கண்டதும் களித்ததும் - பகுதி - 9 (புனே பயணக் கட்டுரைகள்)


கிரிஜாத்மஜர் ஆலயம் (லென்யாத்ரி மலைக் குகைக் கோவில்)



 


 

 மகாராஷ்ட்ரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ளது ஜூனார் நகரம். இந்த நகரம் எல்லாப்பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந் நகர் புனேயிலிருந்து சுமார் தொண்ணூற்று  நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதுஇங்குள்ள மலைத்தொடர்களில் பௌத்தத் துறவிகளால் குடையப்பட்ட ஏராளமான குடவரைக்குகைகள் காணப்படுகின்றன.






எண்ணிக்கையில் கிட்டத்தட்ட இருநூறு குகைகள் இம்மலைத் தொடர்முழுவதுமாகப் பரவிக் கிடக்கின்றனநமது பாரத நாட்டில்  நூற்றுக்கணக்கான குடவரைக் குகைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளஇடம் என்ற சிறப்பு இந்த மலைத் தொடர்களுக்கே சொந்தமானதுஇந்த குடவரைக் குகைகள் அனைத்துமே ஹினயான 
(HINAYANA)  என்ற தேராவாடா (THERAVADA) பௌத்த மதப் பிரிவினருக்கு உரியது இவை அனைத்தும் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான  காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை.
குன்றுத் தொடர்களில் இவை அமைந்துள்ள இடங்களுக்கேற்ப  ஜூனார் குடவரைக் குகைகளின் தொகுப்பு பல்வேறு பகுதிகளாகப் 

பிரிக்கப்பட்டுள்ளது





எடுத்துக்காட்டாக துளஜா குகைகள் (TULAJA CAVES)
மன்மோதி குகைகள் (MANMODI CAVES)
ஷிவனெரி குகைகள் (SHIVANERI CAVES) மற்றும் 
கணேஷா குகைகள் (GANESHA CAVES)  
என்றெல்லாம் பிரிக்கப்பட்டுள்ளன
இதில் மன்மோதி குகைகள் (MANMODICAVES) மேலும் சில    உட்பிரிவுகளாக, பீமாஷங்கர் குகைகள் (BHIMASHANKAR CAVES)
அம்பா-அம்பிகா குகைகள் (AMBA-AMBIKA CAVES)பூதலிங்கா குகைகள் (BUDHA LINGA CAVES) என்று பிரிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுக்களில் கபிச்சித்தா (KAPICHITA)அதாவது குரங்குகள் விரும்பும் என்ற பொருளில் லென்யாத்ரி குழுக் குன்றுகள் 
(LENYATHRI GROUP HILLS) குறிக்கப்பட்டுள்ளன

சுலைமான் குன்றுகள் (SULAIMANHILLS) அல்லது கணேஷ் பஹத் 
(GANESHPAHAD) என்று வேறு பெயர்களிலும் லென்யாத்ரி குழுவில் 
உள்ள குன்றுகள் அறியப்படுகின்றன

ஜூனாரில் உள்ள குகைக் குழுக்களில் இதுவும் மிகப் பெரிய ஒரு குழுவாகும்இந்த லென்யாத்ரி குழுவில் சுமார் நாற்பது குடவரைக்  குகைகள் உள்ளனஅவற்றில் முக்கியமான குழு முப்பது குகைகளைக் கொண்டுள்ளது


அவை அனைத்தும் தெற்காக குக்டி (KUKDI) நதி பள்ளத்தாக்கை 
நோக்கியவாறு ஒரே வரிசையில் கிழக்கிலிருந்து மேற்காக 
எண்ணிடப்பட்டுள்ளன.


