Posts

Showing posts from 2021

அண்ணா நகர் அனுபவங்கள்

Image
அண்ணாநகர் இரண்டாவது நிழற் சாலை சென்னையின் மிக அழகான சாலைகளில் ஒன்று . சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு இச்சாலையில் தபால் அலுவலகத்திற்கு எதிரில் இருந்த ஒரு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன்.  குடியிருப்பில் மொத்தம் ஐந்து அடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலும் மூன்று தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் எதிரெதிராக இரண்டு வீடுகள். நான் 1988 முதல் 1994 வரையில் முதல் தளத்தில் கதவு எண் 342/4 வசித்தது வந்தேன்.  இரு படுக்கை அறை அடுக்ககம். இரண்டு பத்துக்குப் பத்து படுக்கை அறைகள் அதே அளவில் ஒரு வரவேற்பறை, சிறிய ஆனால் வசதியான சமையலறை என்று காற்றும் வெளிச்சமும் எல்லா அறைகளிலும் போதிய அளவில் கிடைக்கக் கூடிய வகையில்  நேர்த்தியான கட்டமைப்பை உடையது. கட்டுமானம் மிகத் தரமானது என்று சொல்ல இயலாத போதும் அடுக்ககத்தின் வளாகத்தில் முன்புறம் பாதுகாப்பாகக் குழந்தைகள்  விளையாட நிறையத் திறந்த வெளி, சாலையை ஒட்டி இருப்பதும் கடைகள் வங்கிகள் என பல வசதிகள் இருநூறு மீட்டர் தொலைவில் சரவண பவன்  நடைப்பயிற்சிக்கு விஸ்வேஸ்வரய்யா பூங்காவும் பக்திக்கு ஐயப்பன் கோவிலும் இருந்ததால் அந்த இட...
நான் பணிபுரிந்த பள்ளியில் 2006 வாக்கில் நபார்ட் வங்கிக் கடன் மூலம் முப்பத்திரண்டு வகுப்பறைகளுடன் இரண்டு ஆய்வகங்கள் என்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டன. எல்லா வகுப்புகளுக்கும் போதுமான அளவுக்கு மின்விசிறிகளும் (fans) குழல் விளக்குகளும் (tube lights) போடப்பட்டு இருக்கும்.  இந்த மின்விசிறிகளின் இறக்கைகளை  தாமரைப் பூவைப் போல வளைப்பதும் குழல் விளக்குகளை உடைப்பதும் அவ்வப்போது நடக்கும். உடைக்கும் மாணவர்கள் யார்யாரெனக் கண்டுபிடித்தால் அரசியல் தலையீடுகள் வரும். அதனாலேயே ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் நமக்கேன் வம்பு என்ற எண்ணத்தில் கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள். சும்மா பேருக்கு இது போலப் பள்ளியில் சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காலையில் பிரார்த்தனைக் கூட்டத்தில் எச்சரிக்கை செய்வதும் எழுத்துப் பூர்வமாக எல்லா வகுப்புகளுக்கும் சுற்றறிக்கை விடுவதும் மட்டுமே இது சார்ந்து எடுக்கப்படும் கடும் நடவடிக்கையாக இருக்கும்.  2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது வகையில் பள்ளியில் மாணவர்கள் இடையில் அமைதியின்ம...
அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், நாச்சியார்கோயில்,  கும்பகோணம் வட்டம், தகவல் பலகை : ஸ்ரீவாசுதேவன், பரிபூரணன், நம்பி, சீனிவாசன் வஞ்சுளவல்லி, நாச்சியார் ஸ்ரீப்ரத்யும்ணன், ஸ்ரீலங்கர்ஷ்ணன், ஸ்ரீ புருஷோத்தமன், ஸ்ரீ பிரும்மா, ஸ்ரீ அநிருத்தன் : ஸ்ரீசீனிவாசப்பெருமாள், ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் ஸ்ரீ பட்சிராஜன் (கவலைகள் நீக்கும் கல்கருட பகவான்) ஸ்ரீ ராமர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். ஸ்ரீ யோக நரசிம்மன். ஸ்ரீ ஹனும். ஸ்ரீ வெங்கடாஜலபதி, ஸ்ரீ திருமங்கை ஆழ்வார். நம்மாழ்வார் மூலவர்கள் பெயர் தாயார் இதர மூலவர்கள் உற்சவர் பெயர்கள் வரப்பிரசாதி முக்கிய தீர்த்தம் * மணிமுக்தா தீர்த்தம் (திருக்குளம்) ஸ்தல விருட்சம் ஆகமம் மகிழ மரம் : வைகானச ஆகமம் - தென்கலை சம்பிரதாயம் திருக்கோயில் சிறப்பு  திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் மங்கம் செய்யப்பட்ட திவ்யதேசங்களின் வரிசையில் 20ஆவது திவ்ய தேசமாகும். சோழநாட்டு மங்களாசாசனம் செய்யப்ப திருக்கோயில் வரிசையில் 14 ஆவது திவ்ய தேசமாகும்.  திருப்பதிக்கு இணையான பிரார்த்த ஸ்தலம் “தேன் கொண்ட சாரில் திருவேங்கடத்தானை நான் சென்று நாடி திருநறையூர் (நாச்சியார்கோயில்) கண்டே...

