ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)
ரிஷப ராசியை பொறுத்தவரையில் முக்கியமாக நான் சொல்லப்போவது (1) கார்த்திகை உடுக் கொத்து அல்லது நாள் மீன் கொத்து (PLEIADES STAR CLUSTER) . அதன் பின்னர் (2) ரோகிணி உடு (ALDEBARAN STAR) இறுதியாக (3) நண்டு நெபுலா ( CRAB NEBULA) . முதலில் கார்த்திகை உடுக் கொத்து பற்றிச் சிறிது அறிந்து கொள்வோம். கார்த்திகை நாள் மீன் அதாவது உடுவைச் சுட்டத் தமிழில் பல்வேறு சொற்கள் பயன் படுத்தப்பட்டது. அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள் மற்றும் நாவிதன் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டது. அதுவே கார்த்திகை மாத த்தைக் குறிக்க விருச்சிகம், தெறுகால், தேள் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டன. இரவு வானில் யாராலும் எளிதாக அடையாளம் காணக் கூடிய உடுத் தொகுதி ஓரியன் என்ற பெரும் வேடன் (ORION). இந்த ஓரியன் தொகுப்பில் ஓரியன் இடுப்புக் கச்சில் (ORION BELT) முன்று உடுக்கள் வரிசையாகத் தெரியும். இந்த உடுக்களை கற்பனையில் நேர்கோட்டில் தென் கிழக்கில் நீட்டிப் பார்த்துக் கொண்டு வந்தால், சிரியஸ் (SIRIUS) உடு பொலிவாகத் தெரியும். அந்த நேர்கோட்டை வடகிழக்காக நீட்டிப் பார்த்துக் கொண்...