அனிச்சைச் செயல்பாடுகள் (Reflux Actions)

 நரம்பியல் செயல்பாடுகள் பலவகைப்படும். அவற்றில் எளியதோர் வகை அனிச்சைச் செயல்.  இதில் ஒரு தூண்டுதல் உடனடி நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது. ஆங்கிலத்தில் அனிச்சைச் செயல்பாடுகள் ரிஃப்ளெக்ஸ் செயல்பாடுகள் (Reflex actions) என்று அழைக்கப்படுகின்றன. “பிரதிபலித்தல்” என்னும் பொருள் தரும் லத்தீன் மொழிச் சொல்லான ரிஃப்ளெக்சஸ் (Reflexus) என்ற சொல்லே ரிஃப்ளெக்ஸ் (Reflex) என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லாகும். இச்சொல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கில நரம்பியல் நிபுணரான மார்ஷல் ஹால் (Marshall Hall) என்பவரால் உயிரியலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று சொல்வதை விட  வடிவமைக்கப்பட்டது என்று கூடச் சொல்லலாம். ஒரு சுவர் மீது வீசி எறியப்பட்ட பந்து எவ்வாறு பிரதிபலிக்கப்படுகிறதோ அதுபோலவே தசைகள் (muscles) ஒரு தூண்டுதலை (stimulus) பிரதிபலிப்பதாக மார்ஷல் ஹால் கருதினார்.

 

 ஒரு தூண்டியால் (stimulus) தசையொன்றில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தசைகளில் தன்னியக்க எதிர்ச் செயல் (automatic response) ஏற்படும். இதன் விளைவாக உட்செல்லும் நரம்பொன்று (afferent nerve) தூண்டப்படும் (excite) நிகழ்வே ரிஃப்ளெக்ஸ் (Reflux) அதாவது அனிச்சைச் செயல் என்று மார்ஷல் ஹால் கருதினார்.

 

 ஆனால் தற்போது, அனிச்சைச் செயல் என்பது ஒரு குறிப்பிட்ட தூண்டி (stimulus) உட்செல்லும் நரம்பைத் (afferent nerve) தூண்டுவதால்  ஒரேமாதிரியான (stereotype) உடனடி எதிர்ச் செயலைத் (immediate response) தசையில் அல்லது சுரப்பியில் ஏற்படுத்தும். ஏற்படுத்தப்படும் உடனடி எதிர்ச் செயலானது சுய உணர்வுக்குத் (consciousness) தொடர்பில்லாத மைய நரம்பு மண்டலத்தின் இயல்பான (inborn), செயல்பாட்டை  விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் நமது மூளையின் கட்டளையின்றி செய்யப்படுகின்ற செயல்தான் அனிச்சைச் செயல். எடுத்துக்காட்டாகத் தும்மல், இருமல் விக்கல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

 

 எந்த ஒரு செயலையும் சிந்தித்துப் பார்த்து, முடிவு எடுத்துச் செயல்படுத்தினால் அது இச்சைச் செயல் ஆகும். அதாவது நமது விருப்பத்தின் அடிப்படையில் நிகழும் செயலாகும். இச்சைச் செயலுக்கான கட்டளை பெரு மூளையிலிருந்து பிறப்பிக்கப்படுகிறது. ஆனால், அனிச்சைச் செயலுக்கான கட்டளை பெரு மூளையிலிருந்து பிறப்பிக்கப்படுவதில்லை. அது தண்டுவடப் பகுதியிலிருந்தும் மூளையின் பிற பகுதியின் உதவியினாலும் பிறப்பிக்கப்படுகிறது.

 பெரும்பாலான அனிச்சை விற்கள் கீழ்க்கண்ட ஐந்து முக்கியமான கூறுகளைக் கொண்டிருக்கும்.

1) ஏற்பிகள் (receptors)

2) உணர்வு நரம்பு செல்கள் அல்லது உணர்வு நியூரான்கள் (sensory neurons) 3) இடைநிலை நியூரான்கள் (interneurons)

4) கட்டளை நியூரான்கள் (motor neurons) மற்றும்

5) செயல்படுத்தும் உறுப்பு  (effector) ஆகியன.

