இந்திய வானியலாளர் - C. ரகூநாதச் சாரி
இதுதான் நம் நாட்டின் வரலாறு என்று பள்ளி, கல்லூரிப் பாடங்கள் வழியாக நமக்கு அறிமுகப் படுத்தப்பட்ட வரலாறு நம்மிடையில் வாழ்ந்த இந்திய அறிஞர்களை அதிகம் வெளிச்சமிட்டுக் காட்டவில்லை. மாறாக இந்தியாவிற்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத யார்யாரையோ குறித்த பயனற்ற தகவல்களையே இதுகாறும் அரசுகள் வலிந்து திணித்து வந்துள்ளன என்பது என்னுடைய எண்ணம். என்னுடைய இந்தக் கருத்துடன் நீங்கள் மாறுபடலாம். சரி அதற்கான முழுச் சுதந்திரமும் உங்களுக்கு இருக்கிறது. இப்போது உங்களுக்கு ஒரு வினா. நம் நாட்டின் தன்னாட்சி பெற்ற முதல் வானியல் ஆய்வகம் (Observatory) எங்கு யாரால் ஏற்படுத்தப்பட்டது தெரியுமா? நிச்சயம் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கமே சென்னயில் செயல்பட்ட இந்தியாவின் முதல் நவீன வானியல் ஆய்வுக்கூடம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும் கூடவே நாம் அறிந்திராத அதிகம் பேசப்படாத இந்திய வானியல் அறிஞர் ஓருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதும் தான். கி.பி. 9 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கேரளத்தில் பெருமாள் வம்சம் அல்...