ஆன்மாவின் பாடல் (Song of the soul) - கலீல் ஜிப்ரான்
என் உள்ளத்தின் விதைக்குள் உயிர்த்திருக்கும் கீதமாக சொற்களற்ற பாடலொன்று என் ஆன்மாவின் ஆழத்தில் உள்ளது வரைதோலின் மீதெழுத அது மையுடன் உருகிட மறுக்கிறது. என் உதடுகளின் மீதின்றி ஆனால் ஒளிபுகுமோர் மேலங்கிக்குள் என் நேசத்தை விழுங்கிப் பாய்கிறது அது. நான் எப்படி அதை நெட்டுயிர்ப்பேன்? அஞ்சுகிறேன், அது சங்கமித்து விடுமோ புவியின் விசும்போடென்று. யாருக்கென நானதைப் பாடுவேன்? கடூரமான செவிகளுக்கு அஞ்சி அது என் ஆன்மாவின் இல்லத்துள் வசிக்கிறது. என் அகக் கண்ணுக்குள் நோக்க அதன் நிழலின் நிழலைக் காண்கிறேன். என் விரல் நுனியைத் தீண்டிட நான் அதன் அதிர்வை உணர்கிறேன். மினுக்கும் உடுக்களை பிரதிபலிக்கும் நீர்நிலை ஒத்து என் கரங்களின் செயல்கள் அதன் இருப்பில் அக்கறை கொள்கின்றன. வாடிக் கொண்டிருக்கும் ரோஜாவின் ரகசியத்தை வெளிப்படுத்தி ஒளிரும் பனித்துளிகள் என என் கண்ணீர் அதை வெளிப்படுத்துகிறது. தியானத்தால் இயற்றப்பட்ட மௌனத்தால் வெளியிடப்பட்ட ஆரவாரத்தால் தவிர்க்கப்பட்ட உண்மையால் பொதியப்பட்ட கனவுகளால் மீளும் அன்பால் புரிந்து கொள்ளப்படும் விழிப்புணர்வால் மறைக்கப்படும் ஆன்மாவால் பாடப்படும் பாடலது. கேயீன்* அல்லது ஏசா*வால் எந்த வகையில் அதைப் பாட இயலும்? மல்லிகையை விட அதிகம் மணமிக்கதது எந்தக் குரல் அதனை அடிமைப்படுத்தக் கூடும்? கன்னியின் இரகசியம் போல் மனதுக்குள் உறைவதது எந்தத் தந்தியால் அதனைச் துடிக்கச் செய்ய முடியும்? அது அன்பின் பாட்டு யாருக்குக் கடலின் ஆர்ப்பரவத்தையும் இராப்பாடிப் பறவையின் கானத்தையும் ஒன்றாக்கும் துணிவிருக்கிறது? யாருக்கு புயற்காற்றின் உரத்த ஓசையை குழந்தையின் பெருமூச்சுடன் ஒப்பிடும் துணிவிருக்கிறது? யாருக்கு இதயத்தால் பேச உத்தேசித்துள்ள சொற்களை உரத்துப் பேசத் துணிவிருக்கிறது? இறைவனின் கானத்தைக் குரலெடுத்துப் பாட மனிதனுக்கு என்ன துணிவிருக்கிறது? கலீல் ஜிப்ரான்
In the depth of
my soul there is
A wordless song - a song that lives
In the seed of my heart.
It refuses to melt with ink on
Parchment; it engulfs my affection
In a transparent cloak and flows,
But not upon my lips.
A wordless song - a song that lives
In the seed of my heart.
It refuses to melt with ink on
Parchment; it engulfs my affection
In a transparent cloak and flows,
But not upon my lips.
How can I sigh
it? I fear it may
Mingle with earthly ether;
To whom shall I sing it? It dwells
In the house of my soul, in fear of
Harsh ears.
When I look into my inner eyes
I see the shadow of its shadow;
When I touch my fingertips
I feel its vibrations.
Mingle with earthly ether;
To whom shall I sing it? It dwells
In the house of my soul, in fear of
Harsh ears.
When I look into my inner eyes
I see the shadow of its shadow;
When I touch my fingertips
I feel its vibrations.
The deeds of my
hands heed its
Presence as a lake must reflect
The glittering stars; my tears
Reveal it, as bright drops of dew
Reveal the secret of a withering rose.
It is a song composed by contemplation,
And published by silence,
And shunned by clamor,
And folded by truth,
And repeated by dreams,
And understood by love,
And hidden by awakening,
And sung by the soul.
It is the song of love;
What Cain or Esau could sing it?
It is more fragrant than jasmine;
What voice could enslave it?
Presence as a lake must reflect
The glittering stars; my tears
Reveal it, as bright drops of dew
Reveal the secret of a withering rose.
It is a song composed by contemplation,
And published by silence,
And shunned by clamor,
And folded by truth,
And repeated by dreams,
And understood by love,
And hidden by awakening,
And sung by the soul.
It is the song of love;
What Cain or Esau could sing it?
It is more fragrant than jasmine;
What voice could enslave it?
It is
heartbound, as a virgin's secret;
What string could quiver it?
Who dares unite the roar of the sea
And the singing of the nightingale?