மேற்குறிப்பிட்ட முப்பது குகைகளில் ஆறாம் (6) மற்றும் பதினான்காம்(14) குகைகள் சைத்தியகிரஹங்கள் (SACHITHYA GRAHAS) என்ற 
பிரார்த்தனைக் கூடங்கள் (PRAYERHALLS)மற்றவை எல்லாம் அளவில் சிறிய இரண்டு அல்லது மூன்று புத்த பிட்சுகள் வசிக்கும் அளவிலான விஹாரைகள் (VIHARAS)ஏழாம் எண்ணுள்ள குகை விசாலமானதுஇவற்றின் காலம் கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.மு மூன்றாம் நூற்றாண்டு என்று அறியப்பட்டுள்ளது.
குழுவில் உள்ள ஆறாவது (6) குகை சைத்தியகிரஹம் (SACHITHYA GRAHA) என்ற மிக முக்கியமான பிரார்த்தனைக் கூடம்


இது தூண்களுடன் கூடிய தாழ்வாரத்துடன் அமைந்துள்ளது
வரிசையாக அமைந்த வளைவான
 (arch) வடிவ மேற்கூரையைக் கூடம் பெற்றுள்ளதுஉட்புறம் இரு வரிசையில் அமைந்த தூண்கள் கூடத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறதுகூடத்தின் கடைசியில் கௌதம புத்தரைக் குறிக்கும் வகையில் பிரமாண்டமான ஸ்தூபி ஒன்று காணப்படுகிறதுஇங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றைச் சரியான முறையில்  விளக்க இந்திய தொல்லியல் துறையால் நியமிக்கப்பட்ட வழிகாட்டி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை





இதனால் ஸ்தூபியை பிரமாண்டமான உண்டியலாக நினைத்து காணிக்கைக் காசுகளை அதன் மீது வீசுகின்றனர்.  அந்த வகையில் தமிழ்நாட்டில் சித்தன்னவாசலில் தன்னார்வலர்கள் வழிகாட்டியாகவும் , முடிந்தவரையில் நினைவுச் சின்னத்தைப் பாதுகாப்பவராகவும் சிறப்புறச் செயல்படுவது குறிப்பிடத்தக்கதுதாழ்வாரத்தின் மேற்புரம் பின்புறச்சுவற்றில் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த நன்கொடையாளர் குறித்த கல்வெட்டு ஒன்று செதுக்கப்பட்டுள்ளதுகல்யாண் 
(KALYAN) நகரைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரின் மைந்தரான சுலசாதத்தாசைத்தியகிரஹாவை நன்கொடையாக அளித்த விபரத்தைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.




ஏழாவது (7) குடவரைக் குகையே ஜூனாரில் காணப்படும் குகைகளிலேயே மிகவும் பெரியதுவிஹாரையின் உட்புறம் மிகப் பெரிய கூடமும்கூடத்தின் மூன்று பக்கங்களிலும் வெவ்வேறு அளவிலான சுமார் இருபது சிறு சிறு அறைகளும் அமைந்துள்ளதுமுன்புறம் தூண்களுடன் கூடிய தாழ்வாரமும்உள் நுழைவதற்கு நடுவாக அமைந்த வாயிலும்வாயிலை அடைய படிக்கட்டுகளுமாக விஹாரை அமையப் பெற்றுள்ளது.
இதில் பின்பக்கத்தில் இருந்த இரண்டு அறைகள் பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டு தற்போது அஷ்ட வினாயகரில் ஒருவராக வழிபடப்படுகிறார்பதினான்காவது குடவரைக் குகையும் சமதளமான கூரையைக் கொண்ட செவ்வக வடிவிலான சைத்தியகிரஹா என்னும் பிரார்த்தனைக் கூடமேஇந்த பிரார்த்தனை கூடத்திற்கும் முன்புறம் தூண்களுடன் கூடிய தாழ்வாரம் உள்ளது.



தாழ்வாரத்தில் நன்கொடையாளர் குறித்த கல்வெட்டுக் குறிப்புகளைக் காணலாம். இக் கூடத்தை, தபசா என்பவரின் மகனும், கபிலா என்பவரின் பெயரனுமான ஆனந்த்
 என்ற பக்தர் நன்கொடையாகக் கொடுத்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த குடவரைக்குகை கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கண்டறியப் பட்டுள்ளது. 

