Posts

லீபஸ் விண்மீன் கூட்டம் (LEPUS CONSTELLATION)

Image
சென்னையில் பிப்ரவரி , மார்ச் மாதங்களில் இரவு வானில் சுமார் 8.00 முதல் 9.00  மணிக்கு ஓரியன்( Orion) விண்மீன் கூட்டம் தலைக்கு மேலாகத் தெரியும். ஓரியன் கூட்டம் எளிதில் அடையாளம் காணக் கூடிய ஒன்று. அருகருகே நேர் கோட்டில் அமைந்த மூன்று விண்மீன்கள்( Orion belt) எளிதில் கட்புலனாகும். இந்த மூன்று விண்மீன்களை ஒரு கற்பனை நேர் கோட்டால் இணைத்து தென்கிழக்காக நீட்ட சிரியஸ்( Sirius) விண்மீனைக் காண முடியும். ஓரியன் இடுப்புக் கச்சுக்கு நாற்புறமும் நான்கு விண்மீன்களைக் காணலாம். இவற்றில் வட கிழக்கில் திருவாதிரை( Betelgeuse)   யும் , தென் மேற்கில் ரீகல்( Rigel) ம் காணப்படும். ஓரியனுக்குக் கீழே தெற்கில் ரீகலுக்கும் சிரியஸிற்கும் இடையில் முயல் விண்மீன் கூட்டம் ( Hare) என்ற லீபஸ்( Lepus) மங்கலாகத் தெரியும். அதற்கும் தெற்கில் புறா( Dove) என்ற கொலம்பா( Columba) வீண்மீன் கூட்டமும் கட்புலனாகும்.   இவ்விரு விண்மீன் கூட்டங்கள் பற்றிய விரிவான தகவல்கள் பின்வரும் கட்டுரையில் தரப்பட்டுள்ளது. WWW.astroviewer.com தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் விண்மீன் கூட்ட...

31.01.2018 சந்திர கிரகணம் - ஒரு பார்வை

Image
                                                               2018 ஆம் ஆண்டில் ஜனவரி 31 அன்று நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணம் மிகவும் சிறப்பானது . இந்த நிகழ்வின்  சிறப்பு,  அடிக்கடி நிகழாத அபூர்வமான மூன்று முக்கியமான நிகழ்வுகள் ஒருசேர நிகழ்வதே . இத்தகைய நிகழ்வை பெரிய நீல குருதி நிலவென்று (Super Blue Blood Moon) வேடிக்கையாகப் பெயரிட்டு அழைக்கலாம் . மேலும் இந் நிகழ்வு வானியல் ஆய்வாளர்களுக்கு நிலவினை வெப்பம் உணரும் கேமிரா மூலம் படமெடுக்கும் அரிய வாய்ப்பையும் நல்கியுள்ளது .                                              2018 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில்முழு நிலவு ( பௌர்ணமி ) கடந்த 2 ஆம் தேதி காட்சி தந்தது . இப்போது மீண்டும் ஜனவரி 31 ஆம் தேதி மீண்டும் முழு நிலவு காட்சியளிக்கப் போகிறது . ஒரு மாதத்தி...

இருண்ட ஆற்றல் தேவையா? - பகுதி (3)

இதன் விளைவாக ஒளி மற்றும் நிறை ஆகியன எளிய நேரான பாதையிலிருந்து விலக்கப்படுவது ஈர்ப்பு விசையை ஒத்திருக்கிறது. சார்பியலின் எளிய கணித மாதிரி (mathematical model) பொருளுக்கும் வளைவுக்கும் (matter and curvature) இடையிலான தொடர்பை விவரிக்கிறது. ஆனால் அது சமன்பாடுகளில் கூடுதலாக பேரண்டவியல் மாறிலி (cosmological constant) என்ற கூடுதல் அளவுரு ஒன்றை நுழைத்து மாற்றி விடுகிறது. பேரண்டவியல் மாறிலி, அண்டவெளிக்கான ஒட்டுமொத்த விரிவு வீதத்தைத் (rate of expansion) தருகிறது. இருண்ட பொருளின் அவதானித்த பண்புகளை பொது சார்பியலில் இயல்பாகவே எழும் பேரண்டவியல் மாறிலி மிகச் சரியாக விவரிக்கிறது. எனவே இதுதான் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான மாதிரி எனலாம். பாரம்பரிய சார்பியலில் பேரண்டவியல் மாறிலியின் ‘இருத்தல்’ என்பது பேரண்ட விரிவு என்பது காலவெளியின் (space time) ஒரு பண்பு என்பதையே சுட்டுகிறது. ஆனால் நம் அண்டம் குவாண்டம் கொள்கையாலும் நிர்வகிக்கப்படுகிறது. குவாண்டம் கொள்கை பேரண்டவியல் மாறியைச் சரியான முறையில் கையாளவில்லை. இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக பேரண்ட விரிவை குவாண்டம் வெற்றிட ஆற்றல் இயக்குவிக்கிறது என்று...

