வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (13)
சில விண்மீன்கள் தமது பொலிவில்
மாற்றமடையும் நிகழ்வு முற்றிலும் வேறுவகையான காரணத்தால் ஏற்படுகிறது. சீரான கால இடைவெளியில்
ஏற்படும் கிரகணமே (Eclipse) இதற்குக் காரணமாக அமைகிறது.பொதுவாக இரட்டை விண்மீன்களில்
இரண்டு விண்மீன்களும் ஒன்றை ஒன்று சுற்றி வருவதால் கிரகணம் (eclipse) ஏற்படுகிறது. புவியிலிருந்து
நோக்கும் கால் ஒருவிண்மீன் மற்றதன் முன்னர் சீரான கால இடைவெளியில் வருவது போலத் தோன்றுகிறது. இவ்விரண்டு
விண்மீன்களில் ஒன்று அதிகப் பொலிவுடனும், மற்றது குறைந்த பொலிவுடனும் இருந்தால் , குறைந்த
பொலிவுடைய விண்மீன் பொலிவு அதிகமுள்ள விண்மீனின் முன்பாக வரும் பொழுது விண்மீனின் பொலிவு
குறைவதாகத் தோன்றுகிறது. பொலிவு குறைந்த விண்மீன் நகர்ந்ததும் மீண்டும் பொலிவு அதிகரிக்கிறது.
இத்தகைய விண்மீன்களை கிரகணமாறிகள் (Eclipsing variables) என்கிறோம். கிரகணமாறி
விண்மீன்களில் குறிப்பிடத்தக்கதுபெர்சியஸ் (Perseus) விண்மீன் குழுவிலுள்ள ஆல்கால் (Algol
) ஆகும். ஆல்கால் தனது பொலிவு மதிப்பில் 2.3 முதல் 3.5 வரை, சரியாக 2 நாட்கள் 22 மணி
நேரத்தில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த மாற்றம் சீரானதாக இருப்பதில்லை. அதன் பொலிவு பெருமத்திலிருந்து
சிறுமத்தை 5 மணி நேரத்தில் அடைகிறது. மீண்டும் சிறுமத்திலிருந்து பெருமத்தை அடுத்த
5 மணி நேர காலத்தில் அடைந்த பின் அடுத்த 50 மணி நேரத்திற்கு மாறாத பொலிவுடன் விளங்குகிறது.
வேறெந்த வகையான பொலிவு மாறும் விண்மீன்களை விடவும் மிகவும் வியப்பூட்டும்
வகை விண்மீன் வகை நோவா (NOVA) எனப்படும் வெடிக்கும் விண்மீன்கள் ஆகும். இந்த வகையான
விண்மீன்கள் , ஒரு நாளில் சில மணி நேர அவகாசத்தில் தமது பொலிவில் 100 முதல் 1000 மடங்கு
வரை திடீரென்று அதிகரிக்கும். அப்பொழுது அவற்றின் பொலிவு வியாழன், சுக்கிரன் போன்ற
கோள்களின் பொலிவைவிட பன் மடங்கு அதிகமாகத் தோன்றும். சில நாட்களுக்குப் பின்னர் சிறிது
சிறிதாகப் பொலிவில் குறைய ஆரம்பித்து மீண்டும் பழைய நிலையை அடையும்.
நோவா பற்றிய திட்டவட்டமான குறிப்பு 1546 முதல் 1601 வரை வாழ்ந்த டச்சு (Danish) நாட்டு வானவியலாளர் டைக்கோ பிராஹியால் (Tycho brahe) தரப் பட்டுள்ளது.
டைக்கோ பிராஹி (Tycho brahe)
நோவா பற்றிய திட்டவட்டமான குறிப்பு 1546 முதல் 1601 வரை வாழ்ந்த டச்சு (Danish) நாட்டு வானவியலாளர் டைக்கோ பிராஹியால் (Tycho brahe) தரப் பட்டுள்ளது.
1572 ஆம் ஆண்டில் நவம்பர்
மாதம் காசியோப்பியா (cassiopeia ) விண்மீன் கூட்டத்தில் உருவான நோவா பற்றிய குறிப்பு
அவரால் தரப் பட்டுள்ளது. அந்த நோவா மிகப் பொலிவாக விளங்கியதால் நண்பகலில் கூட கட்புலனானது.
