Posts

Showing posts from June, 2020

உடுத் தொகுப்புகளின் குடும்பங்கள் (Constellation families)

Image
உடுத் தொகுப்புகளின் பெயர்களுமே (Names of the Constellations) , உடுக்களின் பெயர்களைப் (Names of the stars) போலவே, பலவிதமான மூலங்களிலிருந்து வந்தவை. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கதையும் பொருளும் கொண்டவை. பழைய உடுத் தொகுப்புகளின் பெயர்கள் பொதுவாகக் கிரேக்க புராணங்களிலிருந்து வந்தவை. அதே நேரத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட உடுத் தொகுப்புகள் பெரும்பாலும் அறிவியல் கருவிகள் மற்றும் விலங்குகளைக் கொண்டு பெயரிடப்பட்டன. உடுக்களுடன் தொடர்புடைய கதைகள் ஒரு உடுத் தொகுப்பிற்கும் அடுத்த உடுத் தொகுப்பிற்கும் இடையிலேயே வேறுபடுவதால் பெயரிடுவதில் கண்டிப்பான விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இராசி உடுத் தொகுப்புகளைப் (zodiac constellations ) போலவே கிரேக்க அல்லது ரோமானியத் தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள கதாபாத்திரங்களைக் குறிக்கும் பல உடுத் தொகுப்புகளின் பெயர்கள் அநேகமாக நமக்கு நன்கு அறிமுகமானவைதான்.  இவை கிமு (BCE) இரண்டாம் (2) ஆம் நூற்றாண்டில் கிரேக்க வானியலாளர் தாலமியால் (Ptolemy)   உருவாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. கிளாடியஸ் தாலமி எண்பத்தெட்டு (88) உடுத் தொகுப்புகளும் எட்டு (8) குடும்பங்களாக...

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (6)

Image
ரோகிணி என்று இந்தியர்களால் குறிப்பிடப்படும் ஆல்டிபரான் (Aldeberan) வானத்து ரிஷபத்தின் (Taurus) வலது கண்ணையும், ஐன் (Ain) , என்னும் எப்சிலன் டவ்ரி (ε Tauri) இடது கண்ணையும் குறிக்கிறது. ரோகிணி பூமியிலிருந்து 65 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு ஆரஞ்சு ராட்சத நட்சத்திரமாகும். ஒளி நொடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும். அந்த வேகத்தில் ஒளி ஒரு ஆண்டுக் காலத்தில் கடக்கும் தொலைவே ஒரு ஒளியாண்டு. இரவு வானத்தின் பொலிவான உடுக்களில் 14 வது பொலிவான உடுவாகவும், ரிஷபராசி உடுத் தொகுப்பில் உள்ள உடுக்களிலேயே பொலிவான உடுவாகவும் ஆல்டிபரான் விளங்குகிறது.  ஆல்டெபரான் மொத்தத்தில் சூரியனை விடச் சுமார் 518 மடங்கு பொலிவுடனும், அதன் கட்புலனாகும்  ஒளியைப் (Visible light ) போல் 153 மடங்கு பொலிவு மிக்கதாகவும் உள்ளது. ஆல்டிபரான்  என்ற பெயரின் மூலம் “பின்தொடர்பவர்” (follower) என்று பொருள் தரும் அரபி வார்த்தையான அல் – தபரன் (Al – Dabaran) ஆகும். கார்த்திகை உடுக் கொத்தை (Pleiades Star Cluster)  வானத்தில் விடாமல் பின் தொடருகிறது ரோகிணி என்ற பொருளில் அவ்வாறு அரபி மொழியில் சொல்ல...