  
ஜூனாரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில், குக்டி நதிக்கரையில் லென்யாத்ரி மலைஉச்சியில் பௌத்தக் குடவரைக் கோவில்களின் அருகே செந்தூர வர்ண ரூபமாகக் காட்சி தருபவரே ஸ்ரீகிரிஜாத்மஜர். கிரிஜா என்பது பார்வதி தேவியிந்திருநாமங்களில் ஒன்று. ஆத்மஜ் என்றால் மகன். ஆக், கிரிஜாத்மஜர் என்றால் லோகமாதா பார்வதி தேவியின் மகன் என்று பொருள். 


கணேசனை மகனாகப் பெற பார்வதி தேவி லேனாத்ரி மலையில் பன்னிரெண்டு ஆண்டுகள் தவமியற்றியதாகவும்தவத்தில் மகிழ்ந்த கணபதி விரைவில் லோகமாதாவிற்கு மகனாகப் பிறப்பதாக வரமருளினார்பார்வதி தேவியும் புரட்டாசி மாதத்தில் ஒரு சதுர்த்தி நாளில் தன் உடம்பில் இருந்த அழுக்கைத் திரட்டி எண்ணையுடன் சேர்த்து உருட்டி வினாயகராக உருவம் செய்து பூஜிக்க ஆரம்பித்தார்அந்த உருவம் உயிர் பெற்று குழந்தையாக மாறியதுதானே பார்வதியின் மகனாக அவதரித்திருப்பதாகக் கூறவும் தேவியும் மனமகிழ்ந்து அக் குழந்தையைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வர ஆரம்பித்தார்.



குழந்தை சத்வம்தமஸ்ரஜஸ் ஆகிய முக்குணங்களையும் வென்றவனாக இருந்ததால் பதினோராம் நாள் “குணேஷ்” என்று பெயரிட்டு வளர்த்தார்பின்னாளில் அதுவே திரிந்து “கணேஷ்” என்றானதுபரமேஸ்வரனும்கணேசனைத் தியானித்து எந்தச் செயலைத் துவங்கினாலும் நிச்சயமாக வெற்றியடையலாம் என்று வரமளித்தார்.


பூவுலகத்தில் உயிர்கள் வாழ்வதற்குக் சூரியனின் ஒளி இன்றியமையாதது என்பது மறுக்க இயலாத உண்மைஆகவே சூரியனைப் பெருமைப்படுத்தும் விதமாக “கர்ம தியாகேசன்” என்று படைப்புக் கடவுளான பிரம்மன் புகழ்ந்தழைத்தார்பிரம்மனின் பாராட்டால் கதிரவனுக்குத் தலைகனமும் கர்வமும் உண்டானதுஅகந்தையுடன் இருந்த கதிரவன் தும்மிய போது “அகந்தாசுரன்” என்ற அசுரன் தோன்றினான்அகந்தாசுரன் அவனது குல குருவான சுக்ராச்சாரியாரைப் பணிந்து உபதேசம் வேண்டஅவரும்  அவனுக்கு கணேச மந்திரத்தை உபதேசித்தார்

அகந்தாசுரனும் பல்லாயிரம் ஆண்டு காலம் கணேச மந்திரத்தை உச்சரித்தவாறு கடும் தவமியற்றினான்தவத்தில் மகிழ்ந்த கணபதியும் அவனுக்கு யாராலும் வெல்ல முடியாத வரமளித்தார்.
 நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதற்கேற்ப அகந்தாசுரனும் கணபதி அளித்த வரத்தால் இறுமாந்திருந்தான்எல்லா அசுரர்களையும் போல் மூவுலகையும் தன் வசப்படுத்தி தேவர்களையும்முனிவர்களையும் வெறி கொண்டு துன்புறுத்தி வந்தான்தேவர்களும் முனிவர்களும் தங்களைக் காப்பாற்ற  சிவபெருமானையும்திருமாலையும் வேண்டினர்சிவனும் திருமாலும் அவர்களிடம் கணபதி நோக்கித் தவமியற்றி முறையிட அறிவுரை வழங்கினார்கள்ஆயிரக்கணக்கான  ஆண்டுகள் தொடர்ந்து தவமியற்றிய பின்னர் கணபதியும் அவர்கள் முன் தோன்றி அகந்தாசுரனை அழிப்பதாக உறுதி கொடுத்தார்.


