இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (4)
இப்போது மேஷ ராசி வரலாறு குறித்து அறிந்து கொள்வோம்.
ஆரம்பத்தில் பாபிலோனியர்கள் மேஷ உடுத் தொகுப்பை விவசாயி என்றுதான் அடையாளப்படுத்தினார்கள்.
அப்புறம் மெசப்படோமியக் கடவுள் டு முசி (Dumuzi) யுடன் தொடர்புபடுத்தப்பட்டு ஞாயிறின்
சுற்றுப்பாதையின் கடைசி நிறுத்தமாக இருந்தது. அப்புறம் என்ன காரணத்தாலோ தெரியவில்லை
அதனைச் செம்மறி ஆட்டுக்கிடா (Ram) ஆக மாற்றிக்
கொண்டனர்.
கிமு ஏழாம் நூற்றாண்டில் புதிய பாபிலோனியர்களால்
(Neo Babylonians) இந்த ராசித் திருத்தம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் திருத்தம்
வசந்த சம இரவு நாளுக்கு (Vernal Equinox) அருகில் ஹாமலைக் (α – ஏரியெட்டிஸ்) கொண்டு வந்தது. இந்த வகையில்தான்
சோதிடத்தில் மேஷராசி முக்கியத்துவம் பெற்றது. அந்தக் காலத்தில் மேஷராசியில் வசந்த சம
இரவு நாள் (Vernal Equinox) இருந்தது. ஆனால் புவியின் முந்து நிலை இயக்கம்
(Precession) என்னும் புவியின் மெதுவான சுழற்சி அச்சின் தள்ளாட்டம் காரணமாக வசந்த உத்திராயணம்
அல்லது சம இரவு நாள் மேஷத்திற்குப் பதில் தற்போது மீனத்தில் உள்ளது. கிமு 130 ஆண்டில்
வசந்த உத்திராயணம் மெசர்திம் என்ற காமா
γ - ஏரியெட்டிஸ் (Mesarthim – γ Arietis ) க்குத் தெற்கில் இருப்பதாகக் கொள்ளப்பட்டு இராசியின் தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
எங்கள் சிறுவயதில் வீட்டில் கூடவே இருந்த தாத்தா, பாட்டி, அத்தை என்று வயதானவர்களிடம் கதை கேட்டே வளர்ந்தோம். இரவில் வானில் தெரியும் ஒவ்வொரு விண்மீனுக்கும் ஒரு கதையைக் கைவசம் அவர்கள் வைத்திருப்பர்கள். அவர்களின் மூலமாகவே இந்த வானியல் ஆர்வம் தொற்றிக் கொண்டது. இப்போதும் நம் குழந்தைகள் அல்லது பேரக் குழந்தைகளுக்கு வானில் உடுக்களைக் காட்டிக் கதை சொல்லுங்கள். அவர்கள் தொலைக்காட்சி மற்றும் கைபேசியில் செலவிடும் நேரம் குறைந்து வாழ்க்கையின் பிற இனிமைகளை இரசிக்கத் தொடங்க வாயப்பு உருவாகும். இங்கு சொல்லப்பட்ட கிரேக்க புராணக் கதைகள் உங்கள் குழந்தைகளுக்கு பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்லிச் சாப்பிட வைக்க அல்லது தூங்க வைக்கப் பயன்படக் கூடும்.
γ - ஏரியெட்டிஸ் (Mesarthim – γ Arietis ) க்குத் தெற்கில் இருப்பதாகக் கொள்ளப்பட்டு இராசியின் தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
https://www.phy.olemiss.edu/~perera/animations/precession.html
எங்கள் சிறுவயதில் வீட்டில் கூடவே இருந்த தாத்தா, பாட்டி, அத்தை என்று வயதானவர்களிடம் கதை கேட்டே வளர்ந்தோம். இரவில் வானில் தெரியும் ஒவ்வொரு விண்மீனுக்கும் ஒரு கதையைக் கைவசம் அவர்கள் வைத்திருப்பர்கள். அவர்களின் மூலமாகவே இந்த வானியல் ஆர்வம் தொற்றிக் கொண்டது. இப்போதும் நம் குழந்தைகள் அல்லது பேரக் குழந்தைகளுக்கு வானில் உடுக்களைக் காட்டிக் கதை சொல்லுங்கள். அவர்கள் தொலைக்காட்சி மற்றும் கைபேசியில் செலவிடும் நேரம் குறைந்து வாழ்க்கையின் பிற இனிமைகளை இரசிக்கத் தொடங்க வாயப்பு உருவாகும். இங்கு சொல்லப்பட்ட கிரேக்க புராணக் கதைகள் உங்கள் குழந்தைகளுக்கு பேரக் குழந்தைகளுக்கு கதை சொல்லிச் சாப்பிட வைக்க அல்லது தூங்க வைக்கப் பயன்படக் கூடும்.