கிரகணங்கள் - ஒரு பார்வை

Image
பூமி சூரியனைச் சுற்றும் அதே பாதையில் சந்திரனும் பூமியைச் சுற்றி வந்தால் இரண்டின் சுற்றுப் பாதைகளும் ஒரே தளத்தில்  அமைந்திருக்கும். அந்த மாதிரியான நிலையில் ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணமும், ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணமும் நிகழும். காரணம் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே அச்சில் நேராக அமையும் போது கிரகணம் நிகழ்கிறது.  பூமியின் சுற்றுப்பாதையும், சந்திரனின் சுற்றுப்பாதையும் நீள்வட்டமாக உள்ளன. மேலும் சந்திரனின் சுற்றுப்பாதை 5.1o  கோணம் புவியின் சுற்றுப்பாதைக்குச் சாய்வாக அமைந்துள்ளது. ஆகவே கிரகணத்தளமும், சந்திரனின் சுற்றுத் தளமும் ஒன்றாக இல்லை. இதனால் இம் மூன்றும் ஒர் அச்சில் நேராக அமைவது 34.5 நாட்கள் இடைவெளிக்குள் மட்டுமே நிகழ இயலும். இதையே கிரகணப் பருவம் என்கிறோம்.  கிரகணம் கிரகணப் பருவங்கள் (Eclipse seasons) என்பவை வானில் திரும்பத் திரும்ப நிகழும் சுழற்சிகளில் ஒன்றாகும். கிரகணப்பருவங்கள் ஆறு நாட்காட்டி மாதங்களுக்குச் (Calendar months) சற்றுக் குறைவாக 173.3 நாட்கள்  சுழற்சிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன.  எனவே பெரும்பாலான நேரங்...

05.06.2020 , 04.07.2020 சந்திர கிரகணங்கள் மற்றும் 21.06. 2020 சூரிய கிரகணம்

Image
2020 ஆம் ஆண்டில் மொத்தம் ஆறு கிரகணங்கள்  ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு சந்திர கிரகணங்கள் (Lunar Eclipses) ,  இரண்டு சூரிய கிரகணங்கள் (Solar Eclipses) . அதில் இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 10 தேதியில் நிகழ்ந்து விட்டது.   ஆகவே இவ்வாண்டில் அடுத்து இன்னும் மூன்று சந்திர கிரகணங்களும்  இரண்டு சூரிய கிரகணங்களும் நிகழ உள்ளன. வரும் ஜூன் 5,6 , ஜூலை 4, 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் மேற் சொன்ன மூன்று சந்திர கிரகணங்களும் , சூரிய கிரகணங்கள் ஜூன் 21 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் நிகழ இருக்கின்றன . சந்திர கிரகணம் எப்போதுமே பௌர்ணமி நாளில் மட்டுமே நடை பெறும். அதே போல சூரிய கிரகணம் அமாவாசை நாளில் மட்டுமே நிகழும். கிரகணம் என்பது சூரியனின் ஒளி மறைக்கப்படும் நிகழ்வு. இங்கு சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன நம்மிடம் உள்ளன. இதில் நேரடியாக ஒளியைத் தருவது சூரியன்.  சந்திரன் சூரிய ஒளியை எதிரொளிக்க மட்டுமே  செய்கிறது.  அதாவது சூரிய ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ புவி மீது படாமல் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில...

அறிவியல் பார்வையில் அமில - கார உணவுகள் பகுதி (1)

Image
இப்போது நாம் உண்ணும் உணவை (Diet) அமிலத்தன்மை கொண்ட உணவுகள் (Acidic foods) என்றும் காரத்தன்மை கொண்ட உணவு (Alkaline foods) என்றும் பிரித்து வகைப்படுத்துகிறார்கள். அன்றாடம் உண்ணும் உணவை அமிலத்தை உருவாக்கும் உணவுகளுக்குப் பதிலாக காரத்தனமை கொண்ட உணவுகளுக்கு  மாற்றிக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடை குறைப்பது மட்டுமின்றி முடக்குவாதம், புற்று நோய் போன்ற கடுமையான நோய்களைக்கூட எதிர்க்கும் ஆற்றலைத் தருகிறது என்ற கருத்து, காரத் தன்மை கொண்ட உணவை ஆதரிப்பவர்களால் முன் வைக்கப்படுகிறது. பின்வரும் கட்டுரை இக்கருத்தை அறிவியல்பூர்வமாக அணுகுகிறது. அமிலங்கள், காரங்கள் மற்றும் pH மதிப்பு : முதலில் சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். பள்ளிக் கூடத்தில் அடிப்படை வேதியல் பாடத்தில் அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிப் படித்திருக்கலாம். லிட்மஸ் காகிதம் அல்லது கரைசல் போன்ற குறிகாட்டிகள் அமிலத்தன்மையுள்ள பொருட்களையும்  காரத்தன்மையுள்ள பொருட்களையும் இனம் பிரித்துக் காட்டும் என்றும் அமிலங்கள் நீல லிட்மசை சிவப்பாகவும்,காரங்கள் சிவப்பு லிட்மசை நீல நிறமாகவும் மாற்றும் என்றும் நாம் அறிந்த...