இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (1)
மேஷ இராசி - அஸ்வினி, பரணி
உடுக்கள் (Stars) 27 இல் மேஷ (Aries) ராசியில் அடங்கிய
உடுக்கள் அசுபதியும், பரணியும். அசுபதியை அஸ்வினி
என்றும் அழைப்பதுண்டு. புவியிலிருந்து நம் பார்வைக்குக் கதிரவன் (ரவி) தோராயமாக ஏப்ரல்14
முதல் மே 13 வரையிலான காலத்தில் மேஷ (Aries) ராசிக்கு முன்னாலிருப்பது போலத் தோன்றும்.
கதிரவன் எந்த இராசிக்கு முன்னிருப்பது போலத் தெரிகிறதோ அந்த இராசியின் பெயரால் அந்த
மாதம் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாகச் சித்திரை மாதம் என்பதை மேஷ ரவி என்றும்
குறிப்பிடுவார்கள். இவ்வாறு சித்திரை முதல்
பங்குனி வரையிலான 12 மாதங்களையும் 12 இராசிகளின் பெயர்களால் குறிப்பிடுவதுண்டு.
சித்திரை – மேஷரவி, வைகாசி – ரிஷபரவி, ஆனி – மிதுனரவி,

ஆடி – கடகரவி, ஆவணி – சிம்மரவி, புரட்டாசி – கன்னிரவி,
ஐப்பசி – துலாரவி, கார்த்திகை – விருச்சிகரவி, மார்கழி – தனுர்ரவி,
தை – மகரரவி, மாசி – கும்பரவி, பங்குனி – மீனரவி
என்று சொவதன் பொருள் அந்த ராசிக்கு அருகில் கதிரவன் இருப்பதாகத்
தோன்றுவதைச் சுட்டுவதற்கே.
2020 ஆம் ஆண்டின் சித்திரை மாதம் என்பது மேஷரவி அதாவது புவியிலிருந்து
நோக்கக் கதிரவன் மேஷராசி உடுக்களுக்கு எதிரே இருப்பதாகத் தோன்றும் மாதம். தமிழ் மரபில் மேஷரவி
அதாவது சித்திரை மாதம் 15.04.2020 முதல் 14.05.2020 வரையிலான காலம் என்று கொள்ளப்படுகிறது. ஆனால் மேற்கத்திய மரபில் ஒவ்வொரு மாதமும் 21 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரையான காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. காரணம் அவர்கள் மார்ச் 21 ஆம் தேதியை சம இரவு நாளாகக் கொள்கின்றனர். இதுவே தமிழ் மரபில் சித்திரை 1 தேதியை (ஏப்ரல் 15) சம இரவு நாளாகக் கருதுவதால் இந்த வேறுபாடு காணப்படுகிறது.
மேற்கத்திய மரபில் வட அரைக் கோளத்தில் சம இரவு நாட்கள் (Equinox) பொதுவாக மார்ச் 20 - 21 மற்றும் செப்டம்பர் 20 - 22 என்றும்
கதிர்த் திருப்பு நாள் (Solstice) ஜூன் 20 - 21 மற்றும் டிசம்பர் 20 - 22 என்றும் கொள்ளப்படுகிறது.
தமிழ் மரபில் வட அரைக் கோளத்தில் சம இரவு நாட்கள் (Equinox) பொதுவாக சித்திரை 1 மற்றும் ஐப்பசி 1 என்றும்
கதிர்த் திருப்பு நாள் (Solstice) ஆடி1 மற்றும் தை 1 என்றும் கொள்ளப்படுகிறது.
இதனை ஒரு எளிய ஒப்பீடு மூலம் விளங்கிக் கொள்ளலாம். தனி ஊசல் சோதனை நாம் அனைவரும் அறிந்ததே. அதில் ஓய்வுப்புள்ளிக்கு இருபுறமும் ஊசல் குண்டு இடதும் வலதுமாக அலைவதை அறிவோம்.
இங்கு புவிலிருந்து நோக்கும் போது ஞாயிறு புவியின் நில நடுக் கோட்டிற்கு வடக்கும் தெற்குமாக அலைவது போல் தோன்றுகிறது.
