Posts

Showing posts from 2020

கொரோனாவிலிருந்து மீண்ட பின் வாழ்க்கை.... பகுதி (2)

Image
மூளை SARS - CoV-2 (Severe Acute Respiratory Syndrome Corona Virus 2) வைரஸ் மூளையையும் பாதிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இருநூற்றுப் பதினான்கு கோவிட் -19 நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டதில், அவர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் தலைச்சுற்றல், தலைவலி மற்றும் அறிவாற்றல் குறைபாடு (cognitive impairment) உள்ளிட்ட நரம்பியல் அறிகுறிகளை அனுபவித்ததாகத் தெரிவிக்கிறது. இருப்பினும், அறிகுறிகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று விஞ்ஞானிகளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விளைவுகள் வைரஸ் நேரடியாக நியூரான்களைப் பாதிப்பதாலோ, அழற்சி நோயெதிர்ப்பு காரணமாகவோ அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறையால் சேதமேற்பட்டதாலோ இருக்கக் கூடும். வடமேற்கு பல்கலைக்கழகத்தின் (Northwestern University) நரம்பியல் - தொற்று நோய் மற்றும் உலகளாவிய நரம்பியல் துறையின் தலைவரான (Chief of neuro-infectious disease and global neurology) டாக்டர். இகோர் கோரால்னிக், எம்.டி (Igor Koralnik) கூறுகையில், நரம்பியல் பிரச்சினைகளின் மூல காரணம் பற்றி அதிகம் அறியப்படாத நிலையில், இந்த அறிகுறிகள் தற்காலிகமாகமானவையா அல்லது நிரந்தரமானவையா என்று நிபுணர்கள...

கொரோனாவிலிருந்து மீண்ட பின் வாழ்க்கை ... பகுதி(1)

Image
 நம் நாட்டில் பெரும்பாலானவர்களால் “கொரோனா” என்றே கோவிட் -19 நோய் அழைக்கப்படுகிறது. சரியாகச் சொன்னால் கொரொனா வைரஸ் என்பது பல வகையான வைரஸ்களை உள்ளடக்கிய பெரிய வைரஸ் குடும்பத்தைக் குறிக்கும் ஒரு பொதுப்படையான சொற்றொடர்.  கோவிட் -19 என்பது நோய் (Disease). சார்ஸ் – கோவ் -2 (SARS – CoV 2 Severe Acute Respiratory Syndrome – Corona Virus -2) என்பது நோய்க்குக் காரணமான ஒரு குறிப்பிட்ட வைரஸ். CoViD -19 என்பதில் Co - Corona வையும் Vi -Virus என்பதையும் D - Disease  என்பதையும் 19 - 2019 அதாவது இந்த வைரஸ் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டையும் குறிக்கிறது. ஆகவே இந்தக் கட்டுரையில் சார்ஸ் – கோவி 2 என்றால் அது வைரசையும், கோவிட் -19 என்றால் நோயையும் குறிக்கும் என்பதைத் தெளிவுபடுத்தவே மேற்கண்ட விளக்கம் தரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோவிட் -19 (covid -19) நோயால் தாக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் சுய உதவிக் குழுவொன்று (Self help group) ஃபேஸ்புக் (Face Book) சமூக வலைத் தளத்தில் கொரோனா வைரஸ் உயிர் பிழைத்தோர் படை (Corona Virus Survivor Crops) என்ற பெயரில் இயங்கி வருகிறது. இக் குழுவில் அவர்கள்...