இனி வருவது கிரேக்க மற்றும் இந்திய தொன்மக் கதைகள். முதலில் கிரேக்கத் தொன்மக் கதை. கிரேக்கர்களைப் பொறுத்தவரையில் மேஷம் என்பது ஒரு
தங்க ரோமங்கள் கொண்ட தெய்வீகச் செம்மறி ஆட்டுக்கிடா (Ram). ஆட்டுக்கிடாவின் வளைந்த கொம்புகளே மேஷராசியின் குறியீடாக
வைக்கப்பட்டுள்ளது.
போயோட்டியாவின் (Boeotian) மன்னர் அதமாஸ் (Athamas). மன்னர் அதமாஸ் விருப்பமின்றித் திருமணம்
செய்து கொண்ட மனைவி நேபெல் (Nephele). நேபெல் மூலம் ஃபிரிக்ஸஸ் (Phrixus) மற்றும் ஹெல் (Helle) என்ற இரட்டையர்கள் அதமாஸ் மன்னருக்குப் பிறந்தனர். பிடிக்காத மணவாழ்க்கையால் மகிழ்ச்சியற்றிருந்த
மன்னர் அதாமாசின் பார்வை அண்டை நாடான தீபஸைச் (Thebes) சேர்ந்த காட்மஸ் (Cadmus)
மன்னரின் மகள் இன்னோவிடம் (Ino) திரும்பியது. இன்னோவை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து
கொண்டார். ராணி இன்னோவிற்கு நேபெல் குழந்தைகளான
ஃபிரிக்ஸஸ் மற்றும் ஹெல்லைக் கட்டோடு பிடிக்காது.
மேலும் அவர்களைக் கொல்ல ஒரு சதித்திட்டத்தையும்
ஏற்பாடு செய்தார். செயற்கையாக வறட்சியை உருவாக்கினால் கோதுமை விவசாயம் தோல்வி
அடையும். அதனால் நாடு பஞ்சத்தை நோக்கித் தள்ளப்படும் சூழலை வலிந்து இன்னோ
உருவாக்கினாள். பஞ்சத்தைப் போக்க டெல்பியின் ஆரக்கிளிடம் (Delphic oracle - Pythia) குறி
கேட்டு பரிகாரம் அறிய அதாமாஸ் ஒரு தூதனை அனுப்பினார். இனோ அந்த தூதனுக்கு லஞ்சம்
கொடுத்து அறுவடையை காப்பாற்றிப் பஞ்சம் ஏற்படாதிருக்க வேண்டுமானால் ஃபிரிக்ஸஸ், ஹெல்
இருவரும் அறுவடைக்கு முன்பாகப் பலியிடப்பட வேண்டும் என்ற தவறான பதிலைக் குறிசொல்லி
சொன்னதாகச் சொல்லச் செய்தாள்.
இனோவின் இந்தச் சூழ்ச்சியை அறியாத அதமாஸ் மக்களையும் நாட்டையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்றத் தனது மகனைக் கொஞ்சமும் தயக்கமின்றிப் பலியிட
படம் : டெல்பியின் ஆரக்கிள்
நன்றி : https://brewminate.com/consultation-with-apollos-pythia-at-ancient-delphi/
இனோவின் இந்தச் சூழ்ச்சியை அறியாத அதமாஸ் மக்களையும் நாட்டையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்றத் தனது மகனைக் கொஞ்சமும் தயக்கமின்றிப் பலியிட
லாபிஸ்டியம்(Laphystium) மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றார். அவர் ஜீயஸுக்கு (Zeus) ஃபிரிக்ஸஸைப் பலியிட்டு மக்களைப் பஞ்சத்திலிருந்து காப்பாற்றத் தியாகம் செய்யவிருந்தார். மேகத்திற்கான தேவதையான நெஃபெலெ தனது மகனைக் காப்பாற்றும் பொருட்டுத் தலையிட்டு, வானத்திலிருந்து சிறகுடைய ஒரு தங்க ரோமம் கொண்ட ஆட்டுக்குட்டியை அனுப்பினார்.
