இருண்ட ஆற்றல் (Dark Energy) தேவையா? - பகுதி (2)

இந்த இடத்தில்தான் ஈன்ஸ்டீன் கட்டுரையின் உள்ளே காலடி எடுத்து வைக்கிறார். ஈன்ஸ்டீன் சார்பியல் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தார். குமாரும் சங்கரும் தங்களின் அவதானிப்புகளில் உடன்படவில்லை என்பதன் பொருள் அவர்களின் அனுமானத்தில் எங்கோ தவறு செய்துள்ளனர் என்பதே. 
சிறப்பு சார்பியலில் தவறான கருத்து என்பது அறுதியான வேகம் (absolute speed) என்பதாகும். நமது இந்த நிகழ்வில் எது தவறானது? இயங்கும் பொருட்கள் திசை மாற்றங்களைப் பெற்றால் நிச்சயமாக விசைகள் அவற்றின் மீது செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே தவறான அனுமானமாக இருந்திருக்க வேண்டும். இயங்கும் பொருட்கள் திசை மாற்றங்களுக்கு விசை செயல்பட்டிருக்க வேண்டும் என்பது பல நேர்வுகளில் உண்மையாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைப் பொறுத்தவரை அவ்வாறில்லை.


இது எப்படி சாத்தியம் என்பதை விளங்கிக் கொள்ள நாம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு செல்லும் விமானத்தின் பாதை குறிக்கப்படுவதைக் கருதுவோம். இத்தகைய பயணத்தில் விமானம் மேற்காகப் பறந்து செல்வதில்லை. மாறாக வட துருவப்பகுதியின் மேலாகப் பறந்து செல்லும் என்பது அவ்வாறு பயணம் மேற்கொண்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். 



விமானம் பறக்கும் போது இரு புள்ளிகளுக்குமிடையில் மிகக் குறைந்த தூரத்தையே எடுத்துக் கொள்ளும் என்றாலும் வரைபடத்தில் இந்தப்பாதை நேர் கோடாக குறிக்கப்படாமல் (படத்தில் கருப்புக் கோடு) நீண்டதொரு வளைந்த கோடாகவே ( படத்தில் சிவப்புக் கோடு) இருக்கும். வரைபடத்தில் அவ்வாறு சுட்டப்படுவதற்கு புவியானது தட்டையாக இல்லை என்பதே காரணமாகும். வரைபடம் தட்டையாக உள்ளது. அதில் பூமி தட்டையாக இருப்பதான பாவனையில் படம் வரையப்படுகிறது. உண்மையில் எந்த ஒரு விசையும் விமானத்தின் இயக்கப்பாதையை வளைவாக இருப்பதற்குக் காரணமில்லை, மாறாக வளைந்த பாதைக்கு புவியின் வளைவே காரணமாக அமைகிறது.




குமாரின் ராக்கெட் விஷயத்திலும் இதுதான் உண்மை. மிகக் தூரமுள்ள பாதையையே அது வெளியிலும்  காலத்திலும் எடுத்துக் கொண்டது. அது சங்கருக்கு வளைவாகத் தெரியக் காரணம்,  வெளியும், காலமும் தட்டையானதாக சங்கர் கருதிக்கொண்டிருந்தார். ஆனால் உண்மையில் அவை வளைவானவை. பூமி தன்னருகேஉள்ள வெளியை(Space) வளைத்து விடுகிறது என்பதாலேயே பொருட்கள் வளைகோட்டுப் பாதையில் இயங்குகின்றன.



கடைசியாக குமாரும், சங்கரும் ஒத்துப் போகலாம். முதல் இரண்டு நிகழ்வுகளில் குமார் நிலைமமற்ற குறிப்புச் சட்டகத்தில்(non-inertial frame of reference) இருந்ததால் ஈர்ப்பு விசையை உணர்ந்திருக்கிறார். இறுதி இரண்டு நிகழ்வுகளில் நிலைமக் குறிப்புச் சட்டகத்தில்(inertial frame of reference) இருந்ததால் தன்னை சுற்றி எந்த ஒரு விசையையும் உணராது இருந்திருக்கிறார். ஆக மொத்தத்தில் ஈர்ப்பு விசை என்பது ஒரு மாயை என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொவதற்கில்லை. வளைந்த வெளியின் ஒரு ஏமாற்று வேலையே. வினோதமாக இருக்கிறதா? ஆம். வினோதம்தான். அதே நேரம் இந்த ஈர்ப்பு விசை மாயையே என்றாலும் வலிமையானது.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)