Posts

Showing posts from 2017

இருண்ட ஆற்றல் (Dark Energy) தேவையா? - பகுதி (2)

Image
இந்த இடத்தில்தான் ஈன்ஸ்டீன் கட்டுரையின் உள்ளே காலடி எடுத்து வைக்கிறார். ஈன்ஸ்டீன் சார்பியல் என்பது பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தார். குமாரும் சங்கரும் தங்களின் அவதானிப்புகளில் உடன்படவில்லை என்பதன் பொருள் அவர்களின் அனுமானத்தில் எங்கோ தவறு செய்துள்ளனர் என்பதே.  சிறப்பு சார்பியலில் தவறான கருத்து என்பது அறுதியான வேகம்   (absolute   speed) என்பதாகும். நமது இந்த நிகழ்வில் எது தவறானது? இயங்கும் பொருட்கள் திசை மாற்றங்களைப் பெற்றால் நிச்சயமாக விசைகள் அவற்றின் மீது செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே தவறான அனுமானமாக இருந்திருக்க வேண்டும். இயங்கும் பொருட்கள் திசை மாற்றங்களுக்கு விசை செயல்பட்டிருக்க வேண்டும் என்பது பல நேர்வுகளில் உண்மையாக இருந்தாலும் ஈர்ப்பு விசையைப் பொறுத்தவரை அவ்வாறில்லை. இது எப்படி சாத்தியம் என்பதை விளங்கிக் கொள்ள நாம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு செல்லும் விமானத்தின் பாதை குறிக்கப்படுவதைக் கருதுவோம். இத்தகைய பயணத்தில் விமானம் மேற்காகப் பறந்து செல்வதில்லை. மாறாக வட துருவப்பகுதியின் மேலாகப் பறந்து...

இருண்ட ஆற்றல் (Dark Energy) தேவையா? - பகுதி (1)

Image
நமது இந்த அண்டம் விரிந்து கொண்டே போகிறது என்பது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். மேலும் தற்காலத்தில் செய்யப்பட்ட பல கூர்நோக்கல்களும் தொடர்ந்து இக்கருத்துக்கே ஆதரவாக இருக்கின்றன.  அண்டம் விரிவடைவது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி விரிவடைவதும் கூட எப்போதும் அதிகரிக்கும் வீதத்திலேயே இருப்பதே இன்னும் வியப்புக்குறியது. விரிவடையும் அண்டத்தை பின்னிருந்து இயக்கும் சக்தி எது என்ற வினா நம்முன் பூதாகரமாக நிற்கிறதல்லவா? அந்த வினாவிற்கான உலகப் பிரசித்தி பெற்ற விடையாகச் சொல்லப்படுவது இருண்ட ஆற்றல் (Dark Energy) என்பதே. உண்மையில் விரிந்து கொண்டே செல்லும் அண்டத்தை விளக்க நமக்கு இருண்ட ஆற்றல் கண்டிப்பாகத் தேவைதானா என்றால்,  தேவை இல்லை என்பது கூட  விடையாக ஒருவேளை இருக்க வாய்ப்புள்ளது. இருண்ட ஆற்றல் என்ற கருத்தே பொது சார்பியல் ( general relativity)  தத்துவத்தின் பண்பாக அறியப்பட்ட அண்டவியல் மாறிலி (cosmological constant) யிலிருந்து பெறப்பட்டதுதான். இதன் பொருட்டு ஈன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவத்தையும் விண்வெளி மற்றும் நேர வளைவு (curvature ...

டி.என்.ஏ (DNA) - நிறைவுப்பகுதி

Image
இது போன்ற சிக்கல்களைக் கையாள பயன்படுத்தப்படும் அணுகுமுறையில்  ஒன்று, உயிரினம் சார்ந்தோ அல்லது பாலினம், வயது சார்ந்தோ மாறுபடாத பிறழ்வு வீதத்தை ( Mutation rate) கொண்ட பிறழ்வுகள் மீது நமது கவனத்தைச் செலுத்துவது. மரபியலாளர்கள் இதனை CpG மாற்றங்கள் (CpG Transitions) என்றழைகின்றனர். அதாவது DNA யில் உள்ள சைட்டோசின் (Cytosin) நியூக்கிளியோடைட் தானாகவே தைமின் (Thymine) னாக மாற்றமடைவதாகும். இந்த மாற்றங்கள் உயிரணுக்கள் பிரிவதால்( Cell division) டி.என்.ஏ படி எடுக்கப்படும் போது உருவாக்கும் தவறுகள் இல்லை. எனவே இப் பிறழ்வுகளின் வீதம் உயிரினத்தின் வாழ்க்கை வரலாற்று மாறிகளை சாராது காலத்தை பொறுத்து சீரான வீதத்தில் மாற்றம் அடையும். CpG மாற்றங்களின் மீது கவனத்தை குவித்து ஆய்வுகள் மேற்கொண்ட மரபியலாளர்கள் மனிதன், சிம்பன்சி பிரிவு 9.3 மில்லியன் முதல் 6.5 மில்லியன் ஆண்டுகளுக்குள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கணக்கிட்டுள்ளனர். இது படிமங்களின் வாயிலாக மதிப்பிடப்பட்ட காலத்துடன் ஒத்தமைகிறது.    மற்றொரு அணுகுமுறை பாலினம் மற்றும் பூப்பெய்தும் வயது, தலைமுறைக்கான கால அளவு போன்ற வாழ்க்கை ...