ஃபிரிக்ஸஸ் உயிருக்கு அஞ்சித் தனது சகோதரி ஹெல்லுடன் சேர்ந்து தங்க ரோமம் கொண்ட ஆட்டுக்குட்டியின் முதுகில் ஏறிக் கொண்டார். அவர்கள் கிழக்கு நோக்கி காகசஸ் (Caucasus) மலைகள் (நவீன ஜார்ஜியா) கீழ் கருங்கடலின் கிழக்கு கரையில் அமைந்துள்ள கொல்கிஸுக்கு (Colchis) பறந்தனர். வழியில் ஹெல்லின் பிடி நழுவியது. அவர் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் டார்டனெல்லெஸ் (Dardanelles) கால்வாயில் விழுந்தார். கிரேக்கர்கள் அவரது நினைவாக அந்த இடத்துக்கு ஹெலெஸ்பாண்ட் (Hellespont) என்று பெயரிட்டனர்.
கொல்கிஸை அடைந்ததும், ஜீயஸுக்கு நன்றியுடன் பிரிக்ஸஸ் தங்க ரோமம் கொண்ட ஆட்டுக்குட்டியைப் பலியிட்டார். அவர் பின்னர் அதன் தங்க உரோமம் கொண்ட மேற்தோலை கொல்கிஸின் மன்னர் ஈட்டெஸுக்குப் (Aeetes) பரிசாக வழங்கினார். அதற்கு பதிலாக, ஃபிரிக்ஸஸுக்கு தனது மகள் சால்சியோப்பினை (Chalciope) மணமுடித்து வைத்தார் . நெஃபெலெ((Nephele) தனது மகனைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நட்சத்திரங்களிடையே ஆட்டுக் கிடாவின் (Ram) உருவத்தை வைத்தார்.
படம்: தங்க ரோமம் கொண்ட ஆட்டுக்குட்டி
https://in.pinterest.com/pin/558798266234841553/
https://in.pinterest.com/pin/96897829457522082/
தங்க உரோம ஆட்டுக் கிடாவிற்கு அழிவே கிடையாது. அதனால் அதைப் பலியிடுவது மிகவும் சிக்கலானது என்று எரடோஸ்தீனஸ் (Eratosthenes) கூறியதாகவும் அதனால் பிறிதொறு பதிப்பில், தங்க ரோமம் கொண்ட ஆட்டுக்குட்டி (Ram)தன்னுடைய தங்க உரோம மேற்தோலைத் தானே கொட்டிவிட்டு, அதன் சொந்த விருப்பப்படி வானத்தில் பறந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. தங்க உரோம தோலை ஆட்டுக்கிடா கழற்றி விட்டுச் சென்றதால் மேஷராசி உடுவானது அதிகமாகப் பொலிவின்றி மங்கிக் காணப்படுகிறது என்று புராணவியலாளர்களால் காரணம் கூறப்பட்டது.
ஃபிரிக்ஸஸ் இறப்பிற்குப் பின்னர், அவரது உறவினர் பெலியாஸ் (Pelias) தெசலியில் (Thessaly) உள்ள அயோல்கஸின் (iolcus) சிம்மாசனத்தைக் கைப்பற்றினார். சிம்மாசனத்தின் உண்மையான வாரிசு ஜேசன் (Jason). ஃபிரிக்ஸஸின் ஆவி உறவினர் பெலியாஸைத் (Pelias) துன்புறுத்துவதற்காக கிரேக்கத்திற்குத் திரும்பியது. கொல்கிஸில் இருக்கும் தங்க ரோம ஆட்டுத்தோலை நாட்டிற்கு கொண்டு வந்தால் ஜேசனுக்கு அரியணையை விட்டுக்கொடுப்பதாக பெலியாஸ் உறுதியளித்தார். இதுவே ஜேசன் மற்றும் ஆர்கோனாட்ஸின் (Argonauts) காவியப் பயணத்திற்கு (Epic voyage) வழிவகுத்த சவாலாக அமைந்தது.
