அடிப்படை வானியல் பகுதி (1)


அடிப்படை வானியல் பகுதி (1)

 வானியலில் அண்டம் (UNIVERSE) புவியைச் சுற்றி அமைந்த ஒரு கோளமாகக் கருதப்படுகிறது. வானில் காணப்படும் எல்லா வான் பொருட்களையும் இந்தக் கோளத்தில் எங்கு அமைகிறது என்பதை இடம் சுட்ட முடிகிறது. இக் கோளத்தை வான் கோளம் (CELESTIAL SPHERE) என்று அழைகிறோம்.

புவிலிருந்து காணும் போது இந்த வான் கோளம் இரு அச்சுப் புள்ளிகளான வட மற்றும் தென் வான் துருவங்கள் (NORTH AND SOUTH CELESTIAL POLES) வழிச் செல்லும்  அச்சொன்றைப் பற்றிச் சுற்றி சுழல்கிறது எனக் கருதலாம்.
வான் துருவங்கள் புவியின் துருவங்களுக்கு நேராக அமைகிறது.



வான் நடுக்கோடு (CELESTIAL EQUATOR) வான் கோளத்தை வட அரைக்கோளம் (NORTHEN HEMI SPHERE) மற்றும் தென் அரைகோளம்(SOUTHERN HEMISPHERE) என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது. 

எந்த ஒரு வான் பொருளின் இருப்பிடத்தையும் குறிக்க புவியியலில் பயன்படும் அட்ச ரேகை (LATITUDE) தீர்க்க ரேகை (LONGITUDE) என்று கற்பனைக் கோடுகள் போல் இங்கும் இரு கற்பனைக் கோடுகள் பயன்படுத்தப் படுகின்றன.




(1) வலது  கோணம் (RIGHT ASCENSION) என்பது தீர்க்க ரேகைக்கு சமமானது.
(2) நடுவரை விலக்க வரிகள் (DECLINATION) என்பது அட்ச ரேகைக்குச் சமமானது. இந்த இரு கூறுகளையும் (CO-ORDINATES) பயன்படுத்தி வான் கோளத்தில் காணப்படும் எந்த ஒரு பொருளின் இருப்பிடத்தையும் சுட்டுதல் எளிதாகும்.


முதலில் வலது  கோணம்(Ascension)  

இதில் நெடுக்காக மொத்தம் உள்ள 360 டிகிரி கோணத்தையும் 24 மணிக்கு பிரித்து விடுவது. அதாவது ஒரு மணிக்கு 15 டிகிரி. அல்லது 1நிமிடத்திற்கு 1/4 டிகிரி. இந்தக் கணக்கில் 1 டிகிரி கடக்க 4 நிமிடங்கள் ஆகும். 

அடுத்து வருவது நடுவரை விலக்க வரிகள் (DECLINATION)

இங்கு குறுக்காக வான் கோள நடுக் கோட்டிலிருந்து மேலும் கீழுமாக 90 டிகிரி கோணதிற்குப் பிரிக்கப் படுகிறது.



தற்சுழற்சி (ROTATION or SPIN)

தற்சுழற்சி (ROTATION or SPIN) என்பது பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றி வருதல். ஒரு முறை இவ்வாறு பூமி சுற்றிவர ஆகும் காலத்தை ஒரு நாள் என்கிறோம்.




சுற்றியக்கம் (REVOLUTION or ORBITAL MOVEMENT)

சுற்றுதல் (REVOLUTION or ORBITAL MOVEMENT) என்றால் பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம். இதை ஒரு ஆண்டு என்கிறோம். ஒரு ஆண்டில் பூமி தன்னைத்தானே 365.25 முறை சுற்றி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.


முந்து நிலை இயக்கம் (PRECESSION)

முந்து நிலை இயக்கம் (PRECESSION) என்றால் பூமி மெதுவாக தன் அச்சில் பம்பரம் போல சுற்றி வர எடுக்கும் காலம் ஆகும். 


 (படம் http://ecampus.matc.edu/ லிருந்து எடுக்கப்பட்டது. நன்றி)



பூமி தன் அச்சிலிருந்து 23.5o சாய்வாகச் சுற்றுவதே இதற்குக் காரணமாக அமைகிறது.இதற்கு பூமிக்கு 26000 ஆண்டுகள் பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக இன்று Polaris விண்மீனை நோக்கிய வட துருவம்  இன்னும் 15000 ஆண்டுகளுக்குப் பின்னர் Vega விண்மீனை நோக்கி மாற்றமடைந்து விடும்.



ஒழுங்கற்ற இயக்கம்(NUTATION) 

ஒழுங்கற்ற இயக்கம் (NUTATION) என்பது பூமி முந்து நிலை(PRECESSION ) இயக்கத்தின் போது ஆடி அலைந்து கொண்டே இயங்குகிறது.  அதாவது பூமியின் தினப்படி இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு  சூரியன், சந்திரன் இவை இரண்டின் ஈர்ப்பு காரணமாக ஏற்படும் முறுக்குவிசை (Torque) வலுவான முதன்மைக் காரணியாகவும்  பிற கோள்களின் ஈர்ப்பு காரணமாக ஏற்படும் ஈர்ப்பு விசை வலுக்குறைந்த துணைக்காரணியாகவும் கருதப்படுகிறது. 



தொடரும்

இந்தக் கட்டுரை வானியலின் அடிப்படையான சில விபரங்களை தருவதற்காக எழுதப்பட்டது.அனைத்து விபரங்களும் பல் வேறு வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த வலைத்தள உரிமையாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)