டி.என்.ஏ (DNA) - பகுதி 5

Image
மூலக்கூறு கடிகாரங்கள் மனித மற்றும் பிற உயிரினகளின் பரிணாம வளர்ச்சிக் கணக்கீடுகளில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்த போதிலும் அதன் பயன்பாட்டில்  சில சிக்கல்களும் உள்ளன.  உண்மையில் பிறழ்வு மற்றும் மறு இணைவு ஆகிய இரண்டுமே நிகழக் கூடிய வீதங்கள் மனித பரிணாம வளர்ச்சியில் என்றுமே மாறாமல் இருந்திருக்கவில்லை என்பது ஒரு முக்கியமான சவாலாக விளங்குகிறது. இந்த வீதங்கள் இரண்டும் காலம், உயிரிங்களின் வகைகள் சார்ந்து   சிறிது சிறிதாக மாற்றம் அடைகின்றன. சொல்லப்போனால் மனிதக் குழுக்களுக்கிடையில் கூட சற்று மெதுவாக மாற்றமடைகிறது. இது வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறான வேகத்துடன் டிக் டிக் என்றியங்கும் கடிகாரத்தைக் கொண்டு காலத்தை அளப்பதற்கு ஒப்பானது என்றே கூறலாம். Prdm9 என்னும் மரபணுதான் டி.என்.ஏ யின் குறுக்கிணைவு ( crossover) நிகழ்வுகள் ஏற்பட வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கிறது. மனிதர்கள், சிம்பன்சிகள் மற்றும் சுண்டெலிகளில் இந்த குறிப்பிட்ட மரபணுவின் வேறுபாடுகள் (variations) மறு இணைவு சுடுபுள்ளிகளைத் (Recombination hotspots) திருத்தியமைக்கின்றன. மறு இணைவு சுடுபுள்ளிகள் என்பவை மரபணுத்தொகுப...

டி.என்.ஏ (DNA) - பகுதி (4)

Image
ரோமானியாவில் குகை ஒன்றில் கிடைத்த ஐரோப்பாவின் ஆரம்ப கால (Early Modern Man)  நாகரீக மனிதனின் தாடை எலும்புப் படிமத்திலிருந்து நியாண்டர்தால்களும், ஐரோப்பிய ஆரம்பகால நாகரீக மனிதர்களும் 40000 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து ஒரு கலப்பினத்தை உருவாக்கியதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த தாடை எலும்பை டி.என்.ஏ சோதனை செய்த போது இதுவரை வரிசைப்படுத்தப்பட்ட நாகரீக மனித எலும்புக் கூடுகளில் அதிகபட்ச விழுக்காடு மரபணுக்களை நியாண்டர்தாலிடமிருந்து பெற்றுள்ள மரபணுத் தொகுதியைக் (GENOME) கொண்டது இதுதான் என்று தெரிய வந்துள்ளது.  அதாவது கிட்டத்தட்ட 8 முதல் 11 விழுக்காடு நியாண்டர்தால் மரபணுக்களை தன் மரபணுத் தொகுப்பில் கொண்டுள்ளதாக மரபியலாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. உடற்கூறு (ANATOMICALLY) ரீதியாக நாகரீக மனிதன் என்று கொள்ளப்படும் தொன்மையான எலும்புப் படிமங்களை கடந்த தசாப்தத்தில் டி.என்.ஏ ஆய்வுக்கு உட்படுத்திய போது கிடைத்த திடுக்கிட வைக்கும் வெளிச்சத்திற்கு வந்த உண்மை என்னவென்றால், நம் நேரடி முதாதையர்கள் நியாண்டர்தால்களுடன் பாலியல் உறவு கொண்டது மட்டுமல்லாமல் வளமான சந்ததிகளையும் உருவாக்கியுள்ளனர...