 

 நரம்பு செல்களில் அதாவது நியூரான்களில் ஏற்பிகள் (receptors) எனப்படும் சிறப்பு புரதங்கள் (special proteins) உள்ளன. ஏற்பிகள் அழுத்தம், வலி, அதிர்வுகள், ஒளி போன்ற சூழல்களில் சைகைகளுக்கு (signals) ஏற்றவாறு எதிர்வினையாற்றுகின்றன. உணர்வு நியூரான்கள் (sensory neurons) உணர்வு ஏற்பிகளைக் (sensory receptors) கொண்டுள்ளன. அவை சூழலில் இருந்து பெறப்படும் சைகையால் செயல்படுத்தப்படுகின்றன. தண்டுவடத்துக்குள் பரவியுள்ள செயல்படுத்தப்பட்ட உணர்வு நியூரான்கள் மின்சைகைகளை இடைநிலை நியூரான்கள் (interneurons)  மற்றொரு வகை நியூரான்களுக்கு அனுப்புகின்றன. இடைநிலை நியூரான்கள் பின்னர் கட்டளை நியூரான்களுக்கு (motor neurons) சைகையைக் தொடர் கடத்தல் செய்கிறது மோட்டார் நியூரான்கள் தண்டுவடத்திலிருந்து வெளியேறி தசை, செயல்படுத்தும் உறுப்பு அல்லது சுரப்பியுடன் இணைகிறது. ஆகவே சரியான வரிசையில்  ஒரு உணர்ச்சி ஏற்பி உணர்ச்சி நியூரான், இடைநிலை நியூரான், கட்டளை நியூரான் மற்றும் கடைசி செயல்படுத்தும் உறுப்பு என்று அனிச்சை வில் அமைந்திருக்கும்.

 

கீழ்க்காணும் படம் இதனை எளிதில் விளக்கும்.




பெரும்பாலான அனிச்சைச் செயல்களுக்கு அனிச்சை வில்லில் பல நரம்பிணைப்புகள் (synapse) உண்டு. ஆனால் நீட்டல் அனிச்சையானது (Stretch Reflux) விதிவிலக்கானது. இதில் அனிச்சை வில்லில் இடைநிலை நியூரான் இல்லாமல், இது உட்செல்லும்  நரம்பிழைக்கும் (afferent nerve fibre) கட்டளை நியூரானுக்கும் (motor neuron ) இடையில் ஒரே ஒரு நரம்பிணைப்பைக் (synapse) கொண்டுள்ளது.  ஒரு தீங்கு விளைவிக்கும் ஒரு தூண்டுதலிலிருந்து  கால்களை அகற்றும் நெகிழ்வு அனிச்சைச் செயலில் (flexor reflex), குறைந்தபட்சமாக இரண்டு இடைநிலை நியூரான்கள்(interneurons) மற்றும் மூன்று நரம்பிணைப்புகள் பங்கு பெறும்.


கண்பாவை (Pupil) என்பது கருவிழியின் மையத்தில் உள்ள இருண்ட வட்டவடிவத் திறப்பு. இதன் வழியாகத்தான் ஒளி கண்ணுக்குள் நுழைகிறது. ஒளிப்படக் கருவியுடன் அதாவது கேமராவுடன் ஒப்பிட்டால் கண்பாவை துளைக்கும் கருவிழி (Iris) இடைத்திரைக்கும் சமம்.

கண்பாவையின் ஒளி அனிச்சைச் செயல் ஆங்கிலத்தில் Pupillary Light Reflex (PLR) அல்லது Photopupillary Reflex என்று அழைக்கப்படுகிறது. இது கண்பாவையின் விட்டத்தைக் கட்டுப்படுத்தும் அனிச்சைச் செயலாகும். கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையில் காணப்படும் விழித்திரை கேங்க்லியன் செல்கள் (retinal ganglion cells) மீது விழும் ஒளிச்செறிவிற்கேற்ப எதிர்ச்செயலாற்றி ஒளி மற்றும் இருளின் பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப பார்வையைத் தகவமைப்பதில் உதவுகின்றன.