கண்ணோட்டம்

Image
  கடந்த 2016 ஆம் ஆண்டில் எனக்குப் பார்வை சற்றே மங்கலாக இருப்பதாகத் தோன்றியது.  சென்னையில் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை மிகவும் பழமையான பாரம்பரியம் மிக்க மருத்துவமனை. அடுத்து மிகப் புகழ் பெற்ற பெற்ற நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனை. இவை தவிர அகர்வால், வாசன் கண் மருத்துவமனைகளும் பல சிறிய தனியார் மருத்துவமனைகளும் உள்ளன.  உடனே அருகிலுள்ள பிரபலமான சென்னையில் பல கிளைகளைக் கொண்ட  தனியார் கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளச் சென்றேன். அங்கு பரிசோதனைகள் செய்து உங்களுக்குக் கண்புரை அறுவைச் சிகிச்சை (Cataract operation) உடனே செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீடு ( Medical insurance) உள்ளதா? என்று கேட்டார்கள்.  அவர்கள் நிறுவனம் வழங்கும் மூன்று நான்கு வகையான புரை நீக்க அறுவைச் சிகிச்சைக்குரிய கட்டணத்தையும் கூறிய பின் எப்போது சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம்? என்றும் விரைவில் செய்து கொள்ளுங்கள், நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதால் பார்வையை இழக்கும் அபாயமும் உள்ளதென பயமுறுத்தினர்.  நான் எதற்கும் வேறொரு மருத்துவமனையில் இரண்டாவதாக கருத்துக் கேட...

*UNIVERSAL PASS CUM CERTIFICATE*

நமது இந்திய அரசு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸும் போட்டவர்களுக்கு ஒரு பாஸ் கம் சர்டிபிகேட் ஐ ஆன்-லைன் மூலமாகவே பெற ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த பாஸ் & சர்டிபிகேட் ஐ பெறுவதால் நீங்கள் அரசு போக்குவரத்து, பொது இடங்கள், பேருந்து - ரயில் - விமான நிலையம் மற்றும் மால் போன்ற அனைத்து இடங்களிலும் உங்களது புகைப்படத்துடன் கூடிய இந்த பாஸை வைத்து எந்த தடங்கலின்றியும் நுழையலாம் - பயணிக்கலாம். கீழே நான் தந்துள்ள லிங்க் ஐ க்ளிக் செய்து உங்களது பதிவு செய்த மொபைல் எண் ஐ தந்து OTP பெற்று Enter செய்தால் உங்களது பாஸ் & சர்டிபிகேட் அடுத்த 30 நிமிடங்களுக்குள் டவுன்லோடு ஆகும். Link ஐ க்ளிக் செய்வதற்கு முன்னர் உங்களது போனில் உங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தயார்நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இல்லாதிருந்தால் ஷோக்கா ஒரு செல்ஃபி எடுத்தும் அனுப்பலாம். உங்களது சர்டிபிகேட் ஐ  வெளிநாடு செல்வதற்குக் கூட PASS ஆக பயன்படுத்தலாம். பொதுமக்களுக்கான தகவலை தமிழாக்கம் செய்து வெளியிடுபவர் : _கோவை ரவீந்திரன்_. கிளிக் செய்ய வேண்டிய லிங்க்👇 https://epassmsdma.mahait.org