ஜேசன் கொல்கிஸை அடைந்ததும், மன்னர் ஈஸ்டெஸை பணிவுடன் தங்க உரோம ஆட்டுத்தோலை தனக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். தங்க ரோம ஆட்டுத்தோல் புனிதமான ஓக் மரம் ஒன்றின் மீது தொங்கவிடப்பட்டிருந்தது. அதை எப்போதுமே உறங்காத பாம்பு ஒன்று பாதுகாத்து வந்தது. ஜேசனின் கோரிக்கையை மன்னர் ஈட்டெஸ் (Aeetes) நிராகரித்து விட்டார். இந்த பயணத்தில் அதிர்ஷ்டவசமாக ராஜாவின் மகள் மீடியா (Medea) ஜேசன் மீது காதல் கொண்டிருந்ததால் தங்க உரோம ஆட்டுத்தோலைத் திருடுவதற்கு உதவ முன்வந்தார்.
https://www.theoi.com/Gallery/M20.3.html
இரவில் இருவரும் காட்டிற்குள் நுழைந்து, தங்க உரோம ஆட்டுத்தோல் மாட்டப்பட்டிருந்த இடத்தை அடைந்தனர். தங்க உரோம ஆட்டுத்தோல் உதய சூரியனால் ஒளிரும் மேகத்தைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. மீடியா பாம்பை மயக்கினாள், அதனால் ஜேசன் தங்க உரோம ஆட்டுத்தோலைப் பறித்தபோது பாம்பு உறங்கியது. அப்பல்லோனியஸ் ரோடியஸின் கூற்றுப்படி, ஆட்டுத்தோல் இளம் பசு ஒன்றை மூடும் அளவிற்குப் பெரியதாக இருந்தது. ஜேசன் அதை தோள்பட்டைக்கு மேல் சாய்த்தபோது அது அவரது கால்கள் வரை நீண்டு இருந்தது. ஜேசனும் மீடியாவும் தங்கக் கம்பள ஆட்டுத் தோலுடன் தப்பிக்கும் போது தரையே அதன் பளபளப்பால் பிரகாசித்தது.
ஏட்டெஸ் மன்னர் அனுப்பிய படைகளின் பின்தொடர்தல் அபாயத்திலிருந்து விடுபட்டவுடன், ஜேசன் மற்றும் மீடியா ஆகியோர் தங்கள் திருமண படுக்கையின் மேல் விரிப்பாகத் தங்கக் கம்பள ஆட்டுத் தோலைப் பயன்படுத்தினர். இறுதியாக ஜேசன் கிரேக்கத்திற்கு திரும்பியபோது ஆர்கோமெனஸில் உள்ள ஜீயஸின் கோவிலில் தங்க உரோம ஆட்டுத் தோலைக் கட்டித் தொங்கவிட்டார்.
கிரேக்கர்கள் இந்த உடுத் தொகுப்பை Κριός (Krios) கிரியோஸ் என்று அறிந்திருந்தனர். மேஷம் (Aries) என்பது லத்தீன் பெயர். பழைய நட்சத்திர வரைபடங்களில் ஆட்டுக்கிடா இறக்கைகள் இல்லாமல் ரிஷபத்தை (Tarus) நோக்கித் தலையைத் திருப்பிய நிலையில் காட்டப்பட்டுள்ளது. வானத்தில் இது ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. அதன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் மூன்று நட்சத்திரங்களின் வளைந்த கோடு. இது அதன் தலையைக் குறிக்கிறது. இந்த மூன்று நட்சத்திரங்களில் முன்னர் சொன்னது போல் ஆல்பா அரியெடிஸ் ஹமால் என்று அரபு மொழியில் ஆட்டுக்குட்டி. பீட்டா அரியெடிஸ் என்பது ஷெரட்டன், அரபு மொழியில் பொருள் ‘இரண்டு’. இரண்டு கொம்புகள் அல்லது இரண்டு உடுக்கள் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். முதலில் பீட்டா அரியெடிஸ் உடுவிற்கும் அதன் அண்டை உடுவான காமா அரியெடிஸுக்கும் சேர்த்தே ஷெரட்டன் என்று பயன்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் பீட்டா அரியெடிஸுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதால் காமா அரியெடிஸ் என்ற மெசார்த்திம்,
அல் - ஷெரட்டன் சிதைந்த வடிவமேயாகும்.
மேஷத்தின் புராணமும் தங்க ரோம் ஆட்டுத் தோல் கதையும் ஹோமர் அவற்றை எழுதுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே சொல்லப்பட்டது.
விரைவில் சந்திப்போம்
மிக அருமை, கதையின் மூலம் உடுத்தொகுப்பையும் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ளமுடியும்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. நன்றி முத்துக்குமார். நீங்கள் தொடர்ந்து படியுங்கள். உங்களைப் போல ஆர்வமுள்ள சிலருக்காகவே எழுதி வருகிறேன்.
Delete