Who dares compare the shrieking tempest
To the sigh of an infant?
Who dares speak aloud the words
Intended for the heart to speak?
What human dares sing in voice
The song of God?
What string could quiver it?
Who dares unite the roar of the sea
And the singing of the nightingale?
Who dares compare the shrieking tempest
To the sigh of an infant?
Who dares speak aloud the words
Intended for the heart to speak?
What human dares sing in voice
The song of God?
Khalil Gibron
தமிழ் மொழிபெயர்ப்பு : வெ. சுப்ரமணியன்.
* கேயீன்
கேயீனும் ஆபேலும்
ஆதியாகமத்தின்படி ஆதாம் மற்றும் ஏவாளின் பிள்ளைகள். ஆதாமும் ஏவாளும் நிறையப்
பிள்ளைகளைப் பெற்ற போதிலும், ஆபேல், கேயீன் மற்றும் சேத் என்ற மூன்று பெயர்களை மட்டுமே
ஆதியாகமம் குறிப்பிடுகிறது. தேவனின் கட்டளையை மீறிச் சாத்தானின் தூண்டுதலால் ஞானப்பழத்தினை
உண்ட காரணத்தால் கடவுளால் ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மனிதன் தன் அன்றாட
உணவிற்காகக் கடுமையாக உழைக்கும்படி கடவுளால் சபிக்கப்பட்டான். ஆதியாகமத்தின் படி கேயீன்
ஒரு விவசாயியாகவும் ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த நூலில் சகோதரனான
ஆபேலை கேயீன் கொலை செய்தாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே மண்ணின் முதல் கொலையாளி
கேயீன் என்றும் முதன்முதலில் கொலையுண்ட மனிதன் ஆபேல் என்றும் அறியப்படுகின்றனர். ஆதியாகமத்தில்
இந்த கொலைக்கான காரணமாக எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் கேயீன் தனது சகோதரனின்
பால் கொண்ட பொறாமையே இந்த கொலைக்கான காரணம் என்பதே பெரும்பாலும் விமர்ச்சகர்களின் கருத்தாக
உள்ளது.
கேயீன் சாத்தானின்
வாரிசாகப் போனதால், அவனுள் உறைந்த சாத்தானின் தன்மையே அவனது சகோதரனைக் கொலை செய்யத்
தூண்டியது என விளக்கங்கள் கூறப்பட்டு வருகின்றன.
*ஏசா
40
வயதில் ஈசாக் ரெபெக்காளைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள்
பிறந்தன. மூத்தவன் ஏசா. இளையவன் யாக்கோப். ஏசா நல்ல வேட்டைக்காரன். ஆனால் யாக்கோபுக்கு
விவசாயம் செய்யவே பிடிக்கும்.
ஈசாக்கின்
சொத்தைப் (ஆபிரகாமுக்கு யகோவா அளித்த வாக்குகள்), பற்றி ஏசா பெரிதாகக் கவலைப்படவில்லை.
ஆனால், யாக்கோபு அதைத்தான் மிக முக்கியமானதாகக் கருதினார்.ஒருநாள் ஏசா நெடுநேரம் வேட்டையாடிவிட்டு
மிகக் களைப்புடன் வீட்டிற்கு வந்தான். அப்போது யாக்கோபு ருசியான சிவப்புக் கூழ் உணவு
ஒன்றைச் சமைத்துக்கொண்டிருந்தான். பசித்திருந்த ஏசா அந்தச் சிவப்புக் கூழைத் தனக்குத்
தர வேண்டி யாக்கோபிடம் கேட்டான். அதற்கு யாக்கோபு, கூழுக்குப்பதிலாக ஏசாவிற்குச் சேர
வேண்டிய சொத்தைத் தர சத்தியம் செய்து தரக் கேட்டான். சொத்தின் மீது நாட்டமில்லாத ஏசா
ஒரு கிண்ணம் கூழுக்காக ரொம்ப முக்கியமான சொத்தை யாகோபுக்கு விட்டுக் கொடுத்து சத்தியம்
செய்துவிட்டான்.
ஈசாக்குக்கு
வயதானதும். அவருடைய மூத்த மகனான ஏசாவிற்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்தது.
ஆனால், இளைய மகனான யாக்கோபுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்கத் தாய் ரெபெக்காள் உதவி செய்தாள்.
அதை அறிந்து கொண்ட ஏசா தம்பியைக் கொல்லத் திட்டமிட்டான். ஈசாக்கும்
ரெபெக்காளும் யாக்கோபைக் காப்பாற்ற எண்ணி மாமா லாபான் வீட்டில் தங்கும்படி
யோசனை சொன்னார்கள். பெற்றோரின் யோசனையைக் கேட்டு யாக்கோபும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள
அங்கே ஓடிப்போனான்.
*கேயீயின் மற்றும் *ஏசா இருவரும் பைபிளில் வரும் பாத்திரங்கள். இருவருமே
ஆசை கண்ணை மறைக்க சொந்த சகோதரனையே கொல்லத் துணிந்தவர்கள். ஆகவே அவர்களால் அன்பையும்
கருணையையும் பாடவே முடியாதென்பது கவிஞரின் கூற்று.
Comments
Post a Comment