அறுபதுக்கு மேல்...

  அறுபதுக்கு மேல் எங்களது கல்லூரி  நண்பர்களின் "வாட்ஸ்அப்" குழுவில் கீழ்க்கண்ட பதிவை ONGC நிறுவனத்தில் பண்யாற்றி ஓய்வு பெற்ற பால்ய நண்பர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிட்டிருந்தார். பதிவு ஆங்கிலத்தில் இருந்தது. "பேஸ்புக்" நண்பர்களில் திரு. தங்கவேல் ராஜேந்திரன் போல் சிலர் அத்தகைய பதிவுகளைத் தமிழாக்கம் செய்து பதிவிடச் சொல்லிக்  கேட்பதுண்டு. ஆகவே முடிந்தவரை பதிவின் பொருள் சிதையாமல் பதிவைத் தமிழில் தந்துள்ளேன். அறுபது வயதைக் கடந்த நண்பர் ஒருவரிடம் தற்போது உங்களிடம் என்ன மாதிரியான மாற்றங்களை உணர்கிறீர்கள் என்று வினவினேன். அதற்கு விடையளிக்கும் வகையில் கீழ்க்கண்ட வரிகளை எனக்கு அனுப்பியிருந்தார். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் (1) முதலில் என் பெற்றோர் மீதும் அப்புறம் பின்னாட்களில் என் உடன் பிறந்தோர், மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்கள் மீதும் அன்பு செலுத்தி வந்தேன். இப்போதுதான் என்மீது நான் அன்பு செலுத்தத் துவங்கியுள்ளேன். (2) அட்லஸைப் போல இந்த உலகத்தை நான்னொன்றும் எனது தோளில் தூக்கிச் சுமக்கவில்லை என்ற பேருண்மையை இப்போது உணர்ந்து விட்டேன். (3) காய்கறிகள், பழங்கள்...

