ஹஸ்தம் என்ற α, β, γ, δ and ε -கோர்வி( corvi) விண்மீன்கள்
இரண்டாம் நூற்றாண்டில் “டாலமி” (Ptolemy) யால் வகைப்படுத்தப் பட்ட ஹஸ்தம், நமது விண்மீன் குழு வரிசையில் 13 வதாக இடம் பெற்று உள்ளது. ஹஸ்தம்(Hastham) ஹஸ்தம் என்றால் கரம். விநாயகனை “மோதக ஹஸ்த” அதாவது கொழுக்கட்டையை கரத்தில் கொண்ட என்ற பொருள் படச் சொல்கிறோம். இந்த விண்மீன் குழு கர வடிவத்தில் ஐந்து (5) விண்மீன்களைக் கொண்டதாகும். தமிழில் இலக்கியங்களில் இந்த விண்மீன் குழுவை ஐவிரல், கைம் மீன் , களிறு காமரம், அங்கிநாள், கௌத்துவம், நவ்வி, என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. கோர்வஸ் அளவில் சிறிய விண்மீன் கூட்டம். இதன் எல்லைக்குள் தோற்றப் பொலிவெண் +6.5 அளவில் கொண்ட 29 விண்மீ்ன்கள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. தற்போது சுட்டப்பட்டுள்ள 88 விண்மீன்கள் பட்டியலில் 70 வது இடத்தில் உள்ளது. காரணம் இதன் வானில் அடைக்கும் பரப்பு 184 சதுர பாகைகள்தான். அதாவது வானில் 0.446% இடத்தில் பரவியுள்ளது. கிரேக்க புராணத்தில் இது அப்பல்லோ (APOLLO) வின் புனிதப் பறவை என்று குறிப்பிடப்படுகிறது. இது காகம் (Crow) அல்லது அண்டங்காக்கை(Raven) என்ற பொருள் படும் கோர்வி (CORVI) என்றும் பெயரிட...