நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்
மகாபாரதத்தில் குருஷேத்திரப் போரில் கௌரவர்கள் கொல்லப்பட்டு பாண்டவர்கள் வெற்றி அடைகின்றனர். போரில் வென்ற போதும் சொந்தபந்தங்களைக் கொன்ற பெரும் பாபம் அவர்களைச் சேர்ந்ததால் பாண்டவர்களின் மனதில் நிம்மதி இல்லாமல் போனது. இந்தப் பெரும் பாபம் நீங்கி விமோசனம் பெற வேண்டி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை அணுகி வழிகாட்ட வேண்டினர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்களிடம் ஒரு கருப்புப் பசுவையும் கருப்புக் கொடியையும் அளித்தார். கருப்புக் கொடியைப் பிடித்தபடி கருப்புப் பசுவைப் பின் தொடர் வேண்டும் என்றும், எந்த ஒரு இடத்தில் கருப்புக் கொடியும், கருப்புப் பசுவும் வெண்ணிறமாக நிறம் மாறுகிறதோ அந்த இடத்தில் பாபவிமோசனம் பெறச் சிவபெருமானை நோக்கித் தவமியற்றி வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். பாண்டவர்கள் ஐவரும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி கருப்புப் பசுவின் பின்னே கருப்புக் கொடியைப் பிடித்தவாறு பல ஆண்டுகளாகப் பாரத தேசத்தின் பல இடங்களிலும் நடந்து வந்தனர். தற்போதைய குஜராத் மாநிலத்தில் பவ்நகர் (Bhavnagar) மாவட்டத்தில் உள்ள கோலியாக் (Koliyak)நகரத்தின் கடற்கரைக்கு வந்தபோது கருப்புக் கொடியும், கருப்புப் பசுவும் வெள்ளையாக நிறம் மா...