தை 1 - கதிர்த் திருப்பம் (உத்திராயணம்). அதாவது தென் கோடிக்குச் சென்றபின் மீண்டும் நில நடுக் கோட்டை நோக்கி வடக்காகத் திரும்புதல். இது ஊசல் வலது கோடிக்குச் சென்றபின் (Extreme point) மீண்டும் நடுநிலை ஓய்வுப்புள்ளியை (Mean position) நோக்கி இடமாக வருதல் போல
சித்திரை 1 - கதிரவன் நில நடுக்கோட்டிலிருந்து மேலும் வடக்காக இயக்கம். அதாவது தனிஊசல் நடுநிலை ஓய்வுப்புள்ளியிலிருந்து மேலும் இடமாகச் செல்வது போல
ஆடி 1 - கதிர்த் திருப்பம். அதாவது வட கோடிக்குச் சென்றபின் மீண்டும் நில நடுக் கோட்டை நோக்கித் தெற்காகத் திரும்புதல். இது ஊசல் இடது கோடிக்குச் சென்றபின் (Extreme point) மீண்டும் நடுநிலை ஓய்வுப்புள்ளியை நோக்கி வருதல் போன்றது.
ஐப்பசி 1 - கதிரவன் நில நடுக்கோட்டிலிருந்து மேலும்தெற்காக இயக்கம். அதாவது தனிஊசல் நடுநிலை ஓய்வுப்புள்ளியிலிருந்து மேலும் வலமாகச் செல்வது போன்றது.
தற்காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு பற்றி பல விவாதங்கள். அதில் தலையிட விரும்பவில்லை. இயற்பியலில் தனி ஊசலோ அல்லது வேறு அலைவுகளையோ எண்ணும் போது ஓய்வு நிலைப்புள்ளியை வலமிருந்து இடமாக ஊசல் குண்டு கடக்கும் போது சுழி(zero) என்று எண்ணத் துவங்குவது வழக்கம். அதைப் போல அந்த நாட்களிலும் தமிழர்களும் வருடத்தின் துவக்கத்தை சித்திரை முதல் நாளிலிருந்து துவங்கியிருக்கலாம்.
நாம் கிழக்காக நின்றால் இடப்புறம் வடக்கும் வலப்புறம் தெற்குக்காவும் இருக்கும் தனி ஊசல் அலைவைப் போல ஞாயிறின் தோற்ற அலைவைக் கருதி இப்படித் தமிழர்கள் புத்தாண்டு நாளை அனுசரித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
இது என் தனிப்பட்ட சிந்தனை. அதில் அரசியலைப் புகுத்தி இதில் கருத்திடுதலை நான் விரும்பவில்லை. அப்படி இடுவது கண்டிப்பாக நீக்கப்படும்.
இந்த மாதத்தில் அமாவாசையில் நிலவு மேஷ இராசியில் அசுபதி உடுவிற்கு நேராக இருப்பது போல் தோன்றும் (23.04.2020 வியாழக்கிழமை). நிலவின் ஒளிபடாத இருண்ட பக்கம் புவியை நோக்கி அன்று இருக்கும். நிலவு ஒரு நாள் முழுவதும் அதாவது 60 நாழிகைக் காலம் ஒரு உடுவிலும், கதிரவன் ஒரு மாதம் முழுவதும் ஒரு இராசியிலும் இருக்கும் என்று கொள்ளப்படுகிறது. இதுவே பௌர்ணமியன்றும் நிலவு கதிரவனுடன் நேர் கோட்டில் இருந்தாலும், அமாவாசை அன்று இருந்த நிலைக்கு 180 o கோணம் எதிராக ஒளி விழும் பக்கம் புவிக்கு நேராக இருப்பது போல் அமையும். எடுத்துக் காட்டாக 2020 ஆண்டு முன்னர் சொன்ன சித்திரை மாதப் பௌர்ணமியை எடுத்துக் கொள்வோம்.
சித்திரை மாதம் அதாவது மேஷரவி. ஆனால் நிலவு எதிர்த் திசையில் அக்டோபர் மாதம் கதிரவன் முன்னிருப்பதாகத் தோன்றும் துலா இராசியில் (24.04.2020 வியாழக்கிழமை) சுவாதி உடுக் கூட்டத்தில் காணப்படுவதாகத் தோன்றும். கீழக் காணும் படம் இதனை எளிதில் விளக்கக் கூடும்.