அதிகச் செறிவான ஒளி கண்பாவையைச் சுருங்கச் செய்து குறைந்த அளவு ஒளியை அனுமதிப்பதன் வாயிலாகவும் அதேசமயம் ஒளியின் குறைந்த செறிவு கண்பாவையைச் விரியச் செய்து அதிக அளவு ஒளியை அனுமதிப்பதன் வாயிலாகவும் கட்டுப்படுத்துகிறது. இச் செயல்பாடுகள் முறையே கண்பார்வை இடுக்கம் (miosis/ myosis – மியோசிஸ்) என்றும் கண்பார்வை விரிவடைதல் (mydriasis – மைட்ரியாஸிஸ்) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு கண்பாவையின் ஒளி அனிச்சைச் செயல் கண்ணுக்குள் நுழையும் ஒளியின் செறிவை ஒழுங்குபடுத்துகிறது. ஒரு கண்ணில் படும் ஒளியின் செறிவு  இரு கண்களின் கண்பாவைகளையும் கட்டுப்படுத்தும்.



நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான அனிச்சைச் செயல் என்பது கண்பாவை ஒளி மறிவினை (Pupillary Light Reflux)  ஆகும். கண்ணின் கருவிழியின் (Iris) நடுவில் அமைந்துள்ள துளைதான் கண்பாவை (Pupil). இது ஒளி விழித்திரையைத் தாக்க அனுமதிக்கிறது. அதாவது கண்பாவைகள் படும் ஒளியின் ஒரு கண்ணுக்கு அருகில் ஒரு ஒளி வீசப்பட்டால், இரு கண்களின் பாவைகளும் சுருங்குகின்றன. ஒளி என்பது தூண்டுதல்; தூண்டுதல்கள் பார்வை நரம்பு வழியாக மூளையை அடைகின்றன; மற்றும் கண்ணுக்கு சப்ளை செய்யும் தன்னியக்க நரம்புகளால் பப்புலரி தசைக்கூட்டுக்கு பதில் தெரிவிக்கப்படுகிறது. கண் சம்பந்தப்பட்ட மற்றொரு அனிச்சை லாக்ரிமல் ரிஃப்ளெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. கண்ணின் கான்ஜுன்டிவா அல்லது கார்னியாவை ஏதேனும் எரிச்சலூட்டும் போது, லாக்ரிமல் ரிஃப்ளெக்ஸ் நரம்பு தூண்டுதல்களை ஐந்தாவது மண்டை நரம்பு (முக்கோண) வழியாக கடந்து நடுப்பகுதியை அடைகிறது. இந்த ரிஃப்ளெக்ஸ் வளைவின் வெளிப்புற உறுப்பு தன்னாட்சி மற்றும் முக்கியமாக பாராசிம்பேடிக் ஆகும். இந்த நரம்பு இழைகள் சுற்றுப்பாதையின் லாக்ரிமல் சுரப்பிகளைத் தூண்டுகின்றன, இதனால் கண்ணீர் வெளியேறுகிறது. இருமல் மற்றும் தும்ம அனிச்சை ஆகியவை மிட்பிரைன் மற்றும் மெடுல்லா ஒப்லோங்காட்டாவின் பிற அனிச்சைகளாகும். இருமல் ரிஃப்ளெக்ஸ் மூச்சுக்குழாயில் ஒரு எரிச்சலால் மற்றும் மூக்கில் ஒருவரால் தும்மல் ரிஃப்ளெக்ஸ் ஏற்படுகிறது. இரண்டிலும், ரிஃப்ளெக்ஸ் பதில் பல தசைகளை உள்ளடக்கியது; எரிச்சலை வெளியேற்றுவதற்காக சுவாசத்தின் தற்காலிக குறைபாடு இதில் அடங்கும். முதல் அனிச்சை கருப்பையில் உருவாகிறது. கருத்தரித்த ஏழு மற்றும் ஒன்றரை வாரங்களுக்குள், முதல் பிரதிபலிப்பைக் காணலாம்; கருவின் வாயைச் சுற்றியுள்ள தூண்டுதல் உதடுகளை தூண்டுதலை நோக்கித் திருப்புகிறது. பிறப்பால், உறிஞ்சும் மற்றும் விழுங்கும் அனிச்சை பயன்படுத்த தயாராக உள்ளன. குழந்தையின் உதடுகளைத் தொடுவது உறிஞ்சுவதைத் தூண்டுகிறது, மேலும் அதன் தொண்டையின் பின்புறத்தைத் தொடுவது விழுங்குவதைத் தூண்டுகிறது.

Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)