Posts

  இந்தியாவைப் பொறுத்தவரையில் கர்கரால் (Garga) எழுதப்பட்ட கர்கசம்ஹிதா (Garga Samhitha) சோதிட ஆய்வு நூலில் 3 × 3 மாயச்சதுரத்தைப் பற்றிய முதல் குறிப்பு காணப்படுகிறது . சூரியன் , சந்திரன் , புதன் , செவ்வாய் , சுக்கிரன் , வியாழன் , சனி , ராகு , கேது ஆகிய நவக்கிரகங்களை யும் சாந்தி செய்ய 3 × 3 மாயச்சதுரத்தைப் பயன்படுத்த கர்கசம்ஹிதா வில் கர்க மகரிஷி பரிந்துரை த்துள்ளார் . இந்த ஆய்வு நூலின் பழமையான பதிப்பு பொதுயுகம் 100 ஆம் ஆண்டைச்  சேர்ந்தது . ஆனால் கிரகங்கள் குறித்த பத்தியை அலக்ஸாண்டரின் படையெடுப்பு நிகழும் முன்னர் , அதாவது 400 CE க்கு முன்பே எழுதியிருக்க வாய்ப்பில்லை. பொதுயுகம் 900 மாவது ஆண்டு வாக்கில் சித்தயோ க்(Siddhayog)   என்ற மருத்துவப் புத்தக ம் விரிந்தா மாதவா (Vrinda Madhava) என்பவரால்   எழுதப்பட்டது. இப்புத்தகத்தில் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு எளிதாகப் பிரசவம் நிகழ  3 × 3 மாயச் சதுரத் தை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையே மாயச் சதுரங்களின் காலக் கோட்டுத் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.   நான்குக்கு நான்கு (4X4) மாயச் சதுரம் அல்லது நான்காவது வரிசை மாயச...
 1960 - 80 காலகட்டத்தில் எங்கள் ஊரான கல்லிடைக்குறிச்சி கடைத் தெருவில் "நித்திய கல்யாணி தகரக்கடை"  , "நித்திய கல்யாணி பூக்கடை" என்று இரண்டு கடைகள் அடுத்தடுத்து இருந்தன. இரண்டு கடைகளையும் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர் நடத்தி வந்தார். கல்லிடைக்குறிச்சியில் அதிகமாக அனைவராலும் அறியப்பட்ட தையற் கலைஞர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் போராட்டத் தியாகி யக்ஞேஸ்வர சர்மாவின் புதல்வர் ராஜ் மாமா. முன்பு திரு. யக்ஞேஸ்வர சர்மாவின் பேராலேயே கடை வீதி சர்மாஜி ரோடு என்றழைக்கப்பட்டது. இப்போது அது மெயின் ரோடாகிப் போய் விட்டது. மற்றவர் திரு. நாகூர். உள்ளூர் கம்யூனிஸ்ட் தொண்டர். மிகப் பணிவானவர். அக்ரஹாரத்தில் பலரது வீடுகளுக்கு  குடும்ப டெய்லர் இவர்கள் இருவரில் யாராவது ஒருவராகத்தான் இருப்பார்கள். எங்கள் குடும்பத்திற்கு ஆஸ்தான டெய்லர் திரு. நாகூர்தான்.  திரு.நாகூர் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தொண்டர்.  இப்போது சொல்ல வந்தது திரு. நாகூரைப் பற்றி இல்லை. நித்ய கல்யாணி தகரக்கடை பற்றியே. இந்தக் கடை நாகூரின் தையல் கடைக்கு எதிரில் இருக்கும்.  அப்போதெல்லாம் முகப் பௌடர் டப்பாக்கள் ந...

திரு. இரா. செழியன்

Image
இன்று திரு. இரா செழியன் அவர்களின் நினைவு நாள். மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் .   1923 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் திருக்கண்ணபுரத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் இராஜகோபால். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1964 ஆண்டு இந்து பத்திரிகை வெளியிட்ட  நாடாளுமன்றம் குறித்த கட்டுரையில் (Parliament Gallery) படிக்கும் காலத்தில் கணிதத்திலும் புள்ளியியலும் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிடுகிறது.   இவரது இயற் பெயர் ஸ்ரீனிவாசன். இது வட மொழிப் பெயர் என்பதால்  இரா.செழியன் என்று தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரான மறைந்த திரு. நெடுஞ்செழியன் அவர்களின் இளைய சகோதரர். 1952 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர். 1962 முதல் 1967 வரை பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர். 1967 முதல் 1977 வரையில் கும்பகோணம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 1978 முதல்1982 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என்று இரண்டு ...

வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த கோவிட் -19

Image
 சுய தனிமை நாட்களின் அனுபவங்கள் இதை ஆங்கிலத்தில் யாரோ ஒருவர் எழுதியிருக்கிறார். அது எனக்கு வாட்ஸ்அப் நண்பரொருவர் மூலம் கிடைத்தது. அதைப் படித்து ரசித்த எனக்கு உடனே மொழி பெயர்த்துத் தமிழில் தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்தப் பதிவிற்கு நீங்கள் தரும் பாராட்டுகள் அனைத்தும் ஆங்கில மூலத்தை எழுதிய பதிவருக்கே உரியது. 1) மார்ச் 11 அன்று என்னுடைய முகநூல் பக்கத்தில் எனக்கு மேற் கொள்ளப்பட்ட கோவிட் சோதனையின் முடிவு நேர்மறை (Positive) என்ற செய்தியைப் பதிவிட்டிருந்தேன். அதற்குமே அடடா உடனே என்னவொரு ஆதரவு  பாருங்களேன். அடுத்த இருபது நிமிடங்களுக்குள்  60 பேர் விருப்பக்குறி👍 (LIKE) இட்டிருந்தார்கள். ☺ 2) அதற்குப்பின் விரைந்து குணமடைய நான் ஏதோ தயக்கம் காட்டுவது மாதிரியாக,  "விரைவில் குணமடையுங்கள்" , என்று கருத்துப் பதிவுகள் வந்து குவிய ஆரம்பித்தன.  3) நண்பர்கள் பலரிடமிருந்தும் எனக்கு தகவலை  மறுஉறுதி செய்து கொள்ளச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதில் ஒன்றில் "உனக்கு கோவிட் நேர்மறை (Positive) என்று கேள்விப்பட்டேன். சீக்கிரமே எதிர்மறையான செய்தியைக் (Negative news) கேட்க ஆவ...

தொண்டன்

Image
சார்... ஃபோன் வந்தது. அங்கேயிருந்து பெரியவரோட பிஏ பேசினாரு. பெரியவருக்கு காய்ச்சலாக இருக்கிறதாம். கொரோனார டெஸ்ட் எடுத்திருக்கிறார்களாம். ஒருவேளை ரிசல்ட் பாஸிட்டிவ் என்றால் இங்கே அட்மிஷன் போடணுமாம். 'அன்பான' வேண்டுகோளாம். உங்களுக்குத் தகவல் சொல்லச் சொன்னாங்க. சரிய்யா. கொடுத்துத் தொலைச்சிடலாம். அவங்களைப் பகைச்சிக்கிட்டு  வேற என்ன நம்மால செய்ய முடியும்? ஆமா  கட்சிக்கார விஐபி எத்தினி பேரு இப்ப நம்ம கிட்ட டிரீட்மெண்டில் இருக்காங்க? அதுவா சார், இருபது முப்பது பேரு இருப்பாங்க. அதில் ஒரு நாலைஞ்சு கேசு இழுபறியில இருக்கு. ஓ. ஆக்ஸிஜன் கையிருப்பு பத்துமா? இன்னும் எத்தினி நாளுக்கு வரும்? அதுதான் சார் பிராப்ளம். கையிருப்பு நாலு நாளுக்குத் தாங்கும். இது தெரிஞ்சும் ஏன்யா முப்பது அரசியல் விஐபி களை அட்மிஷன் போட்டீங்க. கொஞ்சம் கவனமாயிருந்து எதுனா வேற காரணம் சொல்லி வேற இடத்துக்குத் தள்ளி விட்டிருக்கலாமே. என்னவோ போங்கய்யா. இப்போ பெரியவரை வேற சேர்த்துட்டா இங்க ஒரே தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டமாயிடும்.  எப்படி சமாளிக்கத் போற? அதுதான் சார் உங்களைக் கலந்துகிட்டு...... அப்புறமா பெரியவர் பிஏ கி...

