கதிரவன் – பகுதி (4)
கதிரவன்
– பகுதி (4)
கடந்த பகுதி (3) இன் இறுதியில் இதுவரை கதிரவச்சுற்றுக்களை
24 சுற்றுக்களாகப் பிரித்துள்ளது என்றும், தற்போது 24 வது சுற்று நடப்பில் இருக்கிறது
என்றும் பார்த்தோம். கீழ்க்கண்ட அட்டவணை ஆண்டுவாரியாக தரப்பட்டுள்ளது. இந்தத் தகவல் விக்கிபிடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.
ஆண்டு
வாரியான கதிரவச் சுற்று
|
|||
கதிரவச் சுற்று எண்
|
தொடக்கம்
|
முடிவு
|
கால
அளவு (ஆண்டுகள்)
|
கதிரவச் சுற்று 1
|
1755
ஆகஸ்ட்
|
1766
மார்ச்
|
11.3
|
கதிரவச் சுற்று 2
|
1766
மார்ச்
|
1775
ஆகஸ்ட்
|
9
|
கதிரவச் சுற்று 3
|
1775
ஆகஸ்ட்
|
1784
ஜூன்
|
9.3
|
கதிரவச் சுற்று 4
|
1784
ஜூன்
|
1798
ஜூன்
|
13.7
|
கதிரவச் சுற்று 5
|
1798
ஜூன்
|
1810
செப்டம்பர்
|
12.6
|
கதிரவச் சுற்று 6
|
1810
செப்டம்பர்
|
1823
டிசம்பர்
|
12.4
|
கதிரவச் சுற்று 7
|
1823
டிசம்பர்
|
1833
அக்டோபர்
|
10.5
|
கதிரவச் சுற்று 8
|
1833
அக்டோபர்
|
1843
செப்டம்பர்
|
9.8
|
கதிரவச் சுற்று 9
|
1843
செப்டம்பர்
|
1855
மார்ச்
|
12.4
|
கதிரவச் சுற்று 10
|
1855
மார்ச்
|
1867
பிப்ரவரி
|
11.3
|
கதிரவச் சுற்று 11
|
1867
பிப்ரவரி
|
1878
செப்டம்பர்
|
11.8
|
கதிரவச் சுற்று 12
|
1878
செப்டம்பர்
|
1890
ஜூன்
|
11.3
|
கதிரவச் சுற்று 13
|
1890
ஜூன்
|
1902
செப்டம்பர்
|
11.9
|
கதிரவச் சுற்று 14
|
1902
செப்டம்பர்
|
1913
டிசம்பர்
|
11.5
|
கதிரவச் சுற்று 15
|
1913
டிசம்பர்
|
1923
மே
|
10
|
கதிரவச் சுற்று 16
|
1923
மே
|
1933
செப்டம்பர்
|
10.1
|
கதிரவச் சுற்று 17
|
1933
செப்டம்பர்
|
1944
ஜனவரி
|
10.4
|
கதிரவச் சுற்று 18
|
1944
ஜனவரி
|
1954
பிப்ரவரி
|
10.2
|
கதிரவச் சுற்று 19
|
1954
பிப்ரவரி
|
1964
அக்டோபர்
|
10.5
|
கதிரவச் சுற்று 20
|
1964
அக்டோபர்
|
1976
மே
|
11.7
|
கதிரவச் சுற்று 21
|
1976
மே
|
1986
மார்ச்
|
10.3
|
கதிரவச் சுற்று 22
|
1986
மார்ச்
|
1996
ஜூன்
|
9.7
|
கதிரவச் சுற்று 23
|
1996
ஜூன்
|
2008
ஜனவரி
|
11.7
|
கதிரவச் சுற்று 24
|
2008 ஜனவரி
|
நடப்பில்
|
|
சராசரி
|
11.1
|
இனி வரும் பகுதிகளில் கதிரவக் காற்று (Solar
wind) மற்றும் கதிரவச்சுற்று (solar cycle) ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு மற்றும்
விளைவுகளைக் காண்போம்.
கதிரவனின் மேல் வளிமண்டலத்திலிருந்து
வெளியிடப்படும் மின்னூட்டமுள்ள துகள்களின் பிரவாகமே கதிரவக் காற்று (solar
wind) எனப்படுகிறது. இந்த
பிளாஸ்மா நிலைப் பொருள் பெரும்பாலும் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் மிகக்
குறைந்த அளவில் ஆல்பா துகள்களையும் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. ‘பிளாஸ்மா’(Plasma)
என்ற கிரேக்க மொழிச்சொல்லுக்கு ‘அமைக்கப்பட்ட எந்தப் பொருளும்’ (Anything formed) என்று
பொருள் கொள்ளலாம். பொருட்களின் அடிப்படை நிலைகளான திண்ம, நீர்ம மற்றும் வாயு
நிலைக்கு அடுத்தது பிளாஸ்மா நிலை. இந்த
நிலை பொருட்களின் நான்காவது நிலை. இந்த நிலையில் உள்ள பொருட்களின் பண்புகள் மற்றைய
மூன்று நிலைகளின் பண்புகளிலிருந்து வேறுபட்டிருக்கும். வாயு ஒன்றை உயர் வெப்ப
நிலைக்கு உயர்த்துவதன் மூலமோ அல்லது சுமார் 5000o C வெப்ப நிலையில்
லேசர் ஒளி அல்லது மைக்ரோ அலையியற்றி உதவியுடன் வலிமையான மின்காந்தப் புலத்தை ஏற்படுத்துவதாலும் உருவாக்க இயலும். இதனால்
மூலக் கூறுகளின் கூட்டமைப்பு உடைந்து நேர் மற்று எதிர் மின் அயனிகள் (Ions)
உருவாகின்றன.
