மைக்கேல் ஜாக்சனும் மரணமும்


இந்தக் கட்டுரை யாரோ வாட்ஸ் ஆப்பில் எழுதிய  ஆங்கில கட்டுரையை அதன் பொருட் சுவைக்காக தமிழாக்கம் செய்து பதிவிடப்படுகிறது. ஆங்கிலத்தில் பதிவிட்ட அந்த மூல ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி.  

மைக்கேல் ஜாக்சன் நூற்றம்பது ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டார். இதன் பொருட்டு தன்னைப் பாதாதி கேசம் அனுதினமும் பரிசோதிக்க பனிரெண்டு மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து வீட்டோடு வைத்திருந்தார். அவர் உண்ணும் உணவுகள் சோதனைச்சாலையில் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பரிமாறப்பட்டன. இது தவிர இன்னொரு பதினைந்து நபர்கள் கொண்ட மற்றொரு நிபுணர் குழுவொன்று அவரது தினசரி உடற்பயிற்சி மற்றும் அன்றாடச் செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்ள இருந்தது.

அவரது படுக்கை உறங்கும் போது ஆக்ஸிஜன் அளவைச் சீராக வைத்திருக்கும் அதி நவீன தொழில் நுட்பக் கருவிகள் இணைக்கப்பட்டதாக இருந்தது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே எப்போது தேவைப்பட்டாலும் உடனே உடல் உறுப்புகளை தானம் கொடுக்கவென பல உடல் உறுப்பு தானம் செய்வோரும் இருந்தனர். இந்த தானம் செய்பவர்கள் அனைவரையும் மைக்கேல் ஜாக்சனே பராமரித்து வந்தார். இப்படியாகப் பட்ட மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்துடன் நூற்றம்பது ஆண்டு காலம் வாழும் கனவுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.







ஆனால் அந்தோ பரிதாபம். அவர் தோல்வியைத்தான் சந்தித்தார் என்பது வரலாற்று உண்மை. 2009 ஆண்டு ஜூன் 25 ஆம் நாளில் தன் ஐம்பதாவது வயதில் அவரது இருதயம் தன் செயல்பாட்டை எந்த முன்னறிவிப்பும் இன்றி நிறுத்திக்கொண்டது. அருகில் இருந்த பனிரெண்டு மருத்துவர்கள் குழு எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியே கண்டன. அது மட்டுமல்லாது லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் கலிஃபோர்னியாவின் பிரபல மருத்துவர்கள் பலர் கூட்டாக முயற்சித்தும் அவரைக் காப்பாற்ற இயலாமல் போனது.

தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட கடைசி இருபத்தைந்து ஆண்டுகளில் மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்காத ஒரு மனிதனால் அவனது நூற்றம்பது ஆண்டு வாழும் கனவு சாத்தியப்படாமலேயே போய்விட்டது.


மைக்கேல் ஜாக்சனின் இறுதிப் பயணமே இன்று வரை  மிக நீண்ட நேரம் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தொலைக் காட்சி நிகழ்ச்சி. இதனை சுமார் 2.5 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். அவர் இறந்த 25 ஜூன் 2009 அன்று மாலை 3.15 மணிக்கு கூகுள் தேடு பொறியில் ஒரே நேரத்தில் சுமார் எட்டு இலட்சம் பேர் “மைக்கேல் ஜாக்சன்” என்று தேடியதில் விக்கிபிடியா, ட்விட்டர், ஏ.ஓ.ல் போன்றவற்றின் உடனடித் தகவல் பரிமாற்றச் செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கிப் போயின. ஜாக்சன் இறப்புக்குச் சவால் விட்டார் பதிலுக்கு இறப்பு அவருக்குச் சவால் விட்டு வென்றும் விட்டது.

பொருள் சார்ந்த உலகத்தில் பொருள் சார்ந்த வாழ்க்கையும் இறுதியில் இயல்பான இறப்பில் முடியாமல் பொருள் சார்ந்த இறப்பில்தான் முடிகிறது. இதுவே வாழ்க்கையின் சட்டம்.

கொஞ்சம் சிந்திப்போம்.
நாம் யாருக்காக சம்பாதிக்கிறோம்? கட்டிடப்பொறியாளர், வடிவமைப்பாளர், அழகூட்டுபவர் இவர்களுக்காகவா?

விலையுயர்ந்த வீடு, கார் வாங்கியும் படாடோபமான திருமணம் செய்தும் யாரைக் கவர்ந்து ஈர்க்கப் போகிறோம்?

இரண்டு நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியில் உண்ட உணவு வகைகளை உங்களால் நினைவு கூற முடிகிறதா?

எதற்காக இப்படி ஒரு விலங்கைப் போல் உழைக்கிறோம்?

நம்மில் பெரும்பான்மையோருக்கு ஒன்று அல்லது இரண்டே குழந்தைகள். இன்னும் எத்தனை தலைமுறைகள் வசதியாக வாழ சேமிக்க வேண்டும்?

நமக்கு எவ்வளவு தேவை எவ்வளவு வேண்டும் என்பதைப் பற்றி என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா?

நமது குழந்தைகளால் பெரிதாக ஒன்றும் சம்பாதிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் அவர்களுக்காக இன்னும் சற்று அதிகமாக சேமிப்பது அவசியமாகிறதா?
ஓரு வாரத்தில் உங்களுக்காக, குடும்பத்திற்காக அல்லது நண்பர்களுக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?

சம்பாதித்தில் உங்களுக்காகக் குறைந்தது ஐந்து விழுக்காடு செல்வு செய்கிறீர்களா?

கடைசியாக சம்பாதித்ததைக் கொண்டு வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை?


இப்படி ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால் மைக்கேல் ஜாக்சன் போல் நமது இருதயமும் இயங்கமறுத்து நின்று விடும். தவிர இலவச இணைப்பாக முதுகு வட்டெலும்புகள் தேய்மானம், நகர்தல் குருதியில் கெட்ட கொழுப்பு சேர்தல் தூக்கமின்மை எல்லாம் கூட வந்து மிரட்டும்.

எனவே உங்களுக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். கீதையில் சொன்னது போல் நமக்கு சொந்தமானது என்று எதுவும் இல்லை. சில காகிதப் பத்திரங்களில் தற்காலிகமாக நம் பெயர் எழுதப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.

இது என்னுடையது என்று இறுமாப்புடன் சொல்லும் போது இறைவன் கேலியாக சிரிக்கிறார்.

ஒரு மனிதனின் உடை ஊர்தி இவற்றைப் பார்த்து அவர் மீது எந்த விதமான கருத்தும் கொள்ள வேண்டாம். மிகப் பெரிய கணித மேதைகளும் அறிவியல் அறிஞர்களும் பயணிக்க மிதிவண்டி அல்லது மோட்டார் சைக்கிள்களையே பயன்படுத்தினர்.

செழிப்போடு வாழ்வது பாபம் இல்லை. ஆனால் பணத்தால் மட்டும் இசெழிப்பாக வாழ்வது பாபமே.

வாழ்க்கையில் கட்டுப்பாடு அவசியம் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் வாழ்க்கை உன்னைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் நமக்கு வேண்டுவதெல்லாம் மனநிறைவு, திருப்தி மற்றும் அமைதி மட்டுமே. இந்த மூன்றையுமே பணத்தால் வாங்க முடியாது என்பது சோகமான நிதர்சனம். 



Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)