தக்ளியும் நானும்

Image
 கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஆவணி அவிட்டம் தொடர்பாக ஒரு பதிவு இட்டிருந்தார். அந்தப்பதிவு, என் பள்ளிக்கூட நாட்களின் இனிய நினைவுகளைக்  கிளறி விட்டது. கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா பள்ளியில் படித்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை கைவினை (Craft) வகுப்பு உண்டு. அங்கு கைவினை வகுப்பில் நெசவு கற்றுத்தரப் பட்டது. அந்த வகுப்பறையில் இரண்டு பெரிய தறிகளும் ஏழெட்டு  நாடா தயாரிக்கும் சிறு தறிகளும் உண்டு.  நெசவு ஆசிரியர் பக்கத்தூர் வெள்ளங்குளியிலிருந்து வருவார். வெள்ளங்குளி நிறைய சௌராஷ்டிர இன நெசவாளர்களைக் கொண்ட ஊர். அவர் சௌராஷ்டிர மொழியுடன் தமிழைக் கலந்து வா, போ என்பதை வால்னி, போல்னி என்று சொல்வது வேடிக்கையாக இருக்கும். நெசவு வகுப்பிற்குக் கண்டிப்பாக தக்ளியும் பஞ்சும் கொண்டு போக வேண்டும். தக்ளியும் பஞ்சும் பாரதி நியூஸ் மார்டில் (ரங்கசாமி கடை) கிடைக்கும்.  குச்சி மிட்டாய் மாதிரி அரையடி நீளத்தில் பஞ்சு நடுவிரல் கனத்திலிருக்கும். 1966 ஆண்டு திலகர் வித்யாலயாவில் ஐந்தாம் வகுப்பு சேர்ந்த போது இந்தத் தக்ளியும் பஞ்சும் அறிமுகமாயின. இப்போது1990களுக...
Image
மாயச் சதுரங்கள் (Magic squares) என்பவை1 முதல் n^2 வரையிலான வெவ்வேறு நேர்க்குறி எண்களின் சதுர அடுக்கு வரிசை. இந்த வரிசையின் தனித்தனியான நிரைக்கட்டங்கள்,  நிரல் கட்டங்கள் மற்றும் முக்கிய மூலைவிட்டக் கட்டங்களின் கூட்டுத்தொகைகள் சமமான மதிப்பைப் பெற்றிருக்கும்.  மாயச் சதுரத்தின் நிரைக்கட்டங்கள்,  நிரல் கட்டங்கள் மற்றும் முக்கிய மூலைவிட்டக் கட்டங்களின் கூட்டுத்தொகை மாய மாறிலி எனப்படும்.  மாய மாறிலியின் மதிப்பு (S) = n (n^2)/2 இங்கு n = 3 என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  ஆகவே n^2 = 9 கட்டங்களைக் கொண்ட  3X3 சதுரத்தைக் குறிக்கும். 3X3 மாயச் சதுரத்தில் R1, R2, R3 என்ற மூன்று நிரைகளும் (Rows)  C1, C2, C3 என்ற மூன்று நிரல்களும் (Columns) D1, D2 என்ற இரண்டு முக்கிய மூலைவிட்டங்களும் (Diagonals) இருக்கும்.  மாயச் சதுரங்களைப் பாதி மாயச் சதுரங்கள் ( Semi Magic squares), இயல்பு மாயச் சதுரங்கள் (Normal Magic squares), உடைந்த மூலைவிட்ட மாயச் சதுரங்கள் (Pan Diagonal Magic squares) மற்றும் மிகச் சரியான மாயச் சதுரங்கள் (Most perfect Magic squares) என்று நான்கு ...