இந்திய வானியலாளர் - C. ரகூநாதச் சாரி

Image
இதுதான் நம் நாட்டின் வரலாறு என்று பள்ளி, கல்லூரிப் பாடங்கள் வழியாக நமக்கு அறிமுகப் படுத்தப்பட்ட வரலாறு நம்மிடையில் வாழ்ந்த இந்திய அறிஞர்களை அதிகம் வெளிச்சமிட்டுக் காட்டவில்லை. மாறாக இந்தியாவிற்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத யார்யாரையோ குறித்த பயனற்ற தகவல்களையே இதுகாறும் அரசுகள் வலிந்து திணித்து வந்துள்ளன என்பது என்னுடைய எண்ணம். என்னுடைய இந்தக் கருத்துடன் நீங்கள் மாறுபடலாம். சரி அதற்கான முழுச் சுதந்திரமும் உங்களுக்கு இருக்கிறது. இப்போது உங்களுக்கு ஒரு வினா. நம் நாட்டின் தன்னாட்சி பெற்ற முதல் வானியல் ஆய்வகம் (Observatory) எங்கு யாரால் ஏற்படுத்தப்பட்டது தெரியுமா? நிச்சயம் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கமே சென்னயில் செயல்பட்ட இந்தியாவின் முதல் நவீன வானியல் ஆய்வுக்கூடம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும்  கூடவே   நாம் அறிந்திராத  அதிகம் பேசப்படாத இந்திய வானியல் அறிஞர் ஓருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதும்  தான்.  கி.பி.  9 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கேரளத்தில் பெருமாள் வம்சம் அல்...
பால்வழி விண்மீன் திரளில் (Milky way Galaxy) நான்கு சுழல் கரங்கள் உள்ளன. இவற்றில்  இரண்டு முக்கியமான பெரிய கரங்களான (Major arms) ஸ்கட்டம் – சென்டாரஸ் (Scutum – Centaurus) மற்றும் பெர்சியஸ் (Perseus). இவை ஒரு தடிமனான மையப் பட்டியின் (Central bar) முனைகளில் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றுக்குக் கீழே இறக்கப்பட்ட நிலையில் இரண்டு சிறிய கரங்களான (Minor arms)  நார்மா (Norma) மற்றும் சஜிட்டேரியஸ் (Sagittarius) குறைந்த தெளிவுடன் முக்கியக் கரங்களுக்கு இடையில் அமைந்துள்ளன. முக்கியக் கரங்களில் இளம் மற்றும் வயதான விண்மீன்கள் செறிந்து அடர்த்தியாக உள்ளன. சிறிய கரங்கள் அடிப்படையில் வாயுவாலும் மற்றும் புதிய விண்மீன்களை உருவாக்கும் சிறு சிறு பகுதிகளாலும் நிரப்பப்பட்டுள்ளன. நமது சூரியன் நார்மா (Norma) மற்றும் சஜிட்டேரியஸ் (Sagittarius) சிறு கரங்களுக்கு இடையில் உள்ள ஓரியன் ஸ்பர் (Orion Spur) அல்லது ஓரியன் கரம் (Orion arm) என்று பெயரிடப்பட்டுள்ள மற்றொரு சிறிய கையில்  அமைந்துள்ளது.  நமது பால் வழி விண்மீன் திரள், சுமார் 13 பில்லியன் அதாவது 1300 கோடி ஆண்டுகள் பழமையான சில பில்லியன் (Bi...

நார்மன் ராபர்ட் போக்சன்

Image
நேற்று விண்மீன்களின் பொலிவு குறித்த ஒரு காணொலி தயாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது விண்மீன்களின் தோற்றப் பொலிவெண் (Apparent magnitude) குறித்த தற்போது நடை முறையில் பயன்படுத்தப்படும் எண் மதிப்பு அளவீட்டு முறையை (magnitude scale) உருவாக்கிய  நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) சென்னையில் வாழ்ந்து மறைந்த ஆங்கிலேயர் என்ற விபரம் அவரைப் பற்றி இன்னும் அதிகமான விவரங்களை அறிந்து கொள்ள என்னைத் தூண்டியது. அதனால் இணையத்தளத்தில் அவர் குறித்துத் தேடிய போது ஆங்கிலத்தில் கிடைத்த தகவல்களைத் திரட்டித் தமிழில் தருகிறேன்.  நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) இங்கிலாந்த்தில் நாட்டிங்காம் (Nottingham) என்ற இடத்தில் 1829 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் ஓவன் போக்சன் (George Owen Pogson) உள்ளாடைகள்,  சரிகை விற்பனையாளராகவும் மற்றும் தரகு முகவராகவும் தொழில் செய்து கொண்டிருந்தார். தங்களது பெரிய குடும்பத்தின் வருமானத்திற்கு உதவியாக இருக்கவும், தந்தையின் தொழிலைக் கவனிக்கவும் வேண்டி போக்சன் வணிகவியல் கற்றவே அனுப்பப்பட்டார். ஆனால் போக்சனின் மனமோ அறிவி...

துத்தநாகத் தாதுப் பயன்பாட்டின் - நன்மைகளும் தீமைகளும்

Image
துத்தநாகம் என்னும் உலோகம் நம் அனைவருக்குமே பள்ளிக்கூட நாட்களிலேயே அறிமுகமானதுதான். பள்ளியில் வோல்டா, லெக்லாஞ்சி மற்றும் டேனியல் ஆகிய முதன்மை மின்கலங்களின்அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்துப் படித்திருப்போம். அவற்றில் எல்லாம் எதிர் மின்வாயாகத் துத்தநாக உலோகத்தண்டு செயல்படுகிறதென்றும் அறிந்திருப்போம். அதனால் துத்தநாகம் பள்ளி நாட்களிலேயே நமக்கு அறிமுகமான உலோகம்தான். சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற பல உலோகத் தாதுப்பொருட்கள் மனித உடலின் சீரான இயக்கத்திற்கு இன்றியமையாதவை. மேற் சொன்னவற்றைப் போலவே துத்தநாகமும் இன்றியமையாத ஒரு உலோகத் தாதுப்பொருளாகும். நம்முடைய இந்தக் கட்டுரையில் துத்தநாகம் குறித்த பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன. முதலில் துத்தநாகத்தாதுடன் தொடர்புடைய உடற் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்துக் காணலாம். 1) மரபணு வெளிப்பாடு (Gene expression), 2) நொதிசார்ந்த எதிர்வினைகள் (Enzymatic reactions), 3) நோயெதிர்ப்புச் செயல்பாடுகள் (Immune function), 4) புரதம் தொகுத்தல் (Protein synthesis), 5) டி.என்.ஏ தொகுத்தல் (DNA synthesis), 6) காயங்களை ஆற்றுதல் (Wound healing) மற்றும் 7) வளர்ச்ச...