மகம் - ஆல்பா, ஈட்டா, காமா, ஸீட்டா, மியூ, எப்சிலான் லியோனிஸ் (α, η, γ, ζ, μ, மற்றும் ε Leonis) விண்மீன்கள்
மகம் சிம்ம ராசியில் அடங்கியுள்ளது.
சிம்மத்தில் (Leo Constellation) மகம் விண்மீன்கள் ஆல்பா, ஈட்டா, காமா, ஸீட்டா, மியூ,
எப்சிலான் லியோனிஸ் (α, η, γ, ζ, μ, மற்றும் ε Leonis) ஆகிய ஆறு (6) விண்மீன்களைக்
கொண்டது.
தமிழில்
இந்த விண்மீன் வேள்வி, வேட்டுவன், கொடுங்கம், வாய்க்கால், மாசி, முதலில் வரும் சனி,
பிதிர் நாள், எழுவாயெழுஞ்சனி (திவாகர நிகண்டு) என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
சிங்கத்தின் இதயம் (Lion’s Heart) என்றழைக்கப்படும் ரெகுலஸ் (Regulus)
ஆல்பா லியோனிஸ்
(α Leonis) அல்லது ஆல்பா லயன் (α - Lion ) இரவு வானத்தில் காணப்படும் பிரகாசமான
நட்சத்திரங்களில் ஒன்று. திருப்பி வைக்கப்பட்ட கேள்விக்குறி வடிவத்தில் (படம்)
அமைந்த லியோ கூட்டத்தில் கடைசி விண்மீனாக அமைந்துள்ளது.
மிகச் சரியாகச் சொன்னால் பொலிவு வரிசையில் 22
வது இடம் பெற்றுள்ளது. பூமியில் இருந்து சுமார் 79 ஒளி ஆண்டுகள் தொலைவிலமைந்துள்ளது.
ரெகுலஸ் ஒரு B7 வகை பல்லுறுப்பு விண்மீன்
அமைப்பாகும்.
குறைந்தது நான்கு விண்மீன்களைக் கொண்ட இரண்டு ஜோடிகள் அமைப்பாகும்.
ரெகுலஸ் A ஒரு நிறமாலையியல் (Spectroscopic Binary) இருமை விண்மீன். அதில் ஒன்று
நீல-வெள்ளை பிரதான வரிசை நட்சத்திரம் அதன் துணை இன்னும் நேரடியாக நோக்கப்படவில்லை.
அநேகமாக அது ஒரு வெள்ளைக் குள்ளன் ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ரெகுலஸ் B
(Regulus B) மற்றும்ரெகுலஸ் B (Regulus C and D) வெகுதொலைவில் அமைந்துள்ள மங்கலான
முக்கிய - வரிசை நட்சத்திரங்களாக உள்ளன.
ரெகுலஸ் A யில் உள்ள இரு விண்மீன்களும் தங்களின் பொது நிறை மையத்தை (Centre of
mass) 40 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றன. ரெகுலஸ் A யின் பொலிவு, வெப்ப
நிலை மற்றும் நிறை இவற்றின் அடிப்படையில் இதன் வயது 50 யிலிருந்து 100 மில்லியன்
ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டது.
ஆனால் அதன் வெள்ளைக் குள்ளன் துணை உருவாக்கத்தை
கருத்தில் கொண்டால் அமைப்பின் வயது
குறைந்தது 1000 மில்லியன் ஆண்டுகளாவது இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
சூரியனை விட 3.5 மடங்கு நிறையுள்ள முதன்மை ரெகுலஸ் A தன்னைத்தானே 15.9 மணி
நேரத்தில் சுற்றிவருகிறது. இப்படி தன்னைத்தானே அசுர வேகத்தில் சுற்றி வருவதால்
தட்டைக் கோளுருவில் (oblate spheroid) காணப்படுகிறது.
இதனால் அதன் வட மற்றும்
தென் துருவங்கள் அதிக பரப்பு ஈர்ப்பின் காரணமாக அதிக வெப்பமாகவும், அதிகப்
பொலிவுடனும் காணப்படும். ரெகுலஸ் விண்மீனின் துருவங்கள், அதன் நடுக்கோட்ட விட மிக
அதிக வெப்பமாக இருக்கும்.