என்ன காரணத்தால் விண்மீன்
இவ்வாறு வெடித்துச் சிதறுகிறது? வானியலாளர்களைப் பொருத்தவரை நோவாக்கள் இரட்டை விண்மீன்களாக
இருக்கலாம். அதில் ஒன்று வெள்ளைக் குள்ளனாகவும் மற்றது சிவப்பரக்கனாக மாற்றமடையும் நிலையிலும்
இருக்கும். வெள்ளைக் குள்ள நிலையிலுள்ள விண்மீனின் மிக அதிகமான ஈர்ப்பு விசையின் காரணமாக
, அதன் கூட்டாளியான சிவப்பரக்கனின் வெளிப்புற உறையாக அமைந்திருக்கும் பொருள் வெள்ளைக்
குள்ள விண்மீனை நோக்கி இழுக்கப் படுகிறது. கூட்டாளி சிவப்பரக்க விண்மீனின் ஹைட்ரஜன்
செறிந்த பொருள் வெள்ளைக்குள்ள விண்மீனை அடைந்ததும் , அதிக மதிப்புடைய ஈர்ப்பியல் விசையின்
காரணமாக ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு வினை தூண்டப்படுகிறது. தூண்டப்பட்ட வினை காரணமாக வெள்ளைக்
குள்ள விண்மீன் வெடித்துச் சிதறுவதாலேயே நோவா ஏற்படுவதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.
படம் 1 . ஒரு சாதாரண இரட்டை வீண்மீன் அமைப்பு கீழே தரப் பட்டுள்ளது. இதில்
ஒரு முக்கியத்தொடரில் உள்ள விண்மீனும்,மற்றொரு வயதான வெள்ளைக் குள்ளன் விண்மீனும் உள்ளது.
படம் 3 . சிவப்பரக்க விண்மீன் தொடர்ந்து பெரியதாகிக் கொண்டே போகும் கால், ரோஷ் எல்லையையும் (Roche limit) தாண்டி விரிவடைகிறது. இதன் காரணமாக அதிலுள்ள ஹைட்ரஜன் வெள்ளக் குள்ளனால் ஈர்க்கப்படுவதால், படிப்படியாக வெள்ளைக் குள்ள விண்மீனைச்சுற்றி ஒரு தட்டு உருவாக்கப் படுகிறது.
படம் 4 . வெள்ளைக்குள்ள வீண்மீனின் மிக அதிகமான ஈர்ப்பு விசை காரணமாக இவ்வாறு ஹைட்ரஜன் சேகரமாகி புறக்கூடு ஒன்றை ஏற்படுத்தும்.
மீண்டும் காலப் போக்கில் தொடர்ந்த ஈர்ப்பினால்
உயர் வெப்ப நிலையை அடைந்து ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைந்து ஹீலியமாக மாறும் வினை நிகழ
ஆரம்பித்து ஆற்றல் வெளியாகத் தொடங்குகிறது.
புறக்கூட்டின் ஹைட்ரஜன் முழுமையாக இணைந்து முடிந்ததும் மீண்டும் பழையபடி
சுற்று தொடங்குகிறது. பொதுவாக நோவாக்கள் ஒரு முறைதான் வெடிக்கும் என்று கருதப்படுகிறது.
ஆனால் சில நோவாக்கள் தொடந்த ஹைட்ரஜன் மாற்றத்தின் காரணமாக அடிக்கடி வெடிக்கும் என்றறியப்பட்டுள்ளது. இத்தகையவற்றை
காலநோவாக்கள் (Periodic Novas ) என்று அழைக்கலாம்.
நோவாக்கள் கண்ணிற்கு அற்புதமான காட்சியாக அமைகின்றன.அவைகள் குறைந்த கால
அளவிலேயே மிக அதிகமான ஆற்றலை வெளியிடுவதுடன், பெருமளவு நிறையையும் இழக்கின்றன.அளவில்பெரும்
நிறையிலான விண்மீன்கள் , பொலிவு மங்கலாகி கட்புலனாகாமல் மறைந்தால் கூட, அதற்கு முன்னர்
அவற்றின் தலையெழுத்தான வெடித்துச் சிதறும் பெருநோவா (Super Nova) நிலையை அடைகின்றன.
ஹெர்குலிஸ் விண்மீன் கூட்டத்தில்
1935 ஆம் ஆண்டில் காணப்பட்ட நோவாவின் புகைப்படங்கள்.
முதல் படம் மார்ச் மாதம்
10 தேதியிலும் மற்றது இரண்டு மாதங்களுக்குப் பின்பு மே மாதம் 10 தேதியிலும் எடுக்கப்பட்டது.
தொடரும்....
தொடரும்....
Comments
Post a Comment