டி.என்.ஏ(DNA) - பகுதி (3)

Image
பெரும்பாலான பிறழ்வுகள் டிஎன்ஏ தன்னைத் தானே பிரதி எடுக்கும் போது ஏற்படும் தவறுகளால் உருவாகின்றன. அதாவது அரசாங்க அலுவலகங்களில் பழைய ஆவணங்களைப் பிரதி எடுக்கும் போது பிழைகள் ஏற்படும் அல்லவா. அதேபோல் டி.என்.ஏ தங்களைப் பிரதி எடுக்கும் போதும் பிறழ்வுகள் ஏற்படும்.  பல வருடங்களுக்கு முன்னர் ஒரு  பத்திரிக்கையில் (துக்ளக் என்று நினைக்கிறேன். எழுதியவர் பெயர் ஞாபகம் இல்லை) அரசு அலுவலக செயல்பாடுகள் பற்றிய சுவாரசியமான சிறுகதை படித்தேன். அதில் ஒரு அரசு நிறுவனத்தில்  "மராமத்து" செய்தது குறித்த தகவலைப் படியெடுத்த அலுவலர் அதனைப் பிழையாக "மரமத்து" என்று படியெடுத்து விடுவார். அந்தப் பிழை மாற்றப்படாமல் தொடர்ந்து பின்னாட்களில் அப்படியே பிரதி எடுக்கப்படும். அரசின் ஆவணங்களைத் திருத்துவது கடுமையான குற்றம் என்பதால் எந்த அதிகாரியும் இது "மராமத்து" என்பதுதான் தவறாக "மரமத்து" என்று உள்ளதென அறிந்திருந்தும் மாற்றத் துணியவில்லை. ஆகவே இரு தலைமுறைகளாக "மரமத்து" என்றே அரசு ஆவணங்களில் குறிக்கப்பட்டு இருக்கும். ஒரு ஊழல் பெருச்சாளி  அதிகாரி புத்திசாலித்தனமாக அலுவலகத்தின் ...

டி.என்.ஏ (DNA) - பகுதி (2)

Image
டி.என்.ஏ மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நீண்ட சங்கிலித் தொடரை உருவாக்கும். டி.என்.ஏயின் சங்கிலித் தொடர் அமைப்பு உயிரணுவின் உட்கருவினுள்ளே சுற்றி வைக்கப்பட்டுள்ளது. உயிரணுவிற்குள் சரியாகப் பொருந்த வேண்டி மிகவும் இறுக்கமாகச் சுற்றப்பட்டிருக்கும் டி.என்.ஏ யின் வடிவத்தை குரோமோசோம்கள் (CHROMOSOMES) என்றழைக்கிறோம்.   ஒரு குரோமாட்டிட்  (Chromatid)  கொண்ட  குரோமோசோம்  தன்னுள் ஒரே ஒரு டி.என்.ஏ மூலக்கூறை உள்ளடக்கி இருக்கும். மனித  இனத்தில் மொத்தம் 23 சோடி குரோமோசோம்கள் தலா இரண்டு குரோமாடிட்கள் கொண்டு மரபணுவின் கருவில் காணப்படுகிறது.   இவ்வாறு உருவாகும் சங்கிலித்தொடர் நிறப்புரிகளைத் (Chromosome) தருகிறது. ஒரு சிறிய மனித நிறப்புரியில் சுமார் 335 இலட்சம் டி.என்.ஏ அடிப்படை அலகுகள் (A T, C G) பல்வேறு வரிசையில் மாற்றி மாற்றி தொடுக்கப்பட்ட கொண்ட சங்கிலி போன்றிருக்கும். எல்லா நிறப்புரிகளின் தொகுப்பே ஒரு உயிரினத்தின் முழுமையான டி.என்.ஏ தொகுப்பாகும். ஒவ்வொரு உயிரினமும் அவற்றுக்கே உரித்தான எண்ணிக்கையில் நிறப்புரிகளைப் பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக மனிதர்...

டி என் ஏ (DNA) - பகுதி (1)

Image
                                                  பொதுவாகவே குடும்ப மறு இணைவு (family reunions) நிகழ்வுகளில் நமக்கு மிகவும் பரிச்சியமான முகமுடையவர்கள் நம்முடன் எப்படித் தொடர்புடையவர்கள் என்பதற்கு மட்டுமில்லாமல் தொன்மையான விவகாரங்களான மனிதரல்லாத சிம்பன்சிகளுக்கும் நமக்குமான நெருங்கிய தொடர்பு, நியாண்டர்தால்களுடன் ( Neanderthals ) ஹோமோசேப்பியன்கள் ( Homo Sapiens )  இணைந்த நிகழ்வு, ஆப்பிரிகாவிலிருந்து மனித இனம் இடம்பெயர்ந்து நகர்ந்த வழியில் புதிய வாழியல் சூழல்களுக்கு ஏற்றபடி எப்படித் தங்களைத் தகவமைத்துக் கொண்டது போன்ற நமது பாரம்பரியம் குறித்த கதைகளை தன் வசம் வைத்துள்ளது மட்டுமல்லாமல்  மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற காலம் குறித்த குறிப்புகளையும் கூடத் தன்வசம் டி.என்.ஏ ( DNA ) வைத்திருக்கிறது.                                     ...