கருப்பு அல்லது இருண்ட நகைச்சுவை ( Black or Dark Humour)




பிளாக் டீ (Black Tea),  பிளாக் போர்ட்(Black Board) எல்லாம் நாம் அறிந்ததுதான். பிளாக்  ஹியூமர் அல்லது டார்க் ஹியூமர் (Black Humour or Dark Humour) பற்றி உங்களுக்குத் தெரியுமா? நகைச்சுவை உணர்ச்சி அதாவது சென்ஸ் ஆஃப் ஹியூமர்(Sense of Humour) எல்லோருக்கும் அவசியம். நிறையப் பேருக்கு அது இருக்கவும் செய்கிறது. உலகத்தில் மிகக் குறைந்த அளவிலேயே சிரிக்கத் தெரியாத அல்லது நகைச்சுவை உணர்வே இல்லாத மனிதர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த இருண்ட நகைச்சுவை உணர்ச்சி இருப்பவர்கள் அனைவருமே மிகுந்த நுண்ணறிவு எண் (IQ) கொண்டவர்கள்.

பொருத்தமற்ற நகைச்சுவையான எண்ணம்  துயரமானதொரு சூழ்நிலையிலும் உங்களுக்குள் பொங்கிக்கொண்டு வந்திருக்கிறதா? இல்லாவிட்டால் எப்போதாவது விரசமான அல்லது மோசமான ஒரு நகைச்சுவைக்கு வாய் விட்டுச் சிரித்திருக்கிறீர்களா? உங்களது பதில் ஆம், என்றால் இருண்ட நகைச்சுவை (Dark Humour) யின் மீதான உங்களது ஈடுபாடு உண்மையில் உங்களுக்கு அதிக நுண்ணறிவு எண் (.க்யூ) இருப்பதையே காட்டுகிறது.

எடுத்துக்காட்டாக கீழ் வரும் உரையாடலை எடுத்துக் கொள்வோம்.
சார், கண்ணம்மா பேட்டைக்கு இப்படி வழி இருக்கா?
ஆகா,  பேஷா போகலாமே. இந்த தெருவில நேராப் போனா அது கண்ணம்மாப் பேட்டை மயானத்தில் போய்த்தான் முட்டும்.
அப்போ தெருக்கோடி டெட் எண்ட் (Dead end) என்று சொல்லுங்க!
 

தமிழ்த் திரைப்படம் ஒன்றில் சொல்லப்படும்மைனர் குஞ்சை சுட்டுட்டேன்என்ற வசனம் போல விரசத்தின் எல்லையை எங்கே கடந்து விடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு நெருங்கி விட்ட ஒரு நகைச்சுவைக்கோ அல்லது இணையத்தில் கண்ணில் படும் மீமையோ(Meme) ரசித்துச் சிரிப்பதற்கு வெட்கப்படத் துளியும் தேவையில்லை. இருண்ட நகைச்சுவையை ரசிப்பவர்கள் பிறழ்ந்த மனநிலை (Twisted psychopath) கொண்டவர்கள் என்று அர்த்தமில்லை.

இருண்ட நகைச்சுவை சார்ந்து நடத்தப்பட்ட ஆய்வொன்றின் முடிவுகள் தி ஜர்னல் ஆஃப் காக்னிட்டிவ் பிராச்சிங் (The Journal of cognitive processing) என்ற ஆங்கில அறிவியல் ஏட்டில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. அதன்படி ஒருவர் இருண்ட நகைச்சுவையைப் புரிந்து கொண்டு இரசிப்பது அவர் அதிக நுண்ணறிவு பெற்றுள்ளதையே சுட்டுவதாகக் குறிப்பிடுகிறது. சாம்பிளுக்கு ஒரு கார்ட்டூன்.



நன்றி: https://www.sadanduseless.com/cartoons-by-dagsson/

 

மேலும் இருண்ட நகைச்சுவை மீதான அதீத விருப்பமும் புரிதலும் கொண்டவர்களே வாய்மொழி மற்றும் வாய்மொழி அல்லாத நுண்ணறிவுத்திறனும் (Verbal and non verbal Intelligence) அதே நேரத்தில் உணர்வுகளில் நிலைப்புத்தன்மையும் (emotional stability) காணப்படுவதாக மேற் குறிப்பிடப்பட்ட ஆய்வு முடிவுகள் வாயிலாகத் தெரியவருகின்றன.