  இந்தியாவைப் பொறுத்தவரையில் கர்கரால் (Garga) எழுதப்பட்ட கர்கசம்ஹிதா (Garga Samhitha) சோதிட ஆய்வு நூலில் 3 × 3 மாயச்சதுரத்தைப் பற்றிய முதல் குறிப்பு காணப்படுகிறது . சூரியன் , சந்திரன் , புதன் , செவ்வாய் , சுக்கிரன் , வியாழன் , சனி , ராகு , கேது ஆகிய நவக்கிரகங்களை யும் சாந்தி செய்ய 3 × 3 மாயச்சதுரத்தைப் பயன்படுத்த கர்கசம்ஹிதா வில் கர்க மகரிஷி பரிந்துரை த்துள்ளார் . இந்த ஆய்வு நூலின் பழமையான பதிப்பு பொதுயுகம் 100 ஆம் ஆண்டைச்  சேர்ந்தது . ஆனால் கிரகங்கள் குறித்த பத்தியை அலக்ஸாண்டரின் படையெடுப்பு நிகழும் முன்னர் , அதாவது 400 CE க்கு முன்பே எழுதியிருக்க வாய்ப்பில்லை. பொதுயுகம் 900 மாவது ஆண்டு வாக்கில் சித்தயோ க்(Siddhayog)   என்ற மருத்துவப் புத்தக ம் விரிந்தா மாதவா (Vrinda Madhava) என்பவரால்   எழுதப்பட்டது. இப்புத்தகத்தில் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு எளிதாகப் பிரசவம் நிகழ  3 × 3 மாயச் சதுரத் தை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையே மாயச் சதுரங்களின் காலக் கோட்டுத் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.   நான்குக்கு நான்கு (4X4) மாயச் சதுரம் அல்லது நான்காவது வரிசை மாயச...
 1960 - 80 காலகட்டத்தில் எங்கள் ஊரான கல்லிடைக்குறிச்சி கடைத் தெருவில் "நித்திய கல்யாணி தகரக்கடை"  , "நித்திய கல்யாணி பூக்கடை" என்று இரண்டு கடைகள் அடுத்தடுத்து இருந்தன. இரண்டு கடைகளையும் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர் நடத்தி வந்தார். கல்லிடைக்குறிச்சியில் அதிகமாக அனைவராலும் அறியப்பட்ட தையற் கலைஞர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் போராட்டத் தியாகி யக்ஞேஸ்வர சர்மாவின் புதல்வர் ராஜ் மாமா. முன்பு திரு. யக்ஞேஸ்வர சர்மாவின் பேராலேயே கடை வீதி சர்மாஜி ரோடு என்றழைக்கப்பட்டது. இப்போது அது மெயின் ரோடாகிப் போய் விட்டது. மற்றவர் திரு. நாகூர். உள்ளூர் கம்யூனிஸ்ட் தொண்டர். மிகப் பணிவானவர். அக்ரஹாரத்தில் பலரது வீடுகளுக்கு  குடும்ப டெய்லர் இவர்கள் இருவரில் யாராவது ஒருவராகத்தான் இருப்பார்கள். எங்கள் குடும்பத்திற்கு ஆஸ்தான டெய்லர் திரு. நாகூர்தான்.  திரு.நாகூர் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தொண்டர்.  இப்போது சொல்ல வந்தது திரு. நாகூரைப் பற்றி இல்லை. நித்ய கல்யாணி தகரக்கடை பற்றியே. இந்தக் கடை நாகூரின் தையல் கடைக்கு எதிரில் இருக்கும்.  அப்போதெல்லாம் முகப் பௌடர் டப்பாக்கள் ந...

