கோமா கொத்து (Coma Cluster)
இதுவரை அறியப்பட்ட பெரும் விண்மீன் திரள் கொத்துகளில் (galaxy cluster) ஒன்று கோமா கொத்து (Coma Cluster). நடுத்தர மற்றும் பெரிய பொழுதுபோக்கு வகை தொலைநோக்கியால் (Amateur telescope)நோக்கும் போது கட்புலனாகும் சற்று தெளிவற்ற ( கோமாபெரினிசஸ் விண்மீன் கூட்டத்தில் (Coma Berenices constellation) காணப்படும் விண்மீன் திரள்களின் குழுவே கோமா விண்மீன் திரள் கொத்து. சிம்மத்திற்கும் (Leo ) , பூட்டஸ் (Bootes) க்கும் இடையில் அமைந்துள்ள இதனை வசந்த மற்றும் கோடை கால மாலைப் பொழுதுகளில் எளிதாகக் காணலாம். சிம்மத்தில் ரெகுலசும் (Regulus) பூட்டசில் சுவாதி என்று சொல்லப்படும் அக்குரசும் (Arcturus) அதிகமாக அறியப்பட்ட மிகவும் பொலிவான விண்மீன்கள். திறந்த விண்மீன் கொத்துக்கள், மற்றும் தொலைநோக்கி வழியே காண்பதற்கு ஏதுவான தொலைவான விண்மீன் கொத்துக்களையும் வானத்தில் காண்பதற்குரிய பகுதி இதுதான். கோமா விண்மீன் திரள் கொத்துக்களைக் காண்பதற்கு இருண்ட வானம் அவசியம். இந்த விண்மீன்திரள் கொத்து, கோமாபெரினிசஸ் விண்மீன் கூட்டத்தின் வடக்கு எல்லைக்கு அருகில், அதாவது தோராயமாக ரோ-பூட்டிஸையும...