 

இந்த ஆய்வுக்குப் பயன்படுத்திய இருண்ட நகைச்சுவையைத் தற்கால நாகரீக உலகின் அபத்தங்களை, உணர்வற்ற நிலையை, முரண்பாடுகளை மற்றும் கொடூரங்களை வெளிப்படுத்த மரணம், நோய், ஊனம், குறைபாடு, போர் போன்ற பெரிதும் விரும்பப்படாத தலைப்புகளில் சொல்லப்படும் கசக்கும் வேடிக்கையான நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆய்வில் பங்கேற்றவர்களைச் சோதனை செய்ய இதற்காக ஒரு புத்தகம் பயன்படுத்தப்பட்டது. அது யுலி ஸ்டீன் (Uli Stein) என்பவரால் எழுதப்பட்டஅபிஸ்மல்டீப் பிளாக் ஹூயூமர் பியாண்ட் ஆல் லிமிட்ஸ் ஆஃப் டேஸ்ட்”(Abysmal – Deep black humour beyond all limits of taste) புத்தகமாகும்.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் வாசிக்க இருண்ட நகைச்சுவை கொண்ட சிரிப்புத் துணுக்குகள் தொடர்ச்சியாகத்  தரப்பட்டது

(எடுத்துக்காட்டாக அதுபோன்ற சில நகைச்சுவைத் துணுக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன). 

பின்பு அந்த நகைச்சுவைகள் குறித்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டது


அவ்வாறு கேட்கப்பட்ட வினாக்களில் எந்த அளவுக்கு அந்த நகைச்சுவை புரிந்து கொள்ளப்பட்டது

ந்தவகையில் அந்த நகைச்சுவையின் பொருள் ஆச்சரியமூட்டியது

அந்த நகைச்சுவை புதியதா அல்லது அரதப் பழையதா

எந்த அளவுக்கு அந்த நகைச்சுவை சுவாரஸ்யமாக இருந்ததாக உணரப்பட்டது

என்பது போன்ற வினாக்கள் இருந்தன


ஆய்வில் பங்கேற்றவர்களில் இருண்ட நகைச்சுவையை நன்கு அனுபவித்து ரசித்தவர்கள் அனைவருமே கல்வியறிவுடன் நுண்ணறிவும் கொண்டவர்களாகவே 
இருந்தனர்.

ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்களால் முன் வைக்கப்பட்ட கூற்றுப்படி சாதாரண நல்லதோர் நகைச்சுவையைத் தயாரிப்பதைக் காட்டிலும் இருண்ட நகைச்சுவையை உருவாக்கத்தான் மூளையை அதிகம் கசக்கிப் பிழிய வேண்டியுள்ளது.

இதற்காக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுவது  கட்டங்களைக் கலக்குதல் (Frame Blending) என்ற புதுமையான நிகழ்வையே

கட்டங்களைக் கலக்குதல் என்பது ஒரு சூழலை ஒரு கட்டத்தில் உருவாக்கி அதன் பின்பு அதனை பிறிதொரு சூழலுக்கு இடம் மாற்றியமைப்பதன் வழியே நகைச்சுவை விளைவை ஏற்படுத்துவதாகும் . 

கெட்ட அல்லது மனதால் ஏற்றுக் கொள்ள இயலாத பொருளொன்றை கட்டம் கலக்கும்” செயலுக்கு அதிகமான அறிவாற்றல் வளம் தேவைப்படுகிறது


ஏனெனில்  உணர்வுநிலை மனதில் (Conscious mind) இயல்பாகவே ஏற்படும் வெறுப்பை கீழே ஆழமாக அழுத்தி சிரிப்பை வரவழைத்து அந்த நகைச்சுவை முத்திரை பதித்து மேலெழுந்து நிற்க வேண்டும்.  

சக் பலாஹ்னிக் மற்றும் குர்ட் வொன்னெஹட்(Chuck Palahniuk and Kurt Vonnegut) போன்ற எழுத்தாளர்கள் புத்தகம் எல்லாம் எனக்கு விருப்பமானவை அதனால் நான் அதிக நுண்ணறிவு பெற்ற மாமேதை என்று நீங்களாகவே கருதிக் கொள்ளும் முன் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். 