திரு. இரா. செழியன்

Image
இன்று திரு. இரா செழியன் அவர்களின் நினைவு நாள். மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் .   1923 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் திருக்கண்ணபுரத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் இராஜகோபால். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1964 ஆண்டு இந்து பத்திரிகை வெளியிட்ட  நாடாளுமன்றம் குறித்த கட்டுரையில் (Parliament Gallery) படிக்கும் காலத்தில் கணிதத்திலும் புள்ளியியலும் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிடுகிறது.   இவரது இயற் பெயர் ஸ்ரீனிவாசன். இது வட மொழிப் பெயர் என்பதால்  இரா.செழியன் என்று தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரான மறைந்த திரு. நெடுஞ்செழியன் அவர்களின் இளைய சகோதரர். 1952 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர். 1962 முதல் 1967 வரை பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர். 1967 முதல் 1977 வரையில் கும்பகோணம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 1978 முதல்1982 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என்று இரண்டு ...

வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த கோவிட் -19

Image
 சுய தனிமை நாட்களின் அனுபவங்கள் இதை ஆங்கிலத்தில் யாரோ ஒருவர் எழுதியிருக்கிறார். அது எனக்கு வாட்ஸ்அப் நண்பரொருவர் மூலம் கிடைத்தது. அதைப் படித்து ரசித்த எனக்கு உடனே மொழி பெயர்த்துத் தமிழில் தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்தப் பதிவிற்கு நீங்கள் தரும் பாராட்டுகள் அனைத்தும் ஆங்கில மூலத்தை எழுதிய பதிவருக்கே உரியது. 1) மார்ச் 11 அன்று என்னுடைய முகநூல் பக்கத்தில் எனக்கு மேற் கொள்ளப்பட்ட கோவிட் சோதனையின் முடிவு நேர்மறை (Positive) என்ற செய்தியைப் பதிவிட்டிருந்தேன். அதற்குமே அடடா உடனே என்னவொரு ஆதரவு  பாருங்களேன். அடுத்த இருபது நிமிடங்களுக்குள்  60 பேர் விருப்பக்குறி👍 (LIKE) இட்டிருந்தார்கள். ☺ 2) அதற்குப்பின் விரைந்து குணமடைய நான் ஏதோ தயக்கம் காட்டுவது மாதிரியாக,  "விரைவில் குணமடையுங்கள்" , என்று கருத்துப் பதிவுகள் வந்து குவிய ஆரம்பித்தன.  3) நண்பர்கள் பலரிடமிருந்தும் எனக்கு தகவலை  மறுஉறுதி செய்து கொள்ளச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதில் ஒன்றில் "உனக்கு கோவிட் நேர்மறை (Positive) என்று கேள்விப்பட்டேன். சீக்கிரமே எதிர்மறையான செய்தியைக் (Negative news) கேட்க ஆவ...

தொண்டன்

Image
சார்... ஃபோன் வந்தது. அங்கேயிருந்து பெரியவரோட பிஏ பேசினாரு. பெரியவருக்கு காய்ச்சலாக இருக்கிறதாம். கொரோனார டெஸ்ட் எடுத்திருக்கிறார்களாம். ஒருவேளை ரிசல்ட் பாஸிட்டிவ் என்றால் இங்கே அட்மிஷன் போடணுமாம். 'அன்பான' வேண்டுகோளாம். உங்களுக்குத் தகவல் சொல்லச் சொன்னாங்க. சரிய்யா. கொடுத்துத் தொலைச்சிடலாம். அவங்களைப் பகைச்சிக்கிட்டு  வேற என்ன நம்மால செய்ய முடியும்? ஆமா  கட்சிக்கார விஐபி எத்தினி பேரு இப்ப நம்ம கிட்ட டிரீட்மெண்டில் இருக்காங்க? அதுவா சார், இருபது முப்பது பேரு இருப்பாங்க. அதில் ஒரு நாலைஞ்சு கேசு இழுபறியில இருக்கு. ஓ. ஆக்ஸிஜன் கையிருப்பு பத்துமா? இன்னும் எத்தினி நாளுக்கு வரும்? அதுதான் சார் பிராப்ளம். கையிருப்பு நாலு நாளுக்குத் தாங்கும். இது தெரிஞ்சும் ஏன்யா முப்பது அரசியல் விஐபி களை அட்மிஷன் போட்டீங்க. கொஞ்சம் கவனமாயிருந்து எதுனா வேற காரணம் சொல்லி வேற இடத்துக்குத் தள்ளி விட்டிருக்கலாமே. என்னவோ போங்கய்யா. இப்போ பெரியவரை வேற சேர்த்துட்டா இங்க ஒரே தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டமாயிடும்.  எப்படி சமாளிக்கத் போற? அதுதான் சார் உங்களைக் கலந்துகிட்டு...... அப்புறமா பெரியவர் பிஏ கி...

இதயம் திறந்த அனுபவம் - பகுதி (5)

