Posts

கதிரவன் – பகுதி (3)

Image
கதிரவன் – பகுதி (3)  இந்தப் பகுதியில் கதிரவப்புள்ளிகள் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். கதிரவப்புள்ளிகள் (Sunspots)  என்பவை மிக வலிமையான கதிரவ காந்தப்புலப் பகுதிகளாகும். கட்புலனாகும் ஒளியில் இவை சற்றே நிறம் மங்கி காணப்படும். இவற்றின் சுற்றுப்புறத்தை விட சில ஆயிரம் கெல்வின் வெப்ப நிலை குறைவாக குளிர்ந்து அமைவதே காரணமாகிறது. பொதுவாக கட்புலனாகும் கதிரவப் புறப்பரப்பு சாதாரணமாக 5800 கெல்வின் வெப்ப நிலையில் இருக்கும். ஆனால் பெரிய கதிரவப்புள்ளிகள் இவ்வெப்ப நிலையை விட சுமார் 4000 கெல்வின் வரை குறைவாகவே அமையும்.  கதிரவப் புள்ளிகள் கிட்டத்தட்ட 2500 கிமீ முதல் 50000 கிமீ வரையிலான உருவளவு கொண்டவை . கதிரவப்புள்ளிகள் பிரம்மாண்டமாக இருந்த போதிலும்1,392,000 கிமீ விட்டம் கொண்ட கதிரவனுடன் ஒப்பிட மிகவும் சிறியவையே. கதிரவப்புள்ளிகளில் பெரும்பாலானவை அநேகமாக வட்டவடிவிலேயே காணப்படுகின்றன. பொதுவாகவே கதிரவப்புள்ளிகள் இரண்டு பகுதிகளைக் கொண்டமையும். (1) நிழல் பகுதி( Umbra) மற்றும் (2) புறநிழல் பகுதி(Penumbra). கதிரவப்பரப்பை நோக்கி உயரும் காந்தப் பாயத்தின் (Magnetic flux) காலத்தைச் ச...

கதிரவன் - பகுதி (2)

Image
கதிரவன் – பகுதி (2) கதிரவப் பரப்பு ஒளிக்கோளம் (Photosphere) என்றழைக்கப்படுகிறது. இது சுமார் 5800 கெல்வின் வெப்பநிலையில் இருக்கும். புறப்பரப்பில் சற்றே வெப்பம் குறைந்த, குளிர்ந்த பகுதிகளும் காணப்படுகின்றன. இப்பகுதிகள் சுமார் 3800 கெல்வின் வெப்ப நிலையில் இருக்கும். இப்பகுதிகளைக் கதிரவனின் புறப்பரப்பில் அளவில் சிறிய புள்ளியாக காணப்படுகின்றன. இப்புள்ளிகள் உண்மையில் அளவில் மிகவும் பெரியவையே. இவற்றின் விட்டம் சாதாரணமாக 50,000 கிமீ அளவில் இருக்கும். கதிரவப்புள்ளிகள் (Sunspots) என்று அழைக்கப்படும் இக்குறைந்த வெப்பநிலைப் பகுதிகளை இன்னும் சரிவர அறிந்து கொள்ள இயலவில்லை. கதிரவனின் காந்தப்புலத்துடன் ஏற்படும் சிக்கலான செயலெதிர்வினை (Interaction) காரணமாக உருவாவதாக கருதப்படுகிறது. ஒளிக்கோளத்தைற்கு சற்று மேலாக அமைந்த சிறிய பகுதி நிறக் கோளம் (Chromosphere) என்றழைக்கப்படுகிறது. நிறக்கோளத்திற்கும் மேல் அமைந்த மிகவும் அடர்வு குறைந்த பகுதி கரோனா (Corona) ஆகும். இப்பகுதி பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு வெளியில் (Space) பரந்துள்ளது. இருப்பினும் இப்பகுதி முழு சூரிய கிரகணத்தின் போது மட்டுமே கட்புலனாகும...

கதிரவன் - பகுதி (1)

Image
கதிரவன் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்புக் கட்டுரை ஒன்று எழுத நினைத்தேன். இந்த பொங்கல் விழா என்பது கதிரவ வழிபாட்டை உள்ளடக்கிய ஒரு விழா என்பதால் கதிரவனைப் பற்றி சில தகவல்களை அடுத்துவரும் நான்கு நாட்களும் சிறிது சிறிதாகத் தர எண்ணியுள்ளேன். மிக நீண்ட கட்டுரைகள் அதிலும் அறிவியல் கட்டுரைகள் படிப்பவருக்கு அயர்ச்சியை உண்டு செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே  அதிகபட்சமாக மூன்று பக்கங்களுக்கு அதிகமாகாமல் தர நினைத்துள்ளேன். இனி கட்டுரைக்கு வருவோம்.  நூறு பில்லியன்களுக்கும் அதிகமான விண்மீன்களைக் கொண்டது நம் பால் வழி (Milky way) விண்மீன் பேரடை (Galaxy). இப் பேரடையில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பொதுவாக ஒரு விண்மீன் கூட்டம்  பேரடை (Galaxy) என்று அழைக்கப்பட அதில் குறைந்தபட்சமாக 100 பில்லியன் விண்மீன்களாவது இருக்க வேண்டும்.  நமது கதிரவன் சாதாரண முதன்மைத் தொடரில் அமைந்த ஒரு G2 Vவகை விண்மீன். பொதுவாக G2 வகை விண்மீன்களின் புறப்பரப்பு வெப்ப நிலை சுமார் 5500 கெல்வின் அளவில் அமையும். புவியின் நடுக்கோட்டு ஆர...

வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (12)

Image
இந்த அத்தியாயத்தில் பொலிவு மாறு விண்மீன்கள் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.  மாற்றம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது. அது போலவே விண்மீன்களின் வாழ்விலும் மாற்றங்களைத் தவிர்க்க இயலாது. கதிரவனை ஒத்த விண்மீன் அல்லது அதை விடச் சற்று அளவில் பெரிய விண்மீன் தனது எரிபொருள் இருப்பு குறைந்ததும், தனது வடிவில் பல மடங்கு பெரியதாக சிவப்பு அரக்கனாக மாற்றமடைகிறது. இறுதியில் வெள்ளைக் குள்ளனாக புவியின் அளவுக்கு வடிவத்தில் குறைந்து, மிக அடர்த்தியான பொருளாக மாற்றமடைந்து பின் மறைகிறது. இக் கால கட்டங்களில் விண்மீனின் பொலிவு முதலில் உயர்ந்தும் பின் குறைந்தும் மாற்றமடைகிறது. ஆனால் பொலிவில் ஏற்படும் இம் மாற்றங்கள் விண்மீனின் பிறப்பின் பொழுது அது அமையும் நிறையைப் பொருத்து பல மில்லியன் அல்லது பல ஆயிரம் மில்லியன் ஆண்டு கால அளவிலேயே ஏற்படுகிறது. ஆனால் சில விண்மீன்கள் தனது பொலிவில் சிறிய கால அளவுகளிலேயே மாற்றமடையும் என்று முன்னரே சொல்லியிருந்தோம். பொலிவில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் சில மணி, சில நாள் அல்லது சில மாதங்களில் கூட நிகழ்வதையும் அறிவோம். இத்தகைய பொலிவு மாறு விண்மீன்கள் ...

வானம் எனக்கொரு போதிமரம் அத்தியாயம் - (11)

Image
வெளிப்புற ஏடுகள் விரிந்து கொண்டே போவதால் விண்மீன், சிவப்பு அரக்கனாக மாற்றமடைந்து கொண்டிருக்கும் பொழுது கூட அதன் சிறிய உட்புறமானது தொடர்ந்து சுருக்கமடையும். அவ்வாறு சுருங்குவதன் காரணமாக உட்புற அடர்த்தி அதிகரித்து, சாதாரணமாக 1000 மடங்கு சராசரி விண்மீனின் உட்புற அடர்த்திக்குச் சமமாக உயரும். இதன் காரணமாக மையத்தில் வெப்ப நிலை 100 மில்லியன் கெல்வின் அளவிற்கு உயர்வதால் ஒரு புதிய அணுக்கரு வினை நிகழத் தொடங்குகிறது. மூன்று ஹீலியம் அணுக்கருக்கள் இணைவு வினையில் ஈடுபட்டு கார்பன் அணுக்கரு உருவாகத் தொடங்கும். விண்மீன் மீண்டும் ஆற்றலை உருவாக்கம் செய்து நிலைத்தன்மையைத் தற்காலிகமாகப் பெறும். இதற்குப் பின்னர் நடக்கவிருப்பது அனைத்தும் விண்மீனின் மொத்த நிறையினை சார்ந்தது. நமது கதிரவனைப் போன்ற விண்மீனைக் கருதினால் பெரியதாக ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. ஹீலியத்தின் அணுக்கரு வினை காரணமாக உருவாகும் கடும் அழுத்தம் சிவப்பரக்கனின் வெளிபுற உறையை முற்றிலுமாக ஊதித்தள்ளி விடுகிறது. எனவே மிச்சமிருப்பது கிட்டத்தட்ட புவியின் அளவிலான வெறும் மையப்பகுதி மட்டுமே. இப் பகுதி மிக வெப்பமாகவும் அதே சமயம் அளவில் சிறி...

வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் (10)

Image
மனிதக் குழந்தைகளைப் போலவே விண்மீன்களும் வெவ்வேறு அளவில் பிறக்கின்றன. சில சிறியதாகவும் சில அளவில் பெரியதாகவும் சில நடுத்தரமான அளவிலான நிறையுடனும் பிறக்கின்றன. மனிதக் குழந்தைகளில், பிறக்கும்பொழுது அதிக நிறையுடன் பிறக்கும் குழந்தை, பிற்காலத்தில் ஆரோக்கியமான அதிக ஆயுளுடன் வாழும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதற்கு எதிர் மறையாக அதிக நிறையுடன் பிறக்கும் விண்மீன் குறைந்த ஆயுளையே பெறும். முதற் கண்ணோட்டத்தில் மேற் கூறிய கருத்து வினோதமாகத் தோன்றினாலும் ,எளிதில் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களில் , ஒரு சிசு அதன் பிறப்புக்குப் பின்னர், வளர்ச்சி பெறத் தேவைப்படும் உணவை ஆயுட் காலம் முழுவதும் வெளியிலிருந்தே பெறுகிறது. ஆனால் விண்மீன், அதன் பிறப்பின் பொழுது இருப்பில் இருந்த ஹைட்ரஜன் எரி பொருளை பயன்படுத்தி மட்டுமே உயிர் வாழ வேண்டும் அல்லவா?அப்படிப் பார்த்தால் சிறிய குறைந்த நிறையுடன் பிறக்கும் விண்மீனில் குறைந்த ஹைட்ரஜன் இருப்புதான் இருக்கும். அதனால் குறைந்த ஆயுளைப் பெற வேண்டும். அதிக நிறை கொண்ட விண்மீனில் அதிக ஹைட்ரஜன் இருக்கும் என்பதும், அதிக ஹைட்ரஜன் எரி பொருளைக் கொண்ட விண்மீன் அத...