தேசியக் கொடிகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் - (2)
சென்ற கொடிகள் பற்றிய பதிவில் திரு. யூர்கன் க்ருகியர் அவர்கள் நேபாள் நாட்டின் கொடி பற்றிய
வினா எழுப்பியிருந்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் இது பற்றிய தகவல் தேடுவது வேறு புதிய தகவல்களுக்கு என்னை அழைத்துச் செல்லுகிறது. நானும் பல புதிய விஷயங்களை
அறிந்து கொள்ள வகை செய்கிறது. திரு . திரு. யூர்கன் க்ருகியர் அவர்களின் பின்னூட்டத்திற்கு
மகிழ்ச்சியும் நன்றியும்.
பெனான்
(Pennon) என்றால் நீண்ட முக்கோண வடிவமுள்ள கொடி என்றும் மற்றும் பென்நான்ட் (Pennant)
என்றால் நீண்ட கொடி என்றும் பொருள்படும். இவ்வகையான கொடிகள் மூன்று பிரிவுகளாக உள்ளன.
1)முக்கோண
வகை பென்நான்ட்
2)
சரிந்த வகைபென்நான்ட் மற்றும்
3)
மிக வேகமாகப் பறக்கும் சுவாவோ (Swallow Bird) என்ற பறவையின் முள்கரண்டி வடிவிலான வால்
போன்ற அமைப்பு. இவ்வகையான
கொடியமைப்புகள் கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிபி பதினைந்தாம் நூற்றாண்டு வரையான
காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன.
பெனான்செல்ஸ்
(Pennoncells), ஸ்டிரிமர்ஸ் (Streamers) அல்லது பென்டெண்ட்
(Pendent) என்பவை அடிப்படையான இந்த வடிவங்களில் காணப்படும் சிறு மாறுதல்கள் ஆகும்.
ஸ்டிரிமர்ஸ் என்பவை நீண்டு குறுகலானவை.பென்டெண்ட் என்பவை தொங்கும் வகைப்பட்டவை. பென்னான்
செல் என்பவை சிறிய வடிவிலானவை.
நேப்பாள
அரசின் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 5 வது ஷரத்து இவ்வாறு குறிப்பிடுகிறது.
"The national flag of Nepal, as handed down by tradition, consists of two
juxtaposed triangular figures with a crimson- coloured base and deep blue borders,
there being a white emblem of the crescent moon with eight rays visible out of
sixteen in the upper part and a white emblem of a twelve-rayed sun in the lower
part."
நேப்பாள அரசியல் அமைப்பின் அட்டவணை (1) இல் தேசியக் கொடியை உருவாக்குவது பற்றிய
ஐந்து படிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அது கீழே தரப் படுகிறது. இந்த தகவல்கள் நமது கட்டுரைக்குத்
தேவைப்படாது என்பதால் விட்டு விடலாம்.ஒரு
கொடியை அதன் விளக்கத்தைக் கொண்டு வரைவது என்பதற்கு நம் வடிவ கணித அறிவை(GEOMETRY) அதிகம்
பயன்படுத்த வேண்டும் என்கிறார் திரு. பார்ட்ரம். இவர் “The Flag Institute” என்ற லாப
நோக்கமற்ற இங்க்கிலாந்து நாட்டைச் சேர்ந்த “வெக்ஸில்லோலோஜி(VEXILLOLOGY) என்ற கொடிகள்
பற்றிய இயலில் முதன்மைப் பொறுப்பில் உள்ளார். வெக்ஸில்லோலோஜி என்பது முன்னர் கூறியபடி
அறிவியல் வழியில் கொடிகளை ஆராய்யும் கல்வியாகும். இதன் மூலம் ஒரு நாட்டின் கொடிகளில் அந்த நாட்டின் வரலாறு மற்றும் குறியீடுகளின் தாக்கத்தை அறிவியல் பூர்வமாக அறிய முடியும்.
ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள இரு பென்னன்ட்(PENNANT)வடிவத்தை திரு பார்ட்ரம் விளக்கும்
போது, முக்கோண கொடிகள் என்பது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்
பட்டன ஆகவே அதை நேபாளத்தில் காண முடிகிறது என்கிறார். ஆனால் மற்ற தென் கிழக்கு ஆசிய
நாடுகள் செவ்வக வடிவ கொடிகளைப் பயன்படுத்தும் போது ஏன் நேப்பாளம் மட்டும் முக்கோண வடிவ
கொடியைப் பயன் படுத்த வேண்டும் என்ற வினா எழுகிறது. உலகின்
பிற பகுதிகளில் பெரும்பாலான நாடுகள் ஐரோப்பாவின் கொடியமைப்பை நகலாகப் பின்பற்றின.
நேபாள் அவ்வாறு ஐரோப்பிய முறைகளை பின்பற்ற வேண்டாம் என்று
முடிவு எடுத்தது என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த பார்ட்ரம், “செவ்வக கொடிகள்
என்பதே ஐரோப்பியர்களான நாங்கள் பிற உலக நாடுகளுக்குக் கொண்டு வந்தது
அறிமுகப்படுத்தியதுதான். மேலும், உலகின் பிற பகுதிகளில் இருந்த நாடுகளில்
அவர்களுக்கு
தேசிய கொடிகள் ஏற்படுத்திக் கொள்ளும் முன்னதாகவே எங்களிடம் அதாவது
ஐரோப்பிய நாடுகளிடம் செவ்வக வடிவ தேசியக் கொடி இருந்தது என்றன.