இருண்ட ஆற்றல் (Dark Energy) தேவையா? - பகுதி (2)

Image
இந்த இடத்தில்தான் ஈன்ஸ்டீன் கட்டுரையின் உள்ளே காலடி எடுத்து வைக்கிறார். ஈன்ஸ்டீன் சார்பியல் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தார். குமாரும் சங்கரும் தங்களின் அவதானிப்புகளில் உடன்படவில்லை என்பதன் பொருள் அவர்களின் அனுமானத்தில் எங்கோ தவறு செய்துள்ளனர் என்பதே.  சிறப்பு சார்பியலில் தவறான கருத்து என்பது அறுதியான வேகம்   (absolute   speed) என்பதாகும். நமது இந்த நிகழ்வில் எது தவறானது? இயங்கும் பொருட்கள் திசை மாற்றங்களைப் பெற்றால் நிச்சயமாக விசைகள் அவற்றின் மீது செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே தவறான அனுமானமாக இருந்திருக்க வேண்டும். இயங்கும் பொருட்கள் திசை மாற்றங்களுக்கு விசை செயல்பட்டிருக்க வேண்டும் என்பது பல நேர்வுகளில் உண்மையாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைப் பொறுத்தவரை அவ்வாறில்லை. இது எப்படி சாத்தியம் என்பதை விளங்கிக் கொள்ள நாம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு செல்லும் விமானத்தின் பாதை குறிக்கப்படுவதைக் கருதுவோம். இத்தகைய பயணத்தில் விமானம் மேற்காகப் பறந்து செல்வதில்லை. மாறாக வட துருவப்பகுதியின் மேலாகப் பறந்து...

இருண்ட ஆற்றல் (Dark Energy) தேவையா? - பகுதி (1)

Image
நமது இந்த அண்டம் விரிந்து கொண்டே போகிறது என்பது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். மேலும் தற்காலத்தில் செய்யப்பட்ட பல கூர்நோக்கல்களும் தொடர்ந்து இக்கருத்துக்கே ஆதரவாக இருக்கின்றன.  அண்டம் விரிவடைவது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி விரிவடைவதும் கூட எப்போதும் அதிகரிக்கும் வீதத்திலேயே இருப்பதே இன்னும் வியப்புக்குறியது. விரிவடையும் அண்டத்தை பின்னிருந்து இயக்கும் சக்தி எது என்ற வினா நம்முன் பூதாகரமாக நிற்கிறதல்லவா? அந்த வினாவிற்கான உலகப் பிரசித்தி பெற்ற விடையாகச் சொல்லப்படுவது இருண்ட ஆற்றல் (Dark Energy) என்பதே. உண்மையில் விரிந்து கொண்டே செல்லும் அண்டத்தை விளக்க நமக்கு இருண்ட ஆற்றல் கண்டிப்பாகத் தேவைதானா என்றால்,  தேவை இல்லை என்பது கூட  விடையாக ஒருவேளை இருக்க வாய்ப்புள்ளது. இருண்ட ஆற்றல் என்ற கருத்தே பொது சார்பியல் ( general relativity)  தத்துவத்தின் பண்பாக அறியப்பட்ட அண்டவியல் மாறிலி (cosmological constant) யிலிருந்து பெறப்பட்டதுதான். இதன் பொருட்டு ஈன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவத்தையும் விண்வெளி மற்றும் நேர வளைவு (curvature ...