மனிதனின் பாசுரம் (The hymn of man) - கலீல் ஜிப்ரான்
மனிதனின் பாசுரம்
நான்
இருந்தேன், இருக்கிறேன்
ஆகவே
நான் காலத்தின் இறுதிவரை
இருப்பதாலேயே முடிவில்லாமல் இருக்கிறேன்.
எல்லையற்ற பரந்த வெளிகளைப் பிளந்தும்
கற்பனை உலகில் சஞ்சரித்தும் நான்,
தெய்வீகப் பேரொளியை நெருங்கிவிட்டேன்
கன்பூசியஸின் போதனைகளைச் செவிமடுத்து,
பிரம்ம ஞானத்தை உற்றுக் கவனித்து
போதி மரத்தின் கீழ் புத்தனின் அருகில் அமர்ந்துள்ளேன்
ஆனாலும் அறியாமையும் அவநம்பிக்கையும்
என்னைச் சிறைப்பிடித்திருப்பதை இப்போது காணுங்கள்.
மோசசுக்கு கர்த்தர் காட்சி தந்தபோது சினாய் மீதிருந்தேன்
நசரேயனின் அற்புதங்களை ஜோர்டானில் கண்டுள்ளேன்
அரேபிய இறைத்தூதர் வார்த்தைகளை மதீனாவில் கேட்டேன்
இப்போது சந்தேகத்தின் கைதியாக நானிருப்பதைக் காணுங்கள்
பாபிலோனின் பலத்தையும் எகிப்தின் மகிமையையும்
கிரேக்கத்தின் மகத்துவத்தையும் கண்டிருக்கிறேன்.
அவர்களது செயல்களின் சிறுமையும் வறுமையும் கண்டு
என் கண்கள் நிலைக்குத்தி நிற்கப் போவதில்லை.
எண்டோரின் சூனியக்காரியுடனும்
அசீரியாவின் குருமார்களோடும்
பாலஸ்தீனத்தின் தீர்க்கதரிசிகளோடும் அமர்ந்துள்ளேன்
உண்மையை ஓதுவதை நான் நிறுத்தப் போவதில்லை.
இந்தியா மீதிருந்து இறங்கிய ஞானத்தைக் கற்றிருந்தும்
அரேபியர்களின் புகழ் பெற்ற கவிதைகளில் தேர்ச்சி
பெற்றிருந்தும்
மேற்கிலிருந்து வந்தவர்களின் இசையைச் செவிமடுத்திருந்தும்
இன்னுமே பார்வையின்றிக் குருடனாக
கேட்கும் திறனின்றிச் செவிகள் மூடிக் கிடக்கிறேன்.
திருப்தியற்ற வெற்றியாளர்களின் கொடுமைகள்
கொடுங்கோலர்களின் அடக்குமுறை
சக்திவாய்ந்தவர்களின் அடிமைத்தளை
என்று கொடுமைகளைத் தாங்கியிருக்கிறேன்.
இருந்தும் காலத்துடன் போரிடும்
வலிமை இன்னமுமே என்னிடம் உள்ளது.
இவை அத்தனையும் பார்த்து, கேட்டு இருப்பினும்
நான் இன்னுமோர்சிறு பிள்ளைதான்.
உண்மையில் இளமையில் கேட்டு, கண்டு, செயல்பட்டு
வயது முதிர்ந்து முழுமையை அடைந்து
இறைவனிடம் திரும்புவேன்.
நான் இருந்தேன், இருக்கிறேன்
ஆகவே நான் காலத்தின் இறுதிவரை
இருப்பதாலேயே முடிவில்லாமல் இருக்கிறேன்.
கலீல் கிப்ரான்.
தமிழாக்கம் : வெ.சுப்ரமணியன்மனிதனின் பாசுரம்

Picture courtesy : https://en.wikipedia.org/wiki/Witch_of_Endor
The Hymn of Man
I was,
And I am.
So shall I be to the end of time,
For I am without end.
And I am.
So shall I be to the end of time,
For I am without end.
I have cleft the vast spaces of the infinite, and
Taken flight in the world of fantasy, and drawn nigh
To the circle of light on high.
Yet behold me a captive of matter.
Taken flight in the world of fantasy, and drawn nigh
To the circle of light on high.
Yet behold me a captive of matter.
I have hearkened to the teachings of Confucius,
And listened to the wisdom of Brahma, and sat
Beside the Buddha beneath the tree of knowledge.
Behold me now contending with ignorance and
Unbelieving.
I was upon Sinai when the Lord showed Himself
To Moses. By the Jordan I beheld the Nazarene's
Miracles. In Medina I heard the words of the
Apostle of Arabia.
Behold me now a prisoner of doubt.
I have seen Babylon's strength and Egypt's glory
And the greatness of Greece.
My eyes cease not
Upon the smallness and poverty of their works.
I have sat with the witch of End or and the priests
Of Assyria and the prophets of Palestine, and I cease
Not to chant the truth.
Upon the smallness and poverty of their works.
I have sat with the witch of End or and the priests
Of Assyria and the prophets of Palestine, and I cease
Not to chant the truth.
I have learned the wisdom that descended on
India, and gained mastery over poetry that welled
From the Arabian's heart, and hearkened to the
Music of people from the West.
Yet am I blind and see not; my ears are stopped
And I do not hear.
I have borne the harshness of insatiable
Conquerors, and felt the oppression of tyrants and the
bondage of the powerful.
Yet am I strong to do battle with the days.
All this have I heard and seen, and I am yet a
Child. In truth shall I hear and see the deeds of
Youth, and grow old and attain perfection and
Return to God.
I was,
And I am.
So shall I be to the end of time,
For I am without end.
Khalil Gibran
Comments
Post a Comment