அச்சம் - கலீல் கிப்ரான்
கடலைச் சேரும் முன் நதி அச்சத்துடன் நடுங்கியதாகக் கூறப்பட்டது.
மலைச் சிகரங்களிலிருந்து தொடங்கி நீண்டு விரிந்த சாலைகள், குறுக்கிடும் வனங்கள், கிராமங்கள் என்று தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறாள் அந்தப்பெண்.
தன் முன் பெரிதாகப் பரந்து கிடக்கும் பெருங்கடலொன்றை அவளால் காணமுடிகிறது. அதற்குள் புகுவது என்பது நிரந்தரமாகக் காணாமல் போவதன்றி வேறில்லை.
ஆனால் வேறு வழியில்லை. நதியால் திரும்பிப் போக இயலாது. யாருமே திரும்பிச் செல்லுதல் இயலாது. இருப்பில் திரும்பிச் செல்லுதல் இயலாத ஒன்று.
பெருங்கடலுக்குள் புகுந்து விடும் இடரை நதி ஏற்றுக் கொள்ளவே வேண்டும். காரணம் அந்நிலையில் மட்டும்தான் அச்சம் அழிந்து போகும். ஏனென்றால் அந்த இடத்தில்தான் கடலில் காணாமல் போவது என்பதில்லை, கடலாகவே தான் மாறியதை நதியால் அறிய முடியும்.
கலீல் கிப்ரான்
தமிழாக்கம் : வெ.சுப்ரமணியன்
Comments
Post a Comment