பொதுவாக இத்துகள்கள் 1.5 மற்றும் 10 keV வரை
இடையேயான உயர்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. கோள்களுக்கு
இடையிலான காந்த புலம்[ interplanetary
magnetic field (IMF)] எனப்படும்
கதிரவ காந்தப்புலம், கதிரவக் காற்றில் அடங்கியுள்ள பிளாஸ்மாவால் கதிரவக்
குடும்பத்தின் கோள்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கதிரவக் காற்றின் அடர்த்தி,
வெப்பநிலை மற்றும் வேகம் ஆகியவை காலம் மற்றும் கதிரவனின் தீர்க்கரேகையைப் பொறுத்து
மாறுபடும். இத்துகள் கதிரவனின் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பிக்க அவற்றின் உயர் ஆற்றலே காரணம். இத்தகைய உயர் ஆற்றலை
துகள்கள் பெறுவதற்கு கரோனாவின் உயர் வெப்பநிலை மற்றும் அதில் அடங்கியுள்ள உள்ள காந்த மின் மற்றும் காந்த நிகழ்வுகளின்
விளைவே ஆகும்.
கதிரவனின் புற அடுக்கு கரோனா கிட்டத்தட்ட 1.1 மில்லியன் கெல்வின் அளவுக்கு உயர்ந்திருக்கும்.
இத்தகைய வெப்பநிலையில் கதிரவனின் ஈர்ப்புப்புலத்தால் மிக வேகமாக இயங்கும் துகள்களை
கட்டி வைக்க முடியாது.
கதிரவனின் செயல்பாடுகள் ஒவ்வொரு பதினோரு ஆண்டுச் சுற்றுக்கும் கதிரவப்புள்ளிகள்
எண்ணிக்கை, கதிர் வீச்சின் அளவு மற்றும் உமிழப்படும் துகள்கள் எல்லாமே காலம் சார்ந்து
மாற்றமடைகிறது. இத்தகைய மாற்றங்கள் கதிரவக் காற்றின் பண்புகளான திசை வேகம், வெப்பநிலை
மற்றும் அடர்த்தி ஆகியவற்றைப் பாதிக்கிறது. கதிரவக் காற்று எப்பகுதியிலிருந்து வருகிறது,
அப்பகுதி எத்தகைய வேகத்தில் சுழலுகிறது என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது. கதிரவக்
காற்றை வானியலாளர்கள் அதன் வேகத்தைப் பொருத்து இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர்.
பெரும் வேகம் கொண்ட கரோனா துளைகளிலிருந்து வரும் துகள்கள் மற்றும் குறைந்த வேகம் கொண்ட கதிரவ நடுக் கோட்டுப் பகுதியிலிருந்து வரும் துகள்கள்.
கரோனா துளைகள் (Corona holes) என்பவை கரோனாவின் குளிர்ச்சியான பகுதி. இப்பகுதி
இருண்டும் சராசரிக்கும் குறைந்த பிளாஸ்மா அடர்த்தியுடன் கூடியது. கரோனா துளைகள் அடிக்கடி
வடிவத்தில் மாறுபடும் ஏனெனில் கரோனாவே ஒரு
ஒழுங்கற்ற பகுதியாகும். கதிரவக் காற்றின் திசைவேகம்
கரோனா துளைகளில் மிக அதிகமாக சுமார் 800 கிமீ/வினாடி என்றமையும். கரோனா துளைகளில் வெப்பநிலை,
அடர்த்தி மிகக் குறைவாகவும், காந்தப்புலம் மிகவும் வலிமை குன்றியதாகவும் இருக்கும்
என்பதால் காந்தப்புலக் கோடுகள் வெளியில் பரவி இருக்கும்.
இந்தத் துளைகள் துருவங்களிலும்,
குறைந்த அட்சங்களிலும் உருவாகின்றன. கதிரவச் செயல்பாடு குறைவாக இருக்கும் காலங்களில்
அதிகமாகவும், வேகமான கதிரவக் காற்று 8,00,000 o C வரை அதிகரிக்க
முடியும். நடுக் கோட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள கரோனா நீரோட்டப்பட்டை
(coronal streamer belt) பகுதியில் கதிரவக் காற்றின் வேகம் 300 கிமீ / வினாடி என்ற
அளவில் குறைவாகவே இருக்கும். இப்பகுதியில்
வெப்ப நிலை 1.6 மில்லியன் செலிசியஸ் ஆக இருக்கும்.
கதிரவனை விட்டு காற்று பயணிக்கும் போது அது மின்னூட்டமுள்ள துகள்களையும்
காந்த மேகங்களையும் கூடவே சுமந்து செல்லுகிறது. கதிரவக் காற்று சுமந்து வரும் துகள்கள் ஒருகோளின் பரப்பை அடையும் கால் அதிலிருந்து வெளியாகும்
கதிர்வீச்சு, அக் கோளில் காணப்படும் எல்லா வகையான உயிரினங்களுக்கும் கடுமையான பாதிப்பை
ஏற்படுத்தும்.
புவியைப் பொருத்தவரையில் அதன்
காந்தப்புலம் நம்மை இத்தகைய கடும் பாதிப்பிலிருந்து காக்கும் கேடயம் ஆகச் செயலாற்றுகிறது.
தொடரும்…..
Comments
Post a Comment