்குக் கொடியில் தனித்துவம் வாய்ந்த பாரம்பரியச் சின்னம் (Coat of arms) கிடையாது. குறியீட்டுச் சின்னம் (Emblem) அசோகரின் சாரநாத் சிம்மத்தூண் ஆகும். குறியீட்டுச் சின்னம் கொடியில் இடம் பெற வேண்டிய கட்டாயம் இல்லை.
அடுத்து வசம் (சார்ஜ் - Charge) என்று குறிப்பிடுவது கொடியின் புலப்பரப்பில் வரையப்படும் குறியீடான சிறப்புச் சின்னம் (எம்பளம் - Emblem) இது தொன்மையான கேடயம் (Heraldic), நவீனமான குறியாகவோ அல்லது சரித்திரச் சின்னமாகவோ இருக்கலாம். கொடிக்கு சுற்றி வர எல்லை (Border), கோடாகவோ அல்லது பட்டையாகவோ இருக்கும்.

படத்தில் காட்டப்பட்ட கொடி மாண்டினிக்ரோ(Montenegro) நாட்டின் தேசியக் கொடி. இதில் சிவப்புப் புலத்தில் (Field) உள்ளது. சுற்றிலும் தங்க நிற எல்லைக்கோடு (Border) காணலாம். சரியாக கொடியின் மையத்தில் Coat of arms இலங்குகிறது. இது கொடியின் செங்குத்து உயரத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உயரத்தை எடுத்துக் கொண்டுள்ளது. தங்க நிற சுற்று எல்லையின் அகலம் செங்குத்து நீளத்தின் மதிப்பில் இருபதில் ஒரு பங்கு (1/20) அகலம் கொண்டது. கொடியின் செங்குத்து நீளம் மற்றும் கிடைதள நீளம் இவற்றின் விகிதம் 1: 2 ஆக இருக்கும். கொடியின் மையமும், கோட் ஆப் ஆர்ம்ஸ் மையமும் சரியாக மையத்தில் பொருந்தியிருக்கும்.
இந்த பாரம்பரிய சின்னங்களை (Coat of arms) அமைப்பதிலும் பல செய்திகள் அடங்கியுள்ளது. மாண்டினிக்ரோ நாட்டின் கொடியில் காணப்படும் தகவல்களைப் பார்ப்போம். இதில் சார்ஜ் (Charge) என்ற சிறப்புச் சின்னம் ஒரு இரட்டை கழுகு. இது பண்டைய ரோமானியத்தின் பைசாந்தைன் பேரரசை (Byzantine Empire) நாட்டின் ரோமானிய ஆதியையும், இரட்டை ஆட்சி அதிகாரப் பொறுப்பு சர்ச்சுக்கு (Church) மாநிலங்களின் (State) க்கும் மேல் உள்ளதை ஒரு கையில் குளோபஸ் க்ரூசிகர்(Globus cruciger) மறு கையில் செங்கோலும் குறிக்கிறது. உட்புறம் காணப்படும் கேடய குறியீட்டில் (inescutcheon) சிங்கம் (Judah's lion) இருப்பது வீரம், கிருத்துவம் இரண்டையும் குறிப்பதாகக் கொள்ளலாம். தற்போது இந்த நாடு ஒரு மதசார்பற்ற சனநாயகக் குடியரசு என்றாலும் செர்பியா(Serbia) விடுதலை அடைந்த இடைக்காலத்தில் அடிக்கடி துருக்கி(Turkey)யப் படையெதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிமத அடிப்படையிலான அரசாக(Theocracy) செயல்பட்டது என்பதும் 1851 இல் மதச் சார்பற்ற வம்சாவளி ஆட்சி நடைபெற்ற போது, சிங்கத்தின் இடத்தில் அப்போது அரசாட்சி செய்த மதகுரு இளவரசர்(Prince - Bishop) களின் சுருக்கொப்பம் (initials). அப்புறம் நாடு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக மாற்றம் அடைந்ததும் முடியாட்சியின் சுவடுகள் நீக்கப்பட்டு சிங்கம் மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டது.

ஃபிம்பிரியேஷன்(Fimbriation) என்றால் குறுகிய எல்லைக்கோடு கொடியின் இரு வேறுபட்ட நிறங்களைப் பிரிப்பதாகும். அதிகமாக வெள்ளை, தங்க நிறக் கோடுகள் பயன் படுத்தப் படுகின்றன.
மேலே காட்டப்பட்டிருப்பது கயானா(Guyana) நாட்டின் கொடியாகும். இதில் உயர்த்தும் முனை(Hoist end) யில் பச்சைப் புலத்தில் சிவப்பு முக்கோணம் அதை தங்க மஞ்சள் முக்கோணத்திலிருந்து பிரிக்கும் குறுகிய எல்லைக் கோடு(Fimbrication) கருப்பு நிறத்திலும், பச்சைப் பின் புலத்தையும் மஞ்சள் முக்கோண்த்தையும் வெள்ளை குறுகிய எல்லைக்கோடு பிரிக்கியதைக் காணலாம்.
இதில் பச்சைப் பின் புலம் விவசாயம் மற்றும் காடு வளத்தையும் (Agriculture and Forests), வெள்ளை எல்லைக் கோடு நதிகளையும் நீர் வளத்தையும் (water and Rivers), தங்க மஞ்சள் முக்கோணம் தாது வளத்தையும்( Mineral wealth), கருப்பு எல்லைக் கோடு சகிப்புத்தன்மை (Endurance) வைராக்கியதையும் சுறுசுறுப்பையும்(Zeal and Dynamism) குறிக்கிறது. கொடியின் செங்குத்து நீளம் மற்றும் கிடைதள நீளம் இவற்றின் விகிதம் 3 : 5 ஆக இருக்கும். ஆங்கிலேயர்களிடமிருந்து 1966 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் விடுதலை பெற்றது.
முக்கியக் குறிப்பு: இந்தக் கட்டுரையில் தரப்பட்ட தகவல்கள் மற்றும் படங்கள் விக்கிபீடியாவிலிருந்து திரட்டப்பட்டவையே.
தொடரும்........

நேபாள நாட்டின் கொடி விதி விலக்காக உள்ளதே ??
ReplyDeleteஆமாம்.அது பற்றியும் எழுதுகிறேன்.தங்கள் பின்னூட்டம் மிகுந்த உற்சாகம் தருகிறது. நன்றி.
ReplyDeleteOMG,so much details about Flag, it's not just like that chosen flags
ReplyDelete