பொதுவாக மேற்கத்திய வானியல் இராசி உடுக்கூட்டம் நம் இந்திய இராசி உடுக்கூட்டத்துடன் வேறுபட்டிருக்கும். காரணம் கால அளவு முறைகளில் இரு முறைகளுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு ஆகும். நம் முன்னோர்கள் கட்புலனாகும் உடுக்களைக் கொண்டு இராசிகளை உருவாக்கியுள்ளனர். இன்று வழங்கப்படும் உடுக்கான தேவ நேயப் பாவாணர் சூட்டிய தமிழ்ப் பெயர்களைக் காண்போம். அதே போல் பண்டைய கால அளவுகளையும் தற்கால அளவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

தமிழறிஞர் மறைந்த தேவநேயப் பாவாணர் இராசிகளில் சொல்லப்படும்
27 உடுக்களுக்குச் சூட்டிய தமிழ்ப் பெயர்கள்
அஸ்வினி – புரவி, பரணி – அடுப்பு, கார்த்திகை – ஆரல், ரோகிணி – சகடு
மிருகசிரீஷம் – மான்தலை, திருவாதிரை – மூதிரை, புனர்பூசம் – கழை,
பூசம் – காற்குளம், ஆயில்யம் – கட்செவி, மகம் – கொடுநுகம், பூரம்
– கணை,
உத்திரம் – உத்திரம், அஸ்தம் – கை, சித்திரை – அறுவை, சுவாதி – விளக்கு,
விசாகம் – முறம், அனுஷம் – பனை, கேட்டை – துளங்கொளி, மூலம் – குருகு,
பூராடம் – உடைக்குளம், உத்திராடம் – கடைக்குளம், திருவோணம் – முக்கோல்,
அவிட்டம் – காக்கை, சதயம் – செக்கு, பூரட்டாதி – நாழி, உத்திரட்டாதி
– முரசு,
ரேவதி – தோணி.
அடுத்ததாக நாம் காணப்போவது பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய கால அளவுகள்.
படத்தில் காட்டியுள்ளபடி, புவி சூரியனைச் சுற்றி வரும்
சுற்றுப்பாதையின் கோணம் 360 o ஐ
இராசிக்கு 30 o கொண்ட12
சமபங்குகளாகப் பிரித்துக் கொள்கிறோம். சுற்றுக் காலம் 12 மாதங்களை இராசிக்கு ஒரு மாதம்
என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே போல் ஒரு உடுவிற்கு 60 நாழிகை அதாவது
ஒரு நாள் என்ற கணக்கில் கொள்ளப்படுகிறது. மொத்த இராசிக்கான கோணம் 360 o இதனை
27 உடுக்களுக்குப் பிரிக்க ஒரு உடுவிற்கு 13.33 o கோணம் கிடைக்கும். அனைத்து
உடுக்களையும் நான்கு பாதங்களாகப் பிரிக்கிறார்கள். அவ்வாறு பிரிக்கும் போது ஒரு பாதத்திற்கு
3.33 o கோணம் கிடைக்கும். இராசி ஒன்றின் 30 o கோணத்திற்கு இது
2. 25 உடுக்கள் என்று கணக்கிடப்படும்.
ஒரு இராசிக்கான 30 o அதாவது ஒரு மாத காலம்
ஒன்பது பாதங்களாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பாதம் என்பது 3.33 o என்பது
நாம் அறிந்ததுதான். ஆகவே 360 o கோணமும் 108 பாதங்கள் (12 இராசிகள்X 9 பாதம்)
கொண்டது. ஆகவே ஒரு இராசியில் 2.25 உடுக்கள் என்று சொல்லலாம்.
இப்போது நாள் மீன் என்பது குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட
நேரத்தில் நிலவு எந்த உடுக் கூட்டத்திற்கு அருகில் இருக்கிறதோ அதுவே ஆகும். எடுத்துக்
காட்டாக இக் கட்டுரை எழுதப்படும் 17.04.2020 அன்று அவிட்டம் உடுக்கூட்டம் அருகில் நிலவு
காணப்படும். அதாவது நிலவு புவியைச் சுற்றி வரும் போது புவியிலிருந்து நிலவை நோக்க அது
முதலாவது அல்லது இரண்டாவது பாதமானால் மகர இராசிக்கு நேராக இருப்பது போலவும், மூன்றாவது
அல்லது நான்காவது பாதங்களில் இருப்பின் கும்பராசிக்கு நேராக இருப்பதாகவும் எடுத்துக்
கொள்ளப்படும். இதன் காரணமாக சில உடுக்கள் இரு
இராசிகளில் வருகின்றன.
ஓரளவுக்கு அடிப்படையான தகவல்களைப் பார்த்து விட்டோம்.
இனி அடுத்த பகுதியில் முதல் இராசியில் உள்ள அசுவினி மற்றும் பரணி குறித்த தகவல்களைக்
காணலாம்.
Well written in a way to keep the reader engrossed in it
ReplyDeleteThank you very much Ganga. How are you? Hope you are doing well.
ReplyDelete