ரெகுலஸ் B யானது ரெகுலஸ் A யிலிருந்து 5000 AU வானியல்அலகு தொலைவில்
அமைந்துள்ளது. ரெகுலஸ் B யின் துணை ரெகுலஸ் C ஆகும். இதில் ரெகுலஸ் B, K2 வகை
விண்மீன். கூட்டாளி M4 வகை விண்மீன்.
லியோ
BC சூரியனின் நிறையில் 0.8 மடங்கும், ஆரம் மற்றும் பொலிவில் பாதியும் கொண்டது. ரெகுலஸ் D பிற விண்மீன்களுடன் இயக்கத்தை
பகிர்ந்து கொள்ளும் ஒரு கூட்டாளி விண்மீன்.
ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலம் ரெகுலஸ்
விண்மீனைக் காணச் சிறந்த காலம். பிப்ரவரி ஆரம்பத்தில் சூரியன் மறைவுக்கு 1மணி
நேரத்திற்குப் பின் உதயமாகி இரவு முழுவதும் வானில் தெரியும். நள்ளிரவில்
உச்சத்தில் இருக்கும். ஏப்ரலில் தென் கிழக்கில் சூரியன் மறைவுக்கு 1மணி
நேரத்திற்குப் பின் உதயமாகி இரவு முழுவதும் வானில் தெரியும். ஜூனில் சூரியன்
மறைவுக்கு 1மணி நேரத்திற்குப் பின் தென் மேற்கில் உச்சத்திலும் தெரியும். ஆகஸ்டு
22 தேதிக்கு இரு புறமும் ஒரு மாத இடைவெளியில் ரெகுலஸின் அருகே சூரியன் அமைவதால்
காண இயலாது.
நமது சூரியனிடத்தில் ரெகுலஸ்
இருந்திருக்குமானால் முதலில் நமக்கு வளிமண்டலம் இருக்காது. கடல்கள் வற்றிப் போய்
விடும். இப்பொழுது நமக்கு கிடைக்கும் ஒளியைப் போல 140 மடங்கு பொலிவான ஒளி
இருந்திருக்கும். சூரியனைப் போல் கிட்டத்தட்ட 350 மடங்கு ஆற்றலை
வெளிவிட்டிருக்கும்.
அடுத்து வருவது ஈட்டா லியோனிஸ் (η - Leonis)
இது ஒரு A0 வகை வெள்ளை பேரரக்க
விண்மீன்(White Super Giant Star). இது புவியிலிருந்து சுமார் 1300 ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ளது. தோற்றப்பொலிவெண் + 3.5 கொண்ட இந்த விண்மீன் சூரியனை விட 20000
மடங்கு பொலிவானது. இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் காரணமாக இதுவும் ஒரு இருமை
விண்மீன் என்று கருதப்படுகிறது.
அடுத்து வருவது அல்ஜீபா (Algieba) என்று
அழைக்கப்படும் காமா
லியொனிஸ் ( γ - Leonis)
ஆரஞ்ச் - சிவப்பு மற்றும் பசுமை கலந்த மஞ்சள்
நிறமுள்ள இருமை விண்மீன் (Binary Star) இருப்பினும் சுமாரான தொலை நோக்கி மூலம்
எளிதில் பிரித்தறிய முடியும். ஜோடியின் பொலிவான விண்மீன் K1வகையைச் சார்ந்தது இதன்
தோற்றப் பொலிவு எண் + 2.28 மதிப்புடையது. நம் சூரியனை விட 180 மடங்கு பொலிவும், 23
மடங்கு விட்டமும் கொண்டது. கிட்டத்தட்ட 130 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
கூட்டாளி விண்மீன் K1வகையைச் சார்ந்தது இதன் தோற்றப் பொலிவு எண் + 3.51
மதிப்புடையது.
நம் சூரியனை விட 50 மடங்கு பொலிவும்,10 மடங்கு விட்டமும் கொண்டது.