இதயம் திறந்த அனுபவம் - பகுதி (5)

நோயாளி ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) உள்ளவராகவோ அல்லது இல்லாதவராகவோ இருக்கலாம். நோயாளிக்கு ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) இருந்து அவரது சிகிச்சைக்காக முன்பணம் காப்பீட்டு நிறுவனத்தால் அனுமதித்து வழங்கப்பட்டிருப்பின் மீதமுள்ள தொகைக்கான கேட்பு (claim) மருத்துவமனையால் அனுப்பி வைக்கப்படும். காப்பீட்டு நிறுவனம் முன்பணத்தைக் கழித்துக் கொண்டு அனுமதிக்கக் கூடிய மீதமுள்ள தொகையை மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தி விடும்.  காப்பீட்டு நிறுவனம் செலுத்திய தொகைக்கும் அதிகமாக நோயாளி  ஏதாவது தொகை செலுத்த வேண்டியிருப்பின் அதைச் செலுத்தியதும் மருத்துவமனையை விட்டு வீட்டிற்குச் செல்ல அனுமதிப்பார்கள். ஆரோக்கியக் காப்பீடு இல்லாத நோயாளி அவர் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டபோது செலுத்திய முன்பணம் போக மீதமுள்ள தொகையைச் செலுத்துதல் வேண்டும். நோயாளி வீட்டிற்குச் செல்லும் முன் அவரிடம் அவருக்குச் செய்யப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளின் முடிவுகளும் மற்றும் சுருக்கமான வெளியேற்றக் குறிப்பு (Discharge summary). ஆகியவை அடங்கிய கோப்பு      ( file) ஒப்படை...

இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (4)

Image
அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மீட்பு அறைக்கு (recovery room) மாற்றப்படுவார். ஒரு அறுவை சிகிச்சைக்கோ அல்லது செயல்முறைக்கோ மயக்க மருந்து (anesthesia) செலுத்தப்பட்டதால்  நோயாளி உணர்வற்ற நிலையில் இருப்பார். உணர்விழந்த நிலையிலிருந்து விழித்தெழுவதற்காக, நோயாளி மயக்கநிலைக்குப் பின்னரான பராமரிப்பு பிரிவுக்கு (Post Anesthesia Care Unit - PACU ) மாற்றப்படுவார். சில மருத்துவமனைகளில் இப்பிரிவு இல்லாமலும் இருக்கலாம். கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்ட இப்பகுதி பெரும்பாலும் மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சை அரங்கங்களுக்கு (operation theatres) அருகிலேயே அமைந்திருக்கும் . Picture courtesy: https://www.venturemedical.com/blog/choosing-patient-monitor/ இந்தக் கண்காணிப்புக் கருவியில் இதய மின் வரைவி (ECG) இதயத் துடிப்பு வீதம் (Heart rate), இரத்த அழுத்தம் (NIBP) , மற்றும் தெவிட்டிய ஆக்ஸிஜன் நிலை (SpO2) போன்றவை கண்காணிக்கப் படுகின்றன. சில மருத்துவமனைகளில், இது பல நோயாளிகள் பகிர்ந்து கொள்ளும் இடமாகவோ (Dormitory) அல்லது ஒரு தனி நபர் பயன்படுத்தும் அறையாகவோ (Sing...

இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (3)

Image
அடுத்தது அறுவைச் சிகிச்சை அறைக்கு (Operation theatre)  வந்த பிறகு என்ன நடக்கும் என்று காணலாம். சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தளவில் நடைமுறைகள் (procedures) பெரும்பாலான  மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் சிற்சில வேறுபாடுகளும் இருக்கலாம். (1) மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பல அறுவைச் சிகிச்சை நிபுணர்களுடனும் (Surgeons) இணைந்து செயல்பட மருத்துவர்கள் (Doctors), செவிலியர்கள் (Nurses) மற்றும் மருத்துவக் கருவிகளைக் கையாளும் தொழில் நுட்பப் பணியாளர்கள் (Technical staff) அடங்கிய அனுபவம் வாய்ந்த பணியாளர் குழுக்கள் (Operation theatre crews) அறுவைச் சிகிச்சைக்கூடப் பணிகளுக்காகத் தனியே  இருக்கும்.  (2) நோயாளியை அவரது அறைப்பிரிவில் பணியில் இருக்கும் செவிலியர் (ward duty nurse) அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்கு இட்டுச் செல்லும் போது கூடவே நோயாளி குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய மருத்துவக் கோப்புடன் (file) வருவார். அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் (operation theatre) பணியில் உள்ள செவிலியரிடம் நோயாளியை அவரது மருத்துவக் கோப்புடன் முறையாக ஒப்படைத்த...

இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (2)

Image
  அறுவைச் சிகிச்சைக்குத் தயாராதல் நோயாளிக்கு சி.ஏ.பி.ஜி (CABG) அறுவைச்சிகிச்சை ஏன் செய்யப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை மருத்துவர் முதலில் கூறுவார். அதன் பின்னர் செயல்முறை (procedure) குறித்து விளக்கி அதில் சாத்தியமான  அபாயங்களைப் பற்றியும் எடுத்துரைப்பார் . அப்போது நோயாளி தன் மனதில் தோன்றும் அனைத்து ஐயங்களையும் அச்சங்களையும் மருத்துவரிடம் தெரிவித்து அவற்றுக்கான தக்க விளக்கங்களைப் பெற்றுத் தெளிவு பெறலாம்.  நோயாளி அறுவைச்சிகிச்சைக்கு வாய்மொழி ஒப்புதல் கொடுத்த பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாக மேற் கொள்ள வேண்டிய சோதனைகளுக்கான எழுத்துப் பூர்வமான அனுமதி அளிக்கும் படிவங்களில்  நோயாளியின் கையொப்பம் பெறப்படும். கையொப்பம் இடுமுன் படிவத்தைக் கவனமாகப் படித்தும் தெளிவு பெற இயலாத பட்சத்தில் மருத்துவரிடம் வினாக்களை எழுப்பித் தெளிவு பெறலாம்.  நோயாளியின் மருத்துவ  வரலாற்றை (medical history) மருத்துவர் குழு முழுமையாக மதிப்பாய்வு செய்தும் முழு உடற்பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும் உடற்தகுதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வார். இது தவி...
  லாபரோஸ்கோபிக் சரிசெய்யக்கூடிய இரைப்பை கட்டுப்படுத்துதல் லேபராஸ்கோபிக் சரிசெய்யக்கூடிய இரைப்பைப் பட்டை (Laproscopic Adjustable Gastric Band - LAGB) அறுவை சிகிச்சை மிகக் குறைவான ஊடுருவும்(Minimally invasive) எடை இழப்பு அறுவை சிகிச்சை ஆகும். எல்ஏஜிபி அறுவை சிகிச்சையின் போது, ​​உங்கள் வயிற்றின் மேல் பகுதியை சுற்றி ஒரு கட்டுப்பாட்டுப் பட்டை வைக்கப்பட்டு, உங்கள் கீழ் வயிற்றுக்கு ஒரு குறுகிய திறப்புடன் ஒரு சிறிய பையை (Pouch) உருவாக்குகிறது. பட்டையுடன் இணைக்கப்பட்ட அணுகல் துறை (Access Port) உங்கள் தோலின் கீழ் ஆழமாக வைக்கப்பட்டுள்ளது. பட்டை உங்கள் மேல் பையில் நீண்ட காலத்திற்கு உணவைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது, இதனால் நீங்கள் விரைவாக முழுமையாக உணர முடியும். பின்னர், உணவு உங்கள் கீழ் வயிற்றுக்குச் சென்று செரிமானம் சாதாரணமாக நிகழ்கிறது. உணவு உறிஞ்சப்படும் விதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், நீங்கள் குறைந்த உணவையே சாப்பிடுவதால் நீங்கள் வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பசி மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் உங்கள் பட்டையைச் சரிசெய்ய வேண்டும். அண...

இதயம் திறந்த அனுபவங்கள் - பகுதி (1)

Image
சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் எனக்கு இதயத் தமனி அடைப்புக்காகச் செய்யப்படும் பக்க அல்லது புறவழி வழி ஒட்டு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting - CABG) செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை என்றாலே பெரும்பாலானவர்களின் மனதில் இரு பெரும் அச்சங்கள் ஏற்படுகின்றன. முதலில் திறந்த இதய அறுவைச் சிகிச்சைக்குக் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லட்சங்கள் வரை செலவு செய்ய வேண்டுமே என்பதும் அடுத்தது  அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து உயிர் பிழைத்து வருவோமா என்பதும். இவ்விரு அச்சங்களுமே இதய நோயாளிகளில் பலரைச்  சரியான நேரத்தில் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போடச் செய்கின்றன. உண்மையில் அறுவைச் சிகிச்சை குறித்த மேற் சொன்ன இரண்டு அச்சங்களுமே பொருளற்ற தேவையற்ற அச்சங்களே.  இந்தத் தொடர் கட்டுரைகள் சற்று நீண்டதாக இருந்த போதிலும் முழுவதும் படிப்பவர்களுக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை (Open heart surgery) குறித்த  புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.  தற்போதய சூழலில் மருத்துவம் என்பது எப்படி நாள்...