 கணபதியுடன் சமருக்குப் போக வேண்டாம் என்று நாரதர் அகந்தாசுரனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அகந்தையும் அஞ்ஞானமும் கண்ணை மறைக்க தனக்கு வரமளித்த கணபதியோடு யுத்தம் செய்தான்கணபதி தன் உக்கிர பாசத்தை அவனை நோக்கி வீச அவனது படை முழுவதும் நொடியில் அழிந்ததுபடைகள் முற்றிலுமாக அழிந்த நிலையில் செய்வதறியாது திகைத்து நின்ற அகந்தாசுரன்தன் குருநாதர் சுக்ராச்சாரியாரை ஆலோசனை கேட்டான்அவர் செந்தூர வர்ணத்தில் இருந்த கணபதியைச் சரணடையச் சொல்ல அதன்படி கணபதியைச் சரணடைந்தான்கருணை வடிவான கணபதியும் அவனை மன்னித்து பாதாள உலகம் செல்லப் பணித்தார்இந்த மங்கள மூர்த்தியே கிரிஜாத்மஜர் என்ற திருநாமத்துடன் லேனாத்ரி மலையில் இருந்து அருள் பாலிக்கிறார்.


 ஸ்ரீ கணேசர் லெனாத்ரி மலையில் பதினைந்து ஆண்டுகள் இருந்து பல பால லீலைகள் செய்ததாகச் சொல்லப்படுகிறதுசிந்துராசுரன் என்ற அசுரன் தன் மரணம் கணேசரின் கையால் நடக்கும் என்பதை அறிந்து அவரை அழிக்கும் நோக்கத்தில் க்ரூரன்,பலாமாசுரன்வயாமாசுரன் ஆகியவர்களை அனுப்பினான்அவர்கள் அனைவரையும் வதம் செய்து அழித்தார்இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சிந்துராசுரன் பற்றிய புராணக் கதை புனே நகரிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மோர்கான் 
(Morgeon) என்ற இடத்தில் அமைந்துள்ள மயூரேஸ்வர் (MAYURESWAR) அல்லது மோரேஸ்வர் (MORESWAR) 
திருத்தலத்துடன் தொடர்பு கொண்டது.  அஷ்ட வினாயகர் தலங்களில் மயூரேஷ்வர் கோவில்தான் முதன்மையானது ஆகும்
அஷ்ட வினாயகர்கள் தரிசன யாத்திரையை மோர்கானில் மயூரேஸ்வர் (MAYURESWAR) அல்லது மோரேஸ்வரை 
(MORESWAR) வணங்கித் தொடங்கிஎட்டு விநாயகர்களையும் 
தரிசித்த பின்னர் முடிக்கும் போது மறுபடியும் மோர்கான் வந்துமோரேஸ்வரை (MORESWAR) வணங்கி முடிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறதுஅவ்வாறு செய்தால்தான் அஷ்ட வினாயகர் யாத்திரை நிறைவு பெற்றதாகச் சொல்லப்படுகிறது.