எல்லா நாடுகளும் தேசியக் கொடி செவ்வகமாக அமைய வேண்டும் என்ற போது
அதற்கு நேப்பாளம் “தேசிய கொடியாக இருக்க செவ்வகம் ஆகத்தான்
இருக்க வேண்டுமா என்ன? இல்லை, உண்மையில் எங்கள் பாரம்பரிய
முக்கோண வடிவ கொடிகள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றது.
இந்து மதக் கொடிகள் முக்கோணமாகவே உள்ளன.
அது போல சீக்கியர்களின் கொடியும் இருக்கும்.
உலகின் கிழக்கு ஆசியப் பகுதிகளில் முக்கோண கொடிகள்
கலாச்சார ரீதியாக மிகவும் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது.
நேபாள நாட்டின் தேசிய கொடியின்
சின்னங்கள் மற்றும் நிறங்கள் குறிப்பிட்ட அர்த்தங்களை உடையது. நீல நிற எல்லையைக் கொண்ட மத்தாப்புச்சிவப்பு நிறக் கொடியாக உள்ளது.
"கொடியை ஒரு நீல எல்லை கொண்டு, அடிப்படையில் மத்தாப்புச்சிவப்பு(Crimson
Red) நேபாள நாட்டின் தேசிய நிறம் மற்றும் இமயமலையில் வளரும் ரோடோடென்றான் (Rhododendron)
என்ற தாவரத்தின் மலரின் நிறத்திலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. இந்த தாவரம்
நேப்பாளத்தின் தேசிய மலராகும். மேலும்,
நீலம் அமைதியைக் குறிக்கிறது. மேலும், கொடி மீது மேல் பென்னண்ட்(PENNANT)
பகுதியில் நிலவும், கீழ்ப் பென்னண்ட்(PENNANT)பகுதியில் சூரியனும் கொண்டுள்ளது.
கொடியின் வலது புறம் அந்த இரண்டு முக்கோண புள்ளிகள் எதைக் குறிப்பிடுகின்றன என்றால்,
அவைகள் இமயமலையின் சிகரங்களைப் பக்கவாட்டாக
சுட்டுவதாகக் கொள்ளலாம் என்பதும் ஒரு விளக்கம் என்கிறார் பார்ட்ரம். அனால் இதில்
பல்வேறு கருத்துகள் (THORIES) உள்ளன.
. ஒன்று இமைய மலையை குறிப்பதாகக் கொண்டால் மற்றொரு முனை எதனைக்
குறிக்கிறது? என்ற வினா எழுகிறது. அவைகளில் ஒன்று இந்து மதத்தையும்
மற்றது புத்த மதத்தையும் குறிக்கிறது என்பதுஒரு கருத்து.
மற்றோர் கருத்து அவைகள் ஷா(SHAHS) மற்றும் ராணா(RANAS) என்ற
நேப்பாளத்தை ஆட்சி செய்யும் அரச குடும்பங்களைக் குறிக்கிறது என்பதாகும்.
இன்னொரு கருத்து இரண்டு புள்ளிகளும் சூரியனுடன் வேலையையும்(WORK) ,
சந்திரனுடன் அமைதியும்(PEACE) குறிக்கிறது என்பதாகும்.
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம் அவை இந்து மதம் மற்றும்
புத்த மதத்தைக் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.
1962 க்கு முன்னர் நேப்பாளத்தின் கொடியில் இரு மனித உருவங்கள் இருந்தன. அவற்றில்
மேல் முக்கோணப் பகுதியில் காணப்படும் சந்திரனில் உள்ள உருவம் அரசரையும்,
கீழ்ப்பகுதி முக்கோணத்தில் காணப்படும் உருவம் பிரதம மந்திரியையும் குறிப்பதாகவும்
சொல்லப்பட்டது.1962 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 16 ஆம் நாள் சட்ட வரைவின் படி
ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிபி 17 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 19 ஆம் நூற்றாண்டு வரை
மனித உருவங்கள் கொண்ட கொடியே நடைமுறையில் இருந்தது. தற்போது சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை நேப்பாளமும் இருக்கும் என்ற
மக்களின் நம்பிக்கையை இந்த குறியீடுகள் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவில், அமெரிக்க கொடியை மடித்து வைக்க ஒரு குறிப்பிட்ட
வழிமுறை இருக்கிறது. நேபாளத்தில், அது தெளிவாக இல்லை .
ஆனால் கொடி நிபுணர் கிரஹாம் பார்ட்ரம் அவர்கள், பிரிட்டனில்
செய்வது போல மடிக்காமல் சுற்றி ஒரு குழாய்க்குள் வைப்பதற்கு
நல்ல வாய்ப்பு உள்ளது என நினைக்கிறார்.
Comments
Post a Comment