நோயாளி ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) உள்ளவராகவோ அல்லது இல்லாதவராகவோ இருக்கலாம். நோயாளிக்கு ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) இருந்து அவரது சிகிச்சைக்காக முன்பணம் காப்பீட்டு நிறுவனத்தால் அனுமதித்து வழங்கப்பட்டிருப்பின் மீதமுள்ள தொகைக்கான கேட்பு (claim) மருத்துவமனையால் அனுப்பி வைக்கப்படும். காப்பீட்டு நிறுவனம் முன்பணத்தைக் கழித்துக் கொண்டு அனுமதிக்கக் கூடிய மீதமுள்ள தொகையை மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தி விடும்.  காப்பீட்டு நிறுவனம் செலுத்திய தொகைக்கும் அதிகமாக நோயாளி  ஏதாவது தொகை செலுத்த வேண்டியிருப்பின் அதைச் செலுத்தியதும் மருத்துவமனையை விட்டு வீட்டிற்குச் செல்ல அனுமதிப்பார்கள். ஆரோக்கியக் காப்பீடு இல்லாத நோயாளி அவர் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டபோது செலுத்திய முன்பணம் போக மீதமுள்ள தொகையைச் செலுத்துதல் வேண்டும். நோயாளி வீட்டிற்குச் செல்லும் முன் அவரிடம் அவருக்குச் செய்யப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளின் முடிவுகளும் மற்றும் சுருக்கமான வெளியேற்றக் குறிப்பு (Discharge summary). ஆகியவை அடங்கிய கோப்பு      ( file) ஒப்படை...

இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (4)

Image
அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மீட்பு அறைக்கு (recovery room) மாற்றப்படுவார். ஒரு அறுவை சிகிச்சைக்கோ அல்லது செயல்முறைக்கோ மயக்க மருந்து (anesthesia) செலுத்தப்பட்டதால்  நோயாளி உணர்வற்ற நிலையில் இருப்பார். உணர்விழந்த நிலையிலிருந்து விழித்தெழுவதற்காக, நோயாளி மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவுக்கு (Post Anesthesia Care Unit - PACU ) மாற்றப்படுவார். சில மருத்துவமனைகளில் இப்பிரிவு இல்லாமலும் இருக்கலாம். கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்ட இப்பகுதி பெரும்பாலும் மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சை அரங்கங்களுக்கு (operation theatres) அருகிலேயே அமைந்திருக்கும் . Picture courtesy: https://www.venturemedical.com/blog/choosing-patient-monitor/ இந்தக் கண்காணிப்புக் கருவியில் இதய மின் வரைவி (ECG) இதயத் துடிப்பு வீதம் (Heart rate), இரத்த அழுத்தம் (NIBP) , மற்றும் தெவிட்டிய ஆக்ஸிஜன் நிலை (SpO2) போன்றவை கண்காணிக்கப் படுகின்றன. சில மருத்துவமனைகளில், இது பல நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் இடமாகவோ (Dormitory) அல்லது ஒரு தனி நபர் பயன்படுத்தும் அறையாகவோ (Sing...

இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (3)

Image
அடுத்தது அறுவைச் சிகிச்சை அறைக்கு (Operation theatre)  வந்த பிறகு என்ன நடக்கும் என்று காணலாம். சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தளவில் நடைமுறைகள் (procedures) பெரும்பாலான  மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் சிற்சில வேறுபாடுகளும் இருக்கலாம். (1) மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பல அறுவைச் சிகிச்சை நிபுணர்களுடனும் (Surgeons) இணைந்து செயல்பட மருத்துவர்கள் (Doctors), செவிலியர்கள் (Nurses) மற்றும் மருத்துவக் கருவிகளைக் கையாளும் தொழில் நுட்பப் பணியாளர்கள் (Technical staff) அடங்கிய அனுபவம் வாய்ந்த பணியாளர் குழுக்கள் (Operation theatre crews) அறுவைச் சிகிச்சைக்கூடப் பணிகளுக்காகத் தனியே  இருக்கும்.  (2) நோயாளியை அவரது அறைப்பிரிவில் பணியில் இருக்கும் செவிலியர் (ward duty nurse) அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்கு இட்டுச் செல்லும் போது கூடவே நோயாளி குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய மருத்துவக் கோப்புடன் (file) வருவார். அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் (operation theatre) பணியில் உள்ள செவிலியரிடம் நோயாளியை அவரது மருத்துவக் கோப்புடன் முறையாக ஒப்படைத்த...