சராசரி நுண்ணறிவு கொண்டவர்களால் ஆரோக்கியமற்ற விஷயங்களால் உருவாக்கப்படும் நகைச்சுவையை (Morbid Humour) உங்கள் அளவுக்குக் கையாள இயலாது என்று கருதுவது முதலில் தவறான கண்ணோட்டம். 

நுண்ணறிவு எண்ணுக்கான மணி வளைகோடு(Bell curve) வரைபடத்தின்அடிப்பகுதியின் உள்ளோருமே கூடச் சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க அளவு ஆய்வில் கொடுக்கப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளுக்குச் சிரிக்கும் போக்கையே கடைப்பிடித்தனர்.

புரிந்தவன் பிஸ்தா என்று சென்னையில் ஒரு சொலவடை உண்டு. இப்போது எடுத்துக்காட்டாகக் கீழே சொல்லப்பட்ட சில இருண்ட நகைச்சுவைகளை உங்களால் புரிந்து கொண்டு ரசிக்க முடிகிறதா என்று முயன்று பாருங்களேன். புரிந்தால் நீங்களும் பிஸ்தாதான்.


காட்சி1) ஒரு அறுவைச் சிகிச்சை அறையில் மேசை மீது ஒரு உடல் கிடத்தப்பட்டுள்ளது. அதன் திறந்த உடற் பகுதிக்குள் மருத்துவர் ஒருவர் கையை ஆழமாக விட்டுக் கொண்டுள்ளார். மற்றொரு மருத்துவர் அருகில் நிற்கும் இன்னொருவரிடம் பிரேத பரிசோதனை எல்லாம் அப்பவே முடிந்து விட்டது. அவர் தன் கை கடிகாரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்.
காட்சி 2) ஒருவர் குழப்பத்தில் முகவாயைச் சொறிந்தபடி தொலைபேசியின் ஒலிவாங்கியைக் (Receiver) கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒலிவாங்கியில் ஒலிக்கும் குரல்,”இது மறதி நோயாளிகள் (Alzheimer patients) தமக்குத் தாமே உதவிசெய்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட பதில் தரும் கருவி. நீங்கள் இன்னமும் தலைப்பை நினைவு வைத்திருக்கும் பட்சத்தில் ‘பீப்’ ஒலிக்குப் பின் பேசவும்”.
கட்டக் கடைசியாக ஒன்று.
காட்சி 3) ஒரு பிணவறையில் மருத்துவர் சடலத்தின் மீது போர்த்தியுள்ள வெள்ளைத் துணியை மேலுயர்த்தி அருகில் நிற்கும் பெண்ணுக்குக் காட்டுகிறார். அடுத்த கணம் அந்தப் பெண்,” நிச்சயமாக இது என் கணவர்தான் சந்தேகமே இல்லை. அப்புறம் இந்த அளவு வெண்மைக்கு துணிக்கு என்ன சோப் உபயோகிக்கிறீர்கள்?”.

இந்த ஆய்வுக்குப் பயன்படுத்திய புத்தகம் ஜெர்மன் மொழியில் உள்ளது.துரதிர்ஷ்ட வசமாக ஆங்கிலத்தில் இல்லை.
ஆங்கிலத்தில் இருண்ட அல்லது கருப்பு நகைச்சுவையை ஒரு மடக்கு குடிக்க  மேத்யூ சி வூட்ரோஃப் எழுதியுள்ள “26 அப்சர்டிட்டீஸ் ஆஃப் டிராஜிக் ப்ரொபோஷன்ஸ்”( 26 Absurdities of Tragic Proportions) புத்தகத்தைத் தேர்வு செய்யலாம்.


இக்கட்டுரை 08.03.2019 curiosity.com தளத்தில் வெளியான Austin Jesse Mitchell எழுதிய A dark sense of humour mean you have a high IQ என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தமிழில் தழுவி எழுதப்பட்டது.

https://curiosity.com/topics/a-dark-sense-of-humor-may-mean-you-have-a-high-iq-curiosity/


------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)