ஒன்றிலிருந்து மற்றொன்று 170AU(வானியல் அலகு) தொலவில் அமைந்து 500 ஆண்டுகள்
சுற்றுக் காலம் பெற்றுள்ளது. இரு விண்மீன்களும் ஹைட்ரஜன் ஹீலியம் ஆக உட்புறம்
மாற்றமடைவது நின்று போன அரக்க நிலை விண்மீன்கள்.
இவற்றின் நிறை குறித்து மதிப்பிட
அவற்றின் சுற்றுப் பாதை குறித்த அதிகத் தகவல்கள் இல்லை. இருப்பினும் சில
கணக்கீடுகள் இவற்றின் நிறை சூரியனின் நிறையைப் போல் இரு மடங்காக இருக்கலாம் என்று
தெரிவிக்கின்றன.
வரிசையில் அடுத்து வருவது அதாஃபெரா(Adhafera)
என்றழைக்கப்படும்
ஜீட்டா லியோனிஸ் (Zeta Leonis) ஆகும்.
இது ஒரு F0
வகை அரக்க விண்மீன். லியோ சிங்கத்தின் பிடரி மயிர் என்ற பொருளில் அதாஃபெரா
என் அழைக்கப்படுகிறது. புவிலிருந்து 274 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த சூரியனின்
நிறையைப்போல் 3 மடங்கு நிறை 6 மடங்கு ஆரம் மற்றும் 85 மடங்கு பொலிவு கொண்ட மங்கிய
விண்மீன்.
புவிலிருந்து 100 ஓளி ஆண்டுகள் தொலைவில் அமைந்த
35 - லியோ (35 - Leo) என்ற விண்மீன் இதன்
ஒளியியல் இரட்டை(Double Star) விண்மீன். ஆனால் இவை இருமை( Binary star)
விண்மீன்கள் இல்லை காரணம் 35 - லியோ புவிலிருந்து 100 ஒளி ஆண்டுகள் தொலைவிலேயே
உள்ளது.
அடுத்து
வருவது ராசலஸ் (Rasalas) மற்றும் அல்ஷீமாலி
(Alshemali)என்ற பெயர்களில் அழைக்கப்படும்
மியூ லியோனிஸ் (μ - Leonis).
இது
புவிலிருந்து 121 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு K2 வகை விண்மீனான இதன் தோற்றப் பொலிவு
எண் + 3.88. இது சுமார் 3.35 பில்லியன் வயதானது. இது குளிர ஆரம்பித்து பெரியதாக பெருக்கத்
தொடங்க்கி சூரியனைப் போல் 11 மடங்கு பெரிய விட்டத்தை பெற்றுள்ளது.
சூரியனைப் போல்
1.5 மடங்கு நிறை கொண்ட து. இன்னும் 50 மில்லியன் ஆண்டுகள் உட்புற ஹீலியம் முழுவதும்
எரிந்து குளிர்ந்து, இன்னும் பெரியதாக வடிவெடுத்து சிவப்பு அரக்க நிலையை அடையும்.
இறுதியாக
மகம் விண்மீன் கூட்டத்தில் வருவது
அல்ஜெனுபி( Algenubi)என்றழைக்கப்படும்
எப்சிலன்
லியொனிஸ் (ε- Leonis).
162
மில்லியன் வயதான G1 வகை பொலிவான அரக்க விண்மீன்.
247
ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சூரியனை விட 4 மடங்கு நிறை, 21 மடங்கு ஆரம்,288 மடங்கு
பொலிவும் கொண்டிருந்தாலும் இதன் தோற்றப் பொலிவு எண் +2.98.
(Regules) விட பொலிவாக இருந்தாலும்
இது ரெகுலஸ், சூரியனிடமிருந்து அமையும் தொலைவைப்
போல் 3 மடங்கு தூரத்தில் இருப்பதும்,
இடையில் உள்ள வாயுக்களாலும், தூசுகளாலும் பொலிவின்றித் தெரிகிறது.
Comments
Post a Comment