கணேசரின் ஆறாவது பிராயத்தில் அவரைத் தரிசித்துத் துதிக்க வந்த விஷ்வகர்மா அவருக்குப் பாசம்பரசுஅங்குசம் மற்றும் தாமரை மலர் ஆகியவற்றை வழங்கினார்விநாயகரது ஏழாவது வயதில் உபநயனம் கௌதம மகரிஷியால் நடத்தி வைக்கப்பட்டதுஅஷ்ட வினாயகர் தலங்களில் மலை மேல் இருப்பது இது ஒன்று மட்டுமே.
அன்னை பார்வதி மாதா தவமியற்றியதாலும்ஸ்ரீ கணேசன் தன் பால்யப் பருவத்தில் இங்கு வாசம் செய்ததாலும்இந்த மலை புனிதமாகக் கருதப்படுகிறது.
கிரிஜாத்மஜர் குடி கொண்டுள்ள கர்ப்பக்கிரகம் சுமார் 7 அடி உயரத்தில் அமைந்துள்ளதுஇங்குள்ள விநாயகருக்கு தனி சிலையோவிக்கிரகமோ இல்லை. சிலாரூபம் பாறையின் சுவரிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் பார்வதி தவம் செய்துவிநாயகரின் தரிசனம் பெற்றதால்கிரிஜாத்மஜரின் முகம் கிழக்குத் திசை நோக்கி உள்ளது. ஸ்ரீ கணேசரின் கழுத்து இடப்பக்கம் திரும்பியிருப்பதால் ஒரு கண் மட்டுமே தெரிகிறது. இந்த கணபதியின் வித்தியாசமான வடிவமைப்பு வேறு எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலை மீது ஏறிச் செல்ல சுமார் முன்னூற்றைம்பதுக்கும் அதிகமான படிகளில் ஏற வேண்டும்நல்ல படிக்கட்டு அமைப்பு இருந்த போதும் வயதானவர்கள் ஏறி வருவது சற்று சிரமான ஒன்றுதான்உடல் நலக் குறைபாடு கொண்டோர் மற்றும் முதியோருக்கு கட்டணம் செலுத்தி “டோலி” என்ற பல்லக்கில் தூக்கிச் செல்ல ஆட்கள் இருக்கிறார்கள்.




தமிழ்நாட்டில் சோளிங்கரில் எப்படி குரங்குகள் அதிகமோ அது போல்இங்கும் அதிகம் காணப்படுகின்றனஆகவே வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பொருட்களை பத்திரமாக எடுத்துச் செல்வது மிகவும் அவசியம்






 


கிரிஜாத்மஜருக்கு தினமும் நடக்கும் பஞ்சாமிருத பூசை சிறப்பானது. புரட்டாசிமாசி மாத சுத்த சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் ‘அகண்ட ஹரிநாம் சப்தாகம்’ ஏழு நாட்கள் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்புப் பூசைகள்அலங்காரங்களும்அபிஷேகங்களும் நடைபெறுகிறது.
இம்மலை கணேச புராணத்தில் ஜீர்ணாபூர்லேகன் பர்வதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு மின் வசதி கிடையாது என்பதால் மாலை ஐந்து மணிக்கு மேல் செல்ல முடியாது.

தரிசனத்திற்கு அதிகம் கூட்டம் இல்லை. காலையில் அழகான மலையேற்றம் நல்லதோர் உடற்பயிற்சியாக அமைந்தது. மெல்ல வந்து உடல் தழுவும் குளிர்காற்றும், கண்ணையும் கருத்தையும் கொள்ளைகொள்ளும் அழகான சுற்றுப்புறக் காட்சிகளும் முன்னூற்றைம்பது சொச்சம் படிகளை  ஏறிக் கடக்கும் சிரமத்தை வெகுவாகக் குறைத்து விட்டதே உண்மை.

காலை ஒன்பது மணிக்கு அருகில் உள்ள உணவு விடுதியில் காலைச் சிற்றுண்டி. பெரும்பாலான உணவு விடுதிகளில் யாத்ரீகர்களுக்குபோகோ” (அவல்) உப்புமா, மிஷால் பாவ் அல்லது வடபாவ் மற்றும் டீ அல்லது காபி வழங்கப்படுகிறது. உப்புமா என்றால் பலருக்கு அலர்ஜியாக இருந்தாலும் இந்த அவல் உப்புமா மிகவும் ருசியாகவே இருந்தது. வரத வினாயகரைத் தரிசிக்க அடுத்த தலமான மஹட